LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-70

7.070.திருவாவடுதுறை 
பண் - தக்கேசி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர். 
தேவியார் - ஒப்பிலாமுலையம்மை. 
709 கங்கை வார்சடை யாய்கண நாதா
கால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தௌ தேனே
தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்க ணாஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.
7.070.1
கங்கையைத் தாங்கிய நீண்ட சடையை உடையவனே, பூத கணங்கட்குத் தலைவனே, காலனுக்குக் காலனே, காமன் உடலுக்கு நெருப்பாகியவனே, அலை மிகுகின்ற பெரிய கடலில் தோன்றிய நஞ்சினை உடைய கண்டத்தை உடையவனே, உயிர்கட்கு முதல்வனே, அறவடிவினனே, தூயோனே, சிவந்த கண்களை யுடைய திருமாலாகிய இடபத்தை யுடையவனே, தௌந்த தேன் போல்பவனே, கடவுளே, தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற கருணையாளனே, அடியேனுக்கு உறவாவார், உன்னையன்றி வேறு யாவர் உளர்! என்னை, 'அஞ்சேல்' என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்யாய். 
710 மண்ணின் மேல்மயங் கிக்கிடப் பேனை 
வலிய வந்தெனை ஆண்டுகொண் டானே
கண்ணி லேன்உடம் பில்லடு நோயாற் 
கருத்த ழிந்துனக் கேபொறை யானேன்
தெண்ணி லாஎறிக் குஞ்சடை யானே 
தேவ னேதிரு வாவடு துறையுள்
அண்ண லேஎனை அஞ்சல்என் றருளாய் 
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.
7.070.2
நிலவுலகின்கண் மானுட வாழ்க்கையில் மயங்கிக் கிடக்கக் கடவேனாகிய என்முன் நீயே வலிய வந்து என்னை ஆண்டு கொண்டவனே, தௌவாகிய நிலவொளியை வீசுகின்ற சடையை உடையவனே, இறைவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற அண்ணலே, தேவர்களாகிய, விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, யான் கண் இல்லேனாயினேன்; அதன்மேலும், உடம்பில் வந்து பற்றி வருத்துகின்ற நோயினால் மனம் வருந்தினமையால், உனக்குத்தான் சுமையாய் விட்டேன்; எனக்கு உறவாவார் உன்னையன்றி வேறு யாவர் உளர்! ஆதலின், என்னை 'அஞ்சேல்' என்று சொல்லித்தேற்றி, எனக்கு அருள்செய்யாய். 
711 ஒப்பி லாமுலை யாள்ஒரு பாகா
உத்தமா மத்தம் ஆர்தரு சடையாய்
முப்பு ரங்களைத் தீவளைத் தங்கே
மூவ ருக்கருள் செய்ய வல்லானே
செப்ப ஆல்நிழற் கீழ்இருந் தருளுஞ்
செல்வ னேதிரு வாவடு துறையுள்
அப்ப னேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.
7.070.3
நிகரற்ற தனங்களையுடைய உமையவளை ஒரு பாகத்தில் உடையவனே, மேலானவனே, ஊமத்தம் பூப் பொருந்திய சடையை உடையவனே, முப்புரங்களைத் தீவளையச் செய்து, அப்பொழுதே அவற்றில் இருந்தவர்களுள் மூவருக்கு மட்டில் அருள் செய்ய வல்லவனே, அறத்தைச் சொல்லுதற்கு ஆல் நிழலில் அமர்ந்தருளிய செல்வனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற என் அப்பனே! தேவர்களாகிய விலங்குகளுக்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, எனக்கு உறவாவார் உன்னையன்றி வேறு யாருளர்! என்னை 'அஞ்சேல்' என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள் செய்யாய். 
712 கொதியி னால்வரு காளிதன் கோபங்
குறைய ஆடிய கூத்துடை யானே
மதியி லேன்உடம் பில்லடு நோயான்
மயங்கி னேன்மணி யேமண வாளா
விதியி னால்இமை யோர்தொழு தேத்தும்
விகிர்த னேதிரு வாவடு துறையுள்
அதிப னேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.
