LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    தோட்டக்கலை Print Friendly and PDF

செண்டுமல்லி சாகுபடி

நல்ல வடிகால் வசதியுடன் கூடிய எல்லாவகை மண்ணிலும் பயிரிடலாம். களர், உவர் நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றதல்ல. சீரான மிதவெப்ப நிலை அவசியம். சமவெளி மற்றும் மலைப்பிரதேசங்களில் பயிரிடலாம். ஆண்டு முழுவதும் அனைத்துப் பருவங்களிலும் பயிரிடலாம்.


பிரத்யேக ரகம் - மேக்ஸிமா யெல்லோ. நிலத்தை நன்கு உழுது கடைசி உழவின்போது எக்டருக்கு 25 டன் மக்கிய தொழுஉரம் இடவேண்டும். பின் 15 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.

 

விதையளவு: 


எக்டருக்கு 15 கிலோ.நடும் பருவம்: ஆண்டு முழுவதும். இருந்தாலும் ஜூன் - ஜூலை மாதங்கள் நடவு செய்ய ஏற்றது.


நாற்றங்கால்: 


நிலத்தை 2-3 முறை நன்கு உழுது கடைசி உழவின்போது மக்கிய தொழு உரம் இட்டு நன்கு கலக்கிவிட வேண்டும். விதைகளை 200 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு நேர்த்தி செய்து பின் 15 செ.மீ. இடைவெளியில் விதைகளை வரிசையில் பாத்திகளில் விதைக்க வேண்டும். மண் கொண்டு மூடி உடன் நீர் பாய்ச்ச வேண்டும். 7 நாட்களில் முளைத்துவிடும். 30 நாட்கள் ஆனவுடன் நாற்றுக்களை பிடுங்கி நடவேண்டும்.


நடவு: 


வரிசைக்கு வரிசை 45 செ.மீ. செடிக்கு செடி 30 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: ஒரு எக்டக்கு 45 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடியுரமாக இடவேண்டும். நட்ட 45 நாட்கள் கழித்து எக்டருக்கு 45 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய உரத்தினை இட்டு மண் அணைக்க வேண்டும்.


நீர் நிர்வாகம்: 


நட்டவுடன் ஒரு தண்ணீர் பின்னர் 3ம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.நுனி கிள்ளுதல்: நட்ட 30 நாட்களில் செடியின் நுனிப்பகுதி அல்லது முதல் பூ மொட்டுக்களை கிள்ளி எடுக்க வேண்டும்.

by Swathi   on 20 Mar 2014  5 Comments
Tags: Jasmine Cultivation   Sendu Malli Poo Cultivation   செண்டுமல்லி சாகுபடி              
 தொடர்புடையவை-Related Articles
செண்டுமல்லி சாகுபடி செண்டுமல்லி சாகுபடி
மல்லிகை சாகுபடிதொழில் நுட்பங்கள் மல்லிகை சாகுபடிதொழில் நுட்பங்கள்
மல்லிகை சாகுபடிதொழில் நுட்பங்கள் மல்லிகை சாகுபடிதொழில் நுட்பங்கள்
கருத்துகள்
14-Feb-2019 05:28:39 madeswarangopal said : Report Abuse
செண்டுமல்லி செடியில் நுணிகிளுத்தல் அவசியமா ,சாமந்தி செடியில் நுணிகிளுத்தல் செய்கிறோம் , ஆனால் செண்டுமளிக்கு கேள்விப்பட்டதில்லை சற்று பதில் கூறவும்.
 
28-Dec-2018 16:17:01 Thirumal said : Report Abuse
Kenththi poo vilai8aipadu eppadi and adanudiya rate
 
18-Dec-2018 14:05:21 JANAKIRAMAN I said : Report Abuse
Dear sir i want sendu malli seed pleasensir
 
22-Feb-2017 02:02:52 கேசவன் said : Report Abuse
வணக்கம் ஐயா, எனது பெயர் கேசவன் நான் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர். மேலே கூறியுள்ள தகவல்களுக்கு நன்றி. எங்களது தோட்டத்தில் புதிதாக சென்டுமல்லி பயிரிடுகின்றோம், அதற்க்கான (இயற்கை வழியில்) உரங்கள் தயாரிக்க சில வழி முறைகளை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது மொபைல் எண்:௯௬௯௮௬௫௨௨௬௫, தங்களது மொபைல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 
17-Mar-2016 08:32:50 senthilkumar said : Report Abuse
nan sakupade seiya irukeran yannaku uses eruku
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.