LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஐஞ்சிறு காப்பியங்கள்

சூளாமணி பகுதி -3

 

6.தூதுவிடு சருக்கம்
பொழிலிலுள்ள மரங்கள், மகிழ், தேமா, சுரபுன்னை, புன்கு முதலியன
மருவினியன மதுவிரிவன மலரணிவன வகுளம்
திருமருவிய செழுநிழலன செங்குழையன தேமா
வரிமருவிய மதுகரமுண மணம்விரிவன நாகம்
பொரிவிரிவன புதுமலரென புன்குதிர்வன புறனே 425
சந்தனம் சண்பகம் குரா அசோகம் ஆகிய மரங்கள்
நிழனகுவன நிமிர்தழையன நிறைகுளிர்வன சாந்தம்
எழினகுவன விளமலரென வெழுசண்பக நிகரம்
குழனகுவன மதுகரநிரை குடைவனபல குரவம்
அழனகுவன வலர்நெரிதர வசை நிலையவ சோகம் 426
இரதம் இருப்பை தாழை புன்னை ஆகியவை
எழுதுருவின வெழுதளிரென விணரணிவன விரதம்
இழுதுருவின கொழுமலரிடை யெழில்பொலிவன மதுகம்
கழுதுருவின கஞலிலையன கழிமடலின் கைதை
பொழுதுருவின வணிபொழிலின பொழி தளிரென புன்னை 427
மல்லிகை முல்லை முதலிய கொடி வகைகளின் மாண்பு
வளர்கொடியன மணம்விரிவன மல்லிகையொடு மெளவல்
நளிர்கொடியன நறுவிரையக நறுமலரன நறவம்
குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கொகுடி
ஒளிர்கொடியன வுயர்திரளினோ டொழு கிணரன வோடை 428
கோங்கு முதலியன
குடையவிவன கொழுமலரின் குளிர்களின கோங்கம்
புடையவிழ்வன புதுமலரன புன்னாகமொ டிலவம்
கடியவிழ்வன கமழ் பாதிரி கலிகளிகைய சாகம்
இடையவிழ்வன மலரளவில விதுபொழிலின தியல்பே 429
பொழிலில் வாழும் வண்டு ,புள் முதலியவற்றின் சிறப்பு
மதுமகிழ்வன மலர்குடைவன மணிவண்டொடு தும்பி
குதிமகிழ்வன குவிகுடையன நுகிகோதுபு குயில்கள்
புதுமகிழ்வன பொழிலிடையன புணர்துணையன பூவை
விதிமகிழ்பவர் மதிமகிழ்வுற விரவுற்றன விரிவே 430
மரீசி பூங்காவில் உள்ள பொய்கைக்கரையை அடைதல்
அதுவழகுத கைமகிழ்வுற வலர்தாரவ னடைய
இதுவழகிய திவண்வருகென வெழுபுள்ளொலி யிகவா
விதிவழகுடை விரியிலையிடை வெறிவிரவிய வேரிப்
பொதியவிழ்வன புதுமலரணி பொய்கைக்கரை புக்கான் 431
பொய்கைக்கரை மரீசியை வரவேற்றல்
புணர்கொண்டெழு பொய்கைக்கரை பொரு திவலைகள் சிதறாத்
துணர்கொண்டன கரைமாநனி தூறுமலர்பல தூவா
வணர்கொண்டன மலலுற்றலை வளர்வண்டின மெழுவா
இணர்கொண்டெதி ரெழுதென்றலி னெதிர்கொண்டதவ் விடமே 432
விஞ்சையர் தூதுவனாகிய மரீசி அசோகமரம் ஒன்றைக் காணுதல்
புனல்விரவிய துளிர்பிதிர்வது புரிமுத்தணி மணல்மேல்
மினல்விரவிய சுடர்பொன்னொளிர் மிளிர்வேதிகை மிகையொண்
கனல்விரவிய மணியிடைகன கங்கணியணி திரளின்
அனல்விரவிய வலரணியதொ ரசோகம்மது கண்டான் 433
மரீசி அசோகமரத்தின் நிழலையடைந்ததும், துருமகாந்தன் கல்லிருக்கையைக் காட்ட மரீசி
திகைத்தல்
அதனின்னிழ லவனடைதலு மதுகாவல னாவான்
பொதியின்னவிழ் மலர்சிதறுபு பொலிகென் றுரை புகலா
மதீயின்னொளி வளர்கின்றதொர் மணியின்சிலை காட்ட
இதுவென்னென இதுவென்னென வினையன்பல சொன்னான் 434
வேறு - நிலாநிழற்கல்லில் அமர்ந்திருக்குமாறு துருமகாந்தன் மரீசியை வேண்டிக்கொள்ளுதல்
மினற்கொடி விலங்கிய விலங்கன்மிசை வாழும்
புனற்கொடி மலர்த்தொகை புதைத்தபொலி தாரோய்
நினக்கென வியற்றிய நிலாநிழன் மணிக்கல்
மனக்கினிதி னேறினை மகிழ்ந்திருமி னென்றான் 435
இதுபொழிற்கடவுளுக்காக ஆக்கப் பெற்ற பொன்னிடம் அன்றோ? என்று மரீசி கேட்டல்
அழற்கதி ரியங்கற வலங்கிண ரசோகம்
நிழற்கதிர் மரத்தகைய தாக நினை கில்லேன்
பொழிற்கடவுள் பொன்னிடமி தென்னைபுகு மாறென்
றெழிற்கதிர் விசும்பிடை யிழிந்தவன் மொழிந்தான் 436
துருமாந்தகன் மரீசிக்குப் பதிலுரத்தல்
நிலாவளர் நிழற்கதிர் நிமிர்ந்தொளி துளும்பும்
சிலாதல மிதற்குரிய தெய்வமெனல் வேண்டா
அலாதவ ரிதற்குரிய ரல்லரவ ராவிர்
உலாவிய கழற் றகையி னீரென வுரைத்தான் 437
அங்கத நிமித்திகன் கூறியவற்றைக் கூறத்தொடங்குதல்
என்னவிது வந்தவகை யென்னினிது கேண்மின்
நன்னகரி தற்கிறைவன் முன்னநனி நண்ணித்
தன்னிகரி கந்தவ னங்கத னெனும் பேர்ப்
பொன்னருவி நூல்கெழுபு ரோகித னுரைத்தான் 438
தூதன் வருவான் என்று கூறியதைச் சொல்லுதல்
மின்னவிர் விளங்குசுடர் விஞ்சையுல காளும்
வின்னவி றடக்கைவிறல் வேலொருவன் வேண்டி
மன்னநின் மகற்கொரு மகட்கரும முன்னி
இன்னவ னினைப்பகலு ளீண்டிழியு மென்றான் 439
அச்சுவக்கிரீவனைக் கொல்வான் என்று அங்கத நிமித்திகன் கூறியதாகக் கூறல்
மடங்கலை யடுந்திற னெடுந்தகைதன் மாறாய்
அடங்கல ரடங்கவடு மாழியஃ தாள்வான்
உடங்கவ னுடன்றெரி துளும்பவரும் வந்தால்
நடந்தவ னடுங்கவடு நம்பியிவ னென்றான் 440
தன்னை அரசன் அங்கு இருக்குமாறு அமர்த்தியதைக் கூறுதல்
ஆங்கவன் மொழிந்தபி னடங்கலரை யட்டான்
தேங்கமழ் பொழிற்றிகழ் சிலாதலமி தாக்கி
ஈங்கவ னிழிந்தபி னெழுந்தெதிர்கொ ளென்ன
நீங்கல னிருந்தன னெடுந் தகையி தென்றான் 441
மரீசி தூது வந்து பொழிலில் தங்கியுள்ளமையை யுணர்ந்த அரசன் தூதுவனின் வழிப்பயணத்
துன்பை மாற்றுமாறு நான்கு நங்கையரை அனுப்புதல்
என்றவன் மொழிந்தபி னருந்தன னிருப்பச்
சென்றவன் வழிச் சிரமை தீர்மினென நால்வர்
பொன்றவழ் பொருந்திழை யணங்கினனை யாரை
மின்றவழ் விளங்குகொடி வேந்தனும் விடுத்தான் 442
பயாபதி மன்னன் விடுத்த பாவையர் புட்பமாகரண்டப் பூங்காவை நோக்கிப் புறப்படுதல்
பொன்னவிர் மணிக்கலை சிலம்பொடு புலம்ப
மின்னவிர் மணிக்குழை மிளிர்ந்தொளி துளும்பச்
சின்னமலர் துன்னுகுழ றேறலொடு சோர
அன்னமென வல்லவென வன்னண நடந்தார் 443
நலங்கனி மடந்தையர் நடத்தொறு மிணர்ப்போ
தலங்கலள கக்கொடி யயற்சுடர வோடி
விலங்குபுரு வக்கொடி முரிந்துவெரு வெய்த
மலங்கின விலங்கின மதர்த்தவவர் வாட்கண் 444
அலத்தக மலைத்தன வடித்தல மரற்றும்
கலைத்தலை மலைத்து விரி கின்றகடி யல்குல்
முலைத்தலை முகிழ்த்தொளி துளும்பி யுள முத்தம்
மலைத்தலை மயிற்கண் மருட்டுவர் சாயல் 445
வண்டுகள் ஒலித்தல்
கணங்கெழு கலாவமொளி காலுமக லல்குல்
சுணங்கெழு தடத்துணை முலைசுமை யிடத்தாய்
வணங்கியும் நுணங்கியும் வருந்திய மருங்கிற்
கிணங்குதுணை யாய்ஞிமி றிரங்கின வெழுந்தே 446
இடையின் வருத்தங் கண்டு வண்டுகள் இரங்கியெழுந்தனவென்க
முலைத்தொழில் சிலைத்தொழிலி னாருயிர் முருக்கும்
நிலைத்தொழில் வென்றுள நினைத்தொழுக வின்பக்
கலைத்தொழில்கள் காமனெய் கணைத்தொழில்க ளெல்லாம்
கொலைத்தொழில்கொள் வாட்கணி னகத்தகுறி கண்டீர் 447
துடித்ததுவர் வாயொடுது ளும்புநகை முத்தம்
பொடித்தவியர் நீரொடுபொ லிந்தசுட ரோலை
அடுத்ததில கத்தினொட ணிந்தவள கத்தார்
வடித்தசிறு நோக்கொடுமு கத்தொழில்வ குத்தார் 448
வண்டுகள் மயக்கம்
பூவிரிகு ழற்சிகைம ணிப்பறவை போகா
வாவிகொள கிற்புகையுள் விம்மியவ ரொண்கண்
காவியென வூதுவன கைத்தலம் விலங்க
மேவியிவை காந்தளென வீழமிக நொந்தார் 449
சுரும்பொடு கழன்றுள குழற்றொகை யெழிற்கை
கரும்பொடு கலந்துள களித்தவவர் தீம்பண்
நரம்பொடு நடந்துள விரற்றலை யெயிற்றேர்
அரும்பொடு பொலிந்ததுவர் வாயமிர்த மன்றே 450
கணங்குழை மடந்தையர் கவின்பிற ழிருங்கண்
அணங்குர விலங்குதொ றகம்புலர வாடி
மணங்கம ழலங்கலுடை மைந்தர்த மனந்தாழ்
வணங்கிடை வணங்குதொ றணங்கென வணங்கும் 451
மைந்தர்கள் கலங்கி மெலிதல்
நெய்யலர் குழற்றொகை நெருப்பினடு மென்பார்
மையலர் நெடுங்கணிவை வல்லகொலை யென்பார்
தொய்யலிள மென்முலையி னீர்சுடுதி ராயின்
உய்யல மெனத்தொழுது மைந்தர்க ளுடைந்தார் 452
வேறு
நாம நூற்கலை விச்சை யினன்னெறி யிவைதாம்
தாம நீள்குழற் றளர்நடை யுருவுகொண் டனையார்
வாம மேகலை மடவர லிவர்களை வளர்த்தார்
காம நூலினுக் கிலக்கியங் காட்டிய வளர்த்தார் 453
அம்மாதர்களின் தன்மை
இனிய வீங்கிய விளமுலை யிவர்களை வளர்த்தார்
பனியின் மென்மல ரலர்ந்தன வுவகையிற் பயில்வார்
கனிப வேலிவர் கடல்விளை யமிர் தெனக் கனிவார்
முனிப வேலிவ ரனங்கனைங் கணையென முனிவார் 454
புலவி தானுமோர் கலவியை விளிப்பதோர் புலவி
கலவி தானுமோர் புலவியை விளைப்பதோர் கலவி
குலவுவார் சிலை மதனனைங் கணையொடு குலவி
இலவு வாயுடை யிளையவ ருடையன விவையே 455
மன்னு வார்சிலை மதனனோர் வடிவுகொண் டிலாதான்
தன்னை நாமுமோர் தகைமையிற் றணத்துமென் றிருப்பார்
என்னை பாவமிங் கிவர்களைப் படைத்தன னிதுவால்
பின்னை யாங்கவன் பிறவிக்கு முதல் கண்ட வகையே. 456
வாம மேகலை முதனின்று வயிற்றிடை வளைர்ந்த
சாம லேகைகண் மயிர்நிரை யலதல மீது
காம நீரெரி யகத்து கனன்றெழ நிமிர்ந்த
தூம லேகைகள் பொடித்தன துணை முலை யுறவே 457
சூசுகக் கருமைக்கோர் காரணஞ் சொல்லுதல்
சனங்க டாஞ்சில தவங்களைத் தாங்குது மெனப்போய்
வனங்கள் காப்பவ ருளரென முனிவமற் றன்றேல்
தனங்க டாழ்ந்தவழ் சந்தனக் குழம்பிடை வளர்ந்த
கனங்கொள் வெம்முகங் கறுப்பதென் காரண முரையீர் 458
தூம மென்புகை துழாவிவண் டிடை யிடை துவைக்கும்
தாம வோதியர் தம்முகத் தனபிறர் மனத்த
காம நீள்சிலை கணையொடு குனிவகண் டாலும்
யாமெ மின்னுயி ருடையமென் றிருப்பதிங் கெவனோ 459
மங்கையர் மலர்ப்பொழிலை அடைதல்
என்று மைந்தர்க ளிடருற வெழுதிய கொடிபோற்
சென்று கற்பக வனமன செறிபொழி லடைந்தார்
இன்று காமுகர் படையினை யிடர்பட நடந்த
வென்றி காமனுக் குரைத்துமென் றிரைத்தளி விரைந்த 460
வேறு - பணிப்பெண்கள் கொண்டுவந்த பலவகைப் பொருள்கள்
ஆடைகைத் தலத்தொருத்தி கொண்டதங் கடைப்பைதன்
மாடுகைத் தலத்தொருத்தி கொண்டது மணிக்கலம்
சேடிகைத் தலத்தன செறிமணித் திகழ்வசெங்
கோடிகைத் தலத்தன குளிர்மணிப் பிணையலே 461
மற்றும் பலர் பலபொருள்களைக் கொண்டுசெல்லுதல்
வண்ணச் சந்தங்க ணிறைந்தன மணிச்செப்பு வளர்பூங்
கண்ணிச் சந்தங்க ணிறைந்தன கரண்டகங் கமழ்பூஞ்
சுண்ணச் சந்தங்க ணிறைந்தன சுடர்மணிப் பிரப்போ
டெண்ணச் சந்தங்கள் படச்சுமந் திளையவ ரிசைந்தார் 462
மகளிர் பலரின் வருகையைக் கண்ட மரீசி இது விண்ணுலகமே யென்று வியத்தல்
தகளி வெஞ்சுட ரெனத்திகழ் மணிக்குழை தயங்க
மகளிர் மங்கல வுழைக்கலஞ் சுமந்தவர் பிறரோ
டுகளு மான்பிணை யனையவ ருழைச் செல வொளிர்தார்த்
துகளில் விஞ்சையன் றுணிந்தனன் றுறக்கமீ தெனவே 463
மரீசிக்கு வேண்டுவன புரிதல்
துறக்கம் புக்கவர் பெறுவன விவையெனத் துணியா
வெறிக்கண் விம்மிய விரைவரி தாரவ னிருப்பச்
சிறைக்க ணோக்கமுஞ் சிறுநகைத் தொழில்களுஞ் சுருக்கி
அறைக்கண் மாந்தனுக் கதிதியந் தொழிலினி லமைந்தார் 464
மங்கையர் வழிபாட்டைப் பெறும் மரீசி தேவனைப்போலத் திகழ்தல்
ஆட்டி னார்வெறி கமழ்வன வணிகிளர் நறுநீர்
தீட்டி னார்நறுஞ் சாந்தமுஞ் சிறிதுமெய் கமழச்
சூட்டி னார்சிலர் நறுமல ரறுசுவை யடிசில்
ஊட்டி னாரவ னமரரு ளொருவனொத் தொளிர்ந்தான் 465
மாதர்கள் மாட்சிமையை எண்ணி மரீசி மகிழ்ந்திருத்தல்
வயந்த முன்னிய திலகைகல் லியாணிகை வடிவார்
வியந்த சேனைமென் கமலமா லதையென விளம்பும்
இயங்கு பூங்கொடி யனையவ ரியல்புக ணினையா
வயங்கு தொல்புக ழம்பர சரன்மகிழ்ந் திருந்தான் 466
வேறு - பயாபதி மன்னனுடைய கட்டளைப்படி மரீசியை அழைத்ததற்கு விசய திவிட்டர்கள் புறப்படுதல்
ஆங்கெழிற் பொலிந்தவன் னிருந்தபின் னலங்குதார்
வீங்கெழிற் பொலிந்தானை வேந்தனேவ வீவில்சீர்ப்
பூங்கழற் பொலங் குழைந் திவிட்டனோடு போர்க்கதந்
தாங்கெழிற் பெருங்கையானை சங்க வண்ண னேறினான் 467
யானைமீது விசய திவிட்டர்கள் ஏறிய சிறப்பு
தம்பியோடு ங்கவிசய திவிட்டர்கள் ஏறிய சிறப்பு
பைம்பொ னோடை வீழ்மணிப் பகட்டெருத்த மேறினான்
செம்பொன்மா மலைச்சிகைக் கருங்கொண்மூவி னோடெழூஉம்
வம்பவெண்ணி லாவிங்கு திங்கள்போல மன்னினான் 468
விசய திவிட்டர்களுடன் பலவகைப் படைகள் புறப்படுதல்
ஆர்த்தபல்லி யக்குழா மதித்தகுஞ்ச ரக்குழாம்
தேர்த்தவீரர் தேர்க்குழாந் திசைத்தபல்ச னக்குழாம்
போர்த்தசா மரக்குழாம் புதைத்தவெண் கொடிக்குழாம்
வேர்த்தவேந்தர் பல்குழாம் விரைந்தகூந்தல் மாக்குழாம் 469
விசய திவிட்டர்கள் கண்ட விளங்கிழையார் மயக்கம்
பாடுவார்வ ணங்குவார்ப லாண்டுகூறி வாழ்த்துவார்
ஆடுவாரோ டார்வமாந்த ரன்னரின்ன ராயபின்
சூடுமாலை சோரவுந் தொ டாரமாலை வீழவும்
மாடவாயின் மேலெலாம டந்தைமார்ம யங்கினார் 470
கொண்டலார்ந்த பொன்னொளிக் குழற்கொடிக்கு ழாமனார்
மண்டலந்நி றைந்ததிங்கள் வட்டமொத்த வாண்முகம்
குண்டலங்கொ ழும்பொனோலை யென்றிரண்டு கொண்டணிஇ
வண்டலர்ந்து மாலைதாழ்ந்து மாடவாய்ம றைந்தவே 471
கூடுதும்பி யூடுதோய்கு ழற்றொகைத்து ணர்துதைந்
தோடுமேலெ ருத்திடைக்கு லைந்தகோதை யோடுலாய்
மாடவாயின் மாலைஞால மாடமேறு மாதரார்
ஆடுமஞ்ஞை கோடுகொள்வ தென்னலாவ தாயினார் 472
தொண்டைவாய் மடந்தைமார்கள் சுடிகைவட்ட வாண்முகம்
கொண்டகோல நீரவாய கோடிமாட மேலெலாம்
வண்டுசூழ்ந்த பங்கயம லர்க்குழாமி ணைப்படூஉக்
கெண்டையோடு ந்ன்றலைந்த கேழவாய்க்கி ளர்ந்தவே 473
விசயதிவிட்டர்களை நகரத்து மாதர்கள் காணுதல்
மாலைதாழு மாடவாய் நிலத்தகத்து மங்கைமார்
வேலவாய நெடியகண் விலங்கிநின் றிலங்கலால்
சாலவாயி றாமெலாமொர் தாமரைத் தடத்திடை
நீலமாம லர்க்குழாநி ரந்தலர்ந்த நீரவே 474
சுண்ணமாரி தூவுவார் தொடர்ந்துசேர்ந்து தோழிமார்
வண்ணவார வளைதயங்கு முன்கைமேல்வ ணங்குவார்
நண்ணிநா ணொழிந்துசென்று நம்பிமார்கள் முன்னரே
கண்ணிதம்மி னென்றிரந்து கொண்டுந்ன்று கண்ணுவார் 475
பாடுவார்மு ரன்றபண்ம றந்தொர்வாறு பாடியும்
ஆடுவார்ம றந்தணிம யங்கியர்மை யாடியும்
சூடுவான்றொ டுத்த கோதை சூழ்குழன்ம றந்துகண்
நாடுவாய்நி ழற்கணிந்து நாணுவாரு மாயினார் 476
இட்டவில்லி ரட்டையுமி ரண்டுகெண்டை போல்பவும்
விட்டிலண்க்கு தொண்டையங் கனிப்பிழம்பொ டுள்விராய்ச்
சுட்டிசூட்ட ணிந்துசூளி மைமணிசு டர்ந்துனீள்
பட்டம்வேய்ந்த வட்டமல்ல தில்லைநல்ல பாங்கெலாம் 477
அலத்தகக்கு ழம்புதம்ம டித்தலத்தொர் பாகமா
நிலத்தலத்தொர் பாகமா நீடுவாயில் கூடுவார்
கலைத்தலைத்தொ டுத்தகோவை கண்ணெகிழ்ந்து சிந்தலான்
மலைத்தலைத்த ழற்சிதர்ந்த போன்றமாட வாயெலாம் 478
பாடகந்து ளங்கவும்பு சும்பொனோலை மின்னவும்
சூலகந்து ளும்பவஞ் சு ரும்புகழ்ந்து பாடவும்
ஊடகங்க சிந்தொசிந்து நின்றுசென்று வந்துலாய்
நாடகங்க ணன்னர்க்க ணங்கைமார்ந விற்றினார் 479
மாதர்கள் மயக்கம்
மாலையால்வி ளங்கியும்பொன் வாசச்சுண்ணம் வீசியும்
சாலவாயி லாறுசந்த னக்குழம்பு சிந்தியும்
நீலவாணெ டுங்கணார்நி ரந்து நெஞ்சு தாழொரீஇ
ஞாலமாளு நம்பிமாரின் மாலுமாகி நண்ணினார் 480
வேய்மறிந்த தோள்விளர்த்து வெவ்வுயிர்ப்பொ டுள்விராய்த்
தோமறிந்த சூழ்துகின்னெ கிழ்ந்துடுத்து வீழ்ந்தசைஇப்
பூமறிந்த தேங்குழன் முடிப்பொதிந்து வீழ்த்துலாய்த்
தாமறிந்த முல்லைவாய தாதுகுத்து டங்கினார் 481
விசயதிவிட்டர்களுடைய படை பொழிலை அடைதல்
கொங்குவார்ம லர்த்தடத்த மர்ந்தகோதை மார்களோ
டங்கராகம் வீற்றிருந்த ணிந்தவார மாகுலாய்
மங்கைமார்கள் கண்ணும்வண்டு மாலையும னங்களும்
தங்குமார்பி னம்பிமார்க டானைசோலை சார்ந்ததே 482
விசயதிவிட்டர்கள் பொழிலை அடைதல்
மானளாய நோக்கினார்ம னங்கலந்து பின்செல
வானளாய சோலைவாயின் மன்னவீரர் துன்னலலும்
கானளாய போதணிந்து காவிவிம்மு கள்ளளைஇத்
தேனளாவு வண்டுகொண்டு தெறல்சென் றெழுந்ததே 483
விசயதிவிட்டர்கள் வேழத்தினின்று இறங்குதல்
செம்முகப்ப சும்பொ னோடை வெண்மருப்பி ணைக்கரு
வெம்முகத்து வீழ்கடாத்து வேழநின்றி ழிந்தபின்
கைம்முகத்து வேலிலங்கு காமர் தாங்கொ லென்றுசென்
றம்முகத்து தும்பிவண்டு தேனொடாடி யார்த்தவே 484
பொழிலின் காட்சி
தாதுநின்ற தேறனீர் தளித்திவற்றின் மேலளி
கோதுகின்ற போதுகொண்டு சிந்திநம்பி மார்களை
மாதுநின்ற மாதவிக் கொடிகடந் தளிர்க்கையால்
போதுகென்றி டங்கள்காட்டு கின்றபோற்பொ லிந்தவே 485
பூங்காவின் பொதுக்காட்சி
போதுலாய வேரிமாரிஇ சாரலாய்ப்பொ ழிந்துதேன்
கோதலா னெரிந்துதாது கால்குடைந்து கொண்டுறீஇ
மாதுலாய வண்டிரைத்து மங்குல்கொண்டு கண்மறைத்
தேதிலார்க்கி யங்கலாவ தன்றுசோலை வண்ணமே 486
தென்றல் வீசுதல்
போதுலாய பூம்பொதும்பர் மேலதென்றல் வீசலால்
தாதுலாய போதணிந்து தாழ்ந்துதாம வார்குழல்
மாதரார்கள் போலவல்லி மார்புபுல்லி மைந்தரைக்
காதலால்வ ளைப்பபோன்று காவினுட்க லந்தவே 487
விசயதிவிட்டர்கள் அசோகமரத்தின் இடத்தை அடைதல்
புல்லிவண்ட மர்ந்துகங்கு பூந்தழைப்பொ தும்பிடை
மல்லிகைக்கொ டிக்கலந்து மெளவல்சூட வெளவுநீர்
வல்லிமண்ட பங்கள்சென்று மாதவிக் கொழுந்தணி
அல்லிமண்ட பத்தயல சோகமாங்க ணெய்தினார் 488
விஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டர்களை வணங்குதல்
பஞ்சிலங்கு மல்குலார்ப லாண்டுகூற வாண்டுபோய்
மஞ்சிலங்க சோகநீழன் மன்னவீரர் துன்னலும்
விஞ்சையன்ம கிழ்ந்தெழுந்து வென்றிவீரர் தங்களுக்
கஞ்சலித்த டக்கைகூப்பி யார்வமிக்கி றைஞ்சினான் 489
நீர் எம்மை வணங்குவது ஏன்? என்று விசயன் மரீசியைக் கேட்டல்
ஆங்கவனி றைஞ்சலு மலர்ந்ததிங்க ணீளொளிப்
பூங்கழற்பொ லங்குழைப்பொ லிந்திலங்கு தாரினான்
நீங்கருங்கு குணத்தினீவிர் நீடுகுரவ ராதலில்
ஈங்கெமக்கு நீர்பணிந்த தென்னையென்றி யம்பினான் 490
விசயதிவிட்டர்களை மரீசி வியந்து நோக்குதல்
பானிறக்க திர்நகைப ரந்தசோதி யானையும்
நீனிறக்க ருங்கட னிகர்க்குமேனி யானையும்
வானெறிக்கண் வந்தவன்ம கிழ்ந்துகண்ம லர்ந்துதன்
நூனெறிக்கண் மிக்கநீர்மை யொக்கநின்று நோக்கினான் 491
மேலும் விசயதிவிட்டர்களை நன்கு பார்த்தல்
வேல்கொடானை வீரர்தம்மை விஞ்சையன் வியந்துநீள்
நூல்கொள்சிந்தை கண்கடாவ நோக்கிநோக்கி யார்காலன்
கால்கள்கொண்டு கண்ணிகாறு முண்மகிழ்ந்து கண்டுகண்
மால்கொள்சிந்தை யார்கள்போல மற்றுமற்று நோக்கினான் 492
மரீசி விசயதிவிட்டர்களைப் பார்த்துப் பேசத் தொடங்குதல்
வேரிமாலை விம்மவும்வி ளங்குபூண்டு ளும்பவுந்
தாரொடார மின்னவுந்த யங்குசோதி கண்கொள
வாரநோக்க கில்லனன்ன னரசநம்பி மார்களைச்
சாரவாங்கொர் கற்றலத்தி ருந்துகான்வி ளம்பினான் 493
விஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டரின் மேம்பாட்டைக் கூறுதல்
செம்பொன்வான கட்டிழிந்து தெய்வ யானை யுண்மறைஇ
வம்புநீர்வ ரைப்பகம்வ ணக்கவந்த மாண்புடை
நம்பிமீர்க ணுங்கள்பாத நண்ணிநின் றி றைஞ்சுவார்
அம்பொன்மாலை மார்பினீர ருந்தவஞ்செய் தார்களே 494
திங்கள்வெண் கதிர்ச்சுடர்த் திலதவட்ட மென்றிரண்
டிங்கண்மா லுயிர்க்கெலாமெ ளிய்யவென்று தோன்றலும்
தங்கள்சோதி சாரலாவ வல்லவன்ன நீரவால்
எங்கண்முன்னை நுடங்கடன்மை யென்றுபின்னை யேத்தினான் 495
தந்தையைக் காணச்செல்வோம் என்று விசயதிவிட்டர்கள் மரீசியை அழைத்தல்
இமைகள்விட்ட நோக்கமேற வின்னபோல்வ சொல்லலு
மமைகமாற்றம் நூம்மை யெங்க ளடிகள்காண வேகுவாம்
சுமைகொண்மாலை தொடுகளிற்றெ ருத்தமேறு கென்றனர்
சிமைகொடேவர் போலநின்று திகழுகின்ற சோதியார் 496
மரீசியும் விசயதிவிட்டர்களும் யானைகள்மீது தனித்தனியே அரண்மனைக்குப் புறப்படுதல்
அம்பொன்மாலை கண் கவர்ந்த லர்ந்தசெல்வ வெள்ளமேய்
வெம்புமால்க ளிற்றெருத்தம் விஞ்சையாளன் மேல்கொளப்
பைம்பொன்மாலை வார்மதப்ப ரூஉக்கை யீரு வாக்கண்மீச்
செம்பொன்மாலை மார்பசேர்ந்து தேவரிற்று ளும்பினார் 497
மகளிர் எதிர்கொள்ள நகரஞ் சேர்தல்
கதிர்நகைக் கபாட வாயிற் கதலிகைக் கனக நெற்றி
மதிநக வுரிஞ்சு கோட்டு மாளிகை நிரைத்த வீதிப்
புதுநக ரிழைத்து முத்து பொலங்கலத் தொகையும் பூவும்
எதிர்நகைத் துகைத்து மாத ரெதிர்கொள நகரஞ் சேர்ந்தார் 498
மருசியும் விசயதிவிட்டரும் சேர்ந்திருந்ததன் வருணனை
விரைக்கதி ரலங்கற் செங்கேழ் விண்ணியங் கொருவ னோடும்
வரைக்கெதிர்ந் திலங்கு மார்பின் மன்னவ குமரச் செல்வர்
எரிக்கதி ரேற்றைக் கால மெழுநிலாப் பருவ மேக
நிரைத்தெழு மிருது மன்று நிரந்ததோர் சவிய ரானார் 499
தெருவிற் செல்லுதல்
வார்கலந் திலங்கு கொம்மை வனமுலை மகளி ரிட்ட
ஏர்கலந் தெழுந்த தூம வியன்புகை கழுமி நான
நீர்கலந் துகுத்த மாலை நிறமதுத் திவலை சிந்தக்
கார்கலந் திருண்ட போலுங் கண்ணகன் தெருவுட் சென்றார் 500
அரண்மனையின் வாயிலை அடைதல்
தெளிர்முத்த மணலுஞ் செம்பொற் சுண்ணமுஞ் சிதர்ந்து தீந்தேன்
தளிர்முத்த மலரும் போதும் சாந்தமு வண்டார்
ஒளிர்முத்த முறுவ லார்த முழைக்கலங் கலந்து மாலைக்
குளிர்முத்த நிழற்றுங் கோயிற் பெருங்கடை குறுகச் சென்றார் 501
பயாபதி மன்னன் பொற்கூடத்தில் அமருதல்
மற்றவை ரடைந்த போழ்கின் வாயிலோ ருணர்த்தக் கேட்டு
கொற்றவ னருவி தூங்குங் குளிர்மணிக் குன்றம் போல
முற்றிநின் றிலங்குஞ் செம்பொன் முடிமிசை முத்த மாலைக்
கற்றைகள் தவழச் சென்றோர் கனககூ டத்தி ருந்தான் 502
பயாபதி மன்னன் மூவரையும் அமரச் செய்தல்
மன்னவ குமர ரோடும் விஞ்சையன் மகிழ்ந்து வையத்
தின்னருள் புரிந்த வேந்த னிடையறிந் தினிதி னெய்திக்
கன்னவில் தோளி னான்றன் கழலடி தொழுது நின்றான்
அன்னவர்க் கிருக்கைத் தான மரசனு மருளிச் செய்தான் 503
பயாபதி அம்மன்னன் வீற்றிருக்கும் காட்சி
வீரியக் குமர ரொடும் விஞ்சையஞ் செல்வ னோடும்
காரியக் கிழவர் சூழக் கவின்றுகண் குளிரத் தோன்றி
ஆரியன் னலர்ந்த சோதி யருங்கலப் பீட நெற்றிக்
தாரகை யணிந்து தோன்றுஞ் சந்திர சவிய னானன் 504
மன்னவன் விஞ்சையனுக்கு முகமன் கூறியிருத்தல்
அலகையில் தானை வேந்த னம்பர சரனை நோக்கி
உலகுப சார மாற்ற முரைத்தலுக் குரிய கூறி
விலகிய கதிர வாகி விளங்கொளிக் கடகக் கையான்
மலரகங் கழுமப் போந்து மனமகிழ்ந் திருந்த போழ்தின் 505
மருசி கொண்டுவந்த திருமுகத்தை மதிவரன் வாங்குதல்
விஞ்சைய னெழுந்து தங்கோன் வெள்ளிவே தண்ட நோக்கி
அஞ்சலித் தடக்கை கூப்பி யரக்கிலச் சினையின் வைத்த
எஞ்சலி லோலை காட்ட விறைமகன் குறிப்பு நோக்கி
வஞ்சமில் வயங்கு கேள்வி மதிரவன் கரத்தில் வாங்கி 506
மதிவரன் திருமுகவோலையைப் படித்தல்
நிகரிகந் தழகி தாகி நெரிவடுப் படாத வேழப்
புகர்முகப் பொறிய தாய புகழ்ந்தசொல் லகத்துப் போகா
மகரவாய் மணிகட் செப்பின் மசிகலந் தெழுதப் பட்ட
பகரரும் பதங்கள் நோக்கிப் பயின்று பின் வாசிக் கின்றான் 507
இதுவும் அடுத்த பாடலும் திருமுகச் செய்தி
போதனத் திறைவன் காண்க விரதநூ புரத்தை யாளும்
காதுவேன் மன்ன னோலை கழலவன் றனக்கு நாளும்
ஆதிய வடிசி லொண்கே ழஞ்சன முள்ளிட் டெல்லாம்
தீதுதீர் காப்புப் பெற்றுச் செல்கென விடுத்த தன்றே 508
அல்லதூஉங் கரும தலங்குதா ரிவுளித் திண்டேர்
வல்லக னிளைய நம்பிக் குரியளா வழங்கப் பட்டாள்
மல்லக மார்பி னன்றான் மருமக ளிவளைக் கூவி
வல்லிதிற் கொடுக்க மன்னன் வாழ்கதன் கண்ணி மாதோ 509
திருமுகச்செய்திகேட்ட பயாபதிமன்னன் யாதுங் கூறாதிருத்தல்
என்றவ னோலைவாசித் திருந்தன னிறைவன் கேட்டு
வென்றியம் பெருமை விச்சா தரரென்பா ரெம்மின் மிக்கார்
இன்றிவன் விடுத்த திவ்வா றென்கொலோ வென்று சிந்தித்
தொன்றுமற் றுரைக்க மாட்டா திருந்தன னுரங்கொ டோ ளான் 510
மருசி சினத்துடன் கூறத்தொடங்குதல்
தீட்டருந் திலதக் கண்ணிச் செறிகழ லரசர் கோமான்
மீட்டுரை கொடாது சால விம்மலோ டிருப்ப நோக்கி
வாட்டரும் பெருமை யெங்கோ னோலையை மதியா வாறென்
றோட்டருங் கதத்த னாகிக்கேசர னுரைக்க லுற்றான் 511
மருசி சினந்து கூறுவன
முன்னமோர் கருமம் வேண்டி மொழிபவேல் மனிதர் தம்மால்
என்னவ ரேனு மாக விகழ்ந்திடப் படுப போலாம்
அன்னதே யுலக வார்த்தை யாவதின் றறியும் வண்ணம்
மின்னவின் றிலங்கும் வேலோய் நின்னுழை விளங்கிற் றன்றே 512
பூவிரி யுருவக் கண்ணிப் பொலங்குழை யிலங்கு சோதித்
தேவரே யெனினுந் தோறச் சில்பகல் செல்ப வாயில்
ஏவரே போல நோக்கி யிகழ்ந்துரைத் தெழுவ தன்றே
மாவிரி தானை மன்னா மனிதர தியற்கை யென்றான் 513
வரைமலி வயங்கு தோளாய் வியாதியான் மயங்கி னார்க்குச்
சுரைமலி யமிர்தத் தீம்பால் சுவைதெரிந் துண்ண லாமோ
விரைமலி விளங்கு பைந்தார் விஞ்சையர் செல்வந் தானும்
நுரைமலி பொள்ளல் யாக்கை மனித்தர்க்கு நுகர லாமோ 514
அறவிய மனத்த ரன்றி யழுங்குத லியல்பி னார்க்குப்
பிறவியை யறுக்குங் காட்சிப் பெருநிலை யெய்த லாமோ
வெறிமயங் குருவக் கண்ணி விஞ்சையர் விளங்கு தானம்
மறவியின் மயங்கி வாழும் மனித்தர்க்கு நிகழ்த்த லாமோ 515
அருங்கடி கமழுந் தாரை யழிமதக் களிற்றி னாற்றல்
மரங்கெடத் தின்று வாழுங் களபக்கு மதிக்க லாமோ
இரங்கிடு சிறுபுன் வாழ்க்கை யிந்நிலத் தவர்கட் கென்றும்
வரங்கிடந் தெய்த லாமோ மற்றெமர் பெருமை மன்னா 516
உள்ளிய மரங்கொள் சோலை மண்மிசை யுறையு மாந்தர்
ஒள்ளிய ரேனுந் தக்க துணர்பவ ரில்லை போலாம்
வெள்ளியஞ் சிலம்பி னென்கோன் விடுத்தே யேது வாக
எள்ளியோ ருரையு மீயா திருந்தனை யிறைவ வென்றான் 517
பயாபதி மன்னன் பதில் உரைத்தல்
ஆங்கவ னுரைப்பக் கேட்டே யம்பர சரனை நோக்கித்
தேங்கம ழலங்கன் மார்ப சிவந்துரை யாடல் வேண்டா
ஓங்கிய வோலை மாற்றக் குரியவா றுரைக்க மாட்டா
தீங்கியா னிருந்த தென்றா னெரிசுடர் வயிரப் பூணான் 518
வெஞ்சுடர் தெறுதீ விச்சா தரரென்பார் மிக்க நீரார்
செஞ்சுடர்த் திலதக் கண்ணித் தேவரே தெரியுங் காலை
மஞ்சிடை மண்ணுள் வாழும் மக்களுக் கவர்க டம்மோ
டெஞ்சிய தொடர்ச்சி இன்ப மெய்துதற் கரிது மாதோ 519
ஈட்டிய வூன்செய் யாக்கை யெம்முழை யின்ன வாறு
வாட்டமில் வயங்கு கண்ணி மணிமுடி மன்ன னோலை
காட்டிநீ யுரைத்த வெல்லாங் கனவெனக் கருதி னல்லான்
மீட்டது மெய்ம்மை யாக வியந்துரை விரிக்க லாமோ 520
இன்னவ னின்ன நீரா னின்னவே யெய்து கென்று
முன்னவன் செய்த மொய்ம்பின் வினைகளே முயல்வ தல்லால்
பின்னவன் பிறந்து தன்னாற் பெறுதலுக் குரிய வாய
துன்னுவ தென்றுக் கான்று துணியுமோ சொல்ல வென்றான் 521
மெய்ப்புடை தெரிந்து மேலை விழுத்தவம் முயன்று நோற்றார்க்
கொப்புடைத் துங்கள் சேரி யுயர்நிலைச் செல்வ மெல்லாம்
எப்படி முயறு மேனு மெங்களுக் கெய்த லாகா
தப்படி நீயு முன்னர் மொழிந்தனை யன்றே யென்றான் 522
விஞ்சைச் சாரணான் நாணிச் சினம் மறுதல்
இறைவனாங் குரைத்த சொற்கேட் டென்னைபா வம்பொ ருந்தாக்
கறையவா மொழிகள் சொன்னேன் காவலன் கருதிற் றோரேன்
பொறையினாற் பெரியன் பூபன் சிறியன்யா னென்று நாணி
அறிவினாற் பெரிய நீரா னவிந்தன கதத்த னானான் 523
