LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-63

7.063.நம்பிஎன்ற திருப்பதிகம் 
பண் - தக்கேசி 
திருச்சிற்றம்பலம் 
645 மெய்யைமுற் றப்பொடிப் பூசியொர் நம்பி
வேதம்நான் கும்விரித் தோதியொர் நம்பி
கையில்ஓர் வெண்மழு வேந்தியொர் நம்பி
கண்ணும் மூன்றுடை யானொரு நம்பி
செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி
திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால்
எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
7.063.1
திருமேனி முழுதும் திருநீற்றைப் பூசியுள்ள ஒப்பற்ற நம்பியே, வேதங்கள் நான்கையும் விரித்துப் பாடிய ஒப்பற்ற நம்பியே, கையில் ஒரு வெள்ளிய மழுவை ஏந்திய ஒப்பற்ற நம்பியே, கண்கள் மூன்றை உடையவனாகிய நம்பியே, செம்மை நிறம் உடைய நம்பியே, புல்லிய, சிவந்த சடையை யுடைய நம்பியே, முப்புரங்களை, நெருப்பு எழுமாறு, வளைக்கப்பட்டதொரு வில்லால் எய்த நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன். 
646 திங்கள்நம் பிமுடி மேல்அடி யார்பாற்
சிறந்தநம் பிபிறந் தவுயிர்க் கெல்லாம்
அங்கண்நம் பிஅருள் மால்விசும் பாளும்
அமரர்நம் பிகும ரன்முதல் தேவர்
தங்கள்நம் பிதவத் துக்கொரு நம்பி
தாதை என்றுன் சரண்பணிந் தேத்தும்
எங்கள்நம் பியென்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
7.063.2
திருமுடியில் பிறையை அணிந்த நம்பியே, அடியாரிடத்து இனிது விளங்கி நிற்கும் நம்பியே, பிறப்பினை எடுத்த உயிர்களுக்கெல்லாம் அவ்விடத்து மறைந்து நின்று அருள்செய்யும் நம்பியே, மயக்கத்தைத் தரும் வானுலகத்தை ஆள்கின்ற, தேவர்கட்குத் தலைவனாகிய நம்பியே, முருகன் முதலிய முத்தர்கட்குத் தலைவனாகிய நம்பியே, வழிபடப்படுதற்கு ஒப்பற்ற நம்பியே, 'நீயே உலகிற்குத் தந்தை' என்று தௌ?ந்து உன் திருவடிகளைப் பணிந்து துதிக்கின்ற எங்களுக்குச் சிறந்து நிற்கின்ற நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன். 
647 வருந்தஅன் றும்மத யானை யுரித்த
வழக்குநம் பிமுழக் குங்கடல் நஞ்சம்
அருந்துநம் பிஅம ரர்க்கமு தீந்த
அருளின்நம் பிபொரு ளாலரு நட்டம்
புரிந்தநம் பிபுரி நூலுடை நம்பி
பொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி
இருந்தநம் பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
7.063.3
அன்று, மதத்தையுடைய யானையை அது வருந்துமாறு உரித்த நீதியை உடைய நம்பியே, ஓசையைச் செய்கின்ற கடலில் உண்டாகிய நஞ்சினை உண்ட நம்பியே, அதன்கண் தோன்றிய அமுதத்தைத் தேவர்களுக்கு ஈந்த அருளுடைய நம்பியே, அவ்வருளாகிய பொருள் காரணமாக அரிய நடனத்தைச் செய்கின்ற நம்பியே, முப்புரி நூலையுடைய நம்பியே, காலமும் வானமும் முதலிய எல்லாப் பொருள்களுமாய்ப் பலவாகி நிற்கின்ற நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன். 
648 ஊறுநம்பிஅமுதாஉயிர்க்கெல்லாம்
உரியநம்பிதெரியம்மறைஅங்கம்
கூறுநம்பிமுனிவர்க்கருங்கூற்றைக்
குமைத்தநம்பிகுமையாப்புலன்ஐந்தும்
சீறுநம்பிதிருவெள்ளடைநம்பி
செங்கண்வெள்ளைச்செழுங்கோட்டெருதென்றும்
ஏறுநம்பிஎன்னைஆளுடைநம்பி
எழுபிறப்பும்எங்கள்நம்பிகண்டாயே.
