LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஆறாம் திருமுறை-37

6.037.திருவையாறு 
திருத்தாண்டகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர். 
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை. 
2455 ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
அனலாடி ஆரமுதே யென்றேன் நானே
கூரார் மழுவாட் படையொன் றேந்திக்
குறட்பூதப் பல்படையா யென்றேன் நானே
பேரா யிரமுடையா யென்றேன் நானே
பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே
ஆரா அமுதேயென் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.
6.037.1
பகைவருடைய முப்புரங்களை அழித்தவனே! தீயில் கூத்து நிகழ்த்துபவனே! கிட்டுதற்கு அரிய அமுதமே! கூரிய மழுப்படையை ஏந்துபவனே! குட்டையான பல பூதங்களைப் படையாக உடையவனே! ஆயிரம் பெயர் உடையவனே! பிறையைச் சூடும் தலைக்கோலம் உடையவனே! ஆரா அமுதமாம் ஐயாற்றெம் பெருமானே! என்று பலகாலும் வாய்விட்டு அழைத்து மனம் உருகி நைகின்றேன்.
2456 தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்குந்
தீர்த்தா புராணனே யென்றேன் நானே 
மூவா மதிசூடி யென்றேன் நானே 
முதல்வாமுக் கண்ணனே யென்றேன் நானே 
ஏவார் சிலையானே யென்றேன் நானே
இடும்பைக் கடல்நின்றும் ஏற வாங்கி
ஆவாவென் றருள்புரியும் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.
6.037.2
திரிபுரங்களைச் சுட்டுச் சாம்பலாக்கிய தூயோனே! பழையோய்! பிறைசூடி! முதல்வா! முக்கண்ணா! அம்பு பூட்டிய வில்லினனே! துயர்க்கடலில் அடியேன் அழுந்தாமல் எடுத்துக் கரையேற்றி ஐயோ! என்று இரங்கி அருள்புரியும் ஐயாறனே! என்று வாய்விட்டு அழைத்து நான் மனம் உருகி நிற்கின்றேன்.
2457 அஞ்சுண்ண வண்ணனே யென்றேன் நானே
அடியார்கட் காரமுதே யென்றேன் நானே
நஞ்சணி கண்டனே யென்றேன் நானே
நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே
நெஞ்சுணர வுள்புக் கிருந்த போது
நிறையும் அமுதமே யென்றேன் நானே
அஞ்சாதே யாள்வானே ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின்றேனே.
6.037.3
அழகிய நறுமணப் பொடி பூசியவனே! அடியவர்களுக்கு ஆரமுதே! விடம் அணிந்த கழுத்தினை உடையவனே! சான்றோர்கள் ஓதும் நான்கு வேத வடிவினனே! என் மனம் உணருமாறு உள்ளே புகுந்திருக்கும் போதெல்லாம் எனக்கு அமுதம் போன்ற இனியனே! நாங்கள் அஞ்சாதபடி எங்களை ஆட்கொண்ட ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.
2458 தொல்லைத் தொடுகடலே யென்றேன் நானே
துலங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
எல்லை நிறைந்தானே யென்றேன் நானே
ஏழ்நரம்பின் இன்னிசையா யென்றேன் நானே
அல்லற் கடல்புக் கழுந்து வேனை
வாங்கியருள் செய்தா யென்றேன் நானே
எல்லையாம் ஐயாறா என்றேன் நானே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.
6.037.4
பழைய மேல் கடலே! சகர புத்திரர்களால் தோண்டப்பட்ட கீழ்க்கடலே! விளங்கும் இளம் பிறை சூடீ! உலகம் முழுதும் நிறைந்தவனே! ஏழ் நரம்பாலும் எழுப்பப்படும் ஏழிசை யானவனே! துயரக் கடலில் மூழ்கி வருந்தும் என்னை கரைக்குக் கொண்டுவந்து அருள் செய்தவனே! ஐயாற்றை உகந்தருளி உறைவிடமாகக் கொண்டவனே! என்று நான் அரற்றி நைகின்றேன்.
2459 இண்டைச் சடைமுடியா யென்றேன் நானே
இருசுடர் வானத்தா யென்றேன் நானே
தொண்டர் தொழப்படுவா யென்றேன் நானே
துருத்திநெய்த் தானத்தா யென்றேன் நானே
கண்டங் கறுத்தானே யென்றேன் நானே
கனலாகுங் கண்ணானே யென்றேன் நானே
அண்டத்துக் கப்பாலாம் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.
6.037.5
சடையில் முடி மாலை அணிந்தவனே! சூரிய சந்திரர் உலவும் ஆகாய வடிவினனே! அடியவரால் வணங்கப் படுபவனே! துருத்தியிலும் நெயத்தானத்திலும் உறைபவனே! நீல கண்டனே! தீக் கண்ணனே! அண்டங்களையும் கடந்த ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.
2460 பற்றார் புரமெரித்தா யென்றேன் நானே
பசுபதீ பண்டரங்கா வென்றேன் நானே
கற்றார்கள் நாவினா யென்றேன் நானே
கடுவிடை யொன்றூர்தியா யென்றேன் நானே
பற்றானார் நெஞ்சுளா யென்றேன் நானே
பார்த்தர்க் கருள்செய்தா யென்றேன் நானே
அற்றார்க் கருள்செய்யும் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.