பயாபதியின் ஐயத்தை மருசி அகற்றுதற்கு உரைக்கத் தொடங்கல்
கிளர்ந்தொளி துளும்பும் மேனிக் கேசர ரோடு மண்மேல்
வளர்ந்தொளி திவளும் பூணோர் மணவினை முயங்க லில்லென்
றளந்தறி வரிய சீரோற் கையமீ தகற்று கென்றாங்
குளர்ந்துன னுணர்வி னூக்கி யுரைக்கிய வெடுத்துக் கூறும் 524
விஞ்சையரும் மனிதரே என்பதை மருசி விளக்கிக் கூறுதல்
மஞ்சிவர் மணங்கொள் சோலை மணிவரைச் சென்னி வாழும்
விஞ்சையர் விச்சை யாலே விழுமிய ரென்ப தல்லால்
அஞ்சலில் தானை வேந்தே மனிதரே யவரும் யாதும்
வெஞ்சுடர் விளங்கு வேலோய் வேற்றுமை யின்மை கேண்மோ 100 525
விஞ்சையன் தன்னை விளக்கிக் கூறுதல்
மண்ணவில் முழவின் மாநீர்ப் பவபுர முடைய மன்னன்
பண்ணவில் களிதல் யானைப் பவனவே கற்குத் தேவி
கண்ணவில் வடிவிற் காந்தி மதியவள் பாவை
வண்ணவிற் புருவ வாட்கண் வாயுமா வேகை யென்பான் 526
மற்றவ ளோடும் வந்தேன் மன்னன்யான் மருசி யென்பேன்
அற்றமில் கேள்வி யெந்தை யஞ்சுமா னென்னும் பேரான்
பெற்றதா யருசி மாலை பெருமக னருளினால் யான்
கற்றநூல் பல்ல வாகுங் கருமணிக் கடகக் கையான் 527
அலகைசா லாதி காலத் தரசர்கள் தொடர்ச்சி யெல்லாம்
உலகநூல் பலவு மோதி யுணர்ந்தன னுரைப்பக் கேண்மோ
விலகிய கதிர வாகி விடுசுடர் வயிரக் கோலத்
திலகம்வீற் றிருந்த கண்ணித் திருமுடிச் செல்வ என்றான் 528
மருசி நமியின் வரலாறு கூறுகின்றான்
ஆதிநா ளரசர் தங்க ளருங்குல மைந்து மாக்கி
ஓதநீ ருலகின் மிக்க வொழுக்கமுந் தொழிலுந் தோற்றித்
தீதுதீர்ந் திருந்த பெம்மான் திருவடி சாரச் சென்று
நீதி நூற் றுலகம் காத்து நிலத்திரு மலர நின்றான் 529
முசிநாச் சுரும்பு பாய முருகுடைத் துருக்குஞ் சோலைக்
காசிநாட் டரசன் செங்கோற் கதிர்முடிக் கச்ச னென்பான்
மாசினாற் கடலந் தானை மன்னவற் றவற்குத் தேவி
தூசினாற் றுளும்பு மல்குல் சுதஞ்சனை சுடரும் பூணாய் 530
வேய்ந்தக நிழற்றுங் கோதை மிளிர்மணிக் கலாப வட்டம்
போந்தகந் திகழ்ந்து மின்னுப் பூந்துகில் பொலிந்த வல்குல்
வாய்ந்தகங் கமழுங் கோதை யவள்பெற்ற வரச சிங்க
நாந்தகக் கிழவர் கோவே நமியென்பான் நலத்தின் மிக்கான் 531
அங்கவ னரசு வேண்டா னற்கடல் படைத்த நாதன்
பங்கயங் கமழு மேனி பவித்திர பரம யோகி
தங்கிய தியானப் போழ்தி றாழ்ந்துதன் றடக்கை கூப்பிப்
பொங்கிய காதல் கூரப் பாடினன் புலமை மிக்கான் 532
அருகக் கடவுள் வணக்கம்
அலகிலா ஞானத் தகத்தடங்க நுங்கி
உலகெலாம் நின்று னொளித்தாயு நீயே
ஒளித்தாயு நீயே யுயிர்க்கெலாங் கண்ணா
யளித்தாயுங் காத்தாயு நீயேவாழி யறவேந்தே 533
அழனாறும் வெங்கதிரோ னாண வலராது
நிழனாறு மூர்த்தியாய் நின்றாயு நீயே
நின்றாயு நீயே நிறைபொரு ளெல்லைக்கட்
சென்றாயும் வென்றாயு நீயேவாழி திருமாலே 534
நிறைதரு கேவலத்தோய் நின்னடியார்க் கெல்லாங்
குறைதலி லின்பங் கொடுப்பயு நீயே
கொடுப்பயு நீயேயெங் குற்றவேல் வேண்டாய்
விடுத்தாயு நீத்தாயு நீயேவென்ற பெருமானே 535
நமிபாடிய இசையின் தன்மை
என்றவன் பாடக் கேட்டே யிறஞ்சின குறிஞ்சி யேகா
நின்றன விலங்கு சாதி நிலங்கொண்ட பறவை எல்லா
மன்றுமெய் மறந்து சேர்ந்தார் கின்னர ரமரர் தாழ்ந்தார்
வென்றவன் றியானத் துள்ளான் வியந்திலன் சிறிதும் வேந்தே 536
நமியின் இசைகேட்டு ஆதிசேடன் வருதல்
மணநிரைத் திலங்குந் தாரோய் மற்றவ னுலோக நாதன்
குணநிரைத் திசைத்த கீதங் கேட்டலு மணிகொள் கோவைக்
கணநிரைத் திலங்குங் காய்பொன் முடிமிசை யீரைஞ்ஞாறு
பணநிரைத் திலங்கப் புக்கான் பணதர ரரச னன்றே 537
நமியை வணங்குதல்
பன்னக ருலகங் காக்கும் பாய்கதிர்ப் பசும்பொன் மேனி
மின்னவிர் வயிரச் சூட்டு விடுசுடர் மணிப்பொற் பூணான்
தன்னிக ரிகந்த தோன்றல் சரணெனப் பரமன் பாதம்
மன்னர்கட் கரசன் முன்னை வலங்கொடு வணக்கங் செய்தான் 538
நமியின் இசையில் தேவர்கள் ஈடுபட்டமை
தேந்துண ரிலங்கு கண்ணித் தேவனத் தேவர் கோனைத்
தீந்தொடை நரம்பின் றெய்வச் செழுங்குரல் சிலம்ப வேத்தப்
பூந்துணர்க் கற்ப லோகம் புடைபெயர்ந் திட்ட போற்றா
வேந்துடை மான மெல்லாம் வேலினால் விடுத்த வேந்தே 539
ஆதிசேடன் நமியரசனை வினவுதல்
மாண்டதன் நிலைமை யுள்ளி வருபொருண் மெய்ம்மைநோக்கித்
தூண்டிய சுடரி னின்ற தியானத்தைத் துளங்கு வாய்போ
லீண்டுவந் திசைக்குற் றேவ லெம்மிறை யடிக்கட் செய்தாய்
வேண்டுவ தெவன்கொ லென்றான் மிடைமணிப் பூணினானே 540
நமியரசன் விடையிறுத்தல்
பண்மிசைப் படர்ந்த சிந்தைப் பணதரற் பணிந்து மாற்றத்
துண்மிசைத் தொடர்பு நோக்கி யுறுவலி யதனைக் கேளா
விண்மிசை யவர்கள் போல வேண்டிய விளைக்குஞ் செல்வ
மண்மிசைப் பெறுவ னாக மற்றிதென் மனத்த தென்றான் 541
ஆதிசேடன் நமிக்கு வரமளித்துச் செல்லுதல்
இச்சையங் குரைப்ப கேட்டாங் கிமைய வரியற்கை யெய்தும்
வீச்சையுந் துணையும் வெள்ளி விலங்கலுங் கொடுத்து வேந்தாய்
நிச்சமு நிலாக வென்று நிறுவிப்போய் நிலத்தின் கீழ்த்த
னச்சமி லுலகஞ் சேர்ந்தா னாயிரம் பணத்தி னானே 542
நமியின் வழித்தோன்றலே சடியரசன் என்று மரீசி பயாபதிக்குப் பகர்தல்
ஆங்கவன் குலத்து ளானெம் மதிபதி யவனோ டொப்பா
யோங்கிய குலமுஞ் செல்வப் பெருமையு முடைய நீயு
மீங்கிரு குலத்து ளீர்க்குங் கருமம்வந் திசைத்த போழ்தி
னீங்கரு நறுநெய் தீம்பால் சொரிந்தோர் நீர்மைத் தென்றான் 543
பயாபதியின் வரலாறு கூறத்தொடங்குதல்
தங்குலத் தொடர்ச்சி கூறித் தானவ னிருந்த போழ்தி
னுங்குல நிலைமை யெல்லா நூலினீ யுரைத்த வாறே
எங்குல நிலைமை யானு முரைப்பனென் றெடுத்துக் கொண்டு
பொங்கலர்ப் பிணைய லான்றன் புரோகிதன் புகல லூற்றான் 544
அங்கனிமித்திகன் கூறுதல்
யாவனாற் படைக்கப் பட்ட துலகெலாம் யாவன் பாத்த
தேவனால் வணக்கப்பட்ட தியாவன தகலஞ் சேர்ந்து
பூவினாள் பொறியொன் றானாள் புண்ணிய வுலகங் கான
ஏவினான் யாவ னம்மை யாவன துலக மெல்லாம் 545
மற்றவ னருளின் வந்தான் மரகத மணிக்குன் றொப்பச்
சுற்றி நின் றிலங்கு சோதித் தோள்வலி யெனும்பே ரானக்
கொற்றவ னுலகங் காத்த கோன்முறை வேண்டி யன்றே
கற்றவ ரின்று காறுங் காவனூல் கற்ப தெல்ல்லம் 546
வாகுவலி தவஞ்செய்யச் செல்லுதல்
கொடிவரைந் தெழுதப் பட்ட குங்குமக் குவவுத் தோளான்
இடிமுர சதிருந் தானை யிறைத்தொழில் மகனுக் கீந்து
கடிமண் மனுக்குந் தெய்வக் கழலடி யரசர் தங்கள்
முடிபொர முனிவிற் றான்போய் முனிவன முன்னினானால் 547
கயிலாயத்து முடியில் தவஞ்செய்தல்
விண்ணுயர் விளங்கு கோட்டு விடுசுடர் விளங்க மாட்டாக்
கண்ணுயர் கதலி வேலிக் கார்க்கயி லாய நெற்றிப்
புண்ணியக் கிழவன் போகிப் பொலங்கலம் புலம்ப நீக்கித்
திண்ணிய தியானச் செந்தீச் செங்சுடர் திகழ நின்றான் 548
வாகுவலியின் தவநிலைமை
கழலணிந் திலங்கு பாதங் கலந்தன கருங்கட் புற்றத்
தழலணிந் தெழுந்த வைவா யருமணி யாடு நாகம்
பொழிலணிந் தெழுந்த வல்லி புதைந்தன பூமி நாதன்
குழலணிந் தெழுந்த குஞ்சி குடைந்தன குருவிக் கூட்டம் 549
அருமுடி யரசர் தாழ்ந்த வடிமிசை யரவ மூரக்
கருவடி நெடுங்க ணல்லார் கலந்த தோள் வல்லி புல்ல
மருவுடை யுலகம் பாடல் வனத்திடைப் பறவை பாடத்
திருவுடை யடிக ணிண்ற திறமிது தெரிய லாமோ 550
வெண்டவாங் குவளைக் கண்ணி மன்னர்தம் மகுட கோடி
விண்டவாம் பிணைய லுக்க விரி மதுத் துவலை மாரி
உண்டவான் கழல்கள் சூழ்ந்த திருவடி யரவ மூரக்
கண்டவா றிங்க ணார்க்குங் கருதுவ தரிது கண்டாய் 551
அடுக்கிய வனிச்சப் பூவி னளிமே லரத்தச் செவ்வாய்
வடிக்கயல் நெடுங்க ணார்தம் வளிக்கையால் வளித்த மார்பில்
தொடுக்கிய தொடுத்த போலுந் துறுமலர்க் கத்தி மாதர்
கொடிக்கையா லிடுக்க றன்மேல் கொற்றவன் குலவப் பட்டன் 552
புல்லிய பொலங்கொம் பொப்பார் புலவியுட் கலவி சென்று
மெல்லிய மாலை தம்மால் விசித்தலை விடுத்து மீட்டு
மல்லுய ரலர்ந்த மார்பின் மாதவிப் பேதை யார்த்த
வல்லிகள் விடுக்க மாட்டா மனத்தினன் மன்ன னானான் 553
வாகுவலி தேவரினும் உயர்நிலை யடைதல்
ஓவலில் குணங்க ளென்னு மொளிர்மணிக் கலங்க டாங்கித்
தேவர்க ளுலக மெல்லாஞ் செழுமண மயர்ந்து கூட்டக்
கேவலப் பெண்ணென் பாளோர் கிளரரொளி மடந்தை தன்னை
ஆவியு ளடக்கிப் பின்னை யமரர்க்கு மரிய னானான் 554
வாகுவலியின் வழித்தோன்றலே பயாபதி மன்னன் என்றல்
எங்கள்கோ னிவன்க ணின்று மிக்குயர் குலத்து வேந்தர்
தங்களோர் புறஞ்சொல் வாராத் தன்மையா லுலகங் காத்தார்
அங்கவர் வழிக்கண் தோன்றி யகலிடம் வணங்க நின்ற
இங்கிவன் பெருமை நீயுமறிதியா லேந்த லென்றான் 555
மருசி மேலுங் கூறத்தொடங்குதல்
குடித்தொட ரிரண்டுங் கேட்டே குறுமயி ரெறிந்து கண்ணுள்
பொடித்தநீர்த் திவலை சிந்தப் புகழ்ந்தன ரிருந்த வேந்தர்
அடுத்தெரி யலர்ந்த செம்பொ னணிமணி முடியி னானங்
கெடுத்துரை கெடாத முன்னக் கேசர னிதனைச் சொன்னான் 556
வாகுவலி கச்சனுக்கு மருமகன் என்று கூறுதல்
இப்படித் தாயிற் பண்டை யிசைந்தது சுற்ற மென்னை
அப்படி யரிய செய்த வடிகளெம் மரச னாய
கைப்புடை யிலங்கு செவ்வேற் கச்சற்கு மருக னாரென்
றொப்புடைப் புராண நன்னூ லுரைப்பதியா னறிவ னென்றான் 557
மன்னவன் மனத்தி னாற்ற மிறைவனை வணங்கி வாழ்த்திப்
பின்னவன் ரன்னை நோக்கிப் பேசினன் பிறங்கு தாரோய்
முன்னிய வுலக நூலுங் குலங்களு முறையு முள்ளிட்
டின்னவா றறியு நீரோ ரில்லை நின் போல வென்றான் 
558
அரசாட்சிப் பொறிக்கு வாய் தூதுவர் என்றல்
மந்திரக் கிழவர் கண்ணா மக்கடன் றாள்க ளாகச்
சுந்தர வயிரத் திண்டோ டோ ழராச் செவிக ளொற்றா
அந்தர வுணர்வ நூலா வரசெனு முருவு கொண்ட
எந்திர மிதற்கு வாயாத் தூதுவ ரியற்றப் பட்டார்
559
சிறந்த தூதுவன் சிறப்பு
ஆதிநூ லமைச்சர்க் கோது மாண்பொலா மமைந்து நின்றான்
தூதனாச் சொல்லிற் சொல்லாச் சூழ்பொரு ளில்லை போலா
மேதிலார்க் காவ துண்டோ வின்னன புகுந்த போழ்திற்
கோதிலாக் குணங்க டேற்றிக் கொழித்துரை கொளுத்த லென்றான்
560
பயாபதி மரிசியைப் பாராட்டல்
மற்றிம்மாண் புடைய நின்னை யுடையவம் மன்னர் மன்னன்
எற்றைநூற் றெய்த மாட்டா னிதன்றிற நிற்க வெம்மைச்
சுற்றமா நினைந்து நின்னைத் தூதனா விடுத்துச் செல்லப்
பெற்றியாம் பிறவி தன்னாற் பெறும்பயன் பெற்ற தென்றான்
561
பயாபதி மன்னன் மருசியை நோக்கிச் சில கூறுதல்
இன்றியா னின்னை முன்வைத் தினிச்சில வுரைக்கல் வேண்டா
ஒன்றியா னுரைக்கற் பால வுரையையு முணர்த்தி நீயே
வென்றியால் விளங்கு தானை விஞ்சையங் கிழவன் கண்ணா
நின்றியான் வாழ்வ தல்லா னினைப்பினி யில்லை மன்னோ 562
கொற்றவன் குறிப்பி தாயிற் கூவித்த னடியன் மாரை
உற்றதோர் சிறுகுற் றேவற் குரியராய்க் கருதித் தானே
அற்றமி லலங்கல் வேலோ னறிந்தருள் செய்வ தல்லான்
மற்றியா னுரைக்கு மாற்ற முடையனோ மன்னற் கென்றான்
563
மருசிக்குச் சிறப்புச் செய்தல்
தூதன்மற் றதனைக் கேட்டே தொழுதடி வணங்கிச் செங்கோல்
ஏதமில் புகழி னாயானடிவலங் கொள்வ னென்னப்
போதுசே ரலங்க லானும் பொலங்கலம் பொறுக்க லாகாச்
சோதிய சுடரச் சேர்த்திப் பெருஞ்சிறப் பருளிச் செய்தான்
564
மருசிக்கு நாடகங் காட்டி மறுநாள் அனுப்புதல்
அற்றைநா ளங்குத் தாழ்ப்பித் தகனகர்ச் செல்வந் தன்னோ
டுற்றவ னுவப்பக் கூறி யுரிமைநா டகங்கள் காட்டிப்
பிற்றைநாட் குரவர் தம்மைப் பின்சென்று விடுமி னென்று
மற்றவர்க் கருளிச் செய்தான் மருசியுந் தொழுது சென்றான்
565
மருசி தனது நகரத்தை அடைதல்
உலனல னடுதிண்டோ ளூழிவே லோடை யானைச்
சலநல சடியென்பேர்த் தாமரைச் செங்க ணான்றன்
குலநல மிகுசெல்கைக் கோவொடொப் பார்கள் வாழு
நலனமர் நளிசும்மைத் தொன்னகர் நண்ணி னானே 566
7.சீயவதைச் சருக்கம்
மரீசி சடி மன்னனைக் காண்டல்
மற்ற மாநகர் மருசி புக்கபின்
கொற்ற வேலவன் கோயின் மாநெதி
முற்று வான்கடை மூன்றுஞ் சென்றுகோன்
சுற்று வார்கழ றெழுது துன்னினான் 567
விலங்கு வார்குழை மிளிர்ந்து வில்லிடக்
கலந்து மாமணிக் கடக மின்செய
அலங்கல் வேலினா னங்கை யாலவற்
கிலங்கு மாநிலத் திருக்கை யேவினான் 568
சடிமன்னன் மரீசியின் கருத்தைக் குறிப்பாலுணர்தல்
தொகுத்த மாண்புடைத் தூதன் மன்னவன்
வகுத்த மாமணித் தலத்தின் மேன்மனத்
தகத்தி னாலமர்ந் திருப்ப வாங்கவன்
முகத்தி னாற்பொருண் முடிவு கண்ணினான் 569
இதுவுமது
தூத னின்முகப் பொலிவி னாற்சுடர்க்
காது வேலினான் கரும முற்றுற
ஓதி ஞானிபோ லுணர்ந்த பின்னது
கோதில் கேள்வியான் றொழுது கூறினான் 570
இதுமுதல் உஅ செய்யுள்கள் மரீசியின் கூற்று
வெல்க வாழிநின் வென்றிவார்கழல்
செல்க தீயன சிறக்க நின்புகழ்
மல்க நின்பணி முடித்து வந்தனன்
பில்கு மும்மதப் பிணர்க்கை யானையாய் 571
இங்கு நின்றுபோ யிழிந்த சூழலும்
அங்கு வேந்தனை யணைந்த வாயிலும்
பொங்கு தானையான் புகன்ற மாற்றமுந்
தொங்கன் மார்பினாய் சொல்லு கேனெனா 572
அள்ளி லைச்செழும் பலவி னார்சுளை
முள்ளு டைக்கனி முறுகி விண்டெனக்
கள்ளு றைத்தொறுங் கழுமி யூற்றறா
வள்ளி லைப்பொழின் மகிழ்ந்து புக்கதும் 573
முள்ள ரைப்பசு முளரி யந்தடத்
துள்ளி ரைத்தெழு மொலிசெய் வண்டினம்
கள்ளி ரைத்துகக் கண்டு வண்சிறைப்
