LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-78

7.078.திருக்கேதாரம் 
பண் - நட்டபாடை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் வடநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கேதாரேசுவரர். 
தேவியார் - கேதாரேசுவரியம்மை. 
792 வாழ்வாவது மாயம்மிது 
மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல் 
பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின்தடங் 
கண்ணான்மல ரோனும்
கீழ்மேலுற நின்றான்திருக் 
கேதாரமெ னீரே.
7.078.1
உலகீர், பசிநோயை உண்டாக்குகின்ற உடம்பு நிலைத்திருத்தல் என்பது பொய்; இது மண்ணாய் மறைந்தொழிவதே மெய்; ஆதலின், இல்லாது ஒழிய வேண்டுவது பிறவியாகிய கடலே; அதன் பொருட்டு, நீவிர் நீட்டியாது விரைந்து அறத்தைச் செய்ம்மின்கள்; பெரிய கண்களையுடையவனாகிய திருமாலும், மலரில் இருப்பவனாகிய பிரமனும் நிலத்தின் கீழும், வானின்மேலும் சென்று தேடுமாறு நின்றவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற, 'திருக்கேதாரம்' என்று சொல்லுமின்கள். 
793 பறியேசுமந் துழல்வீர்பறி
நரிகீறுவ தறியீர்
குறிகூவிய கூற்றங்கொளு
நாளால் அறம் உளவே
அறிவானிலும் அறிவான்நல
நறுநீரொடு சோறு
கிறிபேசிநின் றிடுவார்தொழு
கேதாரமெ னீரே.
7.078.2
வேறொன்றும் செய்யாது உடம்பைச் சுமந்தே திரிகின்றவர்களே, இவ்வுடம்பு நரிகளால் கிழித்து உண்ணப்படுவதாதலை அறிகின்றிலீர்; குறித்த நாளில் உம்மை அழைத்தற்குக் கூற்றுவன் நினைக்கின்ற நாளில் உமக்கு அறங்கள் உளவாகுமோ? ஆகாவாகலின், இப்பொழுதே, அறிய வேண்டுவனவற்றை அறியும் வானுலகத்தவரினும் மேலான அறிவுடன், நல்ல நறுமணத்தையுடைய நீரையும், சோற்றையும் விருந்தினருக்கு, இன்சொற் பேசி இடுகின்றவர்கள் வணங்குகின்ற, 'திருக்கேதாரம்' என்று சொல்லுமின்கள். 
794 கொம்பைப்பிடித் தொருக்காலர்க
ளிருக்கான்மலர் தூவி
நம்பன்நமை யாள்வான்என்று
நடுநாளையும் பகலும்
கம்பக்களிற் றினமாய்நின்று
சுனைநீர்களைத் தூவிச்
செம்பொற்பொடி சிந்துந்திருக்
கேதாரமெ னீரே.
7.078.3
உலகீர், யோகதண்டத்தை ஊன்றி, ஒருவழிப்படுத்துகின்ற உயிர்ப்பினை உடைய யோகிகள், 'இவனே நம்மை ஆள்பவன்' என்று, நள்ளிரவிலும், பகலிலும் மந்திர ஒலியோடு மலர்களைத் தூவி விரும்பப்படுகின்ற இறைவனது, அசைதலையுடைய ஆண் யானையின் கூட்டம் தொடர்ந்துவந்து நின்று, பல சுனைகளின் நீரை இறைத்து, செம்பொன்னினது பொடியை உதிர்க்கின்ற, 'திருக்கேதாரம்' என்று சொல்லுமின்கள். 
795 உழக்கேயுண்டு படைத்தீட்டிவைத்
திழப்பார்களுஞ் சிலர்கள்
வழக்கேயெனிற் பிழைக்கேமென்பர்
மதிமாந்திய மாந்தர்
சழக்கேபறி நிறைப்பாரொடு
தவமாவது செயன்மின்
கிழக்கேசல மிடுவார்தொழு
கேதாரமெ னீரே.
