LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-49

7.049.திருமுருகன்பூண்டி 
பண் - பழம்பஞ்சுரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. கழறிற்றறிவாரென்னுஞ் சேரமான்பெருமானாயனார் கொடுத்த திரவியங்களை பரிசனங்கள் தலையில் எடுப்பித்துக்கொண்டு திருமுருகன்பூண்டிக்குச் சமீபத்தில் எழுந்தருளும்போது பரமசிவத்தின் கட்டளையினால் பூதங்கள் வேடுவர்களாகிவந்து அந்தப்பரிசனங்களை அடித்துப் பொருள்களைப் பறித்துப் போயின. அப்போது சுந்தரமூர்த்தி சுவாமிகள் இந்தப் பதிகமோதிப் பொருள்களைப் பெற்றுக்கொண்டது.
சுவாமிபெயர் - ஆவுடைநாயகர். 
தேவியார் - ஆவுடைநாயகியம்மை. 
498 கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவ லாமைசொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் 
டாற லைக்குமிடம்
முடுகு நாறிய வடுகர் வழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
ஏத்துக் கிங்கிருந் தீர்எம்பி ரானீரே.
7.049.1
எம்பெருமானிரே, முடைநாற்றம் சேய்மையினும்விரையச்சென்று நாறுகின்ற உடம்பையுடைய வடுகர்கள் வாழ்கின்ற இம் முருகன்பூண்டி, வளைந்த கொடிய வில்லையுடைய வடுக வேடுவர், வருவோரைப் பொருந்தாத சொற்களைச் சொல்லி, 'திடுகு' என்றும், 'மொட்டு' என்றும் அதட்டி அச்சுறுத்தி ஆறலைத்து அவர்தம் உடைகளைப் பறித்துக் கொள்ளும் இடம்; இம்மாநகரிடத்து இங்குறுகிய, நுண்ணிய இடையையுடைய எம்பெருமாட்டியோடும் நீர் எதன்பொருட்டு இருக்கின்றீர்? 
499 வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
விரவ லாமைசொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்
கூறை கொள்ளுமிடம்
முல்லைத் தாது மணங்க மழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
7.049.2
எம்பெருமானிரே, முல்லை மலரின் மகரந்தம் நறு மணத்தை வீசுகின்ற இம் முருகன்பூண்டி மாநகர் வருவோரை, வேடுவர்கள், வில்லைக் காட்டி, வெருட்டியும், பொருந்தாத சொற்களைச் சொல்லிக் கல்லால் எறிந்தும், கையால் அறைந்தும் அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம்; இதன் எல்லைக்குக் காவல் ஒன்றும் இல்லாமை நீர் அறிந்ததேயானால், இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீ? 
500 பசுக்க ளேகொன்று தின்று பாவிகள்
பாவம் ஒன்றறியார்
உசிர்க்கொ லைபல நேர்ந்து நாள்தொறும்
கூறை கொள்ளுமிடம்
முசுக்கள் போற்பல வேடர் வாழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
7.049.3
எம்பெருமானிரே, வேடர் பலர் குரங்குகள் போலப் பிறர்பொருளைப் பறித்து வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர், அப்பாவிகள், பாவம் என்பதொன்றையறியாராய், விலங்குகளையே கொன்று தின்று, நாள்தோறும் பலரது உயிர்களைக் கொல்லுதலைத் துணிந்து செய்து அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம்; இதன்கண் நீர், இழுக்கு நீங்கப் பிச்சை ஏற்று, இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர்? 
501 பீறற் கூறை உடுத்தொர் பத்திரங்
கட்டி வெட்டினராய்ச்
சூறைப் பங்கிய ராகி நாள்தொறுங்
கூறை கொள்ளுமிடம்
மோறை வேடுவர் கூடி வாழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
ஏறு கால்இற்ற தில்லை யாய்விடில்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
7.049.4
எம்பெருமானிரே, குற்றமுடைய வேடுவரே கூடி, ஆறலைத்த பொருளின் பங்காகிய பொருளை உடையவராய், வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர், அவர்கள், கிழிந்த உடையை உடுத்துக்கொண்டு, அதற்குள் உடைவாளையுங் கட்டிக்கொண்டு, வருவோரை அவ்வுடைவாளால் வெட்டி, நாள்தோறும் அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம்; உமது எருது கால் ஒடியாமல் நன்றாகவே இருக்கின்றதென்றால், அதன்மேல் ஏறி அப்பாற் போகாமல், இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்? 
502 தயங்கு தோலை உடுத்துச் சங்கர
சாம வேதமோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
மார்க்க மொன்றறியீர்
முயங்கு பூண்முலை மங்கை யாளொடு
முருகன்பூண்டி மாநகர்வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
7.049.5
எம் பெருமானிரே, நீர், விளங்குகின்ற தோலை உடுத்து, இன்பத்தைச் செய்கின்ற சாம வேதத்தைப் பாடிக்கொண்டு அப்பாட்டினால் மயங்கி ஊரில் உள்ளார் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்பதற்கு வழி ஒன்றும் அறியீரோ? பல இடங்களுக்குச் செல்ல வலிமையும் உடையீரென்றால், தழுவுகின்ற, அணிகளை அணிந்த தனங்களையுடைய தேவியோடும், இம் முருகன்பூண்டி மாநகரிடத்து இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்? 