புள்ளி ரைப்பதோர் பொய்கை சார்ந்ததும் 574
நித்தி லம்மணி நிரந்து வெள்ளிவேய்
பத்தி சித்திரப் பலகை வேதிகை
சித்தி ரங்களிற் செறிந்து காமனார்
அத்தி ரம்மென அசோகங் கண்டதும் 575
தன்ணி ழற்சுடர்த் தமனி யத்தினான்
மன்ணி ழற்கொள மருங்கு சுற்றிய
வெண்ணி ழற்சுடர் விளங்கு கற்றலங்
கண்ணி ழற்கொளக் கண்ட காட்சியும் 576
சுரிந்த குஞ்சியன் சுடரு மேனியன்
எரிந்த பூணின னிலங்கு தாரினன்
வரிந்த கச்சைய னொருவன் வந்துவண்
டிரிந்து பாயவிங் கேறு கென்றதும் 577
மற்ற வன்றனக் குரைத்த மாற்றமுங்
கொற்ற வன்விடக் கொம்ப னார்சிலர்
உற்ற மங்கலக் கலங்க ளோடுடன்
முற்ற வூண்டொழின் முடிந்த பெற்றியும் 578
பங்கய யத்தலர்ச் செங்கண் மாமுடித்
திங்கள் வண்ணனுஞ் செம்பொ னீள்குழைப்
பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனும்
அங்கு வந்தது மவர்கள் சொற்றதும் 579
நற்பு றத்தன நாற்ப தாம்வய
திப்பு ரத்தன விளங்க ருங்கைம்மா
மொய்ப்பு றத்துமேன் முழங்கு தானையோ
டப்பு றத்தர சவைய டைந்ததும் 580
மன்ன வன்கழல் வணங்கி நின்றதும்
பின்ன வன்றனா லிருக்கை பெற்றதும்
பொன்னி றப்பொறி புகழ்ந்த சாதகந்
துன்னி வாசகந் தொழுது கொண்டதும் 581
ஓட்டி றானையா னோலை வாசகங்
கேட்ட மன்னவன் கிளர்ந்த சோதியான்
மீட்டொர் சொற்கொடா விம்மி தத்தனா
யீட்டு மோனியா யிருந்த பெற்றியும் 582
இருந்த மன்னன்மே லெடுத்த மாற்றமும்
வருந்தி மற்றவன் மறுத்த வன்ணமும்
புரிந்து தொல்குலம் புகன்ற பெற்றியு
மருந் தகைத் தொடர் பமைந்த வாக்கமும் 583
பின்னை மன்னவன் பேணி நன்மொழி
சொன்ன வண்ணமுஞ் சுற்ற மாயதும்
பொன்ன கைக்குலம் பொலிந்து கண்கொள
வின்ன கைச்சிறப் பருளி யீந்ததும் 584
அருங்கல லக்குழாத் தரசன் றேவிமார்
பெருங்கு லத்தவர் பெயர்ந்து கண்டது
மொருங்கு மற்றுளோ ருரைத்த வார்த்தையுஞ்
சுருங்கில் கேள்வியான் றொழுது சொல்லினான் 585
இதுமுதல் எட்டுச் செய்யுள்கள், பயாபதி மன்னனின் பெருமையை மரீசி கூறல்
சொன்ன வார்த்தையிஃ திருக்கச் சொல்லுவ
தின்ன மொன்றுள வடிகள் யான்பல
மன்னர் தங்களை மகிழ்ந்து கண்டன
னன்ன னீர்மையா ரரச ரில்லையே 586
கற்ற நூல்பிறர் கற்ற நூலெலா
முற்ற நோக்கினு முற்ற நோக்கல
வுற்ற நூலெலா முற்ற நூல்களாய்ப்
பெற்ற நூலவன் பெற்றி வண்ணமே 587
எரியு மாணையான் குளிரு மீகையான்
பெரியன் பெற்றியாற் சிறிய னண்பினா
னரியன் வேந்தர்கட் கெளிய னாண்டையார்க்
குரிய னோங்குதற் கோடை யானையான் 588
எல்லை நீருல கினிது கண்பட
வெல்லும் வேலவன் விளங்கு தண்ணளி
யில்லை யேலுல கில்லை யாமென
நல்ல னேயவ னாம வேலினாய் 589
கற்ற நூலினார் கலந்த காதலா
லுற்ற போழ்துயிர் கொடுக்கு மாற்றலாற்
கொற்ற வேலவன் குடையி னீழலார்
சுற்ற மாண்பினர் சுடரும் வேலினாய் 590
கோதிலார் குல மக்கண் மாக்கண்மற்
றேதி லாரென வியைந்த தின்மையார்
ஆத லாற்றமர் பிறர்க ளாவதங்
கோதி லாரவர்க் குள்ளஃ தில்லையே 591
வைய மின்புறின் மன்ன னின்புறும்
வெய்ய தொன்றுறிற் றானும் வெய்துறுஞ்
செய்ய கோலினாய் செப்ப லாவதன்
றைய தாரினா னருளின் வண்ணமே 592
வீவில் வீங்குநீர் வேலி வாழ்பவர்க்
காவி யாபவ ரரச ராதலாற்
காவ லோவுங்கொ லென்று கண்படான்
மாவ றானையம் மன்னர் மன்னனே 593
இதுமுதல் ஐந்து செய்யுட்கள் விசயதிவிட்டரின் பண்பு கூறுவன
மங்குல் மாமழை மாரி வண்கையான்
பொங்கு காதலால் புதல்வர் தாமுமற்
றிங்கண் வேந்தர்கட் கேனை மான்கண்முன்
சிங்க வேறெனச் செப்பு நீரரே 594
கைய வாச்சிலைக் காம னிங்கிரு
மெய்யி னால் வெளிப் பட்ட நீரதால்
வைய மாள்பவன் புதல்வர் வார்கழ
லையன் மார்கடம் மழகின் வண்ணமே 595
சங்க வண்ணனார் தம்பி தானுநீர்
பொங்கு கார்முகில் புரையு மேனிய
னங்க ணிவ்வுல காள நாட்டிய
மங்க லப்பொறி மன்ன காண்டியால் 596
செங்கண் மாலவன் தெய்வ மார்பகம்
பங்க யத்துமேற் பாவை தன்னுட
னங்கு லக்கொடி நங்கை சேர்வதற்
கிங்கன் மாதவ மெவன்கொல் செய்ததே 597
மரீசி திவிட்டனும் சுயம்பிரபைக்கும் அமைந்த ஒப்பினை வியத்தல்
நங்கை யங்கவ னலத்திற் கொப்பவ
ளிங்கி வட்குவ றேந்த லில்லிவர்
பொங்கு புண்ணியம் புணர்த்த வாறிது
வெங்கண் யனையாய் வியக்கு நீரதே 598
சடி மன்னன் மரீசிக்குச் சிறப்பு செய்தல்
என்று கூறலு மேந்து நீண்முடி
வென்றி நீள்புகழ் வேக யானையா
னன்று மற்றவற் கருளி யீந்தன
னின்று மின்சுடர் நிதியின் நீத்தமே 599
சடிமன்னன் அமைச்சரை வினாதல்
மற்ற வன்றனை மனைபு கப்பணித்
துற்ற மந்திரத்தவர்க ளோடிருந்
தெற்று நாமினிச் செய்வ தென்றனன்
வெற்றி நீள்குடை வேந்தர் வேந்தனே 600
அமைச்சரின் விடை
செங்க ணீன்முடிச் செல்வ சென்றொரு
திங்கள் நாளினுட் டிவிட்ட னாங்கொரு
சிங்கம் வாய் பகத் தெறுவ னென்பது
தங்கு கேள்வியான் றான்முன் சொன்னதே 601
இதுவுமது
ஆதலா லஃதறியும் வாயிலா
வோது மாண்பினா னொருவ னெற்றனாய்த்
தீதி றானையாய் செல்ல வைப்பதே
நீதி யாமென நிகழ்த்தி னாரரோ 602
மன்னன் ஒற்றாய்தல்
உய்த்து ணர்ந்தவ ருரைத்த நீதிமேல்
வைத்த வொற்றினன் மன்ன னானபி
னத்தி றத்தனே யமர்ந்த சிந்தைய
னொத்த சுற்றமோ டுவகை யெய்தினான் 603
இனி அச்சுவகண்டன் செய்தியைக் கூறுவாம் எனல்
இத்தி சைக்கணிவ் வாறிது செல்லுநா
ளத்தி சைக்கணஞ் சப்படு மாழியா
னெத்தி சைக்கும் வெய் யோனியன் முன்னுற
வைத்தி சைத்தன மற்றதுங் கூறுவாம் 604
இதுமுடல் 6 செய்யுள்கள் அச்சுவக்சுண்டன் காமக் களியாட்டம் கூறுவன
பஞ்சி மேன்மிதிக் கிற்பனிக் குந்தகை
யஞ்சி லோதிய ரம்முலை நாஞ்சிலா
மஞ்சு தோய்வரை மார்ப மடுத்துழத்
துஞ்ச லோவுந் தொழிலின னாயினான் 605
முத்த வாணகை மோய்பவ ளத்துணி
யொத்த வாயமு தொண்கடி கைத்திரள்
வைத்த வாயின னாய்மட வார்கடஞ்
சித்த வாரிக ளுட்சென்று தங்கினான் 606
ஆரந் தங்கிய மார்பனு மந்தளிர்க்
காருங் கொம்பனை யாருங் கலந்துழித்
தாருங் கொங்கை ளும்பொரத் தாஞ்சில
வாரம் பட்டணி வண்டின மார்த்தவே 607
வண்டு தோய்மது வாக்கிவள் ளத்தினுட்
கொண்டு கொம்பனை யார்கள் கொடுப்பவஃ
துண்டு மற்றவ ரொண்டுவர் வாயொளித்
தொண்டை யங்கனி யின்சுவை யெய்தினான் 608
தாம மென்குழ லார்தடங் கண்ணெனுந்
தேம யங்கிய செங்கழு நீரணி
காம மென்பதொர் கள்ளது வுண்டரோ
யாம மும்பக லும்மயர் வெய்தினான் 609
சுற்று வார்முலை யார்தந் துகிற்றட
முற்று மூழ்கும் பொழுது முனிவவ
ருற்றபோழ் துணர்த் தும்பொழு தும்மலான்
மற்றொர் போழ்திலன் மன்னவ னாயினான் 610
மண்க னிந்த முழவின் மடந்தையர்
கண்க னிந்திடு நாடகக் காட்சியும்
பண்க னிந்தவின் றீங்குரற் பாடலும்
விண்க னிந்திட வேவிழை வேய்தினான் 611
வாவி யும்மது மண்டபச் சோலையுந்
தூவி மஞ்ஞை துதைந்தசெய் குன்றமும்
பாவும் வெண்மண லும்புனற் பட்டமு
மேவு நீர்மைய னாய்விளை யாடினான் 612
மின்னுஞ் செங்கதிர் மண்டிலம் வெய்தொளி
துன்னுஞ் திங்கட் பனிச்சுடர் தண்ணிது
என்னு மித்துணை யும்மறி யான்களித்
தன்ன னாயின னச்சுவ கண்டனே 613
அச்சுவக்கண்டனின் அரசியல்
சீறிற் றேந்துணர் வின்றிச் செகுத்திடு
மாறுகண் டென்பதோர் மாற்றம் பொறான்மனந்
தேறின் யாரையும் தேறுஞ் செருக்கொடிவ்
வாறு சென்ற தவற்கர சென்பவே 614
பூமகள் அச்சுவக்கண்டன் ஆட்சியிலிருந்தகலச் செவ்வி தேர்தல்
தோடு மல்கு சுரும்பணி கோதையர்
கோடி மென்றுகிற் குய்யத் தடம்படித்
தாடித் தன்னணை யாமையிற் பூமகள்
ஊட லுற்றிடம் பார்த்துள ளாயினாள் 615
சதவிந்து என்பான் அச்சுவகண்டற்கு அரசியலறம் கூறல்
ஆங்கொர் நாளிறை பெற்றறி வின்கடல்
தாங்கி னான்சத விந்துவென் பானுளன்
நீங்க லாப்புக ழான்ற னிமித்திகன்
வீங்கு வெல்கழ லார்கு விளம்பினான் 616
அரசர்க்குரிய அறுவகைப் பகைகள்
மன்ன கேள்வளை மேய்திரை மண்டிலந்
தன்னை யாள்பவர்க் கோதின் தங்கணே
பன்னி னாறு பகைக்குல மாமவை
முன்னம் வெல்கவென் றான்முகம் நோக்கினான் 617
தன்னை வென்றதண் டார்வய வேந்தனைப்
பின்னை வேறல பிறர்க்கரி தாதலான்
மன்ன மற்றவ னாளும் வரைப்பகம்
பொன்னின் மாரி பொழிந்திடு நன்றரோ 618
மாசி றண்டன்ன தோண்மன்ன மன்னிய
கோசி றண்டத்த னாய்விடிற் கொற்றவ
னேசி றண்டம் பரவவின் வையக
மாசி றண்டத்த னாயினி தாளுமே 619
பெற்ற தன்முத லாப்பின் பெறாததுஞ்
சுற்றி வந்தடை யும்படி சூழ்ந்துசென்
றுற்ற வான்பொருள் காத்துய ரீகையுங்
கற்ற வன்பிறர் காவல னாகுவான் 620
அருக்கன் றன்னறி வாக வலர்ந்தநீர்த்
திருக்க வின்றசெல் வச்செழுந் தாமரை
செருக்கெ னப்படுந் திண்பனி வீழுமேல்
முருக்கு மற்றத னைமுகத் தாரினாய் 621
இகழ்ச்சி யிற்கெடு வார்களை யெண்ணுக
மகிழ்ச்சி யுண்மதி மைந்துறும் போதெனப்
புகழ்ச்சி நூலுட் புகன்றனர் பூவினுட்
டிகழ்ச்சி செல்பொன் மணிமுடி மன்னனே 622
அரசே! நீ சினந்தாலும் நினக்கு ஓர் உறுதி கூறுவேன் எனல்
நெறியி னீதிக்க னேரிவை யொப்பவு
மறிதி நீயவை நிற்க வழன்று நீ
செறுதி யேனுஞ்செம் பொன்முடி மன்னவோர்
உறுதி யானுரைப் பானுறு கின்றதே 623
அச்சுவக்கண்டனும் அங்ஙனமாயின் அவ்வுறுதி யாது கூறுதி எனல்
என்ற லும்மிணர் வேய்முடி மாலையா
னன்று சொல்லுக வென்று நகைமணிக்
குன்ற மன்னதிண் டோ ண்மிசைக் குண்டலஞ்
சென்று மின்சொரி யச்செவி தாழ்த்தினான் 624
நிமித்திகன் கூறல்
பூமி மேற்புரி சைம்மதிற் போதன
நாம நன்னக ராளு நகைமலர்த்
தாம நீண்முடி யான்றன் புதல்வர்கள்
காம வேளனை யாருளர் காண்டியால் 625
இதுவுமது
ஏந்து தோளவ ருள்ளிளை யானமக்
காய்ந்த தொல்பகை யாகுமென் றேயுறப்
போந்தொர் புன்சொ னிமித்தம் புறப்பட
வேந்த யான்மனத் தின்மெலி கேனரோ 626
அச்சுவக்கண்டன் நிமித்திகன் கூற்றைத் தடுத்தல்
முத்த நிண்முடி யான்மூன்ன மற்றதற்
கொத்த வாறுணர்ந் தீயென வென்செயு
மைத்த கைமனத் தன்மணித் தன்னெனக்
கைத்த லங்கதிர் வீச மறித்தனன் 627
அச்சுவக்கண்டன் கூறுதல்
மிகையின் வந்தவிச் சாதர வேந்தர்தந்
தொகையை வென்றவென் றோளுள வாப்பிற
பகையி னிப்படர்ந் தென்செயு மென்றன
னகைகொ ணீண்முடி நச்சர வம்மனான் 628
அச்சுவக்கண்டனின் சினமொழிகள்
மாசி லாலவட் டத்தெழு மாதரும்
வீச விண்டொடு மேருத் துளங்குமோ
பேசின் மானிடப் பேதைக ளாற்றலா
லாசி றோளிவை தாமசை வெய்துமோ 629
இதுவுமது
வேழத் தின்மருப் புத்தடம் வீறுவ
வாழைத் தண்டினு ளூன்ற மழுங்குமோ
வாழித் தானவர் தானையை யட்டவென்
பாழித் தோள்மனித் தர்க்குப் பணியுமோ 630
வேக மாருதம் வீசவிண் பாற்சிறு
மேக சாலம் விரிந்தெதிர் செல்லுமோ
வேக மாயவென் சீற்றமஞ் சாதெதி
ராக மானுடர் தாமசை கிற்பவோ 631
குலிச மிந்திரன் கொண்டு பணிக்கு மேன்
மலையின் மாசிக ரங்களும் வீழ்த்திடு
நிலைய வெஞ்சுட ராழி நினைப்பனேற்
றொலைவில் வானவர் தோளுந் துணிக்குமே 632
விச்சை மற்றவர் தம்மை விடுப்பதோ
ரிச்சை யென்கணுண் டாமெனின் யாவரே
யச்ச மின்றி நிற் பாரந் நிமித்த நூல்
பொச்ச லாங்கொல் புலந் தெழு நீர்மையாய் 633
புலவர் சொல்வழி போற்றில னென்பதோ
ரலகிற் புன்சொலுக் கெஞ்சுவ னல்லதே
லுலக மொப்ப வுடன்றெழு மாயினு
மலைவன் மற்றதன் கண்மதிப் பில்லையே 634
ஆத லாலாதற் கேற்ற தமைச்சர்க
ளோதி யாங்குணர்ந் தீகவென் றொட்டினான்
யாதுந் தன்கணல் லார்செயற் கேன்றதோ
ரேத முண்டெனு மெண்ணமில் லாதவன் 635
அச்சுவக் கண்டன் அமைச்சர் கூறுதல்
அலங்க லாழியி னானது கூறலுங்
கலங்கு நூற்கரு மத்தொழின் மாக்கடம்
புலங்கொள் சூழ்ச்சிய ராகிப் புகன்றன
ருலங்கொள் தோளவ னுக்குணர் வாயினார் 636
எரியுந் தீத்திர ளெட்டுணைத் தாயினுங்
கரியச் சுட்டிடுங் காந்திக் கனலுமேற்
றெரியிற் றொல்பகை தான்சிறி தாயினும்
விரியப் பெற்றபின் வென்றிடு கிற்குமே 637
முட்கொணச்சு மரமுளை யாகவே
யுட்கி நீக்கி னுகிரினுங் கொல்லலாம்
வட்கி நீண்டதற் பின் மழு வுந்தறு
கட்கு டாரமுந் தாங்களை கிற்பவோ 638
சிறிய வென்றிக ழார்பகை சென்றுசென்
றறிய லாவவன் றாலணி மாமலர்
வெறியும் வேரியும் விம்மி விரிந்துதேன்
செறியுந் தொங்கற்செம் பொன்முடி மன்னனே 639
அரிமஞ்சு என்னும் அமைச்சன் கூறுதல்
அஞ்சி நின்றவர் கூறிய பின்னரி
மஞ்சு வென்பவன் சொல்லுமற் றாங்கவன்
செஞ்செ வேபகை யாமெனிற் றேர்ந்துகண்
டெஞ்சி றொல்புக ழாய்பின்னை யெண்ணுவாம் 640
இதுவுமது
பகைய லாதவ ரைப்பகை யாக்கலும்
நகையி றீமனத் தாமரை நண் பெண்ணலு
முகையின் வேய்ந்தமென் மொய்ம்மலர்க் கண்ணியாய்
மிகையின் மற்றவை பின்னை வெதுப்புமே 641
அரிமஞ்சு கூறும் சூழ்ச்சி
அறியத் தேறுந் திறத்ததெவ் வாறெனிற்
றிறையிற் கென்று விடுதும்விட் டாற்றிறை
முறையிற் றந்து முகமன் மொழிந்தெதிர்
குறையிற் கொற்றவ குற்றமங் கில்லையே 642
அச்சுவக்கண்டன் மகிழ்ந்து தூதுவிடுதல்
என்ற லும்மிது நன்றென வேந்தொளி
நின்ற நீண்முடி நீடிணர்க் கண்ணியான்
சென்று தூதுவர் தாந்திறை கொள்கென
வென்றி வேலவன் மேல்விடை யேயினான் 643
அத்தூதர்களின் பண்பு
ஊட்ட ரக்குண்ட கோலரொண் கோலத்த
ரோட்ட ரும்பொறி யொற்றிய வோலையர்
நாட்டி யம்முணர் வாரொரு நால்வர்சேண்
மோட்டெ ழின்முகில் சூழ்நெறி முன்னினார் 644
வேறு - தூதர் போதன நகரத்தை எய்துதல்
தீதறு தென்மலை மாதிர முன்னுபு