7.078.4
அறிவை அழித்துக்கொண்ட மாந்தர்களே, பொருளைத்தேடி, உழக்கரிசியை அட்டு உண்ணுதல் ஒன்றைச் செய்து விட்டு, எஞ்சியவற்றைத் தொகுத்துவைத்துப் பின் இழந்து போவாரும் சிலர் இவ்வுலகில் உளர்; அவர்கள், 'அறம்' என்றாலோ, 'அஃது எமக்கு வேண்டா; யாம் உண்டு உயிர் வாழ்வேம்' என்று போவர். வஞ்சனையால் தம் வயிற்றை மட்டுமே நிரப்பிக்கொள்கின்ற அவர்களோடு கூடி, அவர்களது நோன்பாகிய அச்செயலை நீவிர் செய்யன்மின்; விடியற்காலையில் பகலவன் வருகையை எதிர்நோக்கி நின்று, மந்திர நீரை இறைத்துக் காலைச் சந்தியை முடிக்கின்றவர்கள் வணங்குகின்ற, 'திருக்கேதாரம்' என்று சொல்லுமின்கள். 
796 வாளோடிய தடங்கண்ணியர்
வலையில்லழுந் தாதே
நாளோடிய நமனார்தமர்
நணுகாமுனம் நணுகி
ஆளாயுய்ம்மின் அடிகட்கிட
மதுவேயெனில் இதுவே
கீளோடர வசைத்தானிடங்
கேதாரமெ னீரே.
7.078.5
உலகீர், நாட்கள் ஓடிவிட்டன; ஆதலின், இயமன் தூதுவர் வருதற்கு முன்பு, வாள்போல இருபக்கமும் ஓடுகின்ற, அகன்ற கண்களையுடைய மகளிரது ஆசையாகிய வலையிற் சிக்காமல், இப்பொழுதே இறைவனை அடைந்து அவனுக்கு ஆளாகிப் பிழைமின்கள்; அங்ஙனம் பிழைத்தற்கு அவனுக்கு இடமாவதுதான் யாது எனில், இங்குச் சொல்லப்பட்டு வரும் இத் திருக்கேதாரமே. அரையில் கீளுடன் பாம்பைக் கட்டியுள்ள அவனது இடம்; ஆதலின், இதனைத் துதிமின்கள். 
797 தளிசாலைகள் தவமாவது
தம்மைப்பெறி லன்றே
குளியீருளங் குருக்கேத்திரங்
கோதாவிரி குமரி
தௌயீர்உளஞ் சீபர்ப்பதம்
தெற்குவடக் காகக்
கிளிவாழைஒண் கனிகீறியுண்
கேதாரமெ னீரே.
7.078.6
உலகீர், தேவகோட்டங்கள் தவச்சாலைகளாய் நின்று பயன் தருவது, மக்கள் அவ்விடங்களை அடைந்தாலன்றோ? இதனை மனத்துட் கொண்மின்கள்; கொண்டு, தெற்கென்னும் திசை கிடைக்க, 'கோதாவரி, குமரி' என்னும் தீர்த்தங்களிலும், வடக்கென்னும் திசைகிடைக்க, அழகிய குருக்கேத்திரத்தில் உள்ள தீர்த்தத்திலும் சென்று முழுகுமின்கள்; அவ்வாறே தெற்கில் சீபர்ப்பதத்தையும், வடக்கில் கிளிகள், பழத்தைக் கீறி உண்ணுகின்ற திருக்கேதாரத்தையும் சென்று வணங்கித் துதிமின்கள். 
798 பண்ணின்தமிழ் இசைபாடலின்
பழவேய்முழ வதிரக்
கண்ணின்னொளி கனகச்சுனை
வயிரம்மவை சொரிய
மண்ணின்றன மதவேழங்கள்
மணிவாரிக்கொண் டெறியக்
கிண்ணென்றிசை முரலுந்திருக்
கேதாரமெ னீரே.