7.070.4
சீற்றத்தொடு வந்த காளியினது கோபம் தணியும்படி அவளோடு எதிர்நின்று ஆடிய நடனத்தை யுடையவனே, மாணிக்கம் போல்பவனே, மணவாளக் கோலத்தினனே, தேவர்கள், முறைப்படி வணங்கித் துதிக்கின்ற இறைவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, தேவர்களாய் விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, அறிவில்லேனாகிய யான் உடம்பில் வந்து வருத்துகின்ற பிணியினால், செய்வது அறியாது மனம் கலங்குகின்றேன்! எனக்கு உறவாவார், உன்னையன்றி வேறு யாவர் உளர்! என்னை, 'அஞ்சேல்' என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள் செய்யாய். 
713 வந்த வாள்அரக் கன்வலி தொலைத்து
வாழும் நாள்கொடுத் தாய்வழி முதலே
வெந்த வெண்பொடிப் பூசவல் லானே
வேட னாய்விச யற்கருள் புரிந்த இந்து சேகர னேஇமை யோர்சீர்
ஈச னேதிரு வாவடு துறையுள்
அந்த ணாஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.
7.070.5
உலகமாகிய வழிக்கு முதலானவனே, வெந்ததனால் ஆகிய வெள்ளிய திருநீற்றைப் பூச வல்லவனே, அருச்சுனனுக்கு வேட உருவத்தில் சென்று அருள்செய்த சந்திர சேகரனே, தேவர்களுக்குப் புகழுடைய தலைவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற அந்தணனே, தேவர்களாகிய விலங்குகட்கு ஆண்சிங்கமாய் உள்ளவனே, எனக்கு உறவாவார், உன்னையன்றி வேறுயாவர் உளர்! அன்று நீ இருக்கும் இடத்தில் செருக்குக் கொண்டு வந்த கொடிய அரக்கனாகிய இராவணனது வலிமையை அழித்து, பின்பு அவனுக்கு வாழ்நாள் கொடுத்து விடுத்தாய்; இன்று, என்னை, 'அஞ்சேல்' என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள் செய்யாய். 
714 குறைவி லாநிறை வேகுணக் குன்றே
கூத்த னேகுழைக் காதுடை யானே
உறவி லேன்உனை யன்றிமற் றடியேன்
ஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டே
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச்
செம்போ னேதிரு வாவடு துறையுள்
அறவ னேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.
7.070.6
'குறை' எனப்படுவது ஒன்றேனும் இல்லாத நிறைவுடையவனே, இறைமைக் குணங்கள் எல்லாவற்றானும் இயன்றதொரு மலை எனத் தக்கவனே, கூத்துடையவனே, குழையணிந்த காதினை யுடையவனே, சிறையை யுடைய வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருவாரூரில் உள்ள, செம்பொன் போல்பவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற அறவடிவினனே, தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, அடியேனும் உன்னையன்றி உறவினர் ஒருவரையும் உடையேன் அல்லேன்; எனக்கு உறவாரும் உன்னையன்றி வேறு யாவர் உளர்! ஆதலின், யான் செய்த ஒரு குற்றத்தை நீ பொறுத்துக்கொண்டால், உனக்கு வருவதொரு தாழ்வுண்டோ! என்னை, 'அஞ்சேல்' என்றுசொல்லித் தேற்றி, எனக்கு அருள்செய்யாய். 
715 வெய்ய மாகரி ஈருரி யானே
வேங்கை யாடையி னாய்விதி முதலே
மெய்ய னேஅட லாழியன் றரிதான்
வேண்ட நீகொடுத் தருள்புரி விகிர்தா
செய்ய மேனிய னேதிக ழொளியே
செங்க ணாதிரு வாவடு துறையுள்
ஐய னேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.
7.070.7
கொடிய, பெரிய யானையினது உரித்த தோலையுடையவனே, புலித்தோல் ஆடையை உடுத்தவனே, விதிவிலக்குக்களுக்குத் தலைவனே, மெய்ப்பொருளானவனே, அன்று திருமால் வேண்டிக்கொள்ள, வலிமையையுடைய சக்கரத்தை அவனுக்கு அளித்தருளிய இறைவனே, சிவந்த திருமேனியையுடையவனே, ஒளிகள் எலலாவற்றினும் மேம்பட்டு விளங்குகின்ற ஒளியாய் உள்ளவனே, நெருப்புக்கண்ணை உடையவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, தேவர்களாகிய விலங்கு கட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, எனக்கு உறவாவர் உன்னையன்றி வேறுயாவர் உளர்! என்னை, 'அஞ்சேல்' என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள் செய்யாய். 