தூதுவர் சூழ்சுடர் சூடிய சூளிகை
யோதின ரோதி யுலப்பற வோங்கிய
போதன மாநகர் புக்கன ரன்றே 645
அந்நகரச் சிறப்பு
செஞ்சுடர் மின்னொளி சென்று பரந்திட
மஞ்சொடு வைகிய மாமணி மாளிகை
வெஞ்சுடர் வீதி விலக்குவ கண்டுதம்
விஞ்சையர் செல்வம் வெறுத்தன ரன்றே 646
இதுவுமது
முரி முழாவொலி விம்மி முரன்றெழு
காரி மிழார்கலி யான் மயி லாலுவ
சோரி முழாவிழ விற்றெரு துற்றபின்
சீரி மிழாற்பொலி வெய்தினர் சென்றே 647
சூளிகை சூடிய சூல விலைத்தலை
மாளிகை மேன்மழை மாமுகில் போழ்தலின்
னீளிய நீரரு வித்திரள் வீழ்வன
காளைக டாதைந கர்ப்பல கண்டார் 648
கூடுநர் கோவை மணிக்கலை யுக்கவு
மூடினர் சிந்திய வொண்சுடர் மாலையு
மூடிய மூரி நெடுந்தெரு வொப்பவு
மூடு செலற்கரி தாயிட ருற்றார் 649
மூரிநடைக்களி யானை மதத்தினொ
டேரி னடைக்கலி மாதம் விலாழியு
மோரி நுரைப்ப வுகுத்த பெருங்கடை
வேரி வெறிக்கள மொப்பது கண்டார் 650
தூதர்கள் அரண்மனையை அடைதல்
வண்டு படக்குவ ளைப்பிணை நக்கலர்
விண்ட மதுப்பரு கிக்களி யின்மதர்
கொண்டு நடைக்களி யன்ன மிரைப்பதொர்
மண்டு புனற்புரி சைப்பதி சார்ந்தார் 651
கோயின் முகத்தது கோடுயர் சூளிகை
வேயின் முகத்ததின் மாமழை வீழ்வது
ஞாயின் முகத்த நகைத்திரண் முத்தணி
வாயின் முகத்து மடுத்திது சொன்னார் 652
தூதர்கள் தம் வருகை அறிவிக்கும்படி வாயிலோனுக் குரைத்தல்
வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலி
னோய்தலி லொண்சுட ராழியி னான்றமர்
வாய்தலி னின்றனர் வந்தென மன்னன்முன்
நீதலை சென்றுரை நீள்கடை காப்போய் 653
பயாபதி தூதர்களை அழைத்துவரப் பணித்தல்
என்றவர் கூற விருங்கடை யானடி
னான்றென நாறொளி நீண்முடி யானடி
மன்ற வணங்கி மொழிந்தனன் மன்னனும்
ஒன்றிய போதக என்ப துரைத்தான் 654
தூதர் பயாபதிக்கு ஓலை கொடுத்தல்
பொன்னவிர் நீள்கடை காவலன் போதக
வென்னலி னெய்தி யிலங்கொளி நீண்முடி
மன்னவன் வார்கழல் வாழ்த்திமடக்கிய
சொன்னவி லோலைகை தொழுதன ரீந்தார் 655
அந்த ஓலையைப் படித்தல்
வாசகன் மற்றது வாசினை செய்தபின்
மாசக னீள்முடி மன்னவன் முன்னிவை
தேசக மூசிய வாழியன் சீர்த்தம
ரோசைக ளோலை கொடொப்ப வுரைத்தர் 656
இதுமுதல் 6 செய்யுள்கள் தூதர்கள் கூறும் செய்தி
ஊடக மோடி யெரிந்தொளி முந்தூறு
மாடக மாயிர கோடியு மல்லது
சூடக முன்கையர் தோடக மெல்லடி
நாடக ராயிர நாரியர் தம்மையும் 657
தெண்டிரை சிந்திய சங்கொடு செங்கதி
ரெண்டர னம்பவ ழக்கொடி யீட்டமும்
கண்டிரள் முத்தொடு காழகி லந்துகில்
பண்டரு நீரன வும்பல் பண்டமும் 658
வெண்கதிர் முத்தகில் வேழ மருப்பொடு
கண்கவர் சாமரை வெண்மயி ரின்கணம்
தண்கதிர் வெண்குடை யாய்தரல் வேண்டுமி
தொண்சுட ராழியி னானுரை யென்றார் 659
வேறு - பயாபதியின் மனநிலை
வேந்தன்மற் றதனைக் கேட்டே வெற்றுவ னெறிந்த கல்லைக்
காந்திய கந்த தாகக் கவுட்கொண்ட களிரு போலச்
சேந்தவ ருரைத்த மாற்றஞ் சிந்தையு ளடக்கி வைத்து
நாந்தகக் கிழவர் கோமா னயந்தெரி மனத்த னானான் 660
இதுமுதல் 5 செய்யுள்கள் பயாபதியின் சிந்தனை
கருத்துமாண் குலனுந் தேசுங் கல்வியும் வடிவுந் தம்மில்
பொருத்தினாற் பழிக்க லாகாப் புலைமைமிக் குடைய ரேனு
மொருத்தனுக் கொருத்தன் கூறக்கேட்டுற்றுச் செய்து வாழத்
திருத்தினா னிறைவ னேகாண் செய்வினைக் கிழவ னென்பான் 661
மதியினை மலரச் சூழ்ந்து வருந்தித்தாம் படைக்கப் பட்ட
நிதியினை நுகர்ந்து மென்று நினைத்தினி திருந்த போழ்திற்
பதியினைக் கலக்கிச் சென்று பறித்துத்தாம் பிறர்க்கு நீட்டும்
விதியினை விலக்க மாட்டா மெலிபவால் வெளிய நீரார் 662
ஓளியினாற் பெரிய னாய வொருவனுக் குவப்பச் செய்தோ
ரளியினால் வாழ்து மென்னும் மவாவினு ளழுந்து கின்றாம்
தெளியநா மிதனைக் கண்டும் செய்வினைத் திறங்க ளோரா
மளிய மோ வளியஞ் சால வறிவினாற் பெரிய மேகாண் 663
அன்றுநா முயலப் பட்ட வினைகள்மற் றனைய வானா
லின்று நா மவலித் தென்னை யினிச்செய்வ தெண்ணி னல்ல
வென்றியான் விளங்கு மாழி யவர்கட்கு மேலை வேந்த
ரொன்றியாங் குவப்பித் தாண்ட துரைப்பக்கேட் டுணர்ந்தா மன்றே 664
பயாபதி தூதர்க்கு முகமன் மொழிதல்
என்றுதன் மனத்தி னெண்ணி யிலங்குகோற் கைய ராகி
நின்றகே சரரை நோக்கி நிலமன்ன னனைய சொன்னர்க்
கொன்றியா மிங்க ணுள்ள தொருப்படுத் துய்ப்பக் கொண்டு
சென்றுறு மிறவர்க் கெம்வா யின்னுரை தெரிமி னென்றான் 665
பயாபதி தன் மக்களறியாதபடி திறைப்பொருள் செலுத்த நினைத்தல்
ஆளிகட் கரச னன்ன வரசர்கோ னதனைக் கூறி
வாளிவிற் றடக்கை வெம்போர் மணிவரை யனைய மார்பிற்
காளைக ளிதனைக் கேட்பிற் கனல்பவா லவரை யின்னே
மீளுமா றமைப்ப னென்று வேண்டுவ விதியி னீந்தான் 666
இதுமுதல் ஐந்து செய்யுள்கள் ஒருதொடர், பயாபதி திறை நல்குதல்
செய்யவாய்ப் பசும்பொ னோலைச் சீறடிப் பரவை யல்கு
லையநுண் மருங்கு நோவ வடிக்கொண்ட குவவுக் கொங்கை
வெய்யவாய்த் தண்ணெ னீலம் விரிந்தென விலங்கி நீண்ட
மையவா மழைக்கட் கூந்தன் மகளிரை வருக வென்றான் 667
அணிமுழா வனைய தோளா னருளிய தறிந்த போழ்தின்
மணிமுழாச் சிலம்பக் கொண்ட மண்டல வரங்கி னங்கண்
குணிமுழாப் பெயர்த்த பணி குயிற்றுத லிலயங் கொண்ட
கணிமுழ மருங்குற் பாடற் கலிப்பிவை தவிர்த்துச் சென்றார் 668
மஞ்சிடை மதர்த்த மஞ்ஞை வான்குழா மென்ன வாங்கண்
வெஞ்சுடர் விளங்கு மாடத் திடைநிலை விரவித் தோன்றி
வஞ்சிநன் மருங்கு னோவ மணிநகைக் கலாவ மின்னச்
செஞ்சுடர் சிலம்பு பாடத் தேன்றிசை பரவச் சேர்ந்தார் 669
மாடெலா மெரிந்து மின்னும் வயிரக்குண் டலத்தோ டம்பொற்
றோடுலாந் துளங்கித் தோன்றுஞ் சுடிகைவாண் முகத்து நல்லார்
பாடலா னரம்பின் தெய்வம் படிவங்கொண் டனைய நீரா
ராடலா லரம்பை யொப்ப ரவரிலா யிரரை யீந்தான் 670
காய்ந்தொளிர் பவழச் சாதிக் கடிகைகள் காண மின்னுப்
பாய்ந்தெழு சுடர்ச்சங் கீன்ற பருமணித் தரளக்கோவை
யேந்தொழிற் காக துண்ட மருப்பிணை கவரிக் கற்றை
யாய்ந்தொழின் மகரப் பூணா னுவப்பன வனைத்து மீந்தான் 671
பயாபதி திறை நல்கியதை விசயதிவிட்டர்கள் காண்டல்
அஞ்சுடர் வயிரப் பூணா னருளினான் விடுப்ப வாங்கண்
விஞ்சையர் விமானத் தோற்ற மேலருங் கலங்க ளேற்றிச்
செஞ்சுடர் திலகச் செவ்வாய் மகளிரை விமானஞ் சேர்த்திக்
கஞ்சிகை மறைக்கும் போழ்திற் காளைக ளதனைக் கண்டார் 672
திவிட்டன் அந்நிகழ்ச்சியை வினாதல்
என்னிது விளைந்த வாறித் தூதுவர் யாவ ரென்று
கன்னவில் வயிரத் திண்டோ ட் கடல்வண்ணன் வினவ யாரும்
சொன்னவின் றுரைக்க மாட்டார் துட்கென்று துளங்க வாங்கோர்
கொன்னவில் பூதம் போலுங் குறண்மக னிதனைச் சொன்னான் 673
குறளன் கூற்று
அறைகழ லரவத் தானை யச்சுவக் கிரீவ னென்பா
னிறைபுக ழாழி தாங்கி நிலமெலாம் பணிய நின்றான்
திறைதர வேண்டும் என்று விடுதரச் செருவந் தானை
யிறைவனு மருளிச் செய்தா னிதுவிங்கு விளைந்த தென்றான் 674
இதுமுதல் மூன்று செய்யுள் ஒருதொடர் - திவிட்டன் சீற்றம்
வேறு
திறைக்கட னென்னுமத் தீச்சொற் கேட்டலு
நிறைக்கட னிரம்பிய நெஞ்சத் தீக்கலுண்
முறைகெட முளைப்பதோர் முனிவி஢ னொள்ளெரி
கரைப்படு படையவன் கனல் மூட்டினான் 675
முடித்தலை முத்துதிர்ந் தாங்கு நெற்றிமேல்
பொடித்தன சிறுவியர்ப் புள்ளி யொள்ளெரி
யடுத்தெழு சுடரகத் துக்க நெய்த்துளி
கடுத்தசெங் கண்ணுநீர்த் திவலை கான்றவே 676
படத்திடைச் சுடர்மணி தீண்டப் பட்டெரி
கடுத்திடு மரவெனக் கனன்ற நோக்கமோ
டடுத்தெரிந் தழல்நகை நக்கு நக்கிவை
யெடுத்துரை கொடுத்தன னிளிய காளையே 677
இதுமுதல் 7 செய்யுள் ஒரு தொடர் - திவிட்டன் சினமொழிகள்
உழுதுதங் கடன்கழித் துண்டு வேந்தரை
வழிமொழிந் தின்னணம் வாழு மாந்தர்போ
லெழுதிய திறையிறுத் திருந்து வாழ்வதே
லழகிது பெரிதுநம் மரச வாழ்க்கையே 678
நாளினுந் திறைநுமக் குவப்பத் தந்துநா
டாளுது மன்றெனி லொழிது மேலெம
தோளினுந் தொடுகழல் வலியி னானுமிவ்
வாளினும் பயனெனை மயரி மாந்தர்காள் 679
விடமுடை யெரிக்கொடி விலங்கு நோக்குடை
யடைலுடைக் கடுந்தொழி லரவி னாரழற்
படமுடை மணிகொளக் கருதிப் பார்ப்பதோர்
மடமுடை மனத்தனும் மயரி மன்னனே 680
இருங்கலிப் படையினு மிகலி னாலுமெம்
மருங்கல் மிவைபெற்ற கரிய தாவதோர்
மருங்குள தெனினது மகளி ராற்சில
பெருங்கலத் தாங்கினாற் பெறலு மாகுமே 681
பாழியான் மெலிந்தவற் திறத்துப் பண்டெலா
மாழியால் வெருட்டி நின் றடர்த்தி போலுமஃ
தேழைகா ளினியொழித் திட்டுச் செவ்வனே
வாழுமா றறிந்துயிர் காத்து வாழ்மினே 682
அன்றெனிற் றிறைகொளக் கருதி னாங்கொடு
குன்றின்மேற் பெறுவதென் வந்து கொள்கையா
னின்றுத னெஞ்சக நிறைய வீழ்வன
வென்றியாம் பகழியும் விசும்பு மீவனே 683
இறைவனை மகளிர்போற் கழறி யென்னையெங்
குறையிது கூறுமின் சென்று தூதிர்காள்
திறையினை மறுத்தவர் திறத்துச் செய்வதோர்
முறையுள தெனினது முயன்று கொள்கவே 684
உட்கவாங் குரைத்தலு மொளிர்பொன் மாழையுங்
கட்கமழ் கோதையர் கணமு மீண்டது
வட்கிநம் மிறைவற்கு வலிது தெவ்வெனத்
துட்கெனு மனத்தினர் தூத ரேகினார் 685
தூதர்கள் அரிமஞ்சு என்பானிடம் சொல்லுதல்
போகிய தூதர் தங்கோன் பொலங்கழ றெழுத லஞ்சி
யாகிய தறிந்து சூழு மரிமஞ்சு லவனைக் கண்டே
யேகிய புகழி னானைக் கண்டது மீயப் பட்ட
தோகையஞ் சாய லார்தங் குழாங்களு நெதியுஞ் சொல்லி 686
இதுவுமது
மீட்டிளங் குமரர் கண்டு விடுசுட ரிலங்கு நக்கு
மோட்டிளங் கண்ணி தீய முனித்தழன் முழங்க நோக்கி
யூட்டிலங் குருவக் கோலோர் தங்களுக் குரைத்த வெல்லாம்
தோட்டிலங் குருவத் தொங்க லமைச்சற்குச் சொல்லி யிட்டார் 687
அரிமஞ்சு தனக்குள் சிந்தித்தல்
அரும்பெற லறிவின் செல்வ னரிமஞ்சு வதனைக்கேட்டே
பெரும்பகை யதனைக் கேட்டாற் பெரியவன் சிறிது நோனா
னிரும்பகை யிதனை யென்கொல் விலக்குமாறென்று தானே
சுரும்பிவர் தொடையன் மார்பன் சூழ்ச்சி கொண் மனத்தனானான் 688
இதுவுமது
மின்றொடர்ந் திலங்கு பூணான் விளைவுறா விளைமை தன்னா
னன்றுதீ தென்னுந் தேர்ச்சி நவின்றில னாத லால்யா
னொன்ற வோர் மாயங் காட்டி யுளைவித்துக் குறுக வோடிக்
குன்றிடைச் சீயந் தன்மேற் கொளப்புணர்த் திடுவனென்றான் 689
அரிமஞ்சு அரிகேதுவினை மாயச்சிங்கமாக்கி ஏவுதல்
அன்னண மனத்தி னாலே யிழைத்தரி கேது வென்னு
மின்னணங் குருவப் பைம்பூண் விஞ்சையன் றன்னைக் கூவிக்
கன்னவி றோளி னாற்குக் கருமமீ தென்று காட்டி
மன்னுமோர் மாயச் சீய மாகென வகுத்து விட்டான் 690
அம்மாயச்சிங்கத்தின் தன்மை
ஒள்ளெரி நெறிப்பட் டன்ன சுரியுளை மலைகண் போழும்
வள்ளுகிர் மதர்வைத் திங்கட் குழவிவா ளெயிற்றுப் பைங்க
ணுள்ளெரி யுமிழ நோக்கி வுருமென வதிரும் பேழ்வாய்க்
கொள்ளரி யுருவு கொண்டான் கொடியவன் கடிய சூழ்ந்தான் 691
அவ்வரிமாவின் செயல்
இலைத்தடஞ் சோலை வேலி யிமவந்த மடைந்து நீண்ட
சிலைத்தடந் தோளி னார்தஞ் சிந்துநா டதனைச் சேர்ந்து
மலைத்தடம் பிளந்து சிந்த மாண்புடை பெயர முந்நீ
ரலைத்துடன் கலங்கி விண்பா லதிரநின் றுரறி யிட்டான் 692
அப்பொழுது உலகில் ஏற்பட்ட குழப்பம்
பொடித்தலை புலம்பிக் கானம் போழ்ந்துமா நெரிந்து வீழ
வடித்தலை கலங்கி வேழம் பிடிகளோ டலறி யாழப்
புடைத்துழிப் பதடி போலத் துறுகற்கள் புரண்டு பொங்க
விடித்தலின் மனித்த ரெல்லா மெயிறுற விறுகிச் சோர்ந்தார் 693
அரிமஞ்சு திவிட்டன்பால் தூதுவிடல்
அப்படி யவனை யவ்வா றமைத்தபி னமைச்ச னாங்கண்
மெய்ப்படை தெரிந்து சொன்ன தூதுவ ரவரை மீட்டே
யிப்படி யிவைகள் சொல்லிப் பெயர்மினீ ரென்று வென்றிக்
கைப்படை நவின்ற வெம்போர்க் காளையைக் கனற்ற விட்டான் 694
ஆங்குத் தூதுவ ரதிர்முகி லாறுசென் றிழிந்து
பூங்கட் டேமொழிப் போதனத் திறைவன்றன் புதல்வர்
வீங்கு பைங்கழல் விடுசுடர் மிடைமணிப் பூணோர்
ஓங்கு தானையோ டுலாப்போந்த விடஞ்சென்றீ துரைத்தார் 695
தூதர்கள் திவிட்டனுக்கு இயம்புதல்
திரையின் மாற்றமுந் திறையினை விலக்கிய திறமும்
குறையென் றெங்களைக் குமரநீ பணித்ததுங் கூற
வரையும் பைங்கழ லாழியந் தடக்கையெ மரைச
னறையும் குஞ்சியா னன்றுநன் றெனச்சொல்லி நக்கான் 696
இதுவுமது
தளையின் விண்டுதேன் றயங்கிய தடங்கொடார் மார்ப
விளையை யென்பது மெங்கள்வாய்க் கேட்டபி னிறைவ
னொளியு மாற்றலும் தன்கணொன் றுள்ளது நினையா
னளியின் பிள்ளைதா னுரைத்தவென் றழன்றில னமர்ந்தான் 697
தூதுவர் திவிட்டனுக்கு அரிமா வுண்மை கூறல்
அறியு மாயிற்ற னரும்பெற னாட்டினை யரிய
வெறியு மின்னுரு மெனவிடித் திறுவரை முழையு
ளுறையுங் கோளரி யொழிக்கலா னமக்குவந் தீயுந்
திறையு மீட்கிய வலித்தவச் செருக்குடைச் சிறியோன் 698
திவிட்டன் வியந்து அயல் நின்றாரை வினாதல்
என்று மற்றது மொழிமின் றுரைத்தெமை விடுத்தா
னென்ற மாற்றமஃ திசைத்தலு மிளையவ னென்னே
சென்ற நாட்டகஞ் சிலம்பதின் றிடித்துயி ரலறக்
கொன்றொர் கோளரி கொடுமுடி யுறைவதோ வென்றான் 699
அயனின்றோர் அவ்வரிமா உளதெனல்
உனது வாழிநி னொலிபுனற் சிந்துநன் னாட்டிற்
களைதல் யாவர்க்கு மரியது கனமணிக் குன்றி
னுளது கோளரி யுருமென விடித்துயிர் பருகி
