LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-50

7.050.திருப்புனவாயில் 
பண் - பழம்பஞ்சுரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பழம்பதிநாயகர். 
தேவியார் - பரங்கருணைநாயகியம்மை. 
508 சித்த நீநினை யென்னொடு சூளறு வைகலும்
மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளன்ஊர்
பத்தர் தாம்பலர் டிநின் றாடும் பழம்பதி
பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே. 7.050.1
மனமே, நீ, 'நும் நெறியாற் பயன் கிட்டாது' என்று இப்பொழுது என்னொடு சூள் செய்தலை ஒழி; மதத்தையுடைய யானையின், உரித்த தோலைப் போர்த்த அழகனாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற ஊர், அடியார் பலர், திருப்பாடல்கள் பலவற்றைப்பாடி ஆடுகின்ற பழைய ஊராகிய மரப்பொந்துகளில் ஆந்தைகளின் பாட்டு ஒழியாத திருப்புனவாயிலே; அதனை நாள்தோறும் தப்பாது நினை; பின்னர் என்னொடு சொல். 
509 கருதி நீமனம் என்னொடு சூளறு வைகலும்
எருது மேற்கொளும் எம்பெரு மாற்கிட மாவது
மருத வானவா வைகும் இடம்மற வேடுவர்
பொருது சாத்தொடு பூசல றாப்புன வாயிலே. 7.050.2
மனமே, நீ, இப்பொழுது என்னொடு சூள் செய்தலை ஒழி; எருதினை ஊர்கின்ற எம்பெருமானுக்கு இடமாய் இருப்பது, இந்திரன் முதலிய தேவர் நீங்காதிருக்கின்ற இடமாகிய, வேடர்கள் வாணிகச் சாத்தோடு போர்செய்தலால், ஆரவாரம் ஒழியாத திருப்புனவாயிலே; அதனை நாள்தோறும் தப்பாது நினை; பின்னர் என்னொடு சொல். 
510 தொக்காய்மன மென்னொடு சூளறு வைகலும்
நக்கானமை ஆளுடை யான்நவி லும்மிடம்
அக்கோடர வார்த்தபி ரானடிக் கன்பராய்ப்
புக்காரவர் போற்றொழி யாப்புன வாயிலே. 7.050.3
அளவற்ற நினைவுகள் பொருந்தி ஆராய்கின்ற மனமே, நீ, இப்பொழுது என்னொடு சூள்செய்தலை ஒழி. ஆடை யில்லாதிருப்பவனும், நம்மை ஆளாக உடையவனும் ஆகிய சிவ பெருமானுக்கு இடமாய் இருப்பது, எலும்பையும், பாம்பையும் அணிந்த அப்பெருமானுக்கு அன்பராய், அவனையே புகலிடமாக, அடைந்தவர் அவனைப் போற்றுதல் ஒழியாத திருப்புனவாயிலே; அதனை நாள்தோறும் தப்பாது நினை; பின்னர் என்னொடு சொல். 
511 வற்கென் றிருத்திகண் டாய்மன மென்னொடு சூளறு
பொற்குன்றஞ் சேர்ந்ததொர் காக்கைபொன் னாமதுவேபுகல்
கற்குன்றுந் தூறும் கடுவெளி யுங்கடற் கானல்வாய்ப்
புற்கென்று தோன்றிடு மெம்பெரு மான்புன வாயிலே. 7.050.4
மனமே, நீ, முருடுடையையாய் இருக்கின்றாய்; என்னொடு இப்பொழுது சூள்செய்தலை ஒழி; பொன்மலையைச் சேர்ந்த காக்கையும் பொன்னிறமாம் ஆதலின், கரையிடத்து, சிறிய கற்குன்றுகளும், புதர்களும், வெப்பம் மிக்க வெற்றிடமும் பொலிவிழந்து தோன்றுதற்குக் காரணமான எம் பெருமானது திருப்புனவாயிலாகிய அதனையே போற்று; பின்னர் என்னொடு சொல். 
512 நில்லாய்மன மென்னொடு சூளறு கைவலும்
நல்லான்நமை ஆளுடை யான்நவி லும்மிடம்
வில்வாய்க்கணை வேட்டுவ ராட்ட வெருண்டுபோய்ப்
புல்வாய்க்கணம் புக்கொளிக் கும்புன வாயிலே. 7.050.5
மனமே, நீ, இப்பொழுது என்னொடு சூள்செய்தலை ஒழி; நன்மையே வடிவமானவனும், நம்மை ஆளாக உடையவனுமாகிய சிவபெருமான் பெரிதும் உறையும் இடம், வேடர்கள், தம் வில்லின்கண் தொடுத்த அம்பினால் வெருட்ட வெருண்டு ஓடி, மான் கூடடம் புகுந்து ஒளிக்கின்ற திருப்புனவாயிலே; நாள்தோறும் அதன் கண் சென்று நில்; பின்னர் என்னொடு சொல். 
513 மறவல் நீமன மென்னொடு சூளறு வைகலும்
உறவும் ஊழியும் ஆயபெம் மாற்கிட மாவது
பிறவு கள்ளியின் நீள்கவட் டேறித்தன் பேடையைப்
புறவங் கூப்பிடப் பொன்புனஞ் சூழ்புன வாயிலே. 7.050.6
மனமே, நீ, இப்பொழுது என்னொடு சூள்செய்தலை ஒழி; எல்லா உயிர்கட்கும் உறவும், காலமுமாய் நிற்கும் சிவபெருமானுக்கு இடமாய் இருப்பது, சேவற் புறா, தன் பெடை பிரிந்தபின்பு, அதனை, கள்ளிப் புதரின் வளர்ந்த கிளையில் ஏறிநின்று கூப்பிட, புனஙகளில் பொன் நிறைந்து காண்ப்படுகின்ற திருப்புனவாயிலே; அதனை மறவாது நினை; பின்னர் என்னொடு சொல். 
514 ஏசற்று நீநினை என்னொடு சூளறு கைவலும்
பாசற்றவர் பாடிநின் றாடும் பழம்பதி
தேசத் தடியவர் வந்திரு போதும் வணங்கிடப்
பூசற்றுடி பூசல றாப்புன வாயிலே. 7.050.7
மனமே, நீ, இப்பொழுது என்னொடு சூள்செய்தலை ஒழி; பாசம் நீங்கிய மெய்யுணர்வினர் புகழ்ந்து பாடி, நின்று ஆடுகின்ற பழைமையான ஊர், பல நாட்டிலும் உள்ள அடியவர் பலரும் வந்து காலையிலும், மாலையிலும் வணங்க, வேடுவர்களது போர்ப்பறை ஆரவாரத்தை ஒழியாத திருப்புனவாயிலே; அதனை, இகழ்தல் அற்று, நாள்தோறும் தப்பாது நினை; பின்னர் என்னொடு சொல். 
515 கொள்ளி வாயின கூரெயிற் றேனங் கிழிக்கவே
தௌளி மாமணி தீவிழிக் கும்மிடஞ் செந்தறை
கள்ளிவற் றிப்புற் றீந்துவெங் கானங் கழிக்கவே
புள்ளி மானினம் புக்கொளிக் கும்புன வாயிலே. 7.050.8
கொள்ளிபோல முனை சிவந்து நீண்ட வாயினை யுடையனவாகிய, கூரிய பற்களையுடைய பன்றிகள் நிலத்தைக் கிண்ட வெளிப்பட்ட சிறந்த மாணிக்க மணியோடு நெருப்புத் தோன்றுமிடத்துச சிவந்து காட்டும் நிலத்தின்கண் உள்ள கள்ளி உலர்ந்து, புல்தீந்து, கொடிய காடு அழிகையினாலே, புள்ளிமானின் கூட்டம் புகுந்து ஒளிக்கின்ற திருப்புனவாயிலே. 
516 எற்றேநினை என்னொடு சூளறு வைகலும்
மற்றேதும் வேண்டா வல்வினை யாயின மாய்ந்தறக்
கற்றூ றுகார்க் காட்டிடை மேய்ந்தகார்க் கோழிபோய்ப்
புற்றேறிக் கூகூ எனஅழைக் கும்புன வாயிலே. 7.050.9
மனமே, நின் செயகைதான் எத்தன்மைத்து! என்னொடு சூள்செய்தலை ஒழி; நம் வலிய வினையெனப் படுவன யாவும் அடியொடு கெட்டொழிதற்கு மற்றுச் சூழ்ச்சி யாதும் வேண்டா; கல்லைச் சூழ்ந்த புதரிலும், கரிய காட்டிடத்தும் இரையை உண்ட கரிய கானங்கோழிகள், ஈயற் புற்றுக்களின் மேல் ஏறி நின்று, 'கூகூ' எனக் கூப்பிடுகின்ற திருப்புனவாயிலை நாள்தோறும் தப்பாது நினை. 
517 பொடியாடு மேனியன் பொன்புனஞ் சூழ்புன வாயிலை
அடியா ரடியன் னாவல வூரன் உரைத்தன
மடியாது கற்றிவை ஏத்தவல் லார்வின மாய்ந்துபோய்க்
குடியாகிப் பாடிநின் றாடவல் லார்க்கில்லை குற்றமே. 7.050.10
நீற்றின்கண் மூழ்கிய திருமேனியனாகிய சிவ பெருமானது, புனங்களில் பொன் நிறைந்துள்ள திருப்புனவாயிலை அடியார்க்கு அடியானாகிய திருநாவலூரன் பாடிய இப்பாடல்களை,சாம்பியிராது கற்று, அவற்றால் அப்பெருமானை ஏத்த வல்லவர், முன்செய்த வினை எல்லாம் மாய்ந்துபோகப் பெற்று, அப்பெருமானுக்கே அடியராய் வாழ, அவற்றை இசைவழிப் பாடி நன்று ஆட வல்லவர்க்கு, செய்வன தவிர்வனவற்றிற் பிறழ்தலால் வருங் குற்றம் இல்லையாம். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.