7.063.4
உள்ளத்தில், அமுதம் போல ஊற்றெழுகின்ற நம்பியே, எல்லா உயிர்கட்கும் புகலிடமாகிய நம்பியே, முனிவர்கட்கு, வேதத்தையும், அதன் அங்கத்தையும் அறியக் கூறிய நம்பியே, அழித்தற்கரிய கூற்றுவனை அழித்த நம்பியே, அடக்குதற்கு அரிய ஐம்புல ஆசைகளையும் கடிந்தொதுக்கிய நம்பியே, திருவெள்ளடைக் கோயிலில் வாழும் நம்பியே, சிவந்த கண்களையும், செழுமையான கொம்புகளையும் உடைய, வெண்மையான எருதையே எந்நாளும் ஏறுகின்ற நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன். 
649 குற்றநம்பிகுறுகாரெயில்மூன்றைக்
குலைத்தநம்பிசிலையாவரைகையில்
பற்றுநம்பிபரமானந்தவெள்ளம்
பணிக்கும்நம்பியெனப்பாடுதலல்லால்
மற்றுநம்பிஉனக்கென்செயவல்லேன்
மதியிலியேன்படுவெந்துயரெல்லாம்
எற்றுநம்பிஎன்னைஆளுடைநம்பி
எழுபிறப்பும்எங்கள்நம்பிகண்டாயே.
7.063.5
அறிவிலேனாகிய யான் படுகின்ற கொடிய துன்பங்களை எல்லாம் ஓட்டுகின்ற நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, உன்னை, 'மலையை வில்லாக வளைத்த நம்பியே, பின்பு அதனைக் கையிற்பிடித்து நின்ற நம்பியே, பின்பு அதனால் பகைவரது மதில்கள் மூன்றை அழித்த நம்பியே, அடியார்களுக்குப் பேரின்ப வெள்ளத்தை அளித்தருளுகின்ற நம்பியே' எனப் பாடுவதையன்றி ஒப்பற்ற பெரிய நம்பியாகிய உனக்கு யான் வேறு என் செய்ய வல்லேன்! நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன். 
650 அரித்தநம் பிஅடி கைதொழு வார்நோய்
ஆண்டநம் பிமுன்னை ஈண்டுல கங்கள்
தெரித்தநம் பிஒரு சேவுடை நம்பி
சில்பலிக் கென்றகந் தோறுமெய் வேடம்
தரித்தநம் பிசம யங்களின் நம்பி
தக்கன்றன் வேள்விபுக் கன்றிமை யோரை
இரித்தநம் பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
7.063.6
உனது திருவடியைக் கைகளால் தொழுகின்றவரது துன்பங்களை அரித்தொழிக்கின்ற நம்பியே, நெருங்கிய உலகங்கள் பலவற்றையும் முன்பு ஆக்கிய நம்பியே, பின்பு அவைகளைக் காக்கின்ற நம்பியே, ஒற்றை எருதையுடைய நம்பியே, இல்லந்தோறும் சென்று ஏற்கும் சில பிச்சைக்கென்று, திருமேனியில்? அதற்குரிய வேடத்தைப் பூண்ட நம்பியே, சமயங்கள் பலவற்றிற்கும் தலைவனாகிய நம்பியே, அன்று தக்கன் வேள்விச்சாலையிற் புகுந்து, ஆங்கிருந்த தேவரை எல்லாம் அஞ்சியோடச் செய்த நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன். 
