LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-88

7.088.திருவீழிமிழலை 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வீழியழகர். 
தேவியார் - சுந்தரகுசாம்பிகையம்மை. 
892 நம்பி னார்க்கருள் செய்யும் அந்தணர்
நான்ம றைக்கிட மாய வேள்வியுள்
செம்பொ னேர்மடவா ரணி பெற்ற திருமிழலை
உம்ப ரார்தொழு தேத்த மாமலை
யாளொ டும்முட னேயு றைவிடம்
அம்பொன் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.
7.088.1
அந்தணர்களது நான்கு வேதங்களுக்கு இடமாகிய வேள்வியினுள் உம்மை விரும்பி வழிபடுவோர்க்கு அருள் செய்கின்றவரே, செம்பொன்னால் இயன்ற பாவைபோலும் மகளிர் அழகுபெற்று விளங்குகின்ற திருமிழலையுள், நீர் உயர்ந்த மலைமகளோடு உடனாகித் தேவர்கள் தொழுது துதிக்க உறைகின்ற இடத்தை, அழகிய பொன்போலச் சிறந்த வீழி மரத்தின் நிழலாகக் கொண்டவரே, அடியேனுக்கும் அருள் செய்யீர். 
893 விடங்கொள் மாமிடற் றீர்வெள் ளைச்சுருள்
ஒன்றிட்டு வட்ட காதி னீர்என்று
திடங்கொள் சிந்தையினார் கலி காக்கும் திருமிழலை
மடங்கல் பூண்ட விமானம் மண்மிசை
வந்தி ழிச்சிய வான நாட்டையும்
அடங்கல் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.
7.088.2
'நஞ்சினை உண்ட கரிய கண்டத்தை உடையவரே, வெண்மையான சங்கக் குழை ஒன்றினை இட்டுத் தூங்கவிட்ட காதினை உடையவரே' என்று போற்றி, உறுதி கொண்ட உள்ளத்தையுடைய அந்தணர்கள், உலகிற்கு வறுமை வாராமல் காக்கின்ற திருமிழலையுள் சிங்கங்கள் தாங்குகின்ற விமானம் ஒன்றை, உம்பொருட்டு மண்மேல் வந்து இறங்கச் செய்த வானுலகத்தையும் தன்கீழ் அடக்குதலையுடைய வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே, அடியேனுக்கும் அருள் செய்யீர், 
894 ஊனை யுற்றுயி ராயி னீர்ஒளி
மூன்று மாய்த்தௌ நீரோ டானஞ்சின்
தேனை ஆட்டுகந்தீர் செழு மாடத் திருமிழலை
மானை மேவிய கையி னீர்மழு
வேந்தி னீர்மங்கை பாகத் தீர்விண்ணில்
ஆன வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
7.088.3
உடம்பைப் பொருந்திய உயிரானவரே, 'ஞாயிறு, திங்கள், தீ' என்னும் மூன்று ஒளிகளும் ஆனவரே' தௌவாகிய நீரோடு ஆனஞ்சினிடைத் தேனை ஆடுதலை விரும்புபவரே, மானைப் பொருந்திய கையை யுடையவரே, மழுவை ஏந்தியவரே, மலைமகள் பாகத்தை உடையவரே, வளவிய மாடங்களையுடைய திருமிழலையில், வானின்கண் ஓங்கிய வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே, அடியேனுக்கும் அருள்செய்யீர். 
895 பந்தம் வீடிவை பண்ணி னீர்படி
றீர்ம திப்பிதிர்க் கண்ணி யீரென்று
சிந்தைசெய் திருக்குஞ் செங்கை யாளர் திருமிழலை
வந்து நாடகம் வான நாடியர்
ஆட மாலயன் ஏத்த நாள்தொறும்
அந்தண் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே. 7.088.4
'உயிர்களுக்கு, 'பந்தம்' வீடு' என்னும் இரண்டையும் அமைத்தவரே, அவ்வாறு அமைத்தும் அவைகட்கு ஒளித்து நிற்பவரே நிலாத் துண்டமாகிய கண்ணியைச் சூடியவரே.' என்று நினைந்திருக்கும் செவ்விய ஒழுக்கத்தை யுடையவர்களது திருமிழலையுள், நாள்தோறும் வானுலகத்தில் உள்ள நாடக மகளிர்கள் வந்து நடனம் ஆடவும், திருமாலும் பிரமனும் துதிக்கவும், அழகிய குளிர்ந்த வீழி மரத்தின் அடியை இடமாகக் கொண்டவரே, அடியேனுக்கும் அருள் செய்யீர். 
896 புரிசை மூன்றையும் பொன்றக் குன்றவில்
ஏந்தி வேதப் புரவித் தேர்மிசைத்
திரிசெய் நான்மறையோர் சிறந் தேத்துந் திருமிழலைப்
பரிசி னால்அடி போற்றும் பத்தர்கள்
பாடியாடப் பரிந்து நல்கினீர்
அரிய வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.
7.088.5
வேதங்களாகிய குதிரைகளைப் பூண்ட தேரின் மேல், மலையாகிய வில்லை ஏந்தி நின்று, மதில்கள் மூன்றையும் அழியும்படி வேறுபடுத்தவரே, நான்கு வேதங்களையும் உணர்ந்த அந்தணர்கள், அறிவு மிகுந்து துதிக்கின்ற திருமிழலையுள், அரிய வீழி மரத்தினது நிழலை இடமாகக் கொண்டவரே, நீர், உமது திருவடியைப் போற்றுகின்ற அடியவர்கள் அன்பினால் பாடி ஆட, மனம் இரங்கி, அவர்க்கு வேண்டுவனவற்றை அளித்தீர்; அதுபோல, அடியேனுக்கும் அருள்செய்யீர். 