6.037.6
பகைவர் திரிபுரத்தை எரித்தவனே! ஆன்மாக்களுக்குத் தலைவனே! பண்டரங்கக் கூத்து ஆடுபவனே! அனுபவப் பொருளை ஞானதேசிகர் பால் அறிந்த சான்றோர்களின் நாவில் இருப்பவனே! விரைந்து செல்லும் காளை வாகனனே! உன்னையே பற்றுக் கோடாக உடையவரின் நெஞ்சினை உறைவிடமாகக் கொண்டவனே! அருச்சுனனுக்கு அருள்செய்தவனே! வேற்றுக் களைகண் இல்லாதவர்களுக்கு அருள் செய்யும் ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.
2461 விண்ணோர் தலைவனே யென்றேன் நானே
விளங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
எண்ணா ரெயிலெரித்தா யென்றேன் நானே
ஏகம்பம் மேயானே யென்றேன் நானே
பண்ணார் மறைபாடி யென்றேன் நானே
பசுபதீ பால்நீற்றா யென்றேன் நானே
அண்ணாஐ யாறனே யென்றேன் நானே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.
6.037.7
தேவர் தலைவனே! விளங்கும் பிறை சூடியே! பகைவருடைய மும்மதிலையும் எரித்தவனே! ஏகம்பத்தில் உறைபவனே! பண் நிறைந்த வேதம் ஓதுபவனே! ஆன்மாக்களின் தலைவனே! வெள்ளிய நீறணிந்தவனே! அண்ணால்! ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.
2462 அவனென்று நானுன்னை யஞ்சா தேனை
அல்லல் அறுப்பானே யென்றேன் நானே
சிவனென்று நானுன்னை யெல்லாஞ் சொல்லச்
செல்வந் தருவானே யென்றேன் நானே
பவனாகி யென்னுள்ளத் துள்ளே நின்று
பண்டை வினையறுப்பா யென்றேன் நானே
அவனென்றே யாதியே ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.
6.037.8
வீணன் என்று சொல்லுமாறு, உன்னை அஞ்சாது தீய வழியில் சென்று வருந்திய என்னுடைய துன்பங்களைப் போக்கியவனே! இன்பத்துக்குக் காரணன் என்று நான் உன் பெருமை எல்லாம் சொல்ல எனக்கு உன் திருவருட் செல்வத்தை வழங்குகின்றவனே! என் உள்ளத்துள்ளே விளங்கித் தோன்றுபவனாய் இருந்து என் பழைய ஊழ்வினையை நீக்குபவனே! ஆதியே! ஐயாற்றுப் பெருமானே! நீயே யாவுமாய் எங்குமாய் நிற்கும் அவன் எனப்படும் பரம் பொருள் என்று நான் அரற்றி நைகின்றேன்.
2463 கச்சியே கம்பனே யென்றேன் நானே
கயிலாயா காரோணா என்றேன் நானே
நிச்சன் மணாளனே யென்றேன் நானே
நினைப்பார் மனத்துளா யென்றேன் நானே
உச்சம்போ தேறேறீ யென்றேன் நானே
உள்குவா ருள்ளத்தா யென்றேன் நானே
அச்சம் பிணிதீர்க்கும் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின்றேனே.
6.037.9
கச்சியில் ஏகம்பத்து உறைபவனே! கயிலாயனே! குடந்தை நாகைக் காரோணனே! நித்திய கல்யாணனே! விரும்பி நினைப்பவர் மனத்து உள்ளவனே! நண்பகலில் காளையை இவர்ந்து உலவுபவனே! தியானம் செய்பவர் மனத்தை உறைவிடமாகக் கொள்பவனே! அச்சம், நோய் இவற்றைப் போக்கும் ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.
2464 வில்லாடி வேடனே யென்றேன் நானே
வெண்ணீறு மெய்க்கணிந்தா யென்றேன் நானே
சொல்லாய சூழலா யென்றேன் நானே
சுலாவாய தொல்நெறியே யென்றேன் நானே
எல்லாமா யென்னுயிரே யென்றேன் நானே
இலங்கையர்கோன் தோளிறுத்தா யென்றேன் நானே
அல்லா வினைதீர்க்கும் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.
6.037.10
வில்லைச் செலுத்தும் வேடர் வடிவில் தோன்றியவனே! திருமேனியில் வெண்ணீறு அணிந்தவனே! வேதங்கள் ஓதப்படும் இடங்களில் உள்ளவனே! எங்கும் பரவிய நல்லவர்கள் பின்பற்றும் நன்னெறி ஆகியவனே! எனக்கு எல்லாச் செல்வங்களாகவும் உயிராகவும் இருப்பவனே! இராவணனுடைய தோள்களை நெரித்தவனே! உன்னைச் சார்தற்கு இடையூறாக இருக்கும் தீவினையைப் போக்கும் ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.

by C.Malarvizhi   on 21 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.