716 கோதி லாஅமு தேஅருள் பெருகு
கோல மேஇமை யோர்தொழு கோவே
பாதி மாதொரு கூறுடை யானே
பசுப தீபர மாபர மேட்டி
தீதி லாமலை யேதிரு வருள்சேர்
சேவ காதிரு வாவடு துறையுள்
ஆதி யேஎனை அஞ்சல்என் றருளாய
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.
7.070.8
கோதில்லாத அமுதம் போல்பவனே, அருள் வெள்ளம் பெருகுகின்ற தோற்றத்தை உடையவனே, தேவர்கள் வணங்குகின்ற தலைவனே, உடம்பின் ஒருபாதியில் மங்கை ஒருத்தியது ஒருபங்கினை உடையவனே, உயிர்கட்குத் தலைவனே, மேலானவனே, மேலிடத்தில் இருப்பவனே, நன்மையால் இயன்ற மலைபோல்பவனே, சிறப்புடைய அருள் பொருந்திய வீரனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற முதற்பொருளானவனே, தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, எனக்கு உறவாவார், உன்னையன்றி வேறு யாவர் உளர்! என்னை, 'அஞ்சேல்' என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள்செய்யாய். 
717 வான நாடனே வழித்துணை மருந்தே
மாசி லாமணி யேமறைப் பொருளே
ஏன மாஎயி றாமையும் எலும்பும்
ஈடு தாங்கிய மார்புடை யானே
தேனெய் பால்தயிர் ஆட்டுகந் தானே
தேவ னேதிரு வாவடு துறையுள்
ஆனை யேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.
7.070.9
ஆகாயமாகிய நாட்டை உடையவனே, செல்லும் வழிக்குத் துணையாகிய அமுதம் போல்பவனே, குற்றமில்லாத மாணிக்கம் போல்பவனே, வேதத்தின் பொருளாய் உள்ளவனே, பன்றியின் பெரிய கொம்பினையும், ஆமை ஓட்டையும், எலும்பையும், இடப்பட்ட அணிகளாகத் தாங்கிய மார்பையுடையவனே, 'தேன், நெய், பால், தயிர்' இவைகளால் மூழ்குவித்தலை விரும்புகின்றவனே, இறைவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற என் யானை போல்பவனே, தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, எனக்கு உறவாவார் உன்னையன்றி வேறு யாவர் உளர்! என்னை, 'அஞ்சேல்' என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்யாய். 
718 வெண்ட லைப்பிறை கொன்றையும் அரவும்
வேரி மத்தமும் விரவிமுன் முடித்த
இண்டை மாமலர்ச் செஞ்சடை யானை
ஈச னைத்திரு வாவடு துறையுள்
அண்ட வாணனைச் சிங்கடி யப்பன்
அணுக்க வன்றொண்டன் ஆர்வத்தால் உரைத்த
தண்ட மிழ்மலர் பத்தும்வல் லார்கள்
சாத லும்பிறப் பும்மறுப் பாரே.
7.070.10
வெண்டலையோடு பொருந்தும் பிறையையும், கொன்றைமலர் மாலையையும், பாம்பினையும், தேனையுடைய ஊமத்த மலரையும் ஒருங்கு விரவிச் சூடிக்கொண்ட சிறந்த இண்டை மாலையையுடைய, சிவந்த சடைமுடியையுடையவனும், முதற் கடவுளும், திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவலோக வாணனும் ஆகிய இறைவனை, அவனுக்கு அணுக்கனாய் நிற்கின்ற வன்றொண்டனாகிய, சிங்கடிக்குத் தந்தை, மிக்க அன்போடும் பாடிய இத்தண்ணிய தமிழ்மாலைகளாகிய பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்கள், இறத்தலையும் பிறத்தலையும் ஒழித்து, எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய் வாழ்வார்கள். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.