LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 645 - அமைச்சியல்

Next Kural >

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
வேறோரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருந்தால் அறிந்த பிறகே சொல்லக்கருதியதைச் சொல்லவேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
சொல்லைப் பிறிது ஓர்சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்து - தாம் சொல்லக்கருதிய சொல்லைப் பிறிதோர் சொல்லால் வெல்ல வல்லதொரு சொல் இல்லாமை அறிந்து; அச்சொல்லைச் சொல்லுக - பின் அச்சொல்லைச் சொல்லுக. (பிறிதோர் சொல் - மாற்றாரது மறுதலைச்சொல். வெல்லுதல் - குணங்களான் மிகுதல், அதுவே வெல்லச் சொல்லுக என்பதாம். இனிப் 'பிறிதோர் சொல்', 'வெல்லும் சொல்' எனச் செவ்வெண்ணாக்கி, ஒத்த சொல்லும் மிக்க சொல்லும் உளவாகாமல் சொல்லுக என்று உரைப்பாரும் உளர். இது சொற்பொருட் பின்வரும் நிலை.)
மணக்குடவர் உரை:
சொல்லைச் சொல்லுக; தான் சொல்ல நினைத்த அச்சொல்லைப் பிறிதொரு சொல்லாய் வெல்லுஞ் சொல் இல்லை யாதலை யறிந்து.
தேவநேயப் பாவாணர் உரை:
சொல்லைப் பிறிது ஓர் சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்து - தாம் சொல்லக் கருதிய சொல்லை வெல்லக்கூடிய வேறொரு சொல்லில்லாமை யறிந்து; அச்சொல்லைச் சொல்லுக - பின்பு அச்சொல்லைச் சொல்லுக. 'பிறிதோர் சொல்' பகைவரின் மறுப்புச்சொல். சொல் என்பது தனிச்சொல்லிற்கும் கூற்றிற்கும் பொதுவாம். வெல்லுதல் உண்மை யுணர்த்துவதிலும் ஏதுக்கள் கூடிய ஏரணவலிமையிலும் மிகுந்து எதிரிகள் கூற்றைப் பொருளற்ற தெனக்காட்டுதல். இதில் வந்துள்ளது சொற்பொருட் பின்வருநிலையணி. இனி , பிறிதோர் சொல்லும் வெல்லுஞ்சொல்லும் என இரண்டாகக் கொண்டு. "ஒத்தசொல்லும் மிக்க சொல்லு முளவாகாமற் சொல்லுக." என்றுரைப்பதுபொருந்தாதாம்
கலைஞர் உரை:
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக.
Translation
Speak out your speech, when once 'tis past dispute That none can utter speech that shall your speech refute.
Explanation
Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own.
Transliteration
Solluka Sollaip Piridhorsol Achchollai Vellunjol Inmai Arindhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >