LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

சிந்துப் பெயர்க்காரணம்

நாலடி என்னும் அளவின் இழிந்தே 
ஒன்றே முக்கால் அடியின் உயர்ந்ததால் 
சிந்தெனும் பெயரைச் செப்பினர் என்க. 
கருத்து : நாலடிப் பாடல் என்னும் அளவினின்று குறைந்ததாகவும், ஒன்றே முக்கால் அடிப்பாடலாகிய குறட்பாவினும் அளவில் உயர்ந்ததாகவும் இருக்கும் பாடல் இரண்டடிப் பாட; அதனால் அவ்விரண்டடிப் பாடலைச் சிந்துப்பாடல் என்று பெயரிட்டு வழங்கினர் என்று சொல்லுவர் என்றறிக. 
விளக்கம் : சிந்துப்பாக்கள் எழுத்தளவால் பெயர் பெற்றிருத்தல் இயலாது. ஏனெனில் எழுத்து எண்ணிக்கையாலும், சீரெண்ணிக்கையாலும், அடிகளுக்குப் பெயரிடுவார்கள். எழுத்தளவு ஒன்றையே கொண்டு பாவகைக்குப் பெயரிடுவதில்லை. 
மூன்று சீர்கள் கொண்ட அடி சிந்தடி எனப்படும். அப்படிப்பட்ட சிந்தடிகளால் ஆன பாடல் சிந்துப்பா எனப் பெயர் பெற்றது* என்பதும் பொருந்தவில்லை. ஏனெனில் குறளடி உடைய பாடலை குறட்பா என்று கூறுவதில்லை; அளவடி உடைய பாடலை அளவுப்பா என்றும் கூறுவதில்லை. 
* கி.வா. ஜகந்நாதன், எஸ் இராமநாதன் ஆகியோர் 
மேலும் மிகக் குறுகிய அடிகளை உடைய கிளிக்கண்ணி கூட யாப்பிலக்கணப்படி நாற்சீரடியால் அமைந்ததாகவே உள்ளது. 
நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி 
(பா.கவி..ப.196)
என்ற அடியில் 4 சீர்கள் உள்ளன.
நெஞ்சு பொறுக்கு தில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் 
(பா.கவி..ப.199)
இந்த நொண்டிச் சிந்தின் அடியில் தனிச்சொல்லைச் சேர்க்காவிட்டாலும், 6 சீர்கள் உள்ளன. (இவ்விரண்டு வரிகளையும் இரண்டு அடிகளாகக் கொண்டு சிலர் மயங்குகின்றனர். இவ்விரண்டு வரிகளும், ஓரடியே. “அஞ்சி அஞ்சிச் சாவார்” என்று தொடங்குவதுதான் அடுத்த அடி)
தாள நடையை அடிபடையாகக் கொண்டு சிந்துப்பாக்களின் சீர்கள் அலகிடப்படுவதால், அந்த அலகீட்டு முறைப்படி, சிந்துப் பாக்களில் சிந்தடியை காணல் அரிது. எனவே சிந்தடியால் ஆன பா ஆதலால் சிந்துப்பா என்று கூறுதல் பொருந்துவதாயில்லை.
மேவும் குறள்சிந் தொடுதிரி பாதிவெண் பாத்திலகம்
மேவும் விருத்தம் சவலைஎன் றேழுமினி அவற்றுள்
தாவும் இலக்கணம் தப்பிடில் ஆங்கவை தம்பெயரால்
பாவும் நிலையுடைப் போலியும் என்றறி பத்தியமே! 
(வீரசோ. யாப்பு.20)
என்று புத்தமித்திரனார் செய்யுள் வகைகளைக் கூறுகிறார். . இவற்றிற்கு இலக்கணம் கூறுகையில்:-
2 அடி 7 சீராய் வருவது குறள்
2 அடி அளவொத்து வருவது சிந்து
3 அடி அளவொத்து வருவது திரிபாதி
4 அடி 15 சீராய் நடுவே தனிச்சொல் பெற்றுவருவது வெண்பா 
என்று விளக்கிச் சொல்கிறார்.
எழுசீர் அடிஇரண் டால்குறள் ஆகும்; இரண்டு அடிஒத்து
அழிசீர் இலாதது சிந்தாம்; அடிமூன்று தம்மில் ஒக்கில்
விழுசீர் இலாத திரிபாதி; நான்கடி மேவிவெண்பாத்
தொழுசீர் பதினைந்த தாய்நடு வேதனிச் சொல்வருமே! 
(வீரசோ. யாப்பு.21)
என்பது வீரசோழியம் இரண்டடி ஒத்து அழிசீர் இலாதது சிந்து என்பதற்கு,
காட்டு : வீசின பம்பரம் ஓய்வதன் முன்நான் 
ஆசை அறவிளை நாடித் திரிவனே (வீரசோ - 3 (33))
ஒன்றே முக்காலடிப் பாடலாகிய குறளுக்கும், மூன்றே முக்காலடிப் பாடலாகிய வெண்பாவுக்கும் இடையில் 2 அடிப்பாடல், 3 அடிப்பாடல் என்று இரண்டு வகைகள் உள்ளன. எனவே குறளைவிட அளவால் நீண்ட இரண்டடிப் பாடலுக்குச் சிந்து என்று பெயர் கொடுத்தார். 3 அடிப்பாடல்லுக்கு வடமொழிக் குறியீடாகிய திரிபாதி என்பதைப் பெயராகக் கொடுத்தார் புத்தமித்திரனார். 
அளவொத்த இரண்டடி ஒரெதுகை பெற்றதாகத் தொடக்க காலத்தில் இருந்த சிந்துப்பாடல் பிற்காலத்தில் பல இயல்புகளில் மாறுதல் பெற்றாலும், அளவொத்த இரண்டடி ஒரெதுகை பெறல் என்ற அடிப்படை இயல்பினை மட்டும் இன்றளவும் பெரும்பாலும் போற்றிப் பாதுக்காத்து வருகிறது.
எனவே சிந்து என்பது இரண்டு சமமான அடிகள் ஓரெதுகை பெற்றுவரும் பாடலென்று பெறப்படுகிறது. ஆகவே மூன்றடியினும் அளவால் குறைந்ததாகவும் ஒன்றே முக்காலடி உள்ள குறளைவிட அளவால் நீண்டதாகவும் உள்ள ஓரெதுகை பெற்ற இரண்டடிப் பாடலே சிந்துப் பாடலாகும் என்பது தெளிவு.

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.