LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சூரியசக்தி மின் உற்பத்தித் திட்டம்: யாரிடம் உபகரணங்களை வாங்குவது?- பட்டியல் வெளியிட்டது தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை

தமிழக முதல்வரின் மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டத்தில், அனுமதிக்கப்பட்ட சூரியசக்தி உபகரணம் அமைக்கும் நிறுவனங்களின் பட்டியலை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) வெளியிட்டுள்ளது. 


மரபுசாரா எரிசக்தியான சூரிய சக்தி, காற்றாலை மற்றும் உயிரித் தொழில்நுட்ப மின்சக்தியை அதி கரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் புதிய சூரியசக்தி மின் கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, மேற்கூரை சூரியசக்தி திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் ஒரு கிலோவாட் சூரிய மின்சக்தி திட்டத்துக்கு, மத்திய அரசு 30 சதவீதம் மானியம் வழங்கும். இத்துடன் கூடுதலாக 20 சதவீத மானியத்தை தமிழக அரசு வழங்கும். 


அதாவது, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோவாட் சூரியசக்தி திட்டத்துக்கு, மத்திய அரசு ரூ.30 ஆயிரமும், தமிழக அரசு ரூ.20 ஆயிரமும் மானியமாக வழங்கும். இந்த திட்டத்தின் கீழ், சூரியசக்தி உபகரணங்கள் அமைக்கும் நிறுவனங்களை தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை தேர்ந்தெடுத்துள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியுடன் தகுதியான நிறுவனங்களை எரிசக்தி முகமை தேர்வு செய்து, அதற்கான பட்டியலை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. 


மொத்தம் எட்டு விதமான பிரிவுகளில் இந்த நிறுவனங்களின் பெயர்கள், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு கிலோவாட், இரண்டு கிலோவாட், ஐந்து கிலோவாட் மற்றும் 10 கிலோவாட் ஆகியவற்றுக்கான உபகரணங்களை ஐந்து வருட வாரண்டி மற்றும் ஐந்தாண்டு பராமரிப்புடன் அமைக்கும் நிறுவனங்களின் பட்டியலை, www.teda.in என்ற இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

by Swathi   on 11 Feb 2014  0 Comments
Tags: Soloar Energy   சூரிய சக்தி   சூரிய மின் சக்தி   மின் உற்பத்தி   State Government Policy        
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.