LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-67

7.067.திருவலிவலம் 
பண் - தக்கேசி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மனத்துணைநாதர். 
தேவியார் - மாழையங்கண்ணியம்மை. 
677 ஊனங் கத்துயிர்ப் பாய்உல கெல்லாம்
ஓங்கா ரத்துரு வாகிநின் றானை
வானங் கைத்தவர்க் கும்அளப் பரிய
வள்ள லைஅடி யார்கள்தம் உள்ளத்
தேனங் கைத்தமு தாகியுள் ளூறுந்
தேச னைத்திளைத் தற்கினி யானை
மானங் கைத்தலத் தேந்தவல் லானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
7.067.1
புலால் வடிவாகிய உடம்பில் இருந்து உயிர்ப்பனவாகிய உயிர்களாய் நின்று அவைகட்கு உணர்வை உண்டாக்கி நிற்பவனும், விண்ணுலக இன்பத்தையும் வெறுத்துத் தவம் செய்வார்கட்கும் அளத்தற்கரிய வள்ளலாய் உள்ளவனும், தன் அடியவர்களது உள்ளத்தினுள்ளே, தேனும் கைப்ப, அமுதம் ஊற்றெழுவதுபோல எழுகின்ற ஒளிவடிவினனும், அழுந்துந்தோறும் இனிமை பயக்கின்றவனும், மானை அகங்கையிடத்து ஏந்த வல்லவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்தமையாற் கண்டேன்; இல்லாவிடில் எங்ஙனம் காண்பேன்! 
678 பல்லடி யார்பணிக் குப்பரி வானைப்
பாடிஆ டும்பத்தர்க் கன்புடை யானைச்
செல்லடி யேநெருங் கித்திறம் பாது
சேர்ந்தவர்க் கேசித்தி முத்திசெய் வானை
நல்லடி யார்மனத் தெய்ப்பினில் வைப்பை
நான்உறு குறைஅறிந் தருள்புரி வானை
வல்லடி யார்மனத் திச்சையு ளானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
7.067.2
பலதிறப்பட்ட அடியவரது தொண்டுகட்கும் இரங்குபவனும், இசையோடு பாடி, அதனோடு ஆடலையும் செய்கின்ற சீரடியார்களைத் தன் தமர்களாகக் கொண்டு தொடர்புடையவனாகின்றவனும், தன்னை நோக்கிச் செல்லுகின்ற வழியிலே மாறுபடாது சென்று அணுகித் தன்னைப் பெற்றவர்கட்கே சித்தியையும் முத்தியையும் தருபவனும், நல்ல அடியார்களது மனத்தில், எய்ப்பிற்கு என்று வைத்துள்ள நிதியின் நினைவு போல நின்று அமைதியைத் தருபவனும், நான் அடைந்தனவும் அடையற்பாலனவுமாகிய குறைகளைத் தானே அறிந்து, அவற்றைக் களைந்தும், வாராது தடுத்தும் அருள்புரிபவனும், கற்றுவல்ல அடியார்களது உள்ளத்தில் தங்குவதற்கு விருப்பம் உடையவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத் தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன்! 
679 ஆழிய னாய்அகன் றேஉயர்ந் தானை
ஆதிஅந் தம்பணி வார்க்கணி யானைக்
கூழைய ராகிப்பொய் யேகுடி யோம்பிக்
குழைந்து மெய்யடி யார்குழுப் பெய்யும்
வாழியர்க் கேவழு வாநெறி காட்டி
மறுபிறப் பென்னை மாசறுத் தானை
மாழையொண் கண்உமை யைமகிழ்ந் தானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
7.067.3
ஆழ்ந்தவனாகியும், அகன்றவனாகியும், உயர்ந்தவனாகியும் உள்ளவனும், பிறந்தது முதற் சாங்காறும் வழிபடுவார்க்கு அணியனாகின்றவனும், பணிவுடையவராய், குடியை, உள்ளத்தில் பற்றின்றிப் புரந்து, மனம் உருகிநின்று, தம்மை மெய்யடியார் கூட்டத்துள் வைத்தெண்ணும் வாழ்க்கையையுடையவர்க்கு அடிமை செய்தலில் தவறாத நெறியை உணர்த்து மாற்றால், என்னை மறுபிறப் பெடுத்தலாகிய குற்றத்தை அறுத்துத் தூயனாக்கியவனும், மாவடுப் போலும் கண்களையுடைய உமாதேவியை விரும்பி ஒருபாகத்தில் வைத்தவனும் ஆகிய பெருமானை, அடியேன், திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன்! 
