LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-99

7.099.திருநாகேச்சரம் 
பண் - பஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர். 
தேவியார் - குன்றமுலையம்மை. 
1006 பிறையணி வாணுதலாள் உமை 
யாளவள் பேழ்கணிக்க
நிறையணி நெஞ்சனுங்க நீல 
மால்விடம் உண்டதென்னே
குறையணி குல்லைமுல்லை அளைந் 
துகுளிர் மாதவிமேல்
சிறையணி வண்டுகள்சேர் திரு 
நாகேச் சரத்தானே.
7.099.1
சிறகுகளையுடைய அழகிய வண்டுகள், இன்றியமையாத, அழகிய துளசியிலும், முல்லை மலர்களிலும் மகரந்தத்தை அளைந்து, பின்பு குருக்கத்திக் கொடியின்மேல் சேர்கின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ பிறைபோலும், அழகிய, ஒளிபொருந்திய நெற்றியை உடையவளாகிய உமையவள் மருளவும், திட்பம் பொருந்திய மனம் கலங்கவும், நீல நிறத்தை உடைய, பெரிய நஞ்சினை உண்டதற்குக் காரணம் யாது? 
1007 அருந்தவ மாமுனிவர்க் கரு 
ளாகியொர் ஆலதன்கீழ்
இருந்தற மேபுரிதற் கியல் 
பாகிய தென்னைகொலாம்
குருந்தய லேகுரவம் மர 
வின்னெயி றேற்றரும்பச்
செருந்திசெம் பொன்மலருந் திரு 
நாகேச் சரத்தானே.
7.099.2
குருந்த மரத்தின் பக்கத்தில் குராமரம், பாம்பினது பல்லைத் தாங்கினாற்போல அரும்புகளைத் தோற்றுவிக்க, செருந்தி மரம், செம்பொன்போலும் மலரைக் கொண்டு விளங்கும் திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, அரிய தவத்தையுடைய சிறந்த முனிவர்கள்மேல் கருணை கூர்ந்து, ஓர் ஆலமரத்தின் கீழ் இருந்து அறத்தைச் சொல்ல இசைந்ததற்குக் காரணம் யாது? 
1008 பாலன தாருயிர்மேற் பரி 
யாது பகைத்தெழுந்த
காலனை வீடுவித்துக் கருத் 
தாக்கிய தென்னைகொலாம்
கோல மலர்க்குவளைக் கழு 
நீர்வயல் சூழ்கிடங்கில்
சேலொடு வாளைகள்பாய் திரு 
நாகேச் சரத்தானே.
7.099.3
அழகிய குவளை மலர்களையும், செங்கழுநீர் மலர்களையும் உடைய வயல்களைச் சூழ்ந்துள்ள வாய்க்கால்களில், சேர் மீன்களும், வாளை மீன்களும் துள்ளுகின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, சிறுவன் ஒருவன்மேல் இரக்கங்கொள்ளாது பகைத்து, அவனது அரிய உயிரைக் கவர வந்த இயமனை அழிவித்து, அச்சிறுவனுக்கு அருளை வழங்கியதற்குக் காரணம் யாது? 
1009 1009 குன்ற மலைக்குமரி கொடி 
யேரிடை யாள்வெருவ
வென்றி மதகரியின் னுரி 
போர்த்ததும் என்னைகொலாம்
முன்றில் இளங்கமுகின் முது 
பாளை மதுஅளைந்து
தென்றல் புகுந்துலவுந் திரு 
நாகேச் சரத்தானே.
7.099.4
இல்லங்களின் முன்னுள்ள இளைய கமுகமரத்தின் பெரிய பாளைகளில் கட்டப்பட்ட தேன் கூடுகளில் உள்ள தேனை, தென்றற் காற்றுத் துழாவி, தெருக்களில் வந்து உலவுகின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, பல குன்றுகளையுடைய இமயமலையின் மகளாகிய, கொடிபோலும் இடையையுடைய உமை அஞ்சும்படி, வெற்றியையும், மதத்தையும் உடைய யானையின் தோலை உரித்ததே யன்றி, அதனைப் போர்வையாகப் போர்த்துக் கொண்டதற்குக் காரணம் யாது? 
1010 அரைவிரி கோவணத்தோ டர 
வார்த்தொரு நான்மறைநூல்
உரைபெரு கவ்வுரைத் தன் 
றுகந்தருள் செய்ததென்னே.
வரைதரு மாமணியும் வரைச் 
சந்தகி லோடும்உந்தித்
திரைபொரு தண்பழனத் திரு 
நாகேச் சரத்தானே.
7.099.5
மலைகள் தந்த சிறந்த மாணிக்கங்களையும், அவற்றில் உள்ள சந்தனக்கட்டை, அகிற்கட்டை என்பவைகளுடன் தள்ளிக்கொண்டு வந்து, அலைகள் மோதுகின்ற, குளிர்ந்த வயல்களையுடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, நீ, அரையின்கண், அகன்ற கோவணத்தோடு பாம்பைக் கட்டிக்கொண்டு, ஒப்பற்ற நான்கு வேதங்களின் பொருளை, அன்று விரிவாகச் சொல்லி, அதனைக் கேட்டோரை விரும்பி, அவருக்கு அருள் செய்தற்குக் காரணம் யாது? 
