LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-92

7.092.திருப்புக்கொளியூர் அவிநாசி 
பண் - குறிஞ்சி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அவிநாசியப்பர். 
தேவியார் - பெருங்கருணைநாயகி. 
933 எற்றான் மறக்கேன் எழுமைக்கும் 
எம்பெரு மானையே
உற்றாய்என் றுன்னையே உள்குகின்றேன் 
உணர்ந் துள்ளத்தால்
புற்றா டரவா புக்கொளி 
யூர்அவி னாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி 
யேபர மேட்டியே.
7.092.1
புற்றின்கண் வாழ்கின்ற, படமெடுத்து ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே, உயிர்களுக்கெல்லாம் தலைவனே, மேலான இடத்தில் உள்ளவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, 'அவனாசி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, ஏழு பிறப்பிலும் எமக்குத் தலைவனாய் உள்ள உன்னையே எனக்கு உறவினன் என்று உணர்ந்து, மனத்தால் நினைக்கின்றேன்; உன்னையே எனக்குப் பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்வேன்; உன்னை எக்காரணத்தால் மறப்பேன்! 
934 வழிபோவார் தம்மோடும் வந்துடன் 
கூடிய மாணிநீ
ஒழிவ தழகோசொல் லாய்அரு 
ளோங்கு சடையானே
பொழிலா ருஞ்சோலைப் புக்கொளி 
யூரிற் குளத்திடை
இழியாக் குளித்த மாணிஎன் 
னைக்கிறி செய்ததே.
7.092.2
அருள் மிக்க, தவக்கோலத்தையுடையவனே, பெருமரப் பொழில்களையும், நிறைந்த இளமரக் காக்களையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள குளத்தின்கண் இறங்கிக் குளித்த அந்தணச் சிறுவன் செய்த குற்றம் யாது? உன்னை வணங்கச் செல்பவர்களுடன் வந்து உடன் சேர்ந்த அச்சிறுவன், உன் திருமுன்னே இறந்து போவது உனக்குப் பொருந்துவதோ? நீ சொல்லாய். 
935 எங்கேனும் போகினும் எம்பெரு 
மானை நினைந்தக்கால்
கொங்கே புகினுங் கூறைகொண் 
டாறலைப் பார்இலை
பொங்கா டரவா புக்கொளி 
யூர்அவி னாசியே
எங்கோ னேஉனை வேண்டிக்கொள் 
வேன்பிற வாமையே.
7.092.3
மிகுதியான, ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, 'அவினாசி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, எங்கள் தலைவனே, எம்பெருமானாகிய உன்னை நினைத்தால், கொங்கு நாட்டிலே புகுந்தாலும், மற்றும் எங்கேனும் சென்றாலும், என்னை ஆறலைத்துக் கூறையைப் பறித்துக்கொள்பவர் இலராவர்; ஆகவே, உன்னிடம் நான் பிறவாமை ஒன்றையே வேண்டிக் கொள்வேன். 
936 உரைப்பார் உரைஉகந் துள்கவல் 
லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும் 
அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி 
யூர்அவி னாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை 
தரச்சொல்லு காலனையே.
7.092.4
உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே, உன்னை எஞ்ஞான்றும் மறவாது நினைக்க வல்லவரது தலைமேல் இருப்பவனே, அரையின்கண் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லாப் பொருட்கும் முதலும் முடிவுமானவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள, 'அவினாசி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, கூற்றுவனையும் முதலையையும், இக்குளக் கரைக்கண் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள். 
937 அரங்காவ தெல்லா மாயிடு 
காடது அன்றியும்
சரங்கோலை வாங்கி வரிசிலை 
நாணியிற் சந்தித்துப்
புரங்கோட எய்தாய் புக்கொளி 
யூஅவி னாசியே
குரங்காடு சோலைக் கோயில்கொண் 
டகுழைக் காதனே.
7.092.5
திருப்புக்கொளியூரில் உள்ள, குரங்குகள் குதித்து ஆடுகின்ற சோலையையுடைய, 'அவினாசி' என்னும் திருக்கோயிலை இடமாகக்கொண்ட, குழையை யணிந்த காதினை உடையவனே, உனக்கு நடனமாடும் இடமாய் இருப்பது, எல்லாரும் அழிகின்ற முதுகாடு; அதுவன்றியும், நீ அம்பை எடுத்து, வரிந்த வில்லில் உள்ள நாணியில் தொடுத்து, மூன்று ஊர்கள் அழிய அழித்தாய். 
