LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF
- தமிழ் மண்ணில் சாமிகள்

ஏழு கன்னிமார்களின் கதை

ஏழு தெய்வக் கன்னிகளின் பெயர்கள் :

 

கன்னிமார்கள் சக்தியின் வடிவம். தாங்கள் யாரென உணராத அவர்களிடம் சிவன் திருவிளையாடல் புரிந்ததாக கதைகள் சொல்லுகின்றன.

 

பார்வதி அம்மன்

பட்டத்தாள்

அருந்தவம்

பூவாள்

பச்சையம்மன்

மறலியம்மன் என்னும் காத்தாயி

பூங்காவனம்.

கன்னிமார்களின் கதை :

 

பொதிகை மலை அடிவாரத்தில் வாழ்ந்த ஒரு விவசாயிக்கு ஏழு பெண் குழந்தைகள் பிறந்தார்கள். அழகிலும், அறிவிலும் சிறந்திருந்தாலும், ஏழ்மையின் காரணமாய் திருமணம் கைகூடவில்லை. தாங்கள் சக்தியின் வடிவம் என்று உணராதவர்கள், மணலில் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தார்கள்.

 

சிவனும் அவர்களின் பிராத்தனைக்காக மனம் இரங்கினான். ஆனால் அவர்களிடம் திருவிளையாடல் புரிய ஆசைக் கொண்டு ஒரு விவசாய இளைஞன்போல உருவெடுத்து அங்கு சென்று, பூஜை செய்து கொண்டிருந்த பெண் களைத் தழுவ முயன்றார். “யாரோ ஒருவன் வந்து நம்மை மானபங்கப்படுத்தப் பார்க்கிறானே’ என்று மிரண்டு போன பெண்கள், திசைக் கொருவராகக் காட்டிற்குள் ஓடியொளிந்தனர்.

 

இப்படிப் பிரிந்துபோன சகோதரிகள் மீண்டும் ஒன்று சேர ஓராண்டு ஆகிவிட்டது. அந்த ஏழு சகோதரிகளில் காத்தாயி என்பவள் மட்டும் இடுப்பில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு வந்தாள்.மற்ற சகோதரிகள் குழப்பமடைந்து, “”உனக்கு ஏது இந்தக் குழந்தை?” எனக் கேட்டனர்.

 

அதற்கு காத்தாயி, “”பூஜை செய்தபோது நம்மைத் துரத்திய அந்த ஆண்மகன் என்னைப் பிடித்து பலவந்தப்படுத்தி விட்டான். அதனால் உண்டானது இந்தக் குழந்தை” என்றாள்.ஆனால் அதை சகோதரிகள் நம்பவில்லை. “என்னை நீங்கள் நம்பவில்லையா? என்மீதே சந்தேகப்படுகிறீர்களே. நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அழுதபடி கேட்டாள்.

 

“நீயும் உன் குழந்தையும் தீயில் இறங்கி வந்தால் நீ சொல்வதை உண்மை என நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என்றனர் மற்ற சகோதரிகள். அதன்படியே தீ மூட்டிய காத்தாயி, அதில் தன் குழந்தையோடு இறங்கி நடந்து வந்தாள்.

 

அப்போது அவர்களுக் குக் காட்சி கொடுத்த சிவ பெருமான், “”இவையெல் லாம் என் திருவிளையாடல் களில் ஒன்று. நீங்களெல் லாம் எம்மைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்த அந்த ஏழு ஊர்களிலேயே தெய் வங்களாய் குடிகொண்டு மக்களின் துயரங்களைப் போக்குங்கள். மக்களும் உங்களையே முதன்மைப் படுத்துவார்கள். உங்களுக்கு ஏவலர்களாக- காவலர் களாக பூமாலையப்பர், செம்மலையப்பர், முத்தையா, ராயப்பா, கருப் பையா உள்ளிட்ட ஏழு முனிகளும் உடனிருந்து செயல்படுவார்கள்” என்றருளி மறைந்தார். அவர்களும் அவ்வாறே கோவில் கொண்டார்கள்.

 

குடி கொண்டிருக்கும் இடங்கள் :

 

பார்வதி அம்மன் – சன்னாசி நல்லூர்.

பட்டத்தாள் – புலியூர்.

அருந்தவம் – காளிங்கராய நல்லூர்.

பூவாள் – வ. சித்தூர்.

பச்சையம்மன் – குமாரை.

காத்தாயி – வெங்கனூர்.

பூங்காவனம் – அரகண்ட நல்லூர்.

 

இவர்களில் சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன் மூத்தவள். மேற்கண்ட ஏழு ஊர்களும் பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அமைந்துள்ளன.

 

நன்றி :

நக்கீரன்.

by Swathi   on 01 Aug 2013  14 Comments
Tags: ஏழு கன்னிமார்களின் கதை   ஏழு கன்னிமார்   கன்னிமார் கதை   பார்வதி அம்மன்   பட்டத்தாள்   அருந்தவம்   பூவாள்  
 தொடர்புடையவை-Related Articles
ஏழு கன்னிமார்களின் கதை ஏழு கன்னிமார்களின் கதை
கருத்துகள்
27-Apr-2020 03:20:51 சுபாஷ் சந்திர போஸ் said : Report Abuse
எழுகன்னிமார்கள் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து நின்ற நிலையில் காட்சி தருவர். ஏழுமத்தார்கள் அமர்த்த கோலத்தில் தத்தம் கணவன் மார்களின் ஆயுதங்களுடன் ஊர்திகளில் அமர்ந்து கட்சி தருவர்.
 