680 நாத்தான் தன்திற மேதிறம் பாது 
நண்ணிஅண் ணித்தமு தம்பொதிந் தூறும்
ஆத்தா னைஅடி யேன்றனக் கென்றும்
அளவிறந் தபஃறேவர்கள் போற்றும்
சோத்தா னைச்சுடர் மூன்றிலும் ஒன்றித் 
துருவி மால்பிர மன்னறி யாத
மாத்தா னைமாத் தெனக்குவைத் தானை 
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
7.067.4
அடியேற்கு, எனது நா, தனது புகழைச் சொல்லுதலில் என்றும் மாறுபடாதவாறு என்னிடத்துப் பொருந்தி, உள்ளே அமுதம் நிறைந்தாற்போல இனித்து ஊற்றெழுகின்ற துணைவனாய் உள்ளவனும், எண்ணில்லாத பல தேவர்களும் துதித்து வணங்குகின்ற வணக்கத்திற்கு உரியவனும். 'ஞாயிறு, திங்கள், தீ' என்னும் முச்சுடர்களிலும் வேறற நிற்பவனும், திருமாலும் பிரமனும் தேடி அறியப்படாத பெருமையை உடையவனும், எனக்குப் பெருமையை அளித்தவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத் தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன்! 
681 நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்
கரையனும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத்
தொண்ட னேன்அறி யாமை யறிந்து
கல்லி யல்மனத் தைக்கசி வித்துக்
கழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்கநின் றானைவலிவ 
லந்தனில் வந்துகண் டேனே.
7.067.5
சிறந்த இசைத்தமிழைப் பாடிய திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் அருளிச்செய்த, தமிழ்ச் சொல்லால் அமைந்த மெய்யுணர்வு மாலையாகிய, முன்பு அவர்களால் சொல்லப்பட்டனவற்றையே பின்னும் பிறர் சொல்லிப் போற்றுதலை விரும்புபவனும், அடியேனது அறியாமையை அறிந்து, கல்லின் இயல்பைக் கொண்ட எனது மனத்தை உருகப்பண்ணி, கழல் 
682 பாடுமா பாடிப்ப ணியுமா றறியேன்
பனுவுமாப னுவிப்ப ரவுமா றறியேன்
தேடுமா தேடித்தி ருத்துமா றறியேன்
செல்லுமா செல்லச்செ லுத்துமா றறியேன்
கூடுமோ றெங்ஙன மோஎன்று கூறக்
குறித்துக் காட்டிக் கொணர்ந்தெனை ஆண்டு
வாடிநீ வாளா வருந்தல்என் பானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
7.067.6
யான், முன் உள்ள பாடல்களை, அவைகளைப் பாடும் நெறியாற் பாடி இறைவனை வழிபடுமாற்றை அறிந்திலேன்; புதிய பாடல்களை யாக்கும் நெறியால் யாத்துத் துதிக்கு மாற்றினையும் அறிந்திலேன்; மனத்தில் உள்ள குற்றங்களை ஆராயும் நெறியால் ஆராய்ந்து கண்டு அதனைத் திருத்தும் வகையை அறிந்திலேன்; அதனால், அதனை நன்னெறியிற் செல்லுமாறு செலுத்தும் வழிய அறிந்திலேன்; இவற்றால் 'இவன் நன்னிலையைப் பெறுதல் எவ்வாறோ!' என்று நல்லோர்கள் இரங்கிக்கூற இருக்கின்ற காலத்து, என்னையே சிறப்பாக யாவர்க்கும் காட்டி, 'இவன் எனக்கு அடிமை' என்று சொல்லி வெளிக்கொணர்ந்து, தனக்கு ஆளாகக் கொண்டு, 'இனி, நீ, பயனின்றி வாடி வருந்தலை' என்று தேற்றிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில், எங்ஙனங் காண்பேன்! 
683 பந்தித்தவ் வல்வினைப் பற்றறப் பிறவிப்
படுக டற்பரப் புத்தவிர்ப் பானைச்
சந்தித் ததிற லாற்பணி பூட்டித்
தவத்தை ஈட்டிய தன்னடி யார்க்குச்
சிந்தித் தற்கௌ தாய்த்திருப் பாதஞ்
சிவலோ கந்திறந் தேற்றவல் லானை
வந்திப் பார்தம் மனத்தினுள் ளானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
7.067.7
பிணித்துள்ள வினைத் தொடர்பு அறுதலால் பிறவியாகிய கடலினது பரப்புச் சுருங்குமாறு செய்பவனும், தன்னை உணர்ந்த உணர்வின் வலிமையால், தம் செயல்களைத் தன்னிடத்தே சேர்த்து, அதனால், செய்யும் செயலெல்லாம் தவமேயாகக் குவித்த தன் அடியவர்கட்குத் தனது திருவடிகள், நினைத்தற்கு எளியவாய்க் கிடைத்தலானே, தனது சிவலோகத்தின் வாயிலைத் திறந்து, அதன்கண் அவர்களைப் புகச்செய்ய வல்லவனும், தன்னையே வணங்குகின்றவர்களது மனத்தில் விளங்குபவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில், எங்ஙனங் காண்பேன்! 
684 எவ்வெவர் தேவர்இ ருடிகள் மன்னர்
எண்ணிறந் தார்கள்மற் றெங்கும்நின் றேத்த
அவ்வவர் வேண்டிய தேயருள் செய்து
அடைந்தவர்க் கேஇட மாகிநின் றானை
இவ்விவ கருணைஎங் கற்பகக் கடலை
எம்பெரு மான்அரு ளாய்என்ற பின்னை
வவ்விஎன் ஆவிம னங்கலந் தானை
வவிவ லந்தனில் வந்துகண் டேனே.
7.067.8
தேவர்கள், இருடிகள், அரசர்கள் முதலாக எண்ணிறந்தவர்களாகிய எவரெவரும், எவ்விடத்திலும் இருந்து வழிபட, அவ்வெல்லா இடங்களிலும் நின்று அவர்களது வழி பாட்டினை ஏற்று, அவரவர் விரும்பியதை அவர்கட்கு அளித்து, இவ்வாற்றால், தன்னை அடைந்தவர்க்குப் புகலிடமாய் நிற்பவனும், இவ்வாறு உள்ள இவை இவையாகிய அருளைத் தருகின்ற எங்கள் கற்பகத் தருவும் கடலும் போல்பவனும், யான், 'எம் பெருமானே, எனக்கு அருள்செய்' என்று வேண்டிக்கொண்ட பின்பு, என் உயிரைத் தன்னுடையதாகக் கொண்டு, என் உள்ளத்திலே எஞ்ஞான்றும் நீங்காது இருப்பவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில், எங்ஙனங் காண்பேன்! 
685 திரியும் முப்புரஞ் செற்றதுங் குற்றத் 
திறல்அ ரக்கனைச் செறுத்ததும் மற்றைப்
பெரிய நஞ்சமு துண்டதும் முற்றும் 
பின்னையாய் முன்ன மேமுளைத் தானை
அரிய நான்மறை அந்தணர் ஓவா 
தடிப ணிந்தறி தற்கரி யானை
வரையின் பாவைம ணாளன்எம் மானை 
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
7.067.9
வானத்தில் திரிகின்ற முப்புரங்களை அழித்ததும், குற்றம் செய்த, வலிமையுடைய அரக்கனாகிய இராவணனை ஒறுத்ததும், ஏனை, பெரிய ஆலகால விடத்தை அமுதமாக உண்டதும் முடிதற்குக் காரணனான பின்னோனாய், எப்பொருட்கும் முன்னே தோன்றினவனும், அரிய நான்கு வேதங்களை ஓதுகின்ற அந்தணர்கள், மனம் மாறுபடாது நின்று அடிபணிந்தும், அவர்களால் அறிதற்கு அரியவனும், மலைமகட்குக் கணவனும் ஆகிய எம் பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில், எங்ஙனங் காண்பேன்! 
686 ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து
நிறைக்க மால்உதி ரத்தினை ஏற்றுத்
தோன்று தோள்மிசைக் களேபரந் தன்னைச்
சுமந்த மாவிர தத்தகங் காளன்
சான்று காட்டுதற் கரியவன் எளியவன்
றன்னைத் தன்னி லாமனத் தார்க்கு
மான்று சென்றணை யாதவன் றன்னை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
7.067.10
தன்னொடு மாறுபடுதலை ஏற்ற பிரமனது தலைகளில் ஒன்றை அறுத்து, அதனை நிரப்ப, மாயோனது உதிரத்தை ஏற்றவனும், யாவருக்கும் காணப்படுகின்ற தோளின் மேல் எலும்புக் கூட்டினைச் சுமக்கின்ற பெரிய விரதத்தையுடைய கங்காள வேடத்தையுடையவனும், தன்னைக் காண்பதற்குரிய வழியைக் காட்டுதற்கு அரியவனும், தன்னிடத்திற் பொருந்திய மனத்தையுடையவர்கட்கு எளியவனும், அறியாமை வழிச் சென்று அணுக இயலாதவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன்! 
687 687 கலிவ லங்கெட ஆரழல் ஓம்புங் 
கற்ற நான்மறை முற்றனல் ஓம்பும்
வலிவ லந்தனில் வந்துகண் டடியேன்
மன்னு நாவல்ஆ ரூரன்வன் றொண்டன்
ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும்
உள்ளத் தால்உகந் தேத்தவல் லார்போய்
மெலிவில் வானுல கத்தவர் ஏத்த
விரும்பி விண்ணுல கெய்துவர் தாமே.
7.067.11
வறுமையின் வலிமை கெடும்படி அரிய வேள்வித் தீயை வளர்த்தற்கு ஏதுவான, பெரியோர் பலரும் போற்றிக் கற்ற நான்கு வேதங்களின் முடிந்த பொருளாகிய தீப்போலும் உருவினனாகிய சிவபெருமானை, அவனை எஞ்ஞான்றும் தன்னிடத்து நீங்காது கொண்டு நிற்கும், 'திருவலிவலம்' என்னும் தலத்தில் வந்து கண்டு, அவன் அடியவனும், நிலை பெற்ற திருநாவலூரில் தோன்றியவனும், 'வன்றொண்டன்' எனப் பெயர்பெற்றவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய, இனிய இசையையுடைய, செவ்விய தமிழால் ஆகிய பத்துப் பாடல்களையும், மனத்தால் விரும்பிப் பாடவல்லவர்கள், தேவர்கள் விரும்பிப் போற்ற, துன்பம் இல்லாத வானுலகத்தைப் போய் அடைவர்; இது திண்ணம். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.