LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-82

7.082.திருச்சுழியல் 
பண் - நட்டபாடை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - இணைத்திருமேனிநாதர். 
தேவியார் - துணைமாலைநாயகியம்மை. 
832 ஊனாய்உயிர் புகலாய்அக 
லிடமாய்முகில் பொழியும்
வானாய்வரு மதியாய்விதி 
வருவானிடம் பொழிலின
தேனாதரித் திசைவண்டினம் 
மிழற்றுந்திருச் சுழியல்
நானாவிதம் நினைவார்தமை 
நலியார்நமன் தமரே.
7.082.1
உடம்புகளாகியும், அவைகளில் புகுதலை யுடைய உயிர்களாகியும், அகன்ற நிலமாகியும், மேகங்கள் நின்று மழையைப் பொழியும் வானமாகியும், வினைப்பயன் வருதற்கு வழியாகிய உள்ளமாகியும் நிற்பவனாகிய இறைவனது இடம், சோலைகளில் தேனை விரும்பி வண்டுக் கூட்டம் இசைபாடுகின்ற திருச்சுழியலாகும். அதனைப் பல்லாற்றானும் நினைபவர்களை, கூற்றுவன் ஏவலர்கள் துன்புறுத்தமாட்டார்கள். 
833 தண்டேர்மழுப் படையான்மழ
விடையான்எழு கடல்நஞ்
சுண்டேபுரம் எரியச்சிலை
வளைத்தான்இமை யவர்க்காத்
திண்டேர்மிசை நின்றான்அவன்
உறையுந்திருச் சுழியல்
தொண்டேசெய வல்லாரவர்
நல்லார்துயர் இலரே.
7.082.2
தண்டுபோல மழுப்படையை ஏந்தியவனும், இளமையான இடபத்தை யுடையவனும், தேவர்கள் பொருட்டு, கடலில் எழுந்த நஞ்சினையுண்டு, திரிபுரங்கள் எரியும்படி வில்லை வளைத்துத் திண்ணிய தேரின்மேல் நின்றவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருச்சுழியலிற் சென்று அவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள், இன்பம் உடையவரும், துன்பம் இல்லாதவரும் ஆவர். 
834 கவ்வைக்கடல் கதறிக்கொணர்
முத்தங்கரைக் கேற்றக்
கொவ்வைத்துவர் வாயார்குடைந்
தாடுந்திருச் சுழியல்
தெய்வத்தினை வழிபாடுசெய்
தெழுவார்அடி தொழுவார்
அவ்வத்திசைக் கரசாகுவர்
அலராள் பிரியாளே.
7.082.3
ஓசையையுடைய கடல், முழக்கம்செய்து, தான் கொணர்ந்த முத்துக்களைக் கரையின்கண் சேர்க்க, அங்கு, கொவ்வைக் கனிபோலும் சிவந்த வாயையுடைய மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற கடவுளை வழிபட்டு மீள்கின்றவரது திருவடிகளை வணங்குவோர், தாம் தாம் வாழ்கின்ற நாட்டிற்கு அரசராய் விளங்குவர்; அவ்வரசிற்குரியவளாகிய திருமகள் அவர்களை விட்டு நீங்காள். 
835 மலையான்மகள் மடமாதிட
மாகத்தவண் மற்றுக்
கொலையானையின் உரிபோர்த்தஎம்
பெருமான்திருச் சுழியல்
அலையார்சடை யுடையான்அடி
தொழுவார்பழு துள்ளம்
நிலையார்திகழ் புகழால்நெடு
வானத்துயர் வாரே.
7.082.4
மலையரையனுக்கு மகளாகிய இளைய மாது தனது திருமேனியின்கண் இடப் பகுதியினளாக, கொலைத் தொழிலையுடைய யானையின் தோலைப் போர்த்துள்ள எம் பெருமானாகிய, திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற, நீர் பொருந்திய சடையை உடையவனது திருவடியைத் தொழுபவர்கள், மனத்தில் குற்றம் பொருந்தாதவராவர்; இவ்வுலகில் விளங்குகின்ற புகழை நாட்டிய மகிழ்வோடு நீண்ட வானுலகத்திற்கும் மேற்செல்வார்கள். 
836 உற்றான்நமக் குயரும்மதிச்
சடையான்புலன் ஐந்தும்
செற்றார்திரு மேனிப்பெரு
மான்ஊர்திருச் சுழியல்
பெற்றான்இனி துறையத்திறம்
பாமைத்திரு நாமம்
கற்றாரவர் கதியுட்செல்வர்
ஏத்தும்மது கடனே.
7.082.5
நமக்கு உறவாயுள்ளவனும், மேன்மை தங்கிய சந்திரனை யணிந்த சடையை யுடையவனும், ஐம்புலன்களையும் வென்று பொருந்திய திருமேனியையுடைய பெருமானும் ஆகிய இறைவனது ஊர் திருச்சுழியலே. அதன்கண் நீங்காது இனிது எழுந்தருளியிருக்கப்பெற்ற அவனது திருநாமத்தைப் பயின்றவர், உயர்கதியிற் செல்வர்; ஆதலின் உலகீர், அவனது திருப்பெயரைப் போற்றுமின்; அதுவே உங்கட்குக் கடமையாவது. 