அளவி ணீன் முழை யுறைகின்ற தடிகளென் றுரைத்தார் 700
திவிட்டன் அவ்வரிமாவைக் கொல்வேன் என்று சூளுரைத்தல்
ஆயின் மற்றத னருவரைப் பிலமென வகன்ற
வாயைப் போழ்ந்துட லிருபிளப் பாவகுத் திடுவ
னேயிப் பெற்றியே விளை த்தில னாயினும் வேந்தன்
பேயிற் பேசிய பிள்ளையே யாகென்று பெயர்ந்தான் 701
இதுவுமது
புழற்கைத் திண்ணுதி மருப்பின் பொருகளி றிவைதா
நிழற்க ணோக்கித்தின் றழன்றன நிலையிடம் புகுக
வழற்க ணாறுப வடுபடை தொடுதலை மடியாத்
தொழிற்க ணாளருந் தவிர்கெனச் சூளுற்று மொழிந்தான் 702
இவரு மாமணிக் கொடுஞ்சிய விவுளித் தேர் காலாட்
கவரி நெற்றிய புரவிதங் காவிடம் புகுக
வெவரு மென்னொடு வரப்பெறார் தவிர்கென வெழில்சே
ருவரி நீர்வண்ண னுழையவ ரொழியுமா றுரைத்தான் 703
விசயன் திவிட்டனுடன் செல்ல நினைத்தல்
நகர மாசன மிரைப்பது தவிர்த்தபின் னளிநீர்ப்
பகரு மாகடல் படிவங்கொண் டனையவன் படரச்
சிகர மால்வரை தெளிந்தனன் திருவமார் பினன்பின்
மகர மாகடல் வளைவண்ன னுடன்செல வலித்தான் 704
இருவரும் அவ்வரிமா வதியும் இடம் எய்துதல்
புழற்கை மால்களிற் றெருத்திடைப் புரோசையிற் பயின்ற
கழற்கொள் சேவடி கருவரை யிடைநெறி கலந்த
வழற்கொள் வெம்பொடி யவைமிசை புதையவவ் வரிமான்
தொழிற்கொண் டாருயிர் செகுக்கின்ற சூழல்சென் றடைந்தார் 705
அம்மாய அரிமாவின் முழக்கம்
அடைந்த வீரரைக் காண்டலு மழலுளை யரிமா
வுடைந்த போகவோ ரிடியிடித் தெனவுடன் றிடிப்ப
விடிந்து போயின விறுவரைத் துறுகலங் குடனே
பொடிந்து போயின பொரியன நெரிவொடு புரளா 706
அவ்வரிமாவின் எதிரில் திவிட்டன் போர்க்கோலம் பூண்டு முழங்குதல்
காளி காளொளி முகில்வண்ணன் கழல்களை விசியாத்
தோளின் மேற்செலச் சுடர்விடு கடகங்கள் செறியாச்
சூளி மாமணித் தொடர்கொண்டு சுரிகுஞ்சி பிணியா
ஆளி மொய்ம்பனங் கார்த்தன னுடைத்ததவ் வரியே 707
அஞ்சி ஓடும் அரிமாவைத் திவிட்டன் தொடர்தல்
எங்குப் போவதென் றுடைநெறி யிறுவரை நெரியப்
பைங்கட் கோளரி யுருவுகொண் டவன்மிசைப் படர்ந்து
வெங்கட் கூற்றமுந் திசைகளும் விசும்பொடு நடுங்கச்
செங்கட் காரொளி நெடியவன் விசையினாற் சிறந்தான் 708
திவிட்டன் ஓடும் தன்மை
சுழலங் கார்த்தில காள்களு நிலமுறா முடங்கா
அழலுஞ் செஞ்சுடர்க் கடகக்கை யவைபுடை பெயரா
குழலுங் குஞ்சியு மாலையுங் கொளுவிய தொடரு
மெழிலுந் தோளிலு மெருத்திலுங் கிடந்தில வெழுந்தே 709
இதுவும் அது
மரங்கள் வேரொடுங் கீழ்ந்தென வழிதொடர்ந் தெழுந்த
நிரந்த மான்களும் பறவையும் நிலங்கொண்டு பதைத்த
வரங்கொள் வெம்பர லணிவரைக் கொடுமுடி யவைதா
முரங்கொ டோ ளவன் விரனுதி யுறவுடைந் தொழிந்த 710
அம்மாய அரிமா குகையிற் புக்கொளிதல்
மூடி யிட்டன முகிற்கண முரன்றிடை நொறுங்காய்க்
கூடி யிட்டன கொடுமுடித் துறுகற்கள் குளிர்ந்தாங்
காடி யிட்டன வனதெய்வ மரியுரு வுடையா
னோடி யிட்டன னொளிவரை முழையகத் தொளிந்தான் 711
அக்குகையில் உறைந்த மெய் அரிமா இவ்வாரவாரத்தே துயில் நீத்து எழுதல்
உலகத்தின் வீங்கிய வொளிமணிச் சுடரணி திணிதோ
ணலத்தின் வீங்கிய நளிர்புக ழிளையவன் விரையின்
நிலத்தின் கம்பமு நெடுவரை யதிர்ச்சியு மெழுவப்
பிலத்தின் வாழரி யரசுதன் றுயில்பெயர்ந் ததுவே 712
திவிட்டன் முழக்கம்
ஏங்கு வாழிய விருள்கெழு முழையகத் தொளித்தா
யோங்கு மால்வரை பிளந்திடு கெனவுளைந் துரவோ
னாங்க மாமுழை முகத்துல கதிரநின் றார்த்தான்
வீங்கு வாய்திறந் தொலித்தது விலங்கலிற் சிலம்பே 713
அக்குகைவாழ் அரிமாவின் முழக்கம்
அதிர வார்த்தலு மழன்றுத னெயிற்றிடை யலர்ந்த
கதிருங் கண்களிற் கனலெனச் சுடர்களுங் கனல
முதிர்வில் கோளரி முனிந்தெதிர் முழங்கலி னெரிந்து
பிதிர்வு சென்றது பெருவரை பிளந்ததப் பிலமே 714
எரிந்த கண்ணிணை யிறுவரை முழைநின்ற வனைத்தும்
விரிந்த வாயொடு பணைத்தன வெளியுகிர் பரூஉத்தாள்
சுரிந்த கேசரஞ் சுடரணி வளையெயிற் றொளியா
விரிந்த தாயிடை யிருணிண்றங் கெழுந்ததவ் வரியே 715
அவ்வரிமா வெளிப்படுதல்
தாரித் திட்டதன் றறுகண்மைக் குணங்களி னுலகை
வாரித் தீட்டிவண் வந்ததோ ரரியென மதியாப்
பூரித் திட்டதன் பெருவலி யொடுபுக ழரிமாப்
பாரித் திட்டது பனிவிசும் புடையவர் பனித்தார் 716
திவிட்டன் அவ்வரிமாவைப் பிளந்து கொல்லுதல்
அளைந்து மார்பினு ளிழிதரு குருதியைக் குடிப்பா
னுளைந்து கோளரி யெழுதலு முளைமிசை மிதியா
வளைந்த வாளெயிற் றிடைவலித் தடக்கையிற் பிடித்தான்
பிளந்து போழ்களாய்க் கிடந்ததப் பெருவலி யரியே 717
அமரர்களின் வியப்பு
சீய மாயிரஞ் செகுத்திடுந் திறலது வயமா
வாய வாயிர மாயிர மடுதிற லரிமா
ஏயெ னாமுனிங் கழித்தன னிவனெனத் தத்தம்
வாயின் மேல்விரல் வைத்துநின் றமரர்கண் மருண்டார் 718
அழிந்த கோளரிக் குருதிய தடுங்கடங் களிற்றோ
டொழிந்த வெண்மருப் புடைந்தவு மொளிமுத்த மணியும்
பொழிந்து கல்லறைப் பொலிவது குலிகச்சே றலம்பி
யிழிந்த கங்கையி னருவியொத் திழிந்தவவ் விடத்தே 719
திவிட்டனின் சால்புடைமை
யாது மற்றதற் குவந்திலன் வியந்தில னிகலோ
னோத நித்திலம் புரிவளை யொளியவற் குறுகி
யேத மற்றிது கடிந்தன னின்னினி யடிகள்
போதும் போதன புரத்துக்கென் றுரைத்தனன் புகழோன் 720
தம்பி யாற்றல்கண் டுவந்துதன் மனந்தளிர்த் தொளியால்
வம்பு கொண்டவன் போனின்று வளைவண்ணன் மொழிந்தா
னம்பி நாமினி நளிவரைத் தாழ்வார்கண் டல்லா
லிம்பர் போம்படித் தன்றுசெங் குருதிய திழிவே 721
இதுமுதல் 10 செய்யுள்கள் ஒருதொடர் -திவிட்டநம்பிக்கு விசயன் குறிஞ்சிநில வனப்பினை எடுத்துக் கூறல்
ஆங்கண் மால்வரை யழகுகண் டரைசர்கள் பரவும்
வீங்கு பைங்கழ லிளையவன் வியந்துகண் மலரச்
வீங்கி மாண்பின வினையன விவையென வினிதின்
வாங்கு நீரணி வளை வண்ண னுரைக்கிய வலித்தான் 722
புள்ளுங் கொல்லென வொலிசெயும் பொழில்புடை யுடைய
கள்ளி னுண்டுளி கலந்துகா லசைத்தொறுங் கமழு
வுள்ளுந் தாதுகொண் டூதுவண் டறாதன வொளிசேர்
வெள்ளென் றோன்றுவ கயமல்ல பளிக்கறை விறலோய் 723
காளை வண்ணத்த களிவண்டு கதிவிய துகளாற்
றாளை மூசிய தாமரைத் தடம்பல வவற்று
ளாளி மொய்ம்பவங் ககலிலை யலரொடுங் கிழிய
வாளை பாய்வன கயமல்ல வனத்திடர் மறவோய் 724
மன்னு வார்துளித் திவலைய மலைமருங் கிருண்டு
துன்னு மாந்தர்கள் பனிப்புறத் துணைமையோ டதிர்வ
இன்ன வாம்பல வுருவுக ளிவற்றினு ளிடையே
மின்னு வார்ந்தன முகிலல்ல களிறுகள் விறலோய் 725
உவரி மாக்கட் னுரையென வொளிர்தரு மயிர
அவரை வார்புனத் தருந்திமே யருவிநீர் பருகி
இவரு மால்வரை யிளமழை தவழ்ந்தென விவையே
கவரி மாப்புடை பெயர்வன கடல்வண்ண காணாய் 726
வேறு
துள்ளிய ரும்புனற் றுளங்குபா றைக்கலத்
துள்ளுரா விக்கிடந் தொளிருமொண் கேழ்மணி
நள்ளிரா வின்றலை நகுபவா னத்திடைப்
பிள்ளைநா ளம்பிறை பிழற்தல்போ லுங்களே 727
வழையும்வா ழைத்தடங் காடுமூ டிப்புடங்
கழையும்வே யுங்கலந் திருண்டு காண் டற்கரு
முழையுமூ ரிம்மணிக் கல்லுமெல் லாநின
திழையினம் பொன்னொளி யெரிப்பத்தோன் றுங்களே 728
பருவமோ வாமுகிற் படல மூடிக்கிடந்
திரவுண்டே னைப்பக லில்லையொல் லென்றிழித்
தருவி யோ வாபுரண் டசும்புபற் றித்தட
வரையின்றாழ் வார்நிலம் வழங்கலா கார்களே 729
சூரலப் பித்தொடர்ந் தடர்துளங் கும்மரில்
வேரலோ டும்மிடைந் திருண்டுவிண் டுவ்விடார்
ஊரலோ வாதனன் றுயிரையுண் டிடுதலால்
சாரலா காதன சாதிசா லப்பல 730
பரியபா றைத்திரள் படர்ந்தபோ லக்கிடந்
திரியவே ழங்களை விழுங்கியெங் குந்தமக்
குரியதா னம்பெறா வுறங்கியூ றுங்கொளாப்
பெரியபாம் பும்முள பிலங்கொள்பேழ் வாயவே 731
அவைகள்கண் டாய்சில வரவமா லிப்பன
உவைகள்கண் டாய்சில வுளியமொல் லென்பன
இவைகள்கண் டய்சில வேழவீட் டம்பல
நவைகள்கண் டாயின நம்மலா தார்க்கெலாம் 732
குழல்கொடும் பிக்கணங் கூடியா டநகும்
எழில்கொடா ரோய்விரைந் தியங்கலிங் குள்ளநின்
கடில்களார்க் குங்களே கலங்கிமே கக்குழாம்
பொழில்கள்வெள்ள ளத்திடைப் புரளநூ றுங்களே 733
ஆக்கலா காவசும் பிருந்துகண் ணிற்கொரு
நீக்கநீங் காநிலம் போலத்தோன் றிப்புகிற்
காக்கலா காகளி றாழவா ழும்புறந்
தூக்கந்தூங் குந்தொளி தொடர்ந்துபொன் றுங்களே 734
இதுவித்தாழ் வார்நிலத் தியற்கைமே லாற்பல
மதியம்பா ரித்தன மணிக்கற் பாறையின்மிசை
நிதியம்பா ரித்தொளி நிழன்று துஞ் சன்னிலைக்
கதியின் வாழ் வாரையுங் கண்கள்வாங் குங்களே 735
வேறு
இருது வேற்றுமை யின்மையாற்
சுருதி மேற்றுறக் கத்தினோ
டரிது வேற்றுமை யாகவே
கருது வேற்றடங் கையினாய் 736
தொல்லுறு சுடர்போலுஞ் சூழொளி மணிப்பாறை
கல்லறை யவைகோங்கின் கடிமலர் கலந்துராய்
மல்லுறு வரைமார்ப வளரொளி யின்முளைக்கு
மெல்லுறு சுடர்வானத் தெழிலவா யினியவ்வே 737
திரைத்த சாலிகை
நிரைத்த போனிரந்
திரைப்ப தேன்களே
விரைகொண் மாலையாய் 738
வரைவாய் நிவத்த வடுமா வடுமா
விரைவாய் நிவந்து விரியா விரியா
புரைவா யசும்பு புலரா புலரா
இரவா யிருள்செ யிடமே யிடமே 739
இளையா ரிளையா ருடனாய் முலையின்
வளையார் வளையார் மனம்வேண் டுருவம்
விளையா விளையாட் டயருந் தொழிறான்
றளையார் தளையார் பொழிலின் றடமே 740
அளியாடு மமரங்க ளமரங்கள் மகிழ்ந்தானா
விளையாடும் விதமலர்ந்த விதமலர்ந்த மணிதூவும்
வளையார்கண் மகிழ்பவான் மகிழ்பவான் மலர்சோர்வ
இளையாரை யினையவே யினையவே யிடமெல்லாம் 741
தமரைத் திடத்திடை மலர்ந்த சாரல்வாய்த்
தாமரைத் துளையொடு மறலித் தாவில்சீர்த்
தாமரைத் தகுகுணச் செல்வன் சண்பகம்
தாமரைத் தடித்தலர் ததைந்து தோன்றுமே 742
நாகஞ் சந்தனத் தழைகொண்டு நளிர்வண்டு கடிவ
நாகஞ் சந்தனப் பொதும்பிடை நளிர்ந்துதா துமிழ்வ
நாகஞ் செஞ்சுடர் நகுமணி யுமிழ்ந்திருள் கடிவ
நாக மற்றிது நாகர்தம் முலகினை நகுமே 743
நகுமலரன நறவம் மவைசொரி வனநறவம்
தொகுமலரன துருக்கம் மவைதரு வனதுருக்கம்
மகமலரன வசோகம் மவைதருவ வசோகம்
பகுமலரன பாங்கர் பலமலையன பாங்கர் 744
அணங்கமர் வனகோட லரிதவை பிறர்கோடல்
வணங்கிளர் வனதோன்றி வகைசுடர் வனதோன்றி
இணங்கிணர் வனவிஞ்சி யெரிபொன் புடையிஞ்சி
மணங்கமழ் வனமருதம் வரையயல் வனமருதம் 745
சாந்துந் தண்டழை யுஞ்சுர மங்கையர்க்
கேந்தி நின்றன விம்மலை யாரமே
வாய்ந்த பூம்புடை யும்மலர்க் கண்ணியு
மீந்த சாகைய விம்மலை யாரமே 746
இயங்கு கின்னர ரின்புறு நீரவே
தயங்கு கின்றன தானமந் தாரமே
பயங்கொள் வார்பயங் கொள்பவ வனைத்தையும்
தயங்கு கின்றன தானமந் தாரமே 747
வேறு
பொன்விரிந் தனைய பூங் கோங்கும் வேங்கையு
முன்விரிந் துக்கன மொய்த்த கற்றல
மின்விரிந் திடையிடை விளங்கி யிந்திரன்
வின்முரிந் திருண்முகில் வீழ்ந்த போலுமே 748
நிழற்பொதி நீலமா மணிக்க லந்திரள்
பொழிற்பொதி யவிழ்ந்தபூப் புதைந்து தோன்றுவ
தழற்பொதிந் தெனத்துகி றரித்த காஞ்சியர்
குழற்பொதி துறுமலர்க் கொண்டை போலுமே 749
மேவுவெஞ் சுடரொளி விளங்கு கற்றலம்
தாவில்பூந் துகளொடு ததைந்து தோன்றுவ
பூவுக விளையவர் திளைத்த பொங்கணைப்
பாவுசெந் துகிலுடைப் பள்ளி போலுமே 750
வேறு
அழலணி யசோகஞ் செந்தா தணிந்துதே னரற்ற நின்று
நிழலணி மணிக்கன் னீல நிறத்தொடு நிமிர்ந்த தோற்றம்
குழலணி குஞ்சி மைந்தர் குங்குமக் குழம்பு பூசி
எழிலணி திகழ நின்றா லெனையநீ ரனைய தொன்றே 751
இணைந்துதேன் முழங்க விண்ட வேழிலம் பாலை வெண்பூ
மணந்துதா தணிந்து தோன்று மரகத மணிக்கற் பாறை
கணங்கெழு களிவண் டாலப் பாசடை கலந்த பொய்கை
தணந்தொளி விடாத வெண்டாமரை ததைந் தனையதொன்றே 752
காரிருட் குவளிக் கண்ணிக் கதிர்நகைக் கனபொற் றோட்டுக்
கூரிருள் சுரிபட் டன்ன குழலணி கொடிறுண் கூந்தல்
பேரிருள் கிழியத் தோன்றும் பிறையெயிற் றமர நோக்கிற்
சூரர மகளிர் வாழு மிடமிவை சுடர்ப வெல்லாம் 753
வாரிரு புடையும் வீக்கி வடஞ்சுமந் தெழுந்து வேங்கை
யேரிருஞ் சுணங்கு சிந்தி யெழுகின்ற விளமென் கொங்கைக்
காரிருங் குழலங் கொண்டைக் கதிர்நகைக் கனகப் பைம்பூண்
நீரர மகளிர் கண்டாய் நிறைபுனற் றடத்து வாழ்வார் 754
மேகமேற் றவழ்ந்து வேய்கண் மிடைத்துகீ ழிருண்ட தாழ்வர்
ஏகமா மலையி னெற்றி யிருஞ்சுனைத் தடங்க ளெல்லாம்
நாகமா மகளி ரென்னு நங்கையர் குடையப் பொங்கி
மாகமேற் றரங்கஞ் சிந்தி மணியறை கழுவு மன்றே 755
ஆவிவீற் றிருந்த காத லவரொடு கவரி வேய்ந்து
நாவின்வீற் றிருந்த நாறு நளிர்வரைச் சிலம்பின் மேயார்
காவிவீற் றிருந்த கண்ணார் கந்தர்வ மகளிர் கண்டாய்
பாவிவீற் றிருந்த பண்ணி னமுதினாற் படைக்கப் பட்டார் 756
அலங்கிண ரணிந்த விஞ்சை யரிவைய ரிடங்கள் கண்டாய்
விலங் கலின் விளங்கு கின்ற வெள்ளிவெண் கபாடமாடம்
இலங்கொளி மகரப் பைம்பூ ணியக்கிய ரிடங்கள் கண்டாய்
நலங்கிளர் பசும்பொற் கோயி னகுகின்ற நகர மெல்லாம் 757
போய்நிழற் றுளும்பு மேனிப் புணர்முலை யமிர்த னாரோ
டாய்நிழற் றுளும்பு வானோ ரசதியா டிடங்கள் கண்டாய்
சேய்நிழற் றிகழுஞ் செம்பொற் றிலதவே திகைய வாய
பாய்நிழற் பவழச் செங்காற் பளிக்கு மண் டபங்க ளெல்லாம் 758
எழின்மணிச் சுடர்கொண் மேனி யிமையவ ரிடங்கள் கண்டாய்
முழுமணிப் புரிசை வேலி முத்தமண் டபத்த வாய
