LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-85

7.085.திருக்கூடலையாற்றூர் 
பண் - புறநீர்மை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. இது திருப்புறம்பயமென்னுந் தலத்தினின்று மெழுந்தருளித் திருக்கூடலையாற்றூருக்குச் சமீபமாகச்செல்லுகின்றவர், அந்தத் தலத்துக்குள் செல்லாமல், திருமுதுகுன்றை நோக்கிச்செல்லுங் கருத்தினராக, அந்தமார்க்கத்தில் பரமசிவம் ஒரு பிராமணராய் நிற்கக்கண்டு ஐயரே திருமுதுகுன்றுக்கு மார்க்கமெதுவென்ன, இந்தக் கூடலையாற்றூர் மார்க்கமாச் செல்லுகின்றதென்று சொல்லி வழிகாட்டிப் பின்செல்ல, சுந்தரமூர்த்தி சுவாமிகள் முன்சென்று கூடலையாற்றூருக்குச் சமீபமாகச் சார்ந்தபோது பின்வந்த பிராமணர் மறையக்கண்டு அதிசயங்கொண்டு ஓதியபதிகம்.
சுவாமிபெயர் - நெறிகாட்டுநாயகர். 
தேவியார் - புரிகுழலாளம்மை. 
862 வடியுடை மழுவேந்தி
மதகரியுரி போர்த்துப்
பொடியணி திருமேனிப் 
புரிகுழ லுமையோடும்
கொடியணி நெடுமாடக் 
கூடலை யாற்றூரில்
அடிகள்இவ் வழிபோந்த 
அதிசயம் அறியேனே.
7.085.1
கூர்மையையுடைய மழுப்படையை ஏந்தி, மதத்தையுடைய யானையினது தோலைப் போர்த்துக்கொண்டு, பின்னிய கூந்தலையுடைய உமாதேவியோடும், கொடிகள் நாட்டிய உயர்ந்த மாடங்களையுடைய திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற, திருநீற்றை யணிந்த பெருமான், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதேயொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு! 
863 வையக முழுதுண்ட
மாலொடு நான்முகனும்
பையர வகலல்குற்
பாவையொ டும்முடனே
கொய்யணி மலர்ச்சோலைக்
கூடலை யாற்றூரில்
ஐயன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே.
7.085.2
உலகம் முழுதையும் உண்ட திருமாலோடும் பிரமதேவனோடும், அரவப் படம்போலும் அல்குலையுடைய, இளைய, பாவைபோலும் உமாதேவியோடும் உடனாகி, கொய்யப்படுகின்ற அழகிய பூக்களையுடைய சோலைகளையுடைய திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற தலைவன், இவ்வழியிடை என் முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதேயொழிந்தேன்; இஃது என் ஏழைமை இருந்தவாறு! 
864 ஊர்தொறும் வெண்டலைகொண்
டுண்பலி யிடும்என்று
வார்தரு மென்முலையாள்
மங்கையொ டும்முடனே
கூர்நுனை மழுவேந்திக்
கூடலை யாற்றூரில்
ஆர்வன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே.
7.085.3
ஊர்தோறும் சென்று, வெள்ளிய தலையோட்டை ஏந்தி, 'பிச்சை இடுமின்' என்று இரந்துண்டு, கச்சணிந்த, மெல்லிய தனங்களையுடையவளாகிய உமாதேவியோடும் உடனாய், கூரிய முனையையுடைய மழுவை ஏந்திக்கொண்டு, திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற, பேரன்புடையனாகிய பெருமான், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு! 
865 சந்தண வும்புனலுந்
தாங்கிய தாழ்சடையன்
பந்தண வும்விரலாள்
பாவையொ டும்முடனே
கொந்தண வும்பொழில்சூழ்
கூடலை யாற்றூரில்
அந்தணன் வழிபோந்த
அதிசயம் அறியேனே.
7.085.4
பிறை முதலிய பிறவற்றோடு அழகு பொருந்திய நீரையும் தாங்கியிருக்கின்ற, நீண்ட சடைமுடியையுடையவனாய், பந்தின்கண் பொருந்திய விரலை யுடையாளாகிய, பாவைபோலும் உமையோடும் உடனாகி, பூங்கொத்துக்கள் பொருந்திய சோலை சூழ்ந்த திருச்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற, அழகிய கருணையை யுடையவனாகிய பெருமான், இவ்வழியிடை என்முன் போந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு! 