837 மலந்தாங்கிய பாசப்பிறப்
பறுப்பீர்துறைக் கங்கைச்
சலந்தாங்கிய முடியான்அமர்ந்
திடமாந்திருச் சுழியல்
நிலந்தாங்கிய மலராற்கொழும்
புகையால்நினைந் தேத்தும்
தலந்தாங்கிய புகழான்மிகு
தவமாம்சது ராமே.
7.082.6
மாசினை உடைய பாசத்தால் வருகின்ற பிறப்பினை அறுக்க விரும்புகின்றவர்களே, துறைகளை உடையதாதற்கு உரிய கங்கையாகிய நீரினைத் தாங்கியுள்ள முடியையுடைய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடமாகிய திருச்சுழியலை, நிலம் சுமந்து நிற்கின்ற மலர்களாலும், செழுமையான நறும்புகைகளாலும் வழிபட்டு, நினைந்து துதிமின்கள்; உமக்கு இவ்வுலகம் சுமக்கத்தக்க புகழோடு கூடிய மிக்க தவம் உளதாகும் திறல் உளதாகும். 
838 சைவத்தசெவ் வுருவன்திரு
நீற்றன்னுரு மேற்றன்
கைவைத்தொரு சிலையால்அரண்
மூன்றும்மெரி செய்தான்
தெய்வத்தவர் தொழுதேத்திய
குழகன்திருச் சுழியல்
மெய்வைத்தடி நினைவார்வினை
தீர்தல்லௌ தன்றே.
7.082.7
சிவாகமங்களிற் சொல்லப்பட்ட வேடத்தையுடைய சிவந்த திருமேனியை யுடையவனாய்த் திருநீற்றை யணிபவனும், இடிபோலும் குரலையுடைய இடபத்தை யுடையவனும், கையின்கண் வைத்த ஒரு வில்லாலே மூன்று கோட்டைகளையும் எரித்தவனும், தெய்வத் தன்மையையுடைய தவத்தோர் வணங்கித் துதிக்கின்ற அழகனும் ஆகிய இறைவனது திருச்சுழியலை உள்ளத்துள் வைத்து, அவனது திருவடியை நினைபவரது வினைகள் நீங்குதல் எளிது. 
839 பூவேந்திய பீடத்தவன்
றானும்மடல் அரியும்
கோவேந்திய வினயத்தொடு
குறுகப்புக லறியார்
சேவேந்திய கொடியானவன்
உறையுந்திருச் சுழியல்
மாவேந்திய கரத்தான்எம
சிரத்தான்றன தடியே.
7.082.8
எருதினை, ஏந்துகின்ற கொடியாகப் பெற்ற சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருச்சுழியலில், மானை ஏந்திய கையை யுடையவனும், எங்கள் தலைகளின்மேல் உள்ளவனும் ஆகிய அவனது திருவடிகளை, தலைமை அமைந்த வணக்கத்தோடு அணுகச்சென்று அடைதலை, மலராகிய, உயர்ந்த இருக்கையில் உள்ளவனாகிய பிரமனும், வலிமையுடைய திருமாலும் ஆகிய இவர்தாமும் அறியமாட்டார். 
840 கொண்டாடுதல் புரியாவரு
தக்கன்பெரு வேள்வி
செண்டாடுதல் புரிந்தான்திருச்
சுழியற்பெரு மானைக்
குண்டாடிய சமணாதர்கள்
குடைச்சாக்கியர் அறியா
மிண்டாடிய அதுசெய்தது
வானால்வரு விதியே.
7.082.9
தன்னையே மதித்துக் கொள்ளுதலைச் செய்துநின்ற தக்கனது பெருவேள்வியை, பந்தாடுதல்போலத் தகர்த்து வீசி விளையாடினவனாகிய திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை, மூர்க்கத்தன்மை பேசுகின்ற சமணராகிய அறிவிலிகளும், குடையை உடையவராகிய புத்தர்களும் அறியாமல், வலிமை பொருந்திய வாதுசெய்து, அதன் வண்ணமே யாவார்களாயின், அஃது அவர் வினைப்பயனேயாகும். 
841 நீருர்தரு நிமலன்திரு
மலையார்க்கயல் அருகே
தேரூர்தரும் அரக்கன்சிரம்
நெரித்தான்திருச் சுழியல்
பேரூரென வுறைவானடிப்
பெயர்நாவலர் கோமான்
ஆரூரன தமிழ்மாலைபத்
தறிவார்துய ரிலரே.
7.082.10
அருவிகள் பாய்கின்ற இறைவனது திருமலையில் எதிரொலி உண்டாக, அதன் அருகில் தனது ஊர்தியைச் செலுத்திய இராவணனது தலையை நெரித்தவனும், திருச்சுழியலைத் தனது பெரிய ஊராகக் கொண்டு எழுந்தருளியிருப்பவனும் ஆகிய இறைவனது திருவடிப் பெயரைப் புனைந்தவனும், திருநாவலூரார்க்குத் தலைவனும் ஆகிய நம்பியாரூரனது இத் தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் உணர்கின்றவர், துன்பம் யாதும் இலராவர். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.