7.078.7
உலகீர், பண்ணாகிய, தமிழ்ப்பாடலினது இசையைப் பாடுமிடத்து, அதற்கியையப் பழைதாகிய வேய்ங்குழலும், மத்தளமும் ஒலித்தலினாலும், கண்ணுக்கு இனிதாகிய ஒளியையுடைய பொன் வண்ணமான சுனைகள் வயிரங்களை அலைகளால் எடுத்து வீசுதலினாலும், நிலத்தில் நிற்கின்ற மத யானைகள், மாணிக்கங்களை வாரி இறைத்தலினாலும், 'கிண்' என்கின்ற ஓசை இடையறாது ஒலிக்கின்ற, 'திருக்கேதாரம்' என்று சொல்லுமின்கள். 
799 முளைக்கைப்பிடி முகமன்சொலி
முதுவேய்களை இறுத்துத்
துளைக்கைக்களிற் றினமாய்நின்று
சுனைநீர்களைத் தூவி
வளைக்கைப்பொழி மழைகூர்தர
மயில்மான்பிணை நிலத்தைக்
கிளைக்கமணி சிந்துந்திருக்
கேதாரமெ னீரே.
7.078.8
உலகீர், சிறிய கையை உடைய பெண்யானைகள், துளையையுடைய கையையுடைய ஆண் யானைகட்கு உறவாய் நின்று, முகமன்கூறி, பெரிய மூங்கில்களை ஒடித்துக் கொடுத்து, சுனைகளின் நீரைத் தௌத்தலால், அவற்றின் வளைவையுடைய கையினின்றும் பொழிகின்ற மழை மிகுதியாக, மயிலும், பெண்மானும் நிலத்தைக் கிண்டுதலால் மாணிக்கங்கள் தெறிக்கின்ற, 'திருக்கேதாரம்' என்று சொல்லுமின்கள். 
800 பொதியேசுமந் துழல்வீர்பொதி
அவமாவதும் அறியீர்
மதிமாந்திய வழியேசென்று
குழிவீழ்வதும் வினையால்
கதிசூழ்கடல் இலங்கைக்கிறை
மலங்கவ்வரை யடர்த்துக்
கெதிபேறுசெய் திருந்தானிடங்
கேதாரமெ னீரே.
7.078.9
உலகீர், நீவிர், இறைச்சிப் பொதியாகிய உடம்பைச் சுமந்து திரிதல் ஒன்றையே செய்வீர்; அப்பொதிதான் பயனற்று ஒழிவதை அறியமாட்டீர்; அறிவை இழந்த வழியிலே சென்று நீவிர் குழியில் வீழ்வதும், நும் வினைப்பயனேயாம். இதனை விடுத்து, முழுதும் கடலாற் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனாகிய இராவணன் மெலிவடையும் படி அவனை மலையால் முன்பு நெருக்கிப் பின்பு நன்னிலையைப் பெறச்செய்து தான் அம்மலைமேல் இனிதிருந்தவனாகிய சிவ பெருமானது இடம் திருக்கேதாரமே; அதனைத் துதிமின்கள். 
801 நாவின்மிசை யரையன்னொடு
தமிழ்ஞானசம் பந்தன்
யாவர்சிவ னடியார்களுக்
கடியானடித் தொண்டன்
தேவன்திருக் கேதாரத்தை
ஊரன்னுரை செய்த
பாவின்றமிழ் வல்லாபர
லோகத்திருப் பாரே.
7.078.10
தமிழ்ப்பாடலைப் பாடிய திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், மற்றும் எவராயினும், சிவனடியார்களுக்கு அடியனாகி, அவர்கட்கு அடித்தொண்டு செய்பவனாகிய நம்பியாரூரன், இறைவனது திருக்கேதாரத்தைப் பாடிய, இனிய தமிழ்ப் பாடலைப் பாட வல்லவர்கள், எல்லாவற்றிற்கும் மேலுள்ள உலகமாகிய சிவலோகத்தில் இருப்பவராவர். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.