651 பின்னைநம் பும்புயத் தான்நெடு மாலும்
பிரமனும் என்றிவர் நாடியுங் காணா
உன்னைநம் பிஒரு வர்க்கெய்த லாமே
உலகுநம் பிஉரை செய்யும தல்லால்
முன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி
முழுதிவை இத்தனை யுந்தொகுத் தாண்ட
தென்னைநம் பிஎம் பிரானாய நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
7.063.7
'நப்பின்னை' என்பவள் விரும்புகின்ற தோள்களையுடையவனாகிய நீண்ட உருவத்தையுடைய திருமாலும், பிரமனும் என்று சொல்லப்பட்ட இவர்கள் தேடியும் காணமாட்டாத நம்பியே, உலகிற்கு ஒருவனாய நம்பியே, உன்னை வாழ்த்துதலாகிய அதுவன்றி, அணுகுதல் ஒருவர்க்கு இயல்வதோ! எல்லாப் பொருட்கும் முன்னே உள்ள நம்பியே, பின்னிய நீண்டசடையையுடைய நம்பியே, உன் இயல்பெல்லாம் இவை போல்பவனே; ஆயினும், இத்தனையையும் தோன்றாவாறு அடக்கி, பெருநம்பியாகிய நீ எளிவந்து என்னை ஆண்டது என்னையோ? எமக்குப் பெருமானாகிய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப் பிலும் தலைவன். 
652 சொல்லைநம் பிபொரு ளாய்நின்ற நம்பி
தோற்றம் ஈறுமுத லாகிய நம்பி
வல்லைநம் பிஅடி யார்க்கருள் செய்ய
வருந்திநம் பிஉனக் காட்செய கில்லார்
அல்லல்நம் பிபடு கின்றதென் னாடி
அணங்கொரு பாகம்வைத் தெண்கணம் போற்ற
இல்லநம் பிஇடு பிச்சைகொள் நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
7.063.8
சொற்களாய் நிற்கும் நம்பியே, அச்சொற்களின் பொருள்களாய் நிற்கும் நம்பியே, எப்பொருளின் தோற்றத்திற்கும், ஒடுக்கத்திற்கும் முதல்வனாகிய நம்பியே, அடியார்க்கு அருள்செய்ய வல்லையாகிய நம்பியே, உனக்கு ஆட்செய்ய மாட்டாதார், உலகில் வருத்தத்தை அடைந்து அல்லல் படுதற்குக் காரணம் என் நம்பி நம்பீ? பதினெண் கணங்களும் போற்ற, உமையை ஒருபாகத்தில் வைத்திருந்தும், இல்லங்களை நாடிச்சென்று அங்கு உள்ளவர் இடுகின்ற பிச்சையை ஏற்கின்ற நம்பி. நம்பீ, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன். 
653 காண்டுநம் பிகழற் சேவடி என்றுங்
கலந்துனைக் காதலித் தாட்செய்கிற் பாரை
ஆண்டுநம் பிஅவர் முன்கதி சேர
அருளும்நம் பிகுரு மாப்பிறை பாம்பைத்
தீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்கத்
திருத்துநம் பிபொய்ச் சமண்பொரு ளாகி
ஈண்டுநம் பிஇமை யோர்தொழு நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
7.063.9
நம்பியாகிய உனது கழல் அணிந்த திருவடியைக் காண்போம் என்னும் உயிரோடும் மனம்பற்றி உன்னை விரும்பி உனக்கு ஆட்செய்கின்றவரை, நீ ஆட்கொண்டு அவர் விரைந்து உயர்கதி அடையுமாறு அருள்செய்கின்ற நம்பி நம்பி, ஒளியையுடைய சிறந்த பிறை பாம்பைப் பொருந்துகின்ற முடியில், 'கங்கை' என்னும் நங்கை தங்கும்படி இனிது வைத்துள்ள நம்பி நம்பீ, சமணர்க்குப் பொய்ப்பொருளாய் மறைந்து நின்று, எங்கட்கு மெய்ப்பொருளாய் வெளிநிற்கின்ற நம்பியே, தேவர்கள் வணங்குகின்ற நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன். 
654 கரக்கும்நம் பிகசி யாதவர் தம்மைக்
கசிந்தவர்க் கிம்மையோ டம்மையி லின்பம்
பெருக்குநம் பிபெரு கக்குருத்தா * * * 
7.063.10
உன்னிடத்து மனம் உருகாதவருக்கு உன்னை மறைத்துக் கொள்கின்ற நம்பியே, அன்பு செய்பவர்க்கு இப்பிறப்பிலும், வரும் பிறப்பிலும் இன்பத்தை மிகத் தருகின்ற நம்பியே, ......................... 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.