LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

சாக்ரட்டீஸ்

உன் அன்பின் தன்மைக்கு ஏற்றப்படி , உன்

செயல்கள் இருக்கும் . உன் செயல்களுக்கு

ஏற்றப்படி , உன் வாழ்க்கை இருக்கும் .


சாக்ரட்டீஸ் (Sacrates) கி . மு . 5 ஆம் நூற்றாண்டில் ( கி . மு 470-399) வாழ்ந்த ஒரு கிரேக்க தத்துவஞானி . இவர் ஏதென்ஸ் நகரில் பிறந்தார் . உலகின் முதல் தத்துவஞானி என்று சாக்ரட்டீஸ் போற்றப்படுகிறார் . கடவுள் என்பவர் யார் ? என்கிற கேள்வியை மதவாதிகளை நோக்கிக் கேட்டவர் . அதனால் இவரை உலகின் முதல் பகுத்தறிவாளர் என்கின்றனர் . எதையும் கேள்விகள் கேட்டே உண்மையை அறிய வேண்டும் என்பதே இவரின் குறிக்கோளாக இருந்தது . பொது இடங்களில் மக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் பகுத்தறிவு கருத்துகளை பரப்புவதில் அதிக நேரங்களை செலவிட்டார் . மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அவர்களிடமே கேள்வி மேல் கேள்வி கேட்டு அதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்தார் .

சாக்ரட்டீஸின் எழுத்துகளும் , சொற்பொழிவும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது . மூடக் கொள்கைகளில் மூழ்கி இருந்த இளைஞர்களை சிந்திக்கத் தூண்டி அதற்கு எதிராக செயல்படச் செய்தார் . இளைஞர்களைக் கெடுக்கிறார் , வானத்தையும் , நிலத்தையும் பற்றி ஆராய்கிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது . சாக்ரட்டீஸ் தனது செயலுக்கு மன்னிப்புக் கோராமல் ஒரு கோப்பை விசத்தை சிரித்த முகத்துடன் குடித்து உயிர் துறந்தார் .

by Swathi   on 29 Nov 2015  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
01-Mar-2017 10:52:27 S. abdul ksreem said : Report Abuse
Socrates history
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.