503 விட்டி சைப்பன கொக்க ரைகொடு
கொட்டி தத்தளகம்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு
குடமுழா நீர்மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங் கமழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. 7.049.6
எம்பெருமானிரே, நீர், கொட்டிப்பாடுதற்கு உரிய, தாள அறுதிக்கு ஏற்ப விட்டுவிட்டு ஒலிக்கின்ற' 'கொக்கரை, கொடு கொட்டி, தத்தளகம், துந்துமி, குடமுழா, என்னும் இவற்றை விரும்புவராய் உள்ளீரென்றால், மற்றும், ஊரவர் இட்ட பிச்சையை ஏற்று உண்பீரென்றால், பலவகை அரும்புகள் அலர்ந்து மணங்கமழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர்? 
504 வேத மோதிவெண் ணீறு பூசிவெண்
கோவணந் தற்றயலே
ஓத மேவிய ஒற்றி யூரையும்
உத்திர நீர்மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறை கொள்ளு
முருகன்பூண்டி மாநகர்வாய்
ஏது காரண மேது காவல்கொண்
டெத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
7.049.7
எம்பெருமானிரே, நீர், வேதத்தை ஓதிக்கொண்டு, வெண்ணீற்றைப் பூசிக்கொண்டு, வெள்ளிய கோவணத்தை உடுத்து, பக்கத்தில் அலை பொருந்திய திருவொற்றியூரை உத்திர நீர் விழாவின் பொருட்டு விரும்புவீர்; அங்குப் போகாமல், வேடர்கள், வருவோரைத் தாக்கி, அவரது உடையைப் பறித்துக் கொள்ளுகின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து, யாது காரணத்தால், எதனைக் காத்துக் கொண்டு, எதன் பொருட்டு இங்கு இருக்கின்றீர்? 
505 படவ ரவுநுண் ணேரி டைப்பணைத்
தோள்வ ரிநெடுங்கண்
மடவ ரல்லுமை நங்கை தன்னையொர்
பாகம் வைத்துகந்தீர்
முடவ ரல்லீர் இடரி லீர்முருகன்
பூண்டி மாநகர்வாய்
இடவ மேறியும் போவ தாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
7.049.8
எம்பெருமானிரே, நீர், தனிமையாக இல்லாது, படத்தையுடைய பாம்புபோலும் மிக நுண்ணிய இடையினையும், பருத்த தோள்களையும், வரிகளையுடைய நீண்டகண்களையும் உடைய இளமை பொருந்திய, 'உமை' என்னும் நங்கையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்துள்ளீர்; முடவரல்லீர்; ஆகவே, பெயர்ந்து போதற்கண் இடரொன்றும் இல்லீர்; அன்றியும், நீர, விரும்பிய இடத்திற்கு இடபத்தின்மேல் ஏறியும் போவீர் என்றால், இம் முருகன் பூண்டி மாநகரிடத்து, இங்கு, எதன்பொருட்டு இருக்கின்றீர்? 
506 சாந்த மாகவெண் ணீறு பூசிவெண்
பற்ற லைகலனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையொர்
பாகம் வைத்துகந்தீர்
மோந்தை யோடு முழக்க றாமுரு
கன்பூண்டி மாநகர்வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
7.049.9
எம் பெருமானிரே, வெள்ளிய நீற்றைச் சாந்தாகப் பூசிக்கொண்டு, வெள்ளிய பற்களையுடைய தலையேகலமாக ஏந்தி, முடியிற் சூடிய வெள்ளிய பிறையாகிய கண்ணியை அம் முடியின் ஒரு பாகத்தில் விரும்பி வைத்தவரே, நீர், 'மொந்தை' என்னும் வாச்சியத்தோடு, வேடர்கள் முழங்குதல் நீங்காத இம் முருகன் பூண்டி மாநகரிடத்து, அணிகளைத் தாங்கிய தனங்களையுடைய மங்கை ஒருத்தியோடு இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்? 
507 முந்தி வானவர் தாந்தொ ழும்முரு
கன்பூண்டி மாநகர்வாய்ப்
பந்த ணைவிரற் பாவை தன்னையொர்
பாகம் வைத்தவனைச்
சிந்தை யிற்சிவ தொண்ட னூரன்
உரைத்தன பத்துங்கொண்
டெந்தம் மடிகளை ஏத்து வார்இட
ரொன்றுந் தாமிலரே.
7.049.10
தேவர், ஒருவர் ஒருவரின் முற்பட்டு வணங்குகின்ற, திருமுருகன்பூண்டி மாநகரிடத்து எழுந்தருளியிருக்கின்ற பந்திற் பொருந்திய விரல்களையுடைய, பாவைபோலும் மங்கையை ஒரு பாகத்து வைத்துள்ள சிவபெருமானை, அவனுக்குத் தொண்டனாகிய நம்பியாரூரன் அன்பினாற் பாடிய இப் பத்துப் பாடல்களால் அவ்வெம்பெருமானைத் துதிப்பவர்கள், துன்பம் ஒன்றும் இல்லாதவராவர். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.