LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

விவசாய கடன் தள்ளுபடியில் எந்த ஊழலும் நடைபெறவில்லை : சரத் பவார் !

விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்தில் சுமார் 10,000 கோடிரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக தலைமை கணக்குத் தணிக்கையாளர் துறை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. இதற்கு பதிலளித்து பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் கூறியதாவது, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது என்று மத்திய அரசு முடிவு செய்து. அதற்கான பணத்தை  வங்கிகளுக்கு அனுப்பப்பட்டது. ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கியின் மேற்பார்வையின் கீழ், வங்கிக் கணக்குகள் மற்றும் பயனாளிகளின் பட்டியலை வங்கிகள் தேர்வு செய்தன.  பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் நேரடியாக மாற்றப்பட்டது.  எனவே இதில் எந்தவித முறைகேடும் நடந்திருக்க வாய்ப்பில்லை என அவர் தெரிவித்தார். எனினும், வங்கிகள் தயாரித்த பயனாளிகள் பட்டியலில், தகுதி பெற்ற விவசாயிகளின் பெயர்கள் சேர்க்கப்படாமல் போனதற்கும், தகுதியற்ற விவசாயிகள் சேர்க்கப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. மொத்தமுள்ள 3.7 கோடி வங்கிக் கணக்குகளில், வெறும் 90,576 கணக்குகளை மட்டுமே தலைமை கணக்குத் தணிக்கையாளர் துறை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்ட இவ்வளவு பெரிய திட்டம் குறித்து, சிறிய எண்ணிக்கையிலான பயனாளர்களிடம் ஆய்வு நடத்தி ஊழல் நடந்திருப்பதாக கருதகூடது என அவர் தெரிவித்தார்.

Sharad Pawar No misappropriation of funds in farm debt waiver schemes

Refuting charges of irregularities in the farmer debt waiver scheme, Agriculture Minister Sharad Pawar on Wednesday said the CAG audit findings of shortcomings in the scheme were based on small sample size.

by Swathi   on 07 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.