LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-73

7.073.திருவாரூர் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வன்மீகநாதர். 
தேவியார் - அல்லியங்கோதையம்மை. 
740 கரையுங் கடலும் மலையுங்
காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான்
ஒருவன் உருத்திர லோகன்
வரையின் மடமகள் கேள்வன்
வானவா தானவர்க் கெல்லாம்
அரையன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.
7.073.1
தொண்டீர், நிலம், கடல், மலை முதலாய எவ்விடத்திலும், காலை, மாலை முதலிய எப்பொழுதிலும் எம் சொல்லிற் பொருந்திவருபவனும், ஒப்பற்றவனும், உருத்திர லோகத்தை உடையவனும், மலையின் இளமையான மகளுக்குக் கணவனும், தேவர், அசுரர் முதலிய யாவர்க்கும் தலைவனும் ஆகிய பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும், இத் திருவாரூரே யன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின். 
741 தனியன்என் றெள்கி யறியேன் 
தன்னைப் பெரிதும் உகப்பன்
முனிபவர் தம்மை முனிவன் 
முகம்பல பேசி மொழியேன்
கனிகள் பலவுடைச் சோலைக்
காய்க்குலை ஈன்ற கமுகின்
இனியன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.
7.073.2
தொண்டீர், இனிய பொருள்கள் எல்லாவற்றினும் இனியவனாகிய நம் பெருமானை, யான், 'தாயும், தந்தையும், பிற சுற்றத்தவரும் இல்லாத தனியன்' என்று இகழ்ந்தறியேன்; அதற்கு மாறாக அவனையே பெரிதும் விரும்புவேன்; அவனை வெறுப்பவரை வெறுப்பேன்; மனத்தோடன்றி முகத்தான் மட்டும் இனிய பல சொற்களைச் சொல்லேன்; அவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும், கனிகள் பலவற்றையுடைய சோலையின்கண் காயையுடைய குலைகளை ஈன்ற கமுக மரங்களையுடைய திருவாரூரேயன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின். 
742 சொல்லிற் குலாவன்றிச் சொல்லேன்
தொடர்ந்தவர்க் குந்துணை யல்லேன்
கல்லில் வலிய மனத்தேன்
கற்ற பெரும்புல வாணர்
அல்லல் பெரிதும் அறுப்பான்
அருமறை ஆறங்கம் ஓதும்
எல்லை இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.
7.073.3
தொண்டீர், யான் யாதேனும் ஒன்று சொல்வதாயின், எனது பெருமையை யன்றி வேறொன்றைச் சொல்லேன். அயலவர்க்கேயன்றி, உறவினர்க்கும் உதவுவேனல்லேன்; அத்துணைக் கல்லினும் வலிய மனத்தை யுடையேன். கல்வியை நிரம்பக் கற்ற பெரிய புலமை வாழ்க்கை உடையவர்களது துன்பத்தைப் பெரிதும் நீக்குகின்றவனும், அரிய வேதங்களும், ஆறு அங்கங்களும் சொல்லும் முடிந்த பொருளானவனும் ஆகிய பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின். 
743 நெறியும் அறிவுஞ் செறிவும்
நீதியும் நான்மிகப் பொல்லேன்
மிறையுந் தறியும் உகப்பன்
வேண்டிற்றுச் செய்து திரிவேன்
பிறையும் அரவும் புனலும்
பிறங்கிய செஞ்சடை வைத்த
இறைவன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.
7.073.4
தொண்டீர், யான், ஒழுகும் நெறியிலும், பொருள்களை அறிகின்ற அறிவிலும், பிறரோடு இணங்குகின்ற இணக்கத்திலும், சொல்லுகின்ற நீதியிலும்; மிக்கபொல்லாங்குடையேன்; பிறரை வருத்துதலையும், பிரித்தலையும் விரும்புவேன்; மற்றும் மனம் வேண்டியதனைச் செய்து திரிவேன்; பிறையையும், பாம்பையும், நீரையும் தனது விளக்கமான சிவந்த சடைமேல் வைத்துள்ள இறைவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத்திருவாரூரேயன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது திரு 
744 நீதியில் ஒன்றும் வழுவேன்
நிர்க்கண் டகஞ்செய்து வாழ்வேன்
வேதியர் தம்மை வெகுளேன்
வெகுண்டவர்க் குந்துணை யாகேன்
சோதியிற் சோதிஎம் மானை
சுண்ணவெண் ணீறணிந் திட்ட
ஆதி இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.
7.073.5
தொண்டீர், யான், நீதியினின்றும் சிறிதும் வழுவேன்; அவ்வாறு வழுவுதலை முற்றிலும் களைந்து வாழ்வேன்; அந்தணர்களை வெறுக்கமாட்டேன்; வெறுக்கின்றவர்களுக்கும் துணை செய்பவனாகமாட்டேன். ஒளிக்குள் ஒளியாய் உள்ளவனும், எங்கட்கு யானை போல்பவனும், பொடியாகிய வெள்ளிய நீற்றை அணிந்த முதல்வனும் ஆகிய இறைவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின். 
745 745அருத்தம் பெரிதும் உகப்பன்
அலவலை யேன்அலந் தார்கள்
ஒருத்தர்க் குதவியேன் அல்லேன்
உற்றவர்க் குந்துணை யல்லேன்
பொருத்தமேல் ஒன்றும் இலாதேன்
புற்றெடுத் திட்டிடங் கொண்ட
அருத்தன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.
