LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-90

7.090.கோயில் 
பண் - குறிஞ்சி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர். 
தேவியார் - சிவகாமியம்மை. 
913 மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ 
வாழு நாளுந்
தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கி லிடும்போது 
தடுத்தாட் கொள்வான்
கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரிஅகலுங்
கரிய பாம்பும்
பிடித்தாடிப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே.
7.090.1
மனமே, நீ குஞ்சித்து ஆடுகின்ற தனது திருவடிக்குச் செய்யும் தொண்டின்கண் வாழாமல் உண்டு உடுத்தே வாழும் நாள்களிலும், உன்னை அவ்வாறே சென்று கெடாதவாறு தடுத்து, தனது இச்சைவழி நடாத்தி, பின்பு நீ முன்செய்த பாவத்தின்பொருட்டு உன்னைக் கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனையும் தடுத்து ஆட்கொள்பவனாகிய, கையில் தமருகத்தையும், நெருப்பு எரிகின்ற தகழியையும், சினந்த ஆடுகின்ற கரிய பாம்பையும் பிடித்துக்கொண்டு ஆடுகின்ற பெரும்பற்றப் புலியூரில் திருச்சிற்றம் பலத்தில் விளங்குகின்ற நம்பெருமானை அடைந்து விட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது! 
914 பேராது காமத்திற் சென்றார்போ லன்றியே
பிரியா துள்கிச்
சீரார்ந்த அன்பராய்ச் சென்றுமுன் னடிவீழுந்
திருவி னாரை.
ஓராது தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
பேராளர் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே.
7.090.2
மனமே, சாங்காறும், நீங்காது உலக இன்பத்தில் சென்றவர்போலவன்றி, புகழ் நிறைந்த அன்பையுடையவர்களாய், தன்னை இடைவிடாது நினைத்து, திருமுன் சென்று தனது திருவடியில் வீழ்ந்து வணங்கும் திருவுடையவரை, அவரது நிலையை அறியாமல், கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனாகிய, பெருமையுடையவர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது! 
915 நரியார்தங் கள்ளத்தாற் பக்கான பரிசொழிந்து
நாளும் உள்கித்
திரியாத அன்பராய்ச் சென்றுமுன் னடிவீழுஞ்
சிந்தை யாரைத்
தரியாது தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
பெரியோர்கள் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே.
7.090.3
மனமே, நரியினது வஞ்சனைபேலும் வஞ்சனையினால் இரண்டுபட்ட தன்மையின் நீங்கி, நாள்தோறும் தன்னை நினைத்து, மாறுபடாத அன்பை உடையவராய்த் திருமுன்சென்று, தனது திருவடியில் வீழ்ந்து வணங்குங் கருத்துடையவரை, கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது சிறிதும் தாழாது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனாகிய, பெரியோர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது! 
916 கருமையார் தருமனார் தமர்நம்மைக் கட்டியகட்
டறுப்பிப் பானை
அருமையாந் தன்னுலகந் தருவானை மண்ணுலகங்
காவல் பூண்ட
உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை
மறுக்கஞ் செய்யும்
பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே.
7.090.4
மனமே, கருமை நிறம் பொருந்திய கூற்றுவனது ஏவலர் நம்மைக் கட்டுவராயின், அக் கட்டினை அறுத்தெறிபவனும், நமக்கு, பிறர் பெறுதற்கரிய தனது உலகத்தையே தருபவனும், பல்லவ மன்னன் இந்நிலவுலகத்தை நன்நெறியில் வைத்துக் காத்தலை மேற் கொண்ட இயைபினால், அவனுக்குத் திறைகொடாது மாறுபடும் பிற மன்னர்களை வருத்துதல் செய்கின்றவனும் ஆகிய, பெருமை யுடையவர்களது பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது! 
917 கருமானின் உரியாடைச் செஞ்சடைமேல் வெண்மதியக்
கண்ணி யானை
உருமன்ன கூற்றத்தை உருண்டோட உதைத்துகந்
துலவா இன்பம்
தருவானைத் தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
பெருமானார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே.
7.090.5
மனமே, யானையினது தோலைப் போர்வையாக உடைய, சிவந்த சடைமேல் வெள்ளிய பிறையாகிய கண்ணியைச சூடினவனும், இடிபோல முழங்கும் கூற்றுவனை நிலத்தில் உருண்டு ஒழியும்படி உதைத்துப் பின் அருள் செய்து, அவனால் வெருட்டப் பட்ட சிறுவனுக்கு அழியாத இன்பத்தைத் தந்தவனும், நம்மை, அக்கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும் ஆகிய, பெருமை நீங்காதவர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது! 
918 உய்த்தாடித் திரியாதே உள்ளமே ஒழிகண்டாய்
ஊன்க ணோட்டம்
எத்தாலுங் குறைவில்லை என்பர்காண் நெஞ்சமே
நம்மை நாளும்
பைத்தாடும் அரவினன் படர்சடையன் பரஞ்சோதி
பாவந் தீர்க்கும்
பித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே.
