LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-75

7.075.திருவானைக்கா 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சம்புகேசுவரர். 
தேவியார் - அகிலாண்டநாயகியம்மை. 
761 மறைக ளாயின நான்கும் 
மற்றுள பொருள்களும் எல்லாத்
துறையும் தோத்திரத் திறையும் 
தொன்மையும் நன்மையும் ஆய
அறையும் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே.
7.075.1
வேதங்கள் நான்கும் மற்றைய பொருள்களும், பல சமயங்களும், அவற்றில் புகழ்ந்து சொல்லப்படும் கடவுள்களும், இவை அனைத்திற்கும் முன்னேயுள்ள முதற்பொருளும், வீடுபேறும் என்கின்ற இவை எல்லாமாய் நிற்கின்ற ஒலிக்கும் அழகிய நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, 'இவனே முதல்வன்' என்று அறிந்து, நாள்தோறும் அடிபணிகின்றவர், எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர். 
762 வங்கம் மேவிய வேலை
நஞ்செழ வஞ்சர்கள் கூடித்
தங்கள் மேல்அட ராமை
உண்ணென உண்டிருள் கண்டன்
அங்கம் ஓதிய ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எங்கள் ஈசன்என் பார்கள்
எம்மையும் ஆளுடை யாரே.
7.075.2
மரக்கலம் பொருந்திய கடலின்கண் நஞ்சு தோன்ற, தங்கள்மேல் வந்து தாக்காது தடுத்துக் கொள்ளுதற் பொருட்டுச் சூழ்ச்சி செய்த தேவர்கள் ஒருங்கு கூடிச்சென்று 'இந் நஞ்சினை உண்டருளாய்' என்று வேண்டிக்கொள்ள அவ்வேண்டுகோளை மறாது ஏற்று உண்டு, அதனால், கறுத்த கண்டத்தை உடையவனாகியவனும், வேதத்திற்கு உரிய துணை நூல்களைச் செய்தவனும் ஆகிய, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, 'இவனே எங்களுக்குத் தலைவன்' என்று நாள்தோறும் அன்பு செய்கின்றவர். எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலுடையவராவர். 
763 நீல வண்டறை கொன்றை
நேரிழை மங்கை ஓர்திங்கள்
சால வாள்அர வங்கள்
தங்கிய செஞ்சடை எந்தை
ஆல நீழலுள் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
ஏலு மாறுவல் லார்கள்
எம்மையும் ஆளுடை யாரே.
7.075.3
நீல நிறத்தையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலரும், நுண்தொழில் அமைந்த அணிகளை அணிந்த மங்கை ஒருத்தியும், பிறை ஒன்றும், பல கொடிய பாம்புகளும் தங்கியிருக்கின்ற சிவந்த சடையையுடைய எம் தந்தையும், ஆல் நிழலில் இருப்பவனும் ஆகிய, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, நாள்தோறும் அவன் தம்மொடு பொருந்தும் செயலினைச் செய்ய வல்லவர். எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலுடையவராவர். 
764 தந்தை தாய்உல குக்கோர்
தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப்
பந்த மாயின பெருமான்
பரிசுடை யவர்திரு வடிகள்
அந்தண் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எந்தை என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே.
7.075.4
உலகம் எல்லாவற்றிற்கும் தந்தையாய், ஒப்பற்ற மெய்ப்பொருளாய் உள்ளவனும், உண்மையான தவத்தைச் செய்வோர்க்கு உறவான பெருமானும், அன்புடையவர்க்குச் சிறந்த தலைவனும் ஆகிய, அழகிய, குளிர்ந்த பூக்களையுடைய, நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, 'இவனே எம் தந்தை' என்று அறிந்து, நாள்தோறும் அடிபணிகின்றவர், எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர். 
765 கணைசெந் தீஅர வம்நாண்
கல்வளை யுஞ்சிலை யாகத்
துணைசெ யும்மதில் மூன்றுஞ்
சுட்டவ னேயுல குய்ய
அணையும் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இணைகொள் சேவடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே.
7.075.5
பொருந்திய உலகம் உய்தற்பொருட்டு, சிவந்த நெருப்பு அம்பாகியும், பாம்பு நாணியாகியும், மலை வளைகின்ற வில்லாகியும் நிற்க, ஒன்றற்கொன்று துணை செய்கின்ற மதில்கள் மூன்றையும் எரித்தவனாகிய, எங்கும் சென்று சேர்கின்ற அழகிய நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, நாள்தோறும் அவனது இரண்டு செவ்விய திருவடிக்கண் பணிகின்றவர், எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர். 
