LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- இதயம் பராமரிப்பு(Heart Care)

சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி

செம்பரத்தைப் பூ தேன் இளகம்

தேவையான பொருட்கள்:

செம்பரத்தைப் பூ          250

எலுமிச்சம் பழம் .             50

தேன்.                           1 லிட்

எலுமிச்சம் பழங்களைப் பிழிந்து  வடிகட்டிய சாற்றை 5 லிட். கொள்ளவும் , மூடியும் உடைய ஒரு பீங்கான் பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். 50 எலுமிச்சம் பழங்களைச் சாறு பிழிந்து  வடிகட்டி அந்த பீங்கான் பாத்திரத்தில் எடுக்கவும் 250 செம்பரத்தைப் பூக்களின் இதழ்களைத் தனியாகப் பிய்த்த எடுத்து பீங்கான் ஜாடியில் உள்ள எலுமிச்சம் பழச்சாற்றில்  போட்டுக் கிளறி மூடி 3-4மணி நேர இடை வெளியில் கிளறி விட்டுக் கொண்டே 24 மணிநேரம் மூடியபடியே வைக்கவும் . 

பின்னர் ஜாடியில் உள்ள ஊரலை ஈர அரவைக் கருவியில் (MIXI) போட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து ஒரு எவர் சில்வர் பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.. ஒரு கெட்டியான வாணலியை அடுப்பிலேற்றிச் செம்பரத்தைப் பூ

எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் புளிக்க வைத்து அரைத்து வைத்துள்ள கூழ்மத்தை  ஊற்றி சிறு தீயில் அடிப்பிடிக்காமல் பொருமையாய்க் காய்ச்சவும். கெட்டியாய் தயிர் பதத்திற்குத் தளதளவென வரும்போது தேனைச் சேர்த்து  அடுப்புத் தீயை அனைத்து ஆறவைத்து எடுத்துக் கண்ணாடி குப்பியில் சேமிக்கவும். தினம் காலை உணவுக்கு முன் ஒரு மேசைக் கரண்டி அளவு தினம் சாப்பிடவேண்டும். உணவுக் கட்டுப்பாட்டுடன் ( avoiding oily, fatty, deep fried foods)  6 மாதத்திற்கு மேல் சாப்பிடக் குருதி அழல் (BLOOD PRESSURE) இரத்தக்குழாய் அடைப்பு (BLOOD CLOTS) அவதிகள் சீராகும்

இஞ்சி பூண்டு இதய கல்பம் 

 

“ காலையில் இஞ்சி” , “ இளமை காக்கும் இஞ்சித்தேன்“,  “இஞ்சிச் கஞ்சி குஞ்சிக்கு நல்லது “

(குஞ்சி - தலை முடி,குடுமி-நரை தடுக்கும்)  “ நெஞ்சு சளிக்கு இஞ்சி மொரப்பா” என்னும் பழமொழிகளும்

“கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே” , என்னும் அருந்தமிழ் மருத்துவம் 500 வரிகளும் இஞ்சி  , பூண்டு களின் மருத்துவச் சிறப்பை பறைசாற்றுகின்றன. 

மலைப்பூண்டு, நாட்டுப்பூண்டை விடக் காரமானது. இவற்றில் எந்தப் பூண்டை வேண்டுமானாலும் மருந்துக்குப் பயன்படுத்தலாம்

தேவையான பொருட்கள்: 

1) இஞ்சி (முற்றிய தோல் சீவியது)  1 அங்குலம்

2) பூண்டுப் பல்(தோல் நீக்கியது).   4

3) மிளகு. (கரு மிளகு).                  4

4) துளசி (நல்ல துளசி(அ) நாட்டு துளசி(அ) கருந்துளசி.    இலைகள் 9

5) நாட்டுப் பசும்பால்.             1/4

கோப்பை.    

செய்முறை:

 

       பூண்டையும் இஞ்சியையும் 2 மி.மீ அளவு சன்ன மான துண்டுகளாகப் பொடித்துக் கொள்ளவும் .  மிளகை உடைக்காமல் முழுதாக எடுத்துக் கொள்ளவும். துளசியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அனைத்தையும் பாலில் போட்டு ஒரு கெட்டியான பாத்திரத்தில் சிறுதீயாக வைத்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். பால் சுண்டி கோவா போல் வந்ததும் சுரண்டி உருட்டி எடுத்துக் கொள்ளவும். இரவு சாப்பாட்டுக்குப் பின் இதைச் சாப்பிடவும். 

நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாகப் பாலின் அளவைக் குறைந்துகொண்டே வர இஞ்சி,பூண்டு வேகிற நேரம் குறைந்து அரை வேக்காடு கால்  வேக்காடு எனக் குறைத்து, சாப்பிட வாயிம் வயிறும் பழகிக் கொள்ளும். பிறகு சிரமமின்றி பால் சேர்த்து வேக வைக்காமலே பச்சை இஞ்சி. பூண்டு, மிளகு  துளசியை வாயிலிட்டு மென்று அப்படியே சாப்பிடப் பழகிக் கொள்ளலாம். பச்சையாகச் சாப்பிடுவதுதான் சரியான முறை. ஆனால் எடுத்ததும் பச்சையாகச் சாப்பிட்டால் பலருக்கு வயிறு எரிச்சல் ஏற்பட்டு இதைச் சாப்பிடாது விட்டுவிடுவர். இதை எவரும் சிரமமின்றி சாப்பிட்டுப் பலனடைய வேண்டும் என்பதற்காகத்தான்  இந்த முறையைச் சொன்னேன். இந்தத் தயாரிப்பை 30 ( அ) 35 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் வருமுன் காக்கும் நடவடிக்கையாக எடுத்துக் கொண்டு இதயத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம். இதைத் தயாரிக்க அனைத்துப் பொருட்களும் வீட்டிலேயே இருக்கிறது. இதை ஆயுள் முழுதும் எவ்வளவு காலம் சாப்பிட்டாலும் எந்த கெடுதியும் இல்லை.

நடந்தால் மூச்சு வாங்குவதும் , நெஞ்சு வலி வருவதும்  சிறிது ஓய்வு எடுத்துவிட்டு தொடர்ந்து நடந்தால் சரியாகிப்போவதும், தொடர்ந்து படியேறினால் நெஞ்சு வலிப்பதும், மூச்சு வாங்குவதும் இதய நோயின் முன்னறிவிப்புகள். நமது இதயம் தரும் எச்சரிக்கை. இதயம் தனது பிரச்சனையைத் தெரிவிக்கும் சமிக்ஞைகள். எனது அறிவுரையின்படி இந்த நிலையில் இம்மருந்துணவால் நலம்பெற்றவர்கள் பலர்

by Swathi   on 14 Oct 2019  3 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
இனிமையான வாழ்க்கைக்கு சித்தர்கள் தரும் நெறிகள் - முனைவர் திரு. அழகர் இராமனுஜம - 2/3 இனிமையான வாழ்க்கைக்கு சித்தர்கள் தரும் நெறிகள் - முனைவர் திரு. அழகர் இராமனுஜம - 2/3
கருத்துகள்
06-Aug-2020 14:28:04 B.Jothiramalingam said : Report Abuse
ஐயா,தங்கள் தஙகள் முகவரி அல்லது போன் நம்பர் கொடுங்கள்,எனக்கு நேத்ரா மருநது வேணடும்।என் நம்பர் 9944577545
 
21-Jan-2020 02:01:02 JAYAKUMAR V said : Report Abuse
சார், i want to buy medicine powder explained for tonsillite by அன்புக்கணபதி சார். kindly share contact number to get that medicine .
 
28-Dec-2019 07:22:11 மோகன் S ர் said : Report Abuse
ஐயா என் அண்ணனுக்கு வயது 61 ஆகிறது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் வசிக்கிறார். அவருக்கு சிறுநீரில் Albumin என்னும் புரதம் வருகின்றது. இது எதனால் ஏற்படுகிறது.. இதற்கு சித்த மருந்து உள்ளதா என்று பதிலளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். இது எவ்வளவு நாட்கள் இருக்கின்றது என்று தெரியவில்லை. ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்புதான் வலிப்பு நோய் வந்தபொழுதுதான் இதை கண்டுபிடித்தனர். அவர் பல வருடங்களாகவே ரத்த கொதிப்பிற்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.