LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF

சோள தோசை

தேவையானவை 


1. சோளம், புழுங்கலரிசி - தலா ஒரு கப் 


2. உளுத்தம் பருப்பு - அரை கப்


3. காய்ந்த மிளகாய் - 3


4. சீரகம், தனியா - தலா ஒரு டீஸ்பூன் 


5. கறிவேப்பிலை - சிறிதளவு 


6. உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை


1. சோளத்தில் தண்ணீர் தெளித்துப் பிசிறி, மிக்ஸி விப்பரில் ஒன்றிரண்டு முறை சுற்றி எடுத்து தண்ணீரில் கழுவினால் தோல் நீங்கிவிடும்.

 

2. தோல் நீங்கிய சோளத்துடன் புழுங்கலரிசியைச் சேர்த்தும், உளுத்தம்பருப்பை தனியாகவும் தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

 

3. சோளம், அரிசி ஊறியவுடன் சுத்தம் செய்து, அதில் கொத்துமல்லி, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைக்கவும்.

 

4. உளுத்தம்பருப்பை தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும்.  

 

5. அரைத்த மாவுகளை ஒன்றாக கலந்து 3 மணி நேரம் புளிக்க வைத்து, தோசைக்கல்லில் ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு தோசைகளாகச் சுட்டு எடுக்கவும்.

by Swathi   on 16 Jul 2014  0 Comments
Tags: Corn Dosa   Sola Dosai   சோள தோசை              
 தொடர்புடையவை-Related Articles
சோள தோசை சோள தோசை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.