LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

காலை உணவை தவிர்த்தாலும் ! இரவு உணவை தாமதமாக சாப்பிட்டாலும் இதயக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்குமாம் !

காலை உணவை தவிர்ப்பது, இரவில் தாமதமாக உண்பது ஆகியவற்றால், இதயக் கோளாறுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அந்த பல்கலை கழகத்தின் ஊட்டச்சத்து துறை நிபுணர் எரிக் ரிம் கூறியதாவது, புகைப் பிடித்தல், உடற்பயிற்சி இல்லாமை, மதுப் பழக்கம், உணவுக் கட்டுப்பாடு இன்மை போன்றவற்றால் மட்டும் இதயக் கோளாறுகள் ஏற்படாது. காலை உணவை தவிர்ப்பது, இரவில் தாமதமாக உண்பது போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளினாலும், இதயக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 27 ஆயிரம் ஆண்கள் கலந்து கொண்டனர். 16 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த ஆய்வில் 1,500 ஆண்களுக்கு முதல்முறையாக இதயக் கோளாறுகள் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு முடிவில், காலை உணவை தவிர்த்தாலோ அல்லது இரவில் நீண்ட நேரத்திற்குப் பின் சாப்பிட்டாலோ அது, நம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி, இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுத்துகிறது இதனால் மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

by Swathi   on 23 Jul 2013  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.