938 நாத்தா னும்உனைப் பாடல்அன் 
றிநவி லாதெனாச்
சோத்தென்று தேவர் தொழநின்ற 
சுந்தரச் சோதியாய்
பூத்தாழ் சடையாய் புக்கொளி 
யூர்அவி னாசியே
கூத்தா உனக்குநான் ஆட்பட்ட 
குற்றமுங் குற்றமே.
7.092.6
'எங்கள் நாவும் உன்னைப் பாடுதலன்றி வேறொன்றைச் சொல்லாது' என்றும், 'உனக்கு வணக்கம்' என்றும் சொல்லித் தேவர்கள் வணங்க நிற்கின்ற அழகிய ஒளிவடிவாய் உள்ளவனே, பூவையணிந்த, நீண்ட சடையை உடையவனே, நடனம் ஆடுபவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, 'அவினாசி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, நான் உனக்கு ஆளான தன்மையும் குற்றமோ? 
939 மந்தி கடுவனுக் குண்பழம் 
நாடி மலைப்புறம்
சந்திகள் தோறுஞ் சலம்புட்பம் 
இட்டு வழிபடப்
புந்தி உறைவாய் புக்கொளி 
யூர்அவி னாசியே
நந்தி உனைவேண்டிக் கொள்வேன் 
நரகம் புகாமையே.
7.092.7
பெண்குரங்கு, ஆண்குரங்குக்கு, அது செல்லும் மலைப்புறங்களில், உண்ணத் தக்க பழங்கள் கிடைக்கவேண்டி, 'காலை, நண்பகல், மாலை' என்னும் காலங்கள் தோறும் நீரையும், பூவையும் இட்டு வழிபாடு செய்ய, அதன் மனத்திலும் புகுந்து இருப்பவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, 'அவினாசி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற, 'நந்தி' என்னும் பெயரை உடையவனே, உன்னிடம் நான் நரகம் புகாதிருத்தலையே வேண்டிக் கொள்வேன். 
940 பேணா தொழிந்தேன் உன்னைஅல் 
லாற்பிற தேவரைக்
காணா தொழந்தேன் காட்டுதி 
யேல்இன்னங் காண்பன்நான்
பூணாண் அரவா புக்கொளி 
யூர்அவி னாசியே
காணாத கண்கள் காட்டவல் 
லகறைக் கண்டனே.
7.092.8
'அணிகலமாகவும், வில்நாணாகவும் பாம்பைக் கொண்டுள்ளவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, 'அவினாசி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன் உன்னையன்றிப் பிறதேவரை விரும்பாது நீங்கினேன்; அதனால் அவர்களைக் காணாதும் விட்டேன்; காணும் தன்மையற்ற என் கண்களைக் காணும்படி செய்யவல்ல, நஞ்சினையணிந்த கண்டத்தையுடையவனே, என் அறிவாகிய கண்ணையும் அங்ஙனம் அறியச் செய்வையாயின், உனது பெருமைகளை இன்னும் மிகுதியாக அறிந்து கொள்வேன். 
941 நள்ளாறு தௌளா றரத்துறை 
வாய்எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் 
தோலை விரும்பினாய்
புள்ளேறு சோலைப் புக்கொளி 
யூரிற் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணியென் 
னைக்கிறி செய்ததே.
7.092.9
திருநள்ளாறு, திரு அரத்துறைகளில் உள்ள நம்பனே, வெள்ளாடையை விரும்பாது, புலித்தோல் ஆடையை விரும்புபவனே, பறவைகள் தங்கும் சோலைகளையுடைய திருப்புக்கொளியூரில் உள்ள குளத்தில் உள்ளே முழுகப் புகுந்த அந்தணச் சிறுவன் செய்த மாயம் யாது? 
942 நீரேற ஏறு நிமிர்புன்சடை 
நின்மல மூர்த்தியைப்
போரேற தேறியைப் புக்கொளி 
யூர்அவி னாசியைக்
காரேறு கண்டனைத் தொண்டன்ஆ 
ரூரன் கருதிய
சீரேறு பாடல்கள் செப்பவல் 
லார்க்கில்லை துன்பமே.
7.092.10
நீர் தங்குதலால் பருமை பெற்ற, நீண்ட புல்லிய சடையை உடைய, தூய பொருளானவனும், போர்செய்யும் எருதை ஏறுபவனும், கருமை பொருந்திய கண்டத்தையுடையவனும் ஆகிய, திருப்புக்கொளியூரிலுள்ள, 'அவினாசி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவனது தொண்டனாகிய நம்பியாரூரன். ஒரு பயன்கருதிப் பாடிய, இப்புகழ்மிக்க பாடல்களைப் பாடவல்லவர்கட்குத் துன்பம் இல்லையாகும். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.