7.073.6
தொண்டீர், யான், பொருளையே பெரிதும் விரும்புவேன்; அதன் பொருட்டு எங்கும் திரிதலையுடையேன்; துன்புற்றவர் ஒருவர்க்கேனும் உதவியுடையேனல்லேன்; உறவாயினார்க்கும் துணைவனல்லேன்; இன்ன பலவாற்றால், பொருந்துவதாய பண்பு எனிலோ, ஒன்றேனும் இல்லாதேனாயினேன். புற்றைப்படைத்து, அதனை இடமாகக் கொண்ட மெய்ப்பொருளாயுள்ளவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரேயன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின். 
746 சார்ந்தவர் தம்மடிச் சாரேன்
முந்திப் பொருவிடை யேறி
மூவுல குந்திரி வானே
கந்தங் கமழ்கொன்றை மாலைக்
கண்ணியன் விண்ணவர் ஏத்தும்
எந்தை இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.
7.073.7
தொண்டீர், யான், வண்ணங்கள் பலவற்றை அமைத்துப் பாடுதல் மாட்டேன்; இறைவனை அடைந்த அடியாரது திருவடிகளை அடையமாட்டேன்; மணங்கமழ்கின்ற கொன்றை மலரால் ஆகிய மாலையையும், கண்ணியையும் அணிந்தவனும், தேவர்களால் துதிக்கப்படுபவனுமாகிய எம் தந்தை, போர் செய்கின்ற விடையை ஏறி மூவுலகிலும் முற்பட்டுத் திரிபவனேயாயினும், அவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரேயன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது, திருவுள்ளத்தைக் கேட்டறிமின். 
747 நெண்டிக்கொண் டேயுங்க லாய்ப்பேன்
நிச்சய மேஇது திண்ணம்
மிண்டர்க்கு மிண்டலாற் பேசேன்
மெய்ப்பொரு ளன்றி யுணரேன்
பண்டங் கிலங்கையர் கோனைப்
பருவரைக் கீழடர்த் திட்ட
அண்டன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.
7.073.8
தொண்டீர், யான், மெய்ப்பொருளையன்றிப் பொய்ப்பொருளைப் பொருளாக நினையேன்; அதனால், அம்மெய்ப் பொருளை உணரமாட்டாத முருடர்க்கு முருடான சொற்களை யன்றிச் சொல்லமாட்டேன்; வலியச் சென்றும் அவர்களோடு வாதிடுவேன்; இஃது எனது துணிபும், தளர்வில்லாத குணமும் ஆகும். முன்பு, இலங்கையர் தலைவனாகிய இராவணனைப் பருத்த கயிலாய மலையின்கீழ் இட்டு நெரித்த கடவுள் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின். 
748 நமர்பிறர் என்ப தறியேன்
நான்கண்ட தேகண்டு வாழ்வேன்
தமரம் பெரிதும் உகப்பேன்
தக்கவா றொன்றுமி லாதேன்
குமரன் திருமால் பிரமன்
கூடிய தேவர் வணங்கும்
அமரன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.
7.073.9
தொண்டீர், யான், இவர் நம்மவர் என்பதும், அயலவர் என்பதும் அறியமாட்டேன்; நான் உண்மை என்று கண்டதையே கண்டு பிறர் சொல்வனவற்றை இகழ்ந்து நிற்பேன்; ஆரவாரத்தைப் பெரிதும் விரும்புவேன்; தக்க நெறி ஒன்றேனும் இல்லாதேன். முருகனும், திருமாலும், பிரமனும் ஒருங்கு கூடிய தேவர் பலரும் வணங்கும் தேவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின். 
749 ஆசை பலஅறுக் கில்லேன்
ஆரையும் அன்றி யுரைப்பேன்
பேசிற் சழக்கலாற் பேசேன்
பிழைப்புடை யேன்மனந் தன்னால்
ஓசை பெரிதும் உகப்பேன்
ஒலிகடல் நஞ்சமு துண்ட
ஈசன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.
7.073.10
தொண்டீர், எனக்கு உள்ள அவாவோ பல; அவற்றுள் ஒன்றையும் நீக்கமாட்டேன்; அவ்வவாவினால் யாவரிடத்தும் வெகுளிதோன்றுதலின், எவரிடத்தும் பகைத்தே பேசுவேன்; ஒன்று சொல்லின், பொய்யல்லது சொல்லேன்; எனினும் புகழை மிக விரும்புவேன்; இவற்றால் மனத்தாலும் குற்றம் புரிதலுடையேன். ஒலிக்கின்ற கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்ட பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரேயன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின். 
750 எந்தை இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ என்று
சிந்தை செயுந்திறம் வல்லான்
திருமரு வுந்திரள் தோளன்
மந்த முழவம் இயம்பும்
வளவயல் நாவல்ஆ ரூரன்
சந்தம் இசையொடும் வல்லார்
தாம்புகழ் எய்துவர் தாமே.
7.073.11
வெற்றித் திருப் பொருந்திய திரண்ட தோள்களையுடையவனும், மெல்லென ஒலிக்கும் மத்தளம் முழுங்குவதும், வளவிய வயல்களையுடையதும் ஆகிய திருநாவலூரில் தோன்றியவனும் ஆகிய நம்பியாரூரன் 'எம் தந்தையாகிய இறைவன் என்றும் எழுந்தருளியிருக்கும் இடமும் இத் திருவாரூரே யன்றோ! ஆதலின், அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ' என்று அடியார்களோடு ஆராயும் திறம் வல்லனாய்ப் பாடிய இந்த இசைப் பாடல்களை, அவ்விசையொடும் பாட வல்லவர் புகழ் பெறுவர். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.