கழுமணிக் கபாட வாயிற் கதிர்நகைக் கனக ஞாயிற்
செழுமணிச் சிகர கோடிச் சித்திர கூட மெல்லாம் 759
தும்பிவாய் துளைக்கப் பட்ட கீசகம் வாயுத் தன்னால்
வம்பவாங் குழலி னேங்க மணியரை யரங்க மாக
உம்பர்வான் மேக சால மொலிமுழாக் கருவி யாக
நம்பதேன் பாட மஞ்ஞை நாடக நவில்வ காணாய் 760
பொன்னவிர் மகரப் பைம்பூட் பொலங்குழை யிலங்கு சோதிக்
கன்னவில் வயிரத் திண்டோ ட் கடல்வண்ண னுவப்பக் காட்டி
மன்னவின் றிறைஞ்சுஞ் செய்கை வளைவண்ணன் மலையின் மேலால்
இன்னன பகர்ந்து சொல்லு மெல்லையு ணீங்க லுற்றார் 761
பாசிலைப் பாரி சாதம் பரந்துபூ நிரந்த பாங்கர்
மூசின மணிவண் டார்க்கு முருகறா மூரிக் குன்றம்
காய்சின வேலி னான்றன் கண்களி கொள்ளக் காட்டி
யோசனை யெல்லை சார்ந்து பின்னையிஃ துரைக்க லுற்றான் 762
வலிகற்ற மதர்வைப் பைங்கண் வாளொயிற் றரங்கச் சீயங்
கலிகற்ற களிறுண் பேழ்வாய்க் கலிங்கினா னிழிந்து போந்து
குலிகச்சே றலம்பிக் குன்றங் கொப்புளித் திட்ட தொப்ப
ஒலிகற்ற வுதிர நீத்த மொழுகுவ தின்ன நோக்காய் 763
இதுமுதல் 6 செய்யுட்கள் ஒரு தொடர் விசயன் திவிட்டனின் ஆற்றலை வியந்து பாராட்டுதல்
வெம்பவேங் குயிரை யெல்லாம் விழுங்கிய வெகுண்டு நோக்கிச்
கம்பமா வுலகந் தன்னைக் கண்டிடுங் களிகொள் சீயம்
நம்பநீ யழித்த தல்லா னகையெயிற் றதனை நண்ணல்
வம்பறா மகரப் பைம்பூண் வானவர் தமக்கு மாமோ 764
ஆங்குநீ முனிந்த போழ்தி னரிது வகல நோக்கி
வாங்குநீர் வண்ண கேளாய் மாயமா மதித்து நின்றே
னோங்குநீண் மலையின் றாழ்வா ரொலிபுன லுதிர யாறு
வீங்கிவந் திழிந்த போழ்து மெய்யென வியப்புச் சென்றேன் 765
குன்றிற்கு மருங்கு வாழுங் குழூஉக்களிற் றினங்க ளெல்லா
மன்றைக்கன் றலறக் கொன்றுண் டகலிடம் பிளப்பச் சீறி
வென்றிக்கண் விருப்பு நீங்கா வெங்கண்மா விதனைக் கொன்றா
யின்றைக்கொண் டுலக மெல்லா மினிதுகண் படுக்கு மன்றே 766
அரசரின் முதற் கடமை
உரைசெய்நீ ளுலகின் வாழு முயிர்களுக் குறுகண் கண்டால்
வரைசெய்தோண் மைந்தர் வாழ்க்கை மதிக்கிலார் வனப்பின் மிக்கார்
திரைசெய்நீ ருலகங் காக்குஞ் செய்கை மேற் படைக்கப் பட்ட
அரசர்தம் புதல்வர்க் கையா வறம்பிறி ததனி லுண்டோ 767
யாக்கையால் எய்தும் பயன்
கற்றவர் கடவுட் டானஞ் சேர்ந்தவர் களைக ணில்லா
ரற்றவ ரந்த ணாள ரன்றியு மனைய நீரார்க்
குற்றதோ ரிடுக்கண் வந்தா லுதவுதற் குரித்தன் றாயில்
பெற்றவிவ் வுடம்பு தன்னாற் பெறுபய னில்லை மன்னா 768
இறவாது நிற்போர் இவர் எனல்
மன்னுயிர் வருத்தங் கண்டும் வாழ்வதே வலிக்கு மாயி
லன்னவ னாண்மை யாவ தலிபெற்ற வழகு போலா
மென்னையான் கொடுத்தும் வையத் திடுக்கணோய் கெடுப்ப னென்னும்
நின்னையே போலு நீரார் நிலமிசை நிலவி நின்றார் 769
ஒருவனுடைய இருவேறு யாக்கைகள்
ஒருவன திரண்டி யாக்கை யூன்பயி னரம்பின் யாத்த
உருவமும் புகழு மென்றாங் கவற்றினூழ் காத்து வந்து
மருவிய வுருவ மிங்கே மறைந்துபோ மற்ற யாக்கை
திருவமர்ந் துலக மேத்தச் சிறந்துபின் னிற்கு மன்றே 770
வேறு - விசய திவிட்டர்கள் குறிஞ்சி நிலங்கடந்து பாலைநிலம் எய்துதல்
என்று தங்கதை யோடிரு நீண்முகிற்
குன்று சூழ்ந்த குழுமலர்க் கானகம்
சென்றொர் வெங்கடஞ் சேர்ந்தன ருச்சிமே
னின்று வெய்யவ னுநிலங் காய்த்தினான் 771
இதுமுதல் 8 செய்யுட்கள் ஒருதொடர், விசயன் பாலைநிலத்தின் தன்மையை எடுத்தியம்பல்
ஆங்கவ் வெங்கடஞ் சேர்ந்த பினையகா
ணீங்கிவ் வெங்கடுங் கானகத் தீடென
ஏங்கு நீர்ககடல் வண்ணனுக் கின்னணம்
வீங்கு வெண்டிரை வண்ணன் விளம்பினான் 772
முழையு டைந்தழல் காலு முரம்பயற்
கழையு டைந்துகு கண்கவர் நித்திலம்
மழையு டைந்துகு நீரென வாய்மடுத்
துழையு டைந்துகு கின்றன வூங்கெலாம் 773
மிக்க நீள்கழை மேல்விளை வுற்றழ
லொக்க வோடி யுறைத்தலி னான்மிசை
உக்க நெற்பொரி யுற்றொரு சாரெலாம்
தொக்க கற்றல மேற்றுடிக் கின்றவே 774
ஏங்கு செங்கதி ரோனெ றிப்பநிழல்
வேங்கொ லென்றொளித் திட்டிபம் வீழ்ந்துசேர்
பாங்க லார்மனை போலப் பறைந்தரோ
ஓங்கி நின்றுல வுற்றன வோமையே 775
அற்ற நீரழு வத்திடை நெல்லியின்
வற்ற லஞ்சினை யூடு வலித்தரோ
மற்ற வெவ்வெயி லுந்நிழல் வாயழ
லுற்று வீழ்ந்தது போன்றுள வாங்கெலாம் 776
பைத்த லைப்பட நாக மழன்றுதம்
பொய்த்த ளைத்தலை போதரக் கார்செய்வான்
கைத்த லம்முகிற் கின்றன காந்தளென்
றத்த லைச்சிலை மானயர் வெய்துமே 777
விசையி னோடு வெண் டேர்செலக் கண்டுநீர்
தசையி னோடிய நவ்வி யிருங்குழா
மிசையில் கீழ்மகன் கண்ணிரந் தெய்திய
வசையின் மேன்மகன் போல வருந்துமே 778
துடியர் தொண்டகப் பாணியர் வாளியர்
கொடிய செய்துமு னைப்புலங் கூட்டுணுங்
கடிய நீர்மையர் கானகங் காக்குநி
னடிய ரல்லதல் லாரவ ணில்லையே 779
வேறு- விசய திவிட்டர்கள் பாலை கடந்து நாட்டின்கண் ஏகுதல்
அங்கவெங்க டங்கடந்த லங்குதாரி லங்குபூண்
சிங்கம் வென்ற செங்கண்மாலொ டம்பொன்மாலை வெண்கடாத்
திங்கள் வண்ணன் வெங்கண்யானை வேந்துசேர்ந்த நாடுசார்ந்
திங்கணின்ன இன்னகாணெ னப்புகழ்ந்தி யம்பினான் 780
முல்லை நிலத்தின் மாண்பு
மாலும்வாரி திங்கண்மூன்றும் வந்தறாத மாண்பினா
லாலுமாவ றானைநம்ம டிகளாளு நாட்டகம்
காலமாண்பி னன்றியுங் கார்கவின்ற நீரவே
போலுமாண்பி னேர்கலந்து பொங்குநீர புறணியே 781
கொண்டல்வாடை யென்னுங் கூத்தன் யாத்தகூத்தின் மாட்சியால்
விண்டமா மலர்ப்பொதும்ப ரங்கமா விரும்புநீர்
வண்டுபாட வல்லியென்னு மாதராடு நாடகங்
கண்டுகொன்றை பொன்சொரிந்த காந்தள்கை மறித்தவே 782
கைமலர்த்த காந்தளுங் கரியநீர்க் கருவிளை
மைம்மலர்த் தடங்கணேர் வகுத்தலர்ந்த வட்டமு
மொய்மலர்ப் பொதும்பின்மேன் முறுவலித்த முல்லையும்
கொய்மலர்க் குழற்றிரட்சி கொண்டு காய்த்த கொறையும் 783
தொண்டைவாய் நிறங்கொளக் கனிந்துதூங்கு கின்றவும்
வண்டுபாய வார்கொடி மருங்குலாய் வளர்ந்தவுங்
கண்டபாலெ லாங்கலந்து கண்கவற்று மாதலால்
விண்டுமாலை மாதராரின் மேவுநீர கானமே 784
தண்ணிலாவி ரிந்தமுல்லை தாதுசேர் தளிர்மிடைந்
தெண்ணிலாய சாயலம் மிடாமணற் பிறங்கன்மேற்
பண்ணிலாய வண்டுபாடு பாங்கரோடு பாங்கணிந்து
வெண்ணிலா விரிந்தவெல்லை போலுமிங்கொர் பாலெலாம் 785
தேனவாவி மூசுகின்ற தேம்பிறழ்பூ தாங்கலந்து
கானநாவல் கொம்பினிற் கனிந்துகா லசைந்தவற்
றேனைமாடு வண்டிருந் திருண்டகான மிங்கிதற்
கூனமா யிருட்பிழம் புறங்குகின்ற தொக்குமே 786
வாயிதழ் திறங்கொளக் கனிந்த தொண்டை வந்தொசிந்து
தூயிதழ்த் துணர்துதைந்து தோன்றுகின்ற தோன்றியின்
பாயிதழ்ப் பரப்பின்மே லரத்தகோப மூர்ந்தயற்
சேயிதழ்ப் பொலிந்தகாடு செக்கர்வான மொக்குமே 787
ஆடிணர்க் கொடிப்பட ரகிற்பொழுதும் பயற்பொலிந்த
கூடிணர்க் குழாநிலைக் கொழுமலர்க் குமிழ்மிசைக்
கோடிணர்க் குலைக்கொசிந்த கொன்றைவிண்ட தாதுசோர்ந்
தோடிணர்ச் சுடர்ப்பொனுக்க கானமொக்கு மூங்கெலாம் 788
பார்மகிழ்ந்த பைஞ்சுருட் பயிர்மிசைப் பயின்றெழுந்
தேர்கலந்து பாசிலைப் பரப்பினூ டிரைத்தரோ
கார்மகிழ்ந்த கார்மயிற் கலாபமொய்த்த கானக
நீர்மகிழ்ந்த நீர்க்கட னிரந்ததொக்கு நீரதே 789
ஏறுகொண்ட கோவல ரேந்து தன்ன வக்குரன்
மாறுகொண்ட கோடியர் மணிமுழா முழங்கலிற்
றாறுகொண்ட தோகைமஞ்ஞை யாடல்கண்டு கண்மகிழ்ந்து
சாறுகொண்டு மான்கணத் தயங்குநீர சாரெலாம் 790
கார்மணந்த கானயாறு கல்லலைத் திழிந்தொலிக்கு
நீர்மணந்த நீள்கரை நிரைத்தெழுந்த நாணல்சூழ்
வார்மணற் பிறங்கன்மாலை வல்லிவிண்ட தாதணிந்து
தார்மணந்த வாரமார்ப யாகசாலை போலுமே 791
கரவைகன்று வாய்மிகுந்த வமிழ்தினோடு கண்ணகன்
புறவின்மாம ரைம்முலைப் பொழிந்தபா றெகிழ்ந்தெழப்
பறவையுண்டு பாடவும் பால்பரந்த பூமியி
னறவுவிண்ட நாகுமுல்லை வாய்திறந்து நக்கவே 792
விசய திவிட்டர்கள் முல்லைநிலங்கடந்து மருதனிலம் எய்துதல்
வேரல்வேலி மால்வரைக் கவானின் வேய் விலங்கலிற்
சாரன்மேக நீர்முதிர்ந்து தண்டளந்து ளித்தலால்
மூரல்வா யசும்பறாத முல்லைவிள்ளு மெல்லைபோய்
நீரவாளை பூவின்வைகு நீள்பரப்பு நண்ணினார் 793
விசயன் மருதநிலத்தின் மாண்புரைத்தல்
புதுநாண் மலர்விண் டுபொழிந்த திழியு
மதுநா றுபுனன் மருதத் தினைமற்
றிதுகா ணெனவின் னனசொல் லினனே
விதுமாண் மிகுசோ திவிளங் கொளியான் 794
அயலோ தமிரட் டவலம் பொலிநீர்
வயலோ தமயங் கமயங் கவதிர்ந்
தியலோ தையிளஞ் சிறையன் னமெழக்
கயலோ டியொளிப் பனகாண் கழலோய் 795
வளவா சநிலப் பலவின் சுளையு
மிளவா ழையினின் னெழிலங் கனியும்
களமாங் கனியின் றிரளுங் கலவிக்
குளமா யினயோ சனை கொண் டனவே 796
வனமா வினிருங் கனியுண் டுமதர்த்
தினவா ளையிரைத் தெழுகின் றனகாண்
கனவா ழைமடற் கடுவன் மறையப்
புனவா னரமந் திபுலம் புவகாண் 797
வளமா நிலையே திமருப் பினிட
விளவா ழைநுதிக் கமழ்தே னொழுகிக்
குளமார் குளிர்தா மரைக்கொண் டநகைத்
தளவா யுகுகின் றனகாண் டகவோய் 798
இவைசெந் நெலிடை கருநீ லவன
மவையந் நெலிடை கழுநீ ரழுவ
முவையொண் டுறைவிண் டொளிவிம் முநகு
நகைவென் றனதா மரைநாண் மலரே 799
கழையா டுகரும் பினறைக் கடிகைப்
பொழிசா றடுவெம் புகைபொங் கியயற்
றழையோ டுயர்சோ லைகடாம் விரவி
மழையோ டுமலைத் தடமொத் துளவே 800
இதுமுதல் 5 செய்யுள் ஒரு தொடர், மருத நிலத்தை ஒரு மகளாக உருவகித்தல்
கருநீ லமணிந் தகதுப் பினயற்
கருநீ லமணிந் தனகண் ணிணைகள்
கருநீ லமணிக் கதிர்கட் டியெனக்
கருநீ லமணிந் தகருங் குழலே 801
வளர்செங் கிடையி னெழில்வைத் தநுதல்
வளர்செங் கிடையி னொளிவவ் வியவாய்
வளர்செங் கிடையின் வளையா டும்வயல்
வளர்செங் கிடைமா மலர்மல் குசிகை 802
வயலாம் பனெறித் தவகைத் தழையன்
வயலாம் பன்மிலைத் தவடிச் சவியன்
வயலாம் பன்மலிந் தபரப் புடையன்
வயலாம் பன்மலர்த் தொகைமா லையினாள் 803
வளர்தா மரையல் லிமலர்த் தியகை
வளர்தா மரையல் லிமயக் குமொளி
வளர்தா மரையல் லிமகிழ்ந் தனள்போல்
வளர்தா மரையல் லிவனத் திடையாள் 804
நளிர்வார் கழலாய் புகழ்நா டிநயந்
தொளிர்வார் குழலா ளொருமா தவளு
ளுளர்வார் கனியும் மதுவுந் தெகிழத்
கிளர்பார் வையுறக் கிளர்கின் றதுகேள் 805
மதிகா ணநிமர்ந் தமதிற் சிகர
நுதிமா ளிகைமேல நுடங் குகொடி
கதிரோ ணொளிமாழ் கவெழுந் துகலந்
ததுகா ணமதா ரொளிமா நகரே 806
அறவே தியரா குதியம் புகையார்
உறவே திகைவிம் மியவொண் புறவ
நிறவே திகைமீ துநிமிர்ந் தபொழிற்
புரவே திகையே றுவகாண் புகழோய் 807
விசய திவிட்டர் போதனமாநகர் புகுதல்
இன்னன விளையவற் கியம்பு மெல்லையுட்
பொன்னக ரடைந்தனர் பொழுதுஞ் சென்றது
நன்னக ரிரைத்தது நரன்ற வின்னிய
மன்னவ குமரரும் வறுமை நீங்கினார் 808
இளங்களிக் குஞ்சர மிரட்டித் தாயிரம்
துளங்கொளிக் கலினமாத் தூளி யெல்லைய
வளங்கெழு குமரரை வலங்கொண் டெய்தின
அளந்தறிந் திலமகன் படையி னெல்லையே 809
துன்னிய துணரிளந் தோன்றி மென்கொடி
மன்னிய வனத்திடை மலர்ந்து நீண்டபோற்
கன்னியர் கைவிளக் கேந்தக் காவலன்
பொன்னியல் வளநகர் பொலியத் தோன்றினார் 810
காவியங் கருங்கணார் கமழ வூட்டிய
வாவியங் கொழும்புகை தழுவி யாய்மலர்க்
கோவையங் குழுநிலை மாடம் யாவையும்
பாவிய பனிவரைப் படிவங் கொண்டவே 811
மல்லிகை மனங்கமழ் மதுபெய் மாலையு
முல்லையம் பிணையலு மொய்த்த பூண்கடை
எல்லியங் கிளம்பிறைக் கதிர்கள் வீழ்ந்தன
தொல்லையங் கடிநகர் துயில்வ போன்றவே 812
பயாபதி மக்களைத் தன்பால் அழைத்தல்
செம்பொன்மா மணிநகர்ச் செல்வ வீதியுட்
கொம்பனா ரடிதொழக் கோயி லெய்தலு
நம்பிமார் வருகென நாறு நீரொளி
அம்பொன்மா மணிமுடி யரச னேயினான் 813
விசய திவிட்டர்கள் தந்தையை வணங்குதல்
அருளுவ தென்கொலென் றஞ்சி செஞ்சுடர்
இருளுக வெழுந்ததொத் திருந்த கோனடிச்
சுருளுறு குஞ்சிக டுதையத் தாழ்ந்தனர்
மருளுறு மனத்தினன் மன்னன் னாயினான் 814
பயாபதி மக்களைத் தழுவுதல்
திருவரை யனையதோட் சிழ்ருவர் தம்மையக்
கருவரை யனையவெங் களிதல் யானையா
னிருவரும் வருகென விரண்டு தோளினு
மொருவரை யகலத்தி னெடுங்கப் புல்லினான் 815
மானவா மதகளிற் றுழவன் மக்கடந்
தேனவாஞ் செழுமலர் செறிந்த குஞ்சியுட்
கானமா மலர்த்துகள் கழுமி வீழ்ந்தன
வானவாந் தடக்கையான் மகிழ்ந்து நோக்கினான் 816
என்னைநும் மீரலர்க் குஞ்சி தம்முளித்
துன்னிய வனத்துக டுதைந்த வாறென
மன்னவ னருளலு மகர வார்குழை
மின்னிவர் மணிக்கழல் விசயன் செப்பினான் 817
விசயன் தந்தைக்குத் திவிட்டன் அரிமாவினை அழித்தமை விளம்பல்
போற்றநம் புறணிசூழ் காடு பாழ்செய்வான்
சீற்றமிக் குடையதோர் சீயஞ் சேர்ந்தது
வேற்றுவன் றமர்கள்வந் துரைப்ப வெம்பியிவ்
வாற்றல்சா லடியன்சொன் றதனை நீக்கினான் 818
பயாபதியின் கழி பேருவகை
யானுமங் கிவனொடு மடிக ளேகினேன்
வானுய ரிமகரி மருங்கி லென்றுபூந்
தேனுய ரலங்கலான் சிறுவன் சொல்லலுந்
தானுயிர் தளிர்ப்பதோர் சவிய னாயினான் 819
சுடரொளி மிகுசோதி சூழ்கழற் காளை மார்தம்
அடரொளி முடிமன்ன னேவலா னாய்பொன் னாகத்
தொடரொளி சுடர்ஞாயிற் சூளிகை சூழு நெற்றிப்
படரொளி நெடுவாயிற் பள்ளிபம் பலங்கள் சேர்ந்தார் 820
சூளாமணி முதல் பாகம் முற்றிற்று.