1011 தங்கிய மாதவத்தின் தழல் 
வேள்வியி னின்றெழுந்த
சிங்கமும் நீள்புலியுஞ் செழு 
மால்கரி யோடலறப்
பொங்கிய போர்புரிந்து பிளந் 
தீருரி போர்த்ததென்னே
செங்கயல் பாய்கழனித் திரு 
நாகேச் சரத்தானே.
7.099.6
செவ்விய கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களையுடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, நிலைபெற்ற பெரிய தவத்தினால், வேள்வித்தீயினின்றும் தோன்றிய சிங்கமும், நீண்ட புலியும், பருத்த பெரிய யானையோடே கதறி அழியும்படி மிக்க போரைச் செய்து கிழித்து, அவற்றினின்றும் உரித்த தோலைப் போர்த்ததற்குக் காரணம் யாது? 
1012 நின்றஇம் மாதவத்தை யொழிப் 
பான்சென் றணைந்துமிகப்
பொங்கிய பூங்கணைவேள் பொடி 
யாக விழித்தலென்னே
பங்கய மாமலர்மேல் மது 
வுண்டுவண் தேன்முரலச்
செங்கயல் பாய்வயல்சூழ் திரு 
நாகேச் சரத்தானே.
7.099.7
(இப்பாடல், ஏடெழுதினோராற் பிழைபட்டதும் மிகையாகப் பிரதிகளில் சேர்ந்தது போலும்! இதனை, ஒன்பதாந் திருப்பாடல் கொண்டு உணர்க.) 
1013 வரியர நாணதாக மா 
மேரு வில்லதாக
அரியன முப்புரங்கள் ளவை 
ஆரழல் ஊட்டல்என்னே
விரிதரு மல்லிகையும் மலர்ச் 
சண்பக மும்மளைந்து
திரிதரு வண்டுபண்செய் திரு 
நாகேச் சரத்தானே.
7.099.8
சோலைகளில் திரிகின்ற வண்டுகள், மலரும் நிலையில் உள்ள மல்லிகை மலரிலும், சண்பக மலரிலும் மகரந்தத்தை அளைந்து, இசையைப் பாடுகின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, கீற்றுப் பொருந்திய பாம்பே நாணியாகவும், மாமேரு மலையே வில்லாகவும் கொண்டு, அரியவான மூன்று ஊர்களை, அரிய தீ உண்ணும்படி செய்ததற்குக் காரணம் யாது? 
1014 அங்கியல் யோகுதனை யழிப் 
பான்சென் றணைந்துமிகப்
பொங்கிய பூங்கணைவேள் பொடி 
யாக விழித்தல்என்னே
பங்கய மாமலர்மேல் மது 
வுண்டுபண் வண்டறையச்
செங்கயல் நின்றுகளுந் திரு 
நாகேச் சரத்தானே.
7.099.9
குளங்களில், தாமரை மலர்களின் மேல் வண்டுகள் தேனை உண்டு இசையைப் பாட, செவ்விய கயல்மீன்கள், நிலைபெற்று நின்று துள்ளுகின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, கயிலையின்கண் செய்த யோகத்தைக் கெடுத்தற்குச் சென்று சேர்ந்து, பெரிதும் சினங்கொண்ட, மலர்க்கணையை உடைய மன்மதன் சாம்பராகும்படி ஒரு கண்ணைத் திறந்ததற்குக் காரணம் யாது? 
1015 குண்டரைக் கூறையின்றித் திரி 
யுஞ்சமண் சாக்கியப்பேய்
மிண்டரைக் கண்டதன்மை விர 
வாக்கிய தென்னைகொலோ
தொண்டிரைத் துவணங்கித் தொழில் 
பூண்டடி யார்பரவும்
தெண்டிரைத் தண்வயல்சூழ் திரு 
நாகேச் சரத்தானே.
7.099.10
அடியார்கள், அடிமைத்தொழில் பூண்டு, ஆரவாரித்து வணங்கித் துதிக்கின்ற, தௌந்த அலைகளையுடைய, குளிர்ந்த வயல்கள்சூழ்ந்த திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, மூர்க்கரும், மனவலிமையுடையவரும் ஆகிய, உடையின்றித் திரியும் சமணரும், புத்தரும் என்னும் பேய்போல்வாரை, அவர் கண்டதே கண்ட தன்மையைப் பொருந்தச் செய்ததற்குக் காரணம் யாது? 
1016 கொங்கணை வண்டரற்றக் குயி 
லும்மயி லும்பயிலும்
தெங்கமழ் பூம்பொழில்சூழ் திரு 
நாகேச் சரத்தானை
வங்க மலிகடல்சூழ் வயல் 
நாவல வூரன்சொன்ன
பங்கமில் பாடல்வல்லா ரவர் 
தம்வினை பற்றறுமே.
7.099.11
மகரந்தத்தை அடைந்த வண்டுகள் ஒலிக்க, குயிலும், மயிலும் பாடுதலையும், ஆடுதலையும் செய்கின்ற, தேனினது மணங் கமழ்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை, மரக்கலங்கள் நிறைந்த கடல்போலச் சூழ்ந்துள்ள வயல்களையுடைய திருநாவலூரானாகிய நம்பியாரூரன் பாடிய, குறையில்லாத இப்பாடல்களைப் பாட வல்லவர்களது வினை பற்றறக் கழியும். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.