766 விண்ணின் மாமதி சூடி
விலையிலி கலனணி விமலன்
பண்ணின் நேர்மொழி மங்கை
பங்கினன் பசுவுகந் தேறி
அண்ண லாகிய ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எண்ணு மாறுவல் லார்கள்
எம்மையும் ஆளுடை யாரே.
7.075.6
விண்ணில் உள்ள சிறந்த பிறையைக் கண்ணியாகச் சூடி, விலைப்படும் தன்மை இல்லாத அணிகலங்களை அணிகின்ற தூயவனும், பண்ணினை ஒத்த சொல்லை உடைய மங்கையது பங்கை உடையவனும், ஆனேற்றை விரும்பி ஏறுபவனும், யாவர்க்கும் தலைவனும் ஆகிய, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, நாள்தோறும் நினையுமாற்றினை வல்லவர், எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையராவர். 
767 தார மாகிய பொன்னித்
தண்டுறை ஆடி விழுத்து
நீரில் நின்றடி போற்றி
நின்மலா கொள்ளென ஆங்கே ஆரங் கொண்டஎம் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும்
எம்மையும் ஆளுடை யாரே.
7.075.7
சோழன் ஒருவன், பல பண்டங்களும் உளவாதற்கு ஏதுவாகிய காவிரியின் குளிர்ந்த துறையில் மூழ்கித் தனது முத்துவடத்தை வீழ்த்தி, வீழ்த்திய வருத்தத்தால் கரைஏறாது நீரிற்றானே நின்று, தனது திருவடியைத் துதித்து, 'இறைவனே, எனது முத்து மாலையை ஏற்றுக்கொள்' என்று வேண்ட, அங்ஙனமே அவ்வாரத்தைத் திருமஞ்சனக் குடத்துட் புகச்செய்து ஏற்றுக்கொண்ட, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனுக்கு நாள்தோறும் அன்பு உடையவராய் இருப்பவர், நாள்தோறும் எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலுடையவராவர். 
768 உரவம் உள்ளதொர் உழையின்
உரிபுலி யதள்உடை யானை
விரைகொள் கொன்றையி னானை
விரிசடை மேற்பிறை யானை
அரவம் வீக்கிய ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இரவும் எல்லையும் ஏத்து
வார்எம்மை ஆளுடை யாரே.
7.075.8
வலிமையுள்ள மானினது தோல், புலியினது தோல் இவைகளை யுடையவனும், நறுமணத்தைக் கொண்ட கொன்றைமலர் மாலையை அணிந்தவனும், விரிந்த சடையின்மேல் பிறையை உடையவனும், பாம்பை உடம்பிற் பல இடங்களில் கட்டியுள்ளவனும் ஆகிய, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, நாள்தோறும், இரவிலும், பகலிலும் துதிப்பவர் எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலுடையவராவர். 
769 வலங்கொள் வாரவர் தங்கள்
வல்வினை தீர்க்கு மருந்து
கலங்கக் காலனைக் காலாற்
காமனைக் கண்சிவப் பானை
அலங்கல் நீர்பொரும் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இலங்கு சேவடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே.
7.075.9
தன்னை வலம் செய்கின்றவர்களது வலிய வினையாகிய நோயைத் தீர்க்கின்ற மருந்தாய் உள்ளவனும், கூற்றுவனைக் காலாலும், காமனைக் கண்ணாலும் அவர்கள் கலங்கி அழியுமாறு வெகுண்டவனும் ஆகிய, அசைகின்ற நீர் கரையை மோதுகின்ற திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, நாள்தோறும் அவனது விளங்குகின்ற, செவ்விய திருவடியில் பணிகின்றவர், எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர். 
770 ஆழி யாற்கருள் ஆனைக்
காவுடை ஆதிபொன் னடியின்
நீழ லேசர ணாக
நின்றருள் கூர நினைந்து
வாழ வல்லவன் றொண்டன்
வண்டமிழ் மாலைவல் லார்போய்
ஏழு மாபிறப் பற்று
எம்மையும் ஆளுடை யாரே.
7.075.10
சக்கரத்தை ஏந்தியவனாகிய திருமாலுக்கு அருள்புரிந்த, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனது பொன்போலும் திருவடி நிழலையே நினைந்து வாழ வல்ல வன்றொண்டனாகிய நம்பியாரூரனது வளவிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர், எழுவகைப்பட்ட அளவில்லாத பிறப்புக்களும் நீங்கப் பெற்று, மேலே சென்று, எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.