27-Apr-2020 03:09:57 சுபாஷ் சந்திர போஸ் said : Report Abuse
உண்மை ஏழு கன்னிமார் வேறு ஏழு மாதர்கள் வேறு.
 
24-Jan-2020 18:07:30 Gopinath said : Report Abuse
Gopinath agamudayar Engal kulatheyvam kannimar வெள்ளூர் Kanniyam padi kadampavathu vasivi amman
 
08-Jan-2020 17:25:05 kumarasamy said : Report Abuse
எங்கள் குலதெய்வம் கன்னிமார் (சுமதி,கெளமாரி,மகேஸ்வரி,ராஜகன்னிவைஷ்ணவி,பட்டாகாரி,சுபத்திரா) ஆகும்வரலாறு தெரிந்தால் பதிவிடவும்
 
17-Aug-2019 00:11:35 கோக said : Report Abuse
பட்டாரிகா முதலியோர் சப்த கன்னியர்கள் அல்லது சப்த கன்னிமார் என்று அழைக்கப்படுவார். பிராம்மி முதலியோர் சப்த மாதக்கள் என அழைக்கப்படுவார்கள். இவர்களின் தோற்றம் அமைப்பு செயல் முற்றிலும் மாறுபட்டது. மேலும் சூட்சுமமானது. இது கதையல்ல நாம் வணங்கும் தெய்வங்கள்
 
05-Apr-2019 13:55:20 Sundar rajan said : Report Abuse
Anaivarukum vanakam.na trihy la irukean.yen kulatheivam 7 kannimargal .nangal papathi sami nu solluvoam. Vangaram village.kulumoor via.ariyalur distric.
 
15-Jan-2019 07:40:54 நஜுமுனிஷா said : Report Abuse
எனது கணவரின் குலதெய்வம் கன்னிமார்கள் அவர்கள் அவர்களின் உண்மையான வாழ்க்கை வரலாறு குறித்தும் அவர்கள் தஞ்சாவூர் ஐயம்பேட்டையில் குடி கொண்டு அருள் பலிக்கும் வரலாறையும் தெளிவாக விவரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 
04-Jan-2019 10:41:32 saravanan said : Report Abuse
சப்த கன்னிகள் பட்டராகி கன்னிகா , தேவ கன்னிகா,பத்மகன்னிகா,சிந்து கன்னிகா, அகஜா கன்னிகா, வன கன்னிகா, சுமதி கன்னிகா.என்று கரூர் திருமா நிலையூர் ஸ்ரீ திருமாலீஸ்வரர் கோவிலில் நான் கண்ட அங்கு இருந்த சப்தகன்னிமார் போட்டோவில் இருந்த கன்னிமார் சாமிகளின் பெயர்கள் ஆகும் .. சப்த மாதர்கள் ப்ராஹ்மி (ப்ரஹ்மசக்தி) ,மஹேஸ்வரி(சிவன்சக்தி ) ,கௌமாரி, (முருகன் சக்தி) வைஷ்ணவி (விஷ்ணு சக்தி) , வாராகி,(யமன்,வரகர்சக்தி ) இந்திராணி (இந்திரன்சக்தி ) ,சாமுண்டி( காளி சக்தி )என்பர் .
 
22-Jan-2018 09:36:08 வ ஜெயச்சந்தரன் said : Report Abuse
சூப்பர்சப்த கன்னிமார் படேல் கிவ் மீ ப்ளீஸ்
 
10-Jul-2017 11:03:59 manikandan said : Report Abuse
சூப்பர் story
 
19-Jun-2017 10:37:14 எம்.சேகர் ராசிபுரம் said : Report Abuse
ஏழு கன்னிகள் அதாவது பிரம்மி,கவுமாரி,சாமுண்டி, வராஹி,இந்திரானி,வைஸ்ணவி,மஹேஷ்வரி என்ற சப்தகன்னியர்களின் வேறு வரலாற்று கதையை தேடி வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்
 
17-Jun-2017 07:24:51 எம்.சேகர் said : Report Abuse
மேற்கண்ட நா.சிவக்குமார் கூறிய கருத்தே எனது கருத்தும்.இந்த கதை எனக்கும் புதுமையாக உள்ளது நன்றி
 
01-Jun-2017 01:34:22 நா.சிவகுமார் said : Report Abuse
கன்னியர் வரலாறு புதுமையான ஒன்றாக உள்ளது . நான் கேள்விப்பட்டது வரை கன்னியர் எழுவர் என்பது பிரம்மி, கவுமாரி,சாமுண்டி, இந்திராணி, வராஹி,வைஷ்ணவி, இவர்கள் பற்றி அறிந்ததுதான் ஆனால் மேற்கண்ட ஏழுபேர் வரலாறு புதுமையை உள்ளது . எல்லாம் சக்தி மயம்.
 
20-Dec-2016 04:13:58 சுப்ரமணியன். சி said : Report Abuse
கன்னிமார் சுவாமி கதைகள் அருமையாக வடிவமைக்க பட்டுள்ளது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.