LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- கி.ராஜநாராயணன்

சொல் விளையாட்டு

 

கதை ஆசிரியர்: கி.ரா.
கிராமத்தை ஒட்டிய ஒரு பஸ் நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தேன்.
பள்ளி விடுமுறைநாட்கள் என்பதால் குழந்தைகள் மர நிழலில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணலில் உட்கார்ந்துகொண்டு சொல்விளையாட்டு ஆடிக் கொண்டிருந்தார்கள். கவனிக்காதது போல் கவனித்துக் கொண்டிருந்தேன், காதை அவர்கள் பக்கம் திருப்பி வைத்துக்கொண்டு ஒரு குழந்தை கேட்கிறது.
“போகும் போதும் என் நிழல் முன்னாலேயே வந்தது; வரும்போதும் என் நிழல் முன்னாலேயே வந்தது; ஏம்?”
“எங்கே எங்கே இன்னொரு தபா சொல்லு” என்று குழந்தைகள் கேட்டதும் அதை அப்படியே திருப்பிச்சொன்னது முதல்குழந்தை.
கேட்ட குழந்தைகள் மட்டுமில்லை நானும் யோசித்தேன். புரியவில்லை.
காலவித்தியாசம், அழிப்பாங் கதைகளின் வடிவங்கள் கூட மாறிவிட்டன போல!
இவைகளின் விடைகள் எப்போதும் ஒரு சொல்லாகத்தான் இருக்கும்.
விடுகதை என்று சொல்லப்படும் ஒரு அழிப்பாங்கதை பரவுவதற்கு முன்னால் அதன் விடை அதை உண்டாக்கியவருக்குத்தான் தெரிந்திருக்கும் அல்லது அதைக் கேட்டுத் தெரிந்துகொண்ட முதல்நபருக்குத்தான் தெரிந்திருக்கும். இதன்விடை யாருக்கும் தெரியவில்லை எனக்கு உட்பட!
சரி; அந்தக் குழந்தை என்ன பதில் சொல்லுகிறது பார்ப்போம் என்று காத்திருந்தேன் வந்த பஸ்ஸையும் விட்டுவிட்டு.
தான் போட்ட கதையைத் தானே விடுவித்தது இப்படி:
“காலையில எழுந்திருச்சதும் மேக்காமப் போனேம். சாய்ந்திரம் எழுந்திருச்சி கிழக்காம வந்தேம்,” என்று பதில் சொல்லி நிறுத்தி சிரித்துக்கொண்டது அந்தக் குழந்தை.
இப்போது விடையும் கூட ஒரு அழிப்பாங்கதே போல இருக்கே! என்று தோன்றிது எனக்கு. மற்ற குழந்தைகளும் திகைத்தன. முதல் குழந்தை சிரித்துக்கொண்டே விடையை விளக்கிச் சொன்னது:
“அட இவளுகளே, இதுகூடத் தெரியலையா!
காலையில நாம மேக்காம நடந்துபோனா நம்ம எனலு (நிழல்) நமக்கு முன்னாலெ தானே போவும்?
சாய்ந்திரம் திரும்பவந்தாலும் அந்த நம்ம எணலு நமக்கு முன்னாலெதானெ வரும்?”
பெண் குழந்தைகள் இப்பொ உயரம் மட்டு வளரவில்லை அறிவும் வளந்திருக்கு.
அந்த அழிப்பாங்கதையை என்னுள் சொல்லிப் பார்த்துக்கொண்டேன்.
போகும்போது எந்நிழல் முன்னாலே வந்தது
வரும்போதும் எந்நிழல் முன்னாலே வந்தது;
ஏன்?

         கிராமத்தை ஒட்டிய ஒரு பஸ் நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தேன்.பள்ளி விடுமுறைநாட்கள் என்பதால் குழந்தைகள் மர நிழலில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணலில் உட்கார்ந்துகொண்டு சொல்விளையாட்டு ஆடிக் கொண்டிருந்தார்கள். கவனிக்காதது போல் கவனித்துக் கொண்டிருந்தேன், காதை அவர்கள் பக்கம் திருப்பி வைத்துக்கொண்டு ஒரு குழந்தை கேட்கிறது.“போகும் போதும் என் நிழல் முன்னாலேயே வந்தது; வரும்போதும் என் நிழல் முன்னாலேயே வந்தது; ஏம்?”“எங்கே எங்கே இன்னொரு தபா சொல்லு” என்று குழந்தைகள் கேட்டதும் அதை அப்படியே திருப்பிச்சொன்னது முதல்குழந்தை.கேட்ட குழந்தைகள் மட்டுமில்லை நானும் யோசித்தேன். புரியவில்லை.காலவித்தியாசம், அழிப்பாங் கதைகளின் வடிவங்கள் கூட மாறிவிட்டன போல!இவைகளின் விடைகள் எப்போதும் ஒரு சொல்லாகத்தான் இருக்கும்

 

          விடுகதை என்று சொல்லப்படும் ஒரு அழிப்பாங்கதை பரவுவதற்கு முன்னால் அதன் விடை அதை உண்டாக்கியவருக்குத்தான் தெரிந்திருக்கும் அல்லது அதைக் கேட்டுத் தெரிந்துகொண்ட முதல்நபருக்குத்தான் தெரிந்திருக்கும். இதன்விடை யாருக்கும் தெரியவில்லை எனக்கு உட்பட!சரி; அந்தக் குழந்தை என்ன பதில் சொல்லுகிறது பார்ப்போம் என்று காத்திருந்தேன் வந்த பஸ்ஸையும் விட்டுவிட்டு.தான் போட்ட கதையைத் தானே விடுவித்தது இப்படி:“காலையில எழுந்திருச்சதும் மேக்காமப் போனேம். சாய்ந்திரம் எழுந்திருச்சி கிழக்காம வந்தேம்,” என்று பதில் சொல்லி நிறுத்தி சிரித்துக்கொண்டது அந்தக் குழந்தை.இப்போது விடையும் கூட ஒரு அழிப்பாங்கதே போல இருக்கே! என்று தோன்றிது எனக்கு. மற்ற குழந்தைகளும் திகைத்தன.

 

        முதல் குழந்தை சிரித்துக்கொண்டே விடையை விளக்கிச் சொன்னது:“அட இவளுகளே, இதுகூடத் தெரியலையா!காலையில நாம மேக்காம நடந்துபோனா நம்ம எனலு (நிழல்) நமக்கு முன்னாலெ தானே போவும்?சாய்ந்திரம் திரும்பவந்தாலும் அந்த நம்ம எணலு நமக்கு முன்னாலெதானெ வரும்?”பெண் குழந்தைகள் இப்பொ உயரம் மட்டு வளரவில்லை அறிவும் வளந்திருக்கு.அந்த அழிப்பாங்கதையை என்னுள் சொல்லிப் பார்த்துக்கொண்டேன்.போகும்போது எந்நிழல் முன்னாலே வந்ததுவரும்போதும் எந்நிழல் முன்னாலே வந்தது;ஏன்?

by parthi   on 13 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.