7.090.6
மனமே, படம் எடுத்து ஆடும் பாம்பையும், விரிந்த சடையையும் உடையவனும், மேலான ஒளியாய் உள்ளவனும், அடைந்தவரது பாவங்களை நீக்குகின்றவனும், பித்துக்கொண்டு ஆடுகின்றவனும் ஆகிய, பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம் பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே; இனி நாம் பெற வேண்டுவது யாது! இதனால், நமக்கு எதனாலும் குறைவில்லாது வாழ்வு உளதாயிற்று என்று நம்மை நாள்தோறும் பலரும் புகழ்கின்றனர்; ஆதலின், மனமே, இனி நீ, உடம்பின் மேற் கண்ணோட்டம் செலுத்தி அலைந்து திரியாது, அதனை முற்றிலும் ஒழி. 
919 முட்டாத முச்சந்தி மூவா யிரவர்க்கும்
மூர்த்தி என்னப்
பட்டானைப் பத்தராய்ப் பாவிப்பார் பாவமும்
வினையும் போக
விட்டானை மலைஎடுத்த இராவணனைத் தலைபத்தும்
நெரியக் காலால்
தொட்டானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே.
7.090.7
மனமே, 'தப்பாத, முப்போதும் செய்யும் வழி பாட்டினையுடைய மூவாயிரவர் அந்தணர்க்கும் ஒரு மூர்த்தியே' என்று அனைவராலும் சொல்லப்பட்டவனும், அடியவராய் நின்று தன்னை நினைப்பவரது, பாவமும் புண்ணியமும் ஆகிய இரு வினைகளும் விலகுமாறு நீக்குகின்றவனும், தனது மலையை எடுத்த இராவணனை, அவனது பத்துத் தலைகளும் நெரியும்படி காலால் ஊன்றினவனும் ஆகிய, பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச் சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே, இனி நாம் பெறவேண்டுவது யாது! 
920 கற்றானுங் குழையுமா றன்றியே கருதுமா
கருத கிற்றார்க்
கெற்றாலுங் குறைவில்லை என்பர்காண் உள்ளமே
நம்மை நாளுஞ்
செற்றாட்டித் தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
பெற்றேறிப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே.
7.090.8
மனமே, கல்லும் தன் தன்மை மாறி உருகும்படி, தன்னை நினைக்கும் முறையில் நினைக்க வல்லராயினார்க்கு, எத்தன்மைத்தாய பொருளாலும் குறைவில்லை என்று பெரியோர் சொல்லுவர்; அவ்வகையில் நாம், நம்மை, கூற்றுவனது ஏவலர்கள் பலகாலும் ஆட்டக்கருதிச் செக்கிலிட முயலும்போது, அதனைத் தடுத்து ஆட்கொள்ளுகின்ற, விடையேறுபவனாகிய, பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்கும் நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது! 
921 நாடுடைய நாதன்பால் நன்றென்றுஞ் செய்மனமே
நம்மை நாளும்
தாடுடைய தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
மோடுடைய சமணர்க்கும் முடையுடைய சாக்கியர்க்கும்
மூடம் வைத்த
பீடுடைய புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே.
7.090.9
மனமே, நம்மை, தலைமையையுடைய கூற்றுவனது ஏவலர் பலநாளும் செக்கிலிட்டு ஆட்ட முயலும்போது, அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும், முடைநாற்றத்தையுடைய சமணர்கட்கும், வயிற்றையுடைய சாக்கியர்கட்கும் அறியாமையை வைத்த பெருமையை யுடையவனும் ஆகிய, பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டியது யாது! அதனால், உயர்ந்தோரால் விரும்பப்டுதலையுடைய அவ்விறைவனிடத்தில் என்றும் நன்றாய தொன்டினைச் செய். 
922 பாரூரும் அரவல்குல் உமைநங்கை யவள்பங்கன்
பைங்கண் ஏற்றன்
ஊரூரன் தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீகொங்கில்
அணிகாஞ் சிவாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தை
பெற்றா மன்றே.
7.090.10
மனமே, நிலத்தில் ஊர்ந்து செல்கின்ற பாம்பினது படம்போலும் அல்குலையுடைய 'உமை' என்னும் நங்கையது பாகத்தையுடையவனும், பசிய கண்களையுடைய இடபத்தை யுடையவனும், ஊர் தோறும் எழுந்தருளியிருப்பவனும் நம்மை, கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும் போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும், நம்பியாரூரனுக்குத் தலைவனும், திருவாரூரை உடையவனும், மேற்றிசையில் உள்ள கொங்கு நாட்டில், அழகிய காஞ்சிநதியின் கரையில் விளங்கும் பேரூரில் உள்ளவரது கடவுளும் ஆகிய இறைவனை, பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் அடைந்து விட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது! 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.