897 எறிந்த சண்டி இடந்த கண்ணப்பன்
ஏத்து பத்தர்கட் கேற்றம் நல்கினீர்
செறிந்த பூம்பொழில்தேன் துளிவீசுந் திருமிழலை
நிறைந்த அந்தணர் நித்த நாள்தொறும்
நேசத்தால் உமைப் பூசிக் கும்மிடம்
அறிந்து வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.
7.088.6
மரங்கள் நெருங்கிய பூஞ்சோலைகள், தம்மிடத்து வருவோர்க்குத் தேன் துளிகளை வழங்குகின்ற திருமிழலையுள், நிறைந்துள்ள அந்தணர் பலரும் நாள்தோறும் நிலையாக அன்பினால் உம்மை வழிபடும் இடத்தை அறிந்து, வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே, நீர், தந்தையது தாளை எறிந்த சண்டேசுர நாயனார், தமது கண்ணைப் பெயர்த்து அப்பிய கண்ணப்ப நாயனார் முதலாக, உம்மை வழிபட்ட அடியவர் பலருக்கு உயர்கதியைத் தந்தருளினீ; அதுபோல அடியேனுக்கும் அருள்செய்யீர், 
898 பணிந்த பார்த்தன் பகீர தன்பல
பத்தர் சித்தர்க்குப் பண்டு நல்கினீர்
திணிந்த மாடந்தொறுஞ் செல்வம் மல்கு திருமிழலைத்
தணிந்த அந்தணர் சந்தி நாடொறும்
அந்தி வானிடு பூச்சி றப்பவை
அணிந்து வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.
7.088.7
நெருங்கிய மாடங்கள்தோறும் செல்வம் நிறைந்த திருமிழலையுள், சினம் தவிர்ந்த அந்தணர்கள், காலை, நடுப்பகல் இவற்றிலும், அந்திக் காலத்திலும் உயர்வாக இடுகின்ற பூக்களின் ஒப்பனையை அணிந்துகொண்டு, வீழி மரத்தினது நிழலை இடமாகக் கொண்டவரே, நீர், உம்மை வணங்கிய அருச்சுனன், பகீரதன், பல அடியவர், சித்தர் முதலியோர்க்கு முற்காலத்தில் அருள் பண்ணினீர்; அதுபோல, அடியேனுக்கும் அருள்செய்யீர். 
899 பரந்த பாரிடம் ஊரி டைப்பலி
பற்றிப் பாத்துணுஞ் சுற்ற மாயினீர்
தெரிந்த நான்மறையோர்க் கிட மாய திருமிழலை
இருந்து நீர்தமி ழோடி சைகேட்கும்
இச்சை யாற்காசு நித்தல் நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.
7.088.8
மிக்க பூத கணங்களை, ஊர்களில் பிச்சையேற்று அதனைப் பகுத்து உண்ணும் சுற்றமாக உடையவரே, ஆராய்ந்த நான்கு வேதங்களை உணர்ந்தோராகிய அந்தணர்க்கு இடமான திருமிழலையுள், அரிய, குளிர்ந்த வீழி மரத்தின் நிழலை இடமாகக்கொண்டவரே, நீர், இனிதிருந்து இசையைத் தமிழோடு கேட்கும் விருப்பத்தால் அத்தகைய தமிழைப் பாடியோர்க்குப் பொற்காசினை நாள்தோறும் வழங்கினீர்; அதுபோல, அடியேனுக்கும் அருள் செய்யீர். 
900 தூய நீரமு தாய வாறது
சொல்லு கென்றுமை கேட்கச் சொல்லினீர்
தீய றாக்குலையார் செழு மாடத் திருமிழலை
மேய நீர்பலி யேற்ற தென்னென்று
விண்ணப் பஞ்செய் பவர்க்கு மெய்ப்பொருள்
ஆய வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.
7.088.9
'தீ வளர்த்தலை ஒழியாத கூட்டத்தவராகிய அந்தணர்களது, வளவிய மாடங்களையுடைய திருமிழலையுள் விரும்பி வீற்றிருக்கின்ற நீர், 'பிச்சை எடுப்பது என்' என்று வினாவுவோர்க்கு மெய்ப்பொருளாய் விளங்குகின்ற, வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே, நீர், 'உமக்குத் தூய்மை யாகிய நீரே அமுத மாயினவாற்றினைச் சொல்லுக' என்று உமையவள் கேட்க, அதனைச் சொல்லியருளினீர்; அதுபோல, அடியேனுக்கும் அருள்செய்யீர். 
901 வேத வேதியர் வேத நீதிய
தோது வார்விரி நீர்மி ழலையுள்
ஆதி வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுகென்று
நாத கீதம்வண் டோது வார்பொழில்
நாவ லூரன்வன் றொண்டன் நற்றமிழ்
பாதம் ஓதவல்லார் பர னோடு கூடுவரே.
7.088.10
'வேதத்தை ஓதுகின்ற வேதியர்களும், வேதத்தின் பொருளை விளங்குபவர்களும் வாழ்கின்ற, பரந்த நீரையுடைய திருமிழலையுள், பழைதாகிய வீழி மரத்தினது நிழலை இடமாகக் கொண்டவரே, அடியேனுக்கும் அருள் செய்யீர்' என்று பாடிய, இனிய இசையை வண்டுகள் பாடுகின்ற நீண்ட சோலைகளையுடைய திருநாவலூரில் தோன்றினவனும், வன்றொண்டனும் ஆகிய திருநாவலூல் தோன்றினவனும் ஆகிய நம்பியாரூரனது இந்நல்ல தமிழ்ப்பாடல்களை, அப்பெருமான் திருவடிக்கீழ் நின்றுபாட வல்லவர், அவனோடு இரண்டறக் கலப்பர். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.