866 வேதியர் விண்ணவரும்
மண்ணவ ரும்தொழநற்
சோதிய துருவாகிச்
சுரிகுழ லுமையோடும்
கோதிய வண்டறையுங்
கூடலை யாற்றூரில்
ஆதிஇவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே.
7.085.5
அந்தணரும், தேவரும், மக்களும் வணங்கி நிற்க, நல்ல ஒளியுருவமாய், சுரிந்த கூந்தலையுடைய உமாதேவியோடும் பூக்களில் மகரந்தத்தைக்கிண்டிய வண்டுகள் ஓசையைச் செய்கின்ற திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற முதல்வன், இவ்வழி யிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு! 
867 வித்தக வீணையொடும்
வெண்புரி நூல்பூண்டு
முத்தன வெண்முறுவல்
மங்கையொ டும்முடனே
கொத்தல ரும்பொழில்சூழ்
கூடலை யாற்றூரில்
அத்தன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே.
7.085.6
தான் வல்லதாகிய வீணையோடும், வெள்ளிய முப்புரி நூலை அணிந்து, முத்துப்போலும் வெள்ளிய நகையினை யுடைய உமாதேவியோடும் உடனாகி, பூக்கள் கொத்தின்கண் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற எந்தை, இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதேயொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு! 
868 மழைநுழை மதியமொடு
வாளர வுஞ்சடைமேல்
இழைநுழை துகிலல்குல்
ஏந்திழை யாளோடும்
குழையணி திகழ்சோலைக்
கூடலை யாற்றூரில்
அழகன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே.
7.085.7
மேகத்தில் நுழைகின்ற சந்திரனையும், கொடிய பாம்பையும் சடைக்கண்வைத்து, நுண்ணிய இழைபொருந்திய உயர்ந்த உடையை அணிந்த அல்குலையும், தாங்கிய அணிகலங்களையும் உடைய உமாதேவியோடும் உடனாகி, தளிர்களது அழகு விளங்குகின்ற சோலைகளையுடைய திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற அழகன், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் ஏழைமை இருந்தவாறு! 
869 மறைமுதல் வானவரும்
மாலயன் இந்திரனும்
பிறைநுதல் மங்கையொடும்
பேய்க்கண முஞ்சூழக்
குறள்படை யதனோடுங்
கூடலை யாற்றூரில்
அறவன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே.
7.085.8
வேதத்திற் சொல்லப்பட்ட தலைமைகளையுடைய பலராகிய தேவரும், அத்தேவர்க்கெல்லாம் தலைவனாகிய இந்திரனும், பேய்க்கூட்டமும் சூழ்ந்திருக்க, பிறைபோலும் நெற்றியையுடைய உமாதேவியோடும், பூதப் படையோடும், திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற புண்ணியனாகிய பெருமான், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதேயொழிந்தேன்; இஃதே என் அறியாமை இருந்தவாறு! 
870 வேலையின் நஞ்சுண்டு
விடையது தான்ஏறிப்
பாலன மென்மொழியாள்
பாவையொ டும்முடனே
கோலம துருவாகிக்
கூடலை யாற்றூரில்
ஆலன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே.
7.085.9
கடலின்கண் எழுந்த நஞ்சினை உண்டு விடையை ஊர்ந்து, பால்போலும் இனிய மொழியை உடையவளாகிய உமாதேவியோடும் உடனாய கோலமே தனது உருவமாகக்கொண்டு, திருக் கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆல்நிழற்பெருமான், இவ் வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை, அடியேன் அறியாதே யொழிந்தேன்; இஃதே என் அறியாமை இருந்தவாறு! 
871 கூடலை யாற்றூரிற்
கொடியிடை யவளோடும்
ஆட லுகந்தானை
அதிசயம் இதுவென்று
நாடிய இன்றமிழால்
நாவல வூரன்சொல்
பாடல்கள் பத்தும்வல்லார்
தம்வினை பற்றறுமே.
7.085.10
திருக்கூடலையாற்றூரில், கொடிபோலும் இடையினையுடையவளாகிய உமாதேவியோடும், அருள் விளையாட்டை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, 'அவன் செய்த இச்செயல் அதிசயம்' என்று சொல்லி, ஆராய்ந்த இனிய தமிழால், திருநாவலூரனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்களது வினை, பற்றறக் கெடுதல் திண்ணம். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.