6.தூதுவிடு சருக்கம்
பொழிலிலுள்ள மரங்கள், மகிழ், தேமா, சுரபுன்னை, புன்கு முதலியன
மருவினியன மதுவிரிவன மலரணிவன வகுளம்திருமருவிய செழுநிழலன செங்குழையன தேமாவரிமருவிய மதுகரமுண மணம்விரிவன நாகம்பொரிவிரிவன புதுமலரென புன்குதிர்வன புறனே 425
சந்தனம் சண்பகம் குரா அசோகம் ஆகிய மரங்கள்
நிழனகுவன நிமிர்தழையன நிறைகுளிர்வன சாந்தம்எழினகுவன விளமலரென வெழுசண்பக நிகரம்குழனகுவன மதுகரநிரை குடைவனபல குரவம்அழனகுவன வலர்நெரிதர வசை நிலையவ சோகம் 426
இரதம் இருப்பை தாழை புன்னை ஆகியவை
எழுதுருவின வெழுதளிரென விணரணிவன விரதம்இழுதுருவின கொழுமலரிடை யெழில்பொலிவன மதுகம்கழுதுருவின கஞலிலையன கழிமடலின் கைதைபொழுதுருவின வணிபொழிலின பொழி தளிரென புன்னை 427
மல்லிகை முல்லை முதலிய கொடி வகைகளின் மாண்பு
வளர்கொடியன மணம்விரிவன மல்லிகையொடு மெளவல்நளிர்கொடியன நறுவிரையக நறுமலரன நறவம்குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கொகுடிஒளிர்கொடியன வுயர்திரளினோ டொழு கிணரன வோடை 428
கோங்கு முதலியன
குடையவிவன கொழுமலரின் குளிர்களின கோங்கம்புடையவிழ்வன புதுமலரன புன்னாகமொ டிலவம்கடியவிழ்வன கமழ் பாதிரி கலிகளிகைய சாகம்இடையவிழ்வன மலரளவில விதுபொழிலின தியல்பே 429
பொழிலில் வாழும் வண்டு ,புள் முதலியவற்றின் சிறப்பு
மதுமகிழ்வன மலர்குடைவன மணிவண்டொடு தும்பிகுதிமகிழ்வன குவிகுடையன நுகிகோதுபு குயில்கள்புதுமகிழ்வன பொழிலிடையன புணர்துணையன பூவைவிதிமகிழ்பவர் மதிமகிழ்வுற விரவுற்றன விரிவே 430
மரீசி பூங்காவில் உள்ள பொய்கைக்கரையை அடைதல்
அதுவழகுத கைமகிழ்வுற வலர்தாரவ னடையஇதுவழகிய திவண்வருகென வெழுபுள்ளொலி யிகவாவிதிவழகுடை விரியிலையிடை வெறிவிரவிய வேரிப்பொதியவிழ்வன புதுமலரணி பொய்கைக்கரை புக்கான் 431
பொய்கைக்கரை மரீசியை வரவேற்றல்
புணர்கொண்டெழு பொய்கைக்கரை பொரு திவலைகள் சிதறாத்துணர்கொண்டன கரைமாநனி தூறுமலர்பல தூவாவணர்கொண்டன மலலுற்றலை வளர்வண்டின மெழுவாஇணர்கொண்டெதி ரெழுதென்றலி னெதிர்கொண்டதவ் விடமே 432
விஞ்சையர் தூதுவனாகிய மரீசி அசோகமரம் ஒன்றைக் காணுதல்
புனல்விரவிய துளிர்பிதிர்வது புரிமுத்தணி மணல்மேல்மினல்விரவிய சுடர்பொன்னொளிர் மிளிர்வேதிகை மிகையொண்கனல்விரவிய மணியிடைகன கங்கணியணி திரளின்அனல்விரவிய வலரணியதொ ரசோகம்மது கண்டான் 433
மரீசி அசோகமரத்தின் நிழலையடைந்ததும், துருமகாந்தன் கல்லிருக்கையைக் காட்ட மரீசிதிகைத்தல்
அதனின்னிழ லவனடைதலு மதுகாவல னாவான்பொதியின்னவிழ் மலர்சிதறுபு பொலிகென் றுரை புகலாமதீயின்னொளி வளர்கின்றதொர் மணியின்சிலை காட்டஇதுவென்னென இதுவென்னென வினையன்பல சொன்னான் 434
வேறு - நிலாநிழற்கல்லில் அமர்ந்திருக்குமாறு துருமகாந்தன் மரீசியை வேண்டிக்கொள்ளுதல்
மினற்கொடி விலங்கிய விலங்கன்மிசை வாழும்புனற்கொடி மலர்த்தொகை புதைத்தபொலி தாரோய்நினக்கென வியற்றிய நிலாநிழன் மணிக்கல்மனக்கினிதி னேறினை மகிழ்ந்திருமி னென்றான் 435
இதுபொழிற்கடவுளுக்காக ஆக்கப் பெற்ற பொன்னிடம் அன்றோ? என்று மரீசி கேட்டல்
அழற்கதி ரியங்கற வலங்கிண ரசோகம்நிழற்கதிர் மரத்தகைய தாக நினை கில்லேன்பொழிற்கடவுள் பொன்னிடமி தென்னைபுகு மாறென்றெழிற்கதிர் விசும்பிடை யிழிந்தவன் மொழிந்தான் 436
துருமாந்தகன் மரீசிக்குப் பதிலுரத்தல்
நிலாவளர் நிழற்கதிர் நிமிர்ந்தொளி துளும்பும்சிலாதல மிதற்குரிய தெய்வமெனல் வேண்டாஅலாதவ ரிதற்குரிய ரல்லரவ ராவிர்உலாவிய கழற் றகையி னீரென வுரைத்தான் 437
அங்கத நிமித்திகன் கூறியவற்றைக் கூறத்தொடங்குதல்
என்னவிது வந்தவகை யென்னினிது கேண்மின்நன்னகரி தற்கிறைவன் முன்னநனி நண்ணித்தன்னிகரி கந்தவ னங்கத னெனும் பேர்ப்பொன்னருவி நூல்கெழுபு ரோகித னுரைத்தான் 438
தூதன் வருவான் என்று கூறியதைச் சொல்லுதல்
மின்னவிர் விளங்குசுடர் விஞ்சையுல காளும்வின்னவி றடக்கைவிறல் வேலொருவன் வேண்டிமன்னநின் மகற்கொரு மகட்கரும முன்னிஇன்னவ னினைப்பகலு ளீண்டிழியு மென்றான் 439
அச்சுவக்கிரீவனைக் கொல்வான் என்று அங்கத நிமித்திகன் கூறியதாகக் கூறல்
மடங்கலை யடுந்திற னெடுந்தகைதன் மாறாய்அடங்கல ரடங்கவடு மாழியஃ தாள்வான்உடங்கவ னுடன்றெரி துளும்பவரும் வந்தால்நடந்தவ னடுங்கவடு நம்பியிவ னென்றான் 440
தன்னை அரசன் அங்கு இருக்குமாறு அமர்த்தியதைக் கூறுதல்
ஆங்கவன் மொழிந்தபி னடங்கலரை யட்டான்தேங்கமழ் பொழிற்றிகழ் சிலாதலமி தாக்கிஈங்கவ னிழிந்தபி னெழுந்தெதிர்கொ ளென்னநீங்கல னிருந்தன னெடுந் தகையி தென்றான் 441
மரீசி தூது வந்து பொழிலில் தங்கியுள்ளமையை யுணர்ந்த அரசன் தூதுவனின் வழிப்பயணத்துன்பை மாற்றுமாறு நான்கு நங்கையரை அனுப்புதல்
என்றவன் மொழிந்தபி னருந்தன னிருப்பச்சென்றவன் வழிச் சிரமை தீர்மினென நால்வர்பொன்றவழ் பொருந்திழை யணங்கினனை யாரைமின்றவழ் விளங்குகொடி வேந்தனும் விடுத்தான் 442
பயாபதி மன்னன் விடுத்த பாவையர் புட்பமாகரண்டப் பூங்காவை நோக்கிப் புறப்படுதல்
பொன்னவிர் மணிக்கலை சிலம்பொடு புலம்பமின்னவிர் மணிக்குழை மிளிர்ந்தொளி துளும்பச்சின்னமலர் துன்னுகுழ றேறலொடு சோரஅன்னமென வல்லவென வன்னண நடந்தார் 443
நலங்கனி மடந்தையர் நடத்தொறு மிணர்ப்போதலங்கலள கக்கொடி யயற்சுடர வோடிவிலங்குபுரு வக்கொடி முரிந்துவெரு வெய்தமலங்கின விலங்கின மதர்த்தவவர் வாட்கண் 444
அலத்தக மலைத்தன வடித்தல மரற்றும்கலைத்தலை மலைத்து விரி கின்றகடி யல்குல்முலைத்தலை முகிழ்த்தொளி துளும்பி யுள முத்தம்மலைத்தலை மயிற்கண் மருட்டுவர் சாயல் 445
வண்டுகள் ஒலித்தல்
கணங்கெழு கலாவமொளி காலுமக லல்குல்சுணங்கெழு தடத்துணை முலைசுமை யிடத்தாய்வணங்கியும் நுணங்கியும் வருந்திய மருங்கிற்கிணங்குதுணை யாய்ஞிமி றிரங்கின வெழுந்தே 446
இடையின் வருத்தங் கண்டு வண்டுகள் இரங்கியெழுந்தனவென்க
முலைத்தொழில் சிலைத்தொழிலி னாருயிர் முருக்கும்நிலைத்தொழில் வென்றுள நினைத்தொழுக வின்பக்கலைத்தொழில்கள் காமனெய் கணைத்தொழில்க ளெல்லாம்கொலைத்தொழில்கொள் வாட்கணி னகத்தகுறி கண்டீர் 447
துடித்ததுவர் வாயொடுது ளும்புநகை முத்தம்பொடித்தவியர் நீரொடுபொ லிந்தசுட ரோலைஅடுத்ததில கத்தினொட ணிந்தவள கத்தார்வடித்தசிறு நோக்கொடுமு கத்தொழில்வ குத்தார் 448
வண்டுகள் மயக்கம்
பூவிரிகு ழற்சிகைம ணிப்பறவை போகாவாவிகொள கிற்புகையுள் விம்மியவ ரொண்கண்காவியென வூதுவன கைத்தலம் விலங்கமேவியிவை காந்தளென வீழமிக நொந்தார் 449
சுரும்பொடு கழன்றுள குழற்றொகை யெழிற்கைகரும்பொடு கலந்துள களித்தவவர் தீம்பண்நரம்பொடு நடந்துள விரற்றலை யெயிற்றேர்அரும்பொடு பொலிந்ததுவர் வாயமிர்த மன்றே 450
கணங்குழை மடந்தையர் கவின்பிற ழிருங்கண்அணங்குர விலங்குதொ றகம்புலர வாடிமணங்கம ழலங்கலுடை மைந்தர்த மனந்தாழ்வணங்கிடை வணங்குதொ றணங்கென வணங்கும் 451
மைந்தர்கள் கலங்கி மெலிதல்
நெய்யலர் குழற்றொகை நெருப்பினடு மென்பார்மையலர் நெடுங்கணிவை வல்லகொலை யென்பார்தொய்யலிள மென்முலையி னீர்சுடுதி ராயின்உய்யல மெனத்தொழுது மைந்தர்க ளுடைந்தார் 452
வேறு
நாம நூற்கலை விச்சை யினன்னெறி யிவைதாம்தாம நீள்குழற் றளர்நடை யுருவுகொண் டனையார்வாம மேகலை மடவர லிவர்களை வளர்த்தார்காம நூலினுக் கிலக்கியங் காட்டிய வளர்த்தார் 453
அம்மாதர்களின் தன்மை
இனிய வீங்கிய விளமுலை யிவர்களை வளர்த்தார்பனியின் மென்மல ரலர்ந்தன வுவகையிற் பயில்வார்கனிப வேலிவர் கடல்விளை யமிர் தெனக் கனிவார்முனிப வேலிவ ரனங்கனைங் கணையென முனிவார் 454
புலவி தானுமோர் கலவியை விளிப்பதோர் புலவிகலவி தானுமோர் புலவியை விளைப்பதோர் கலவிகுலவுவார் சிலை மதனனைங் கணையொடு குலவிஇலவு வாயுடை யிளையவ ருடையன விவையே 455
மன்னு வார்சிலை மதனனோர் வடிவுகொண் டிலாதான்தன்னை நாமுமோர் தகைமையிற் றணத்துமென் றிருப்பார்என்னை பாவமிங் கிவர்களைப் படைத்தன னிதுவால்பின்னை யாங்கவன் பிறவிக்கு முதல் கண்ட வகையே. 456
வாம மேகலை முதனின்று வயிற்றிடை வளைர்ந்தசாம லேகைகண் மயிர்நிரை யலதல மீதுகாம நீரெரி யகத்து கனன்றெழ நிமிர்ந்ததூம லேகைகள் பொடித்தன துணை முலை யுறவே 457
சூசுகக் கருமைக்கோர் காரணஞ் சொல்லுதல்
சனங்க டாஞ்சில தவங்களைத் தாங்குது மெனப்போய்வனங்கள் காப்பவ ருளரென முனிவமற் றன்றேல்தனங்க டாழ்ந்தவழ் சந்தனக் குழம்பிடை வளர்ந்தகனங்கொள் வெம்முகங் கறுப்பதென் காரண முரையீர் 458
தூம மென்புகை துழாவிவண் டிடை யிடை துவைக்கும்தாம வோதியர் தம்முகத் தனபிறர் மனத்தகாம நீள்சிலை கணையொடு குனிவகண் டாலும்யாமெ மின்னுயி ருடையமென் றிருப்பதிங் கெவனோ 459
மங்கையர் மலர்ப்பொழிலை அடைதல்
என்று மைந்தர்க ளிடருற வெழுதிய கொடிபோற்சென்று கற்பக வனமன செறிபொழி லடைந்தார்இன்று காமுகர் படையினை யிடர்பட நடந்தவென்றி காமனுக் குரைத்துமென் றிரைத்தளி விரைந்த 460
வேறு - பணிப்பெண்கள் கொண்டுவந்த பலவகைப் பொருள்கள்
ஆடைகைத் தலத்தொருத்தி கொண்டதங் கடைப்பைதன்மாடுகைத் தலத்தொருத்தி கொண்டது மணிக்கலம்சேடிகைத் தலத்தன செறிமணித் திகழ்வசெங்கோடிகைத் தலத்தன குளிர்மணிப் பிணையலே 461
மற்றும் பலர் பலபொருள்களைக் கொண்டுசெல்லுதல்
வண்ணச் சந்தங்க ணிறைந்தன மணிச்செப்பு வளர்பூங்கண்ணிச் சந்தங்க ணிறைந்தன கரண்டகங் கமழ்பூஞ்சுண்ணச் சந்தங்க ணிறைந்தன சுடர்மணிப் பிரப்போடெண்ணச் சந்தங்கள் படச்சுமந் திளையவ ரிசைந்தார் 462
மகளிர் பலரின் வருகையைக் கண்ட மரீசி இது விண்ணுலகமே யென்று வியத்தல்
தகளி வெஞ்சுட ரெனத்திகழ் மணிக்குழை தயங்கமகளிர் மங்கல வுழைக்கலஞ் சுமந்தவர் பிறரோடுகளு மான்பிணை யனையவ ருழைச் செல வொளிர்தார்த்துகளில் விஞ்சையன் றுணிந்தனன் றுறக்கமீ தெனவே 463
மரீசிக்கு வேண்டுவன புரிதல்
துறக்கம் புக்கவர் பெறுவன விவையெனத் துணியாவெறிக்கண் விம்மிய விரைவரி தாரவ னிருப்பச்சிறைக்க ணோக்கமுஞ் சிறுநகைத் தொழில்களுஞ் சுருக்கிஅறைக்கண் மாந்தனுக் கதிதியந் தொழிலினி லமைந்தார் 464
மங்கையர் வழிபாட்டைப் பெறும் மரீசி தேவனைப்போலத் திகழ்தல்
ஆட்டி னார்வெறி கமழ்வன வணிகிளர் நறுநீர்தீட்டி னார்நறுஞ் சாந்தமுஞ் சிறிதுமெய் கமழச்சூட்டி னார்சிலர் நறுமல ரறுசுவை யடிசில்ஊட்டி னாரவ னமரரு ளொருவனொத் தொளிர்ந்தான் 465
மாதர்கள் மாட்சிமையை எண்ணி மரீசி மகிழ்ந்திருத்தல்
வயந்த முன்னிய திலகைகல் லியாணிகை வடிவார்வியந்த சேனைமென் கமலமா லதையென விளம்பும்இயங்கு பூங்கொடி யனையவ ரியல்புக ணினையாவயங்கு தொல்புக ழம்பர சரன்மகிழ்ந் திருந்தான் 466
வேறு - பயாபதி மன்னனுடைய கட்டளைப்படி மரீசியை அழைத்ததற்கு விசய திவிட்டர்கள் புறப்படுதல்
ஆங்கெழிற் பொலிந்தவன் னிருந்தபின் னலங்குதார்வீங்கெழிற் பொலிந்தானை வேந்தனேவ வீவில்சீர்ப்பூங்கழற் பொலங் குழைந் திவிட்டனோடு போர்க்கதந்தாங்கெழிற் பெருங்கையானை சங்க வண்ண னேறினான் 467
யானைமீது விசய திவிட்டர்கள் ஏறிய சிறப்பு
தம்பியோடு ங்கவிசய திவிட்டர்கள் ஏறிய சிறப்புபைம்பொ னோடை வீழ்மணிப் பகட்டெருத்த மேறினான்செம்பொன்மா மலைச்சிகைக் கருங்கொண்மூவி னோடெழூஉம்வம்பவெண்ணி லாவிங்கு திங்கள்போல மன்னினான் 468
விசய திவிட்டர்களுடன் பலவகைப் படைகள் புறப்படுதல்
ஆர்த்தபல்லி யக்குழா மதித்தகுஞ்ச ரக்குழாம்தேர்த்தவீரர் தேர்க்குழாந் திசைத்தபல்ச னக்குழாம்போர்த்தசா மரக்குழாம் புதைத்தவெண் கொடிக்குழாம்வேர்த்தவேந்தர் பல்குழாம் விரைந்தகூந்தல் மாக்குழாம் 469
விசய திவிட்டர்கள் கண்ட விளங்கிழையார் மயக்கம்
பாடுவார்வ ணங்குவார்ப லாண்டுகூறி வாழ்த்துவார்ஆடுவாரோ டார்வமாந்த ரன்னரின்ன ராயபின்சூடுமாலை சோரவுந் தொ டாரமாலை வீழவும்மாடவாயின் மேலெலாம டந்தைமார்ம யங்கினார் 470
கொண்டலார்ந்த பொன்னொளிக் குழற்கொடிக்கு ழாமனார்மண்டலந்நி றைந்ததிங்கள் வட்டமொத்த வாண்முகம்குண்டலங்கொ ழும்பொனோலை யென்றிரண்டு கொண்டணிஇவண்டலர்ந்து மாலைதாழ்ந்து மாடவாய்ம றைந்தவே 471
கூடுதும்பி யூடுதோய்கு ழற்றொகைத்து ணர்துதைந்தோடுமேலெ ருத்திடைக்கு லைந்தகோதை யோடுலாய்மாடவாயின் மாலைஞால மாடமேறு மாதரார்ஆடுமஞ்ஞை கோடுகொள்வ தென்னலாவ தாயினார் 472
தொண்டைவாய் மடந்தைமார்கள் சுடிகைவட்ட வாண்முகம்கொண்டகோல நீரவாய கோடிமாட மேலெலாம்வண்டுசூழ்ந்த பங்கயம லர்க்குழாமி ணைப்படூஉக்கெண்டையோடு ந்ன்றலைந்த கேழவாய்க்கி ளர்ந்தவே 473
விசயதிவிட்டர்களை நகரத்து மாதர்கள் காணுதல்
மாலைதாழு மாடவாய் நிலத்தகத்து மங்கைமார்வேலவாய நெடியகண் விலங்கிநின் றிலங்கலால்சாலவாயி றாமெலாமொர் தாமரைத் தடத்திடைநீலமாம லர்க்குழாநி ரந்தலர்ந்த நீரவே 474

சுண்ணமாரி தூவுவார் தொடர்ந்துசேர்ந்து தோழிமார்வண்ணவார வளைதயங்கு முன்கைமேல்வ ணங்குவார்நண்ணிநா ணொழிந்துசென்று நம்பிமார்கள் முன்னரேகண்ணிதம்மி னென்றிரந்து கொண்டுந்ன்று கண்ணுவார் 475
பாடுவார்மு ரன்றபண்ம றந்தொர்வாறு பாடியும்ஆடுவார்ம றந்தணிம யங்கியர்மை யாடியும்சூடுவான்றொ டுத்த கோதை சூழ்குழன்ம றந்துகண்நாடுவாய்நி ழற்கணிந்து நாணுவாரு மாயினார் 476
இட்டவில்லி ரட்டையுமி ரண்டுகெண்டை போல்பவும்விட்டிலண்க்கு தொண்டையங் கனிப்பிழம்பொ டுள்விராய்ச்சுட்டிசூட்ட ணிந்துசூளி மைமணிசு டர்ந்துனீள்பட்டம்வேய்ந்த வட்டமல்ல தில்லைநல்ல பாங்கெலாம் 477
அலத்தகக்கு ழம்புதம்ம டித்தலத்தொர் பாகமாநிலத்தலத்தொர் பாகமா நீடுவாயில் கூடுவார்கலைத்தலைத்தொ டுத்தகோவை கண்ணெகிழ்ந்து சிந்தலான்மலைத்தலைத்த ழற்சிதர்ந்த போன்றமாட வாயெலாம் 478
பாடகந்து ளங்கவும்பு சும்பொனோலை மின்னவும்சூலகந்து ளும்பவஞ் சு ரும்புகழ்ந்து பாடவும்ஊடகங்க சிந்தொசிந்து நின்றுசென்று வந்துலாய்நாடகங்க ணன்னர்க்க ணங்கைமார்ந விற்றினார் 479
மாதர்கள் மயக்கம்
மாலையால்வி ளங்கியும்பொன் வாசச்சுண்ணம் வீசியும்சாலவாயி லாறுசந்த னக்குழம்பு சிந்தியும்நீலவாணெ டுங்கணார்நி ரந்து நெஞ்சு தாழொரீஇஞாலமாளு நம்பிமாரின் மாலுமாகி நண்ணினார் 480
வேய்மறிந்த தோள்விளர்த்து வெவ்வுயிர்ப்பொ டுள்விராய்த்தோமறிந்த சூழ்துகின்னெ கிழ்ந்துடுத்து வீழ்ந்தசைஇப்பூமறிந்த தேங்குழன் முடிப்பொதிந்து வீழ்த்துலாய்த்தாமறிந்த முல்லைவாய தாதுகுத்து டங்கினார் 481
விசயதிவிட்டர்களுடைய படை பொழிலை அடைதல்
கொங்குவார்ம லர்த்தடத்த மர்ந்தகோதை மார்களோடங்கராகம் வீற்றிருந்த ணிந்தவார மாகுலாய்மங்கைமார்கள் கண்ணும்வண்டு மாலையும னங்களும்தங்குமார்பி னம்பிமார்க டானைசோலை சார்ந்ததே 482
விசயதிவிட்டர்கள் பொழிலை அடைதல்
மானளாய நோக்கினார்ம னங்கலந்து பின்செலவானளாய சோலைவாயின் மன்னவீரர் துன்னலலும்கானளாய போதணிந்து காவிவிம்மு கள்ளளைஇத்தேனளாவு வண்டுகொண்டு தெறல்சென் றெழுந்ததே 483
விசயதிவிட்டர்கள் வேழத்தினின்று இறங்குதல்
செம்முகப்ப சும்பொ னோடை வெண்மருப்பி ணைக்கருவெம்முகத்து வீழ்கடாத்து வேழநின்றி ழிந்தபின்கைம்முகத்து வேலிலங்கு காமர் தாங்கொ லென்றுசென்றம்முகத்து தும்பிவண்டு தேனொடாடி யார்த்தவே 484
பொழிலின் காட்சி
தாதுநின்ற தேறனீர் தளித்திவற்றின் மேலளிகோதுகின்ற போதுகொண்டு சிந்திநம்பி மார்களைமாதுநின்ற மாதவிக் கொடிகடந் தளிர்க்கையால்போதுகென்றி டங்கள்காட்டு கின்றபோற்பொ லிந்தவே 485
பூங்காவின் பொதுக்காட்சி
போதுலாய வேரிமாரிஇ சாரலாய்ப்பொ ழிந்துதேன்கோதலா னெரிந்துதாது கால்குடைந்து கொண்டுறீஇமாதுலாய வண்டிரைத்து மங்குல்கொண்டு கண்மறைத்தேதிலார்க்கி யங்கலாவ தன்றுசோலை வண்ணமே 486
தென்றல் வீசுதல்
போதுலாய பூம்பொதும்பர் மேலதென்றல் வீசலால்தாதுலாய போதணிந்து தாழ்ந்துதாம வார்குழல்மாதரார்கள் போலவல்லி மார்புபுல்லி மைந்தரைக்காதலால்வ ளைப்பபோன்று காவினுட்க லந்தவே 487
விசயதிவிட்டர்கள் அசோகமரத்தின் இடத்தை அடைதல்
புல்லிவண்ட மர்ந்துகங்கு பூந்தழைப்பொ தும்பிடைமல்லிகைக்கொ டிக்கலந்து மெளவல்சூட வெளவுநீர்வல்லிமண்ட பங்கள்சென்று மாதவிக் கொழுந்தணிஅல்லிமண்ட பத்தயல சோகமாங்க ணெய்தினார் 488
விஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டர்களை வணங்குதல்
பஞ்சிலங்கு மல்குலார்ப லாண்டுகூற வாண்டுபோய்மஞ்சிலங்க சோகநீழன் மன்னவீரர் துன்னலும்விஞ்சையன்ம கிழ்ந்தெழுந்து வென்றிவீரர் தங்களுக்கஞ்சலித்த டக்கைகூப்பி யார்வமிக்கி றைஞ்சினான் 489
நீர் எம்மை வணங்குவது ஏன்? என்று விசயன் மரீசியைக் கேட்டல்
ஆங்கவனி றைஞ்சலு மலர்ந்ததிங்க ணீளொளிப்பூங்கழற்பொ லங்குழைப்பொ லிந்திலங்கு தாரினான்நீங்கருங்கு குணத்தினீவிர் நீடுகுரவ ராதலில்ஈங்கெமக்கு நீர்பணிந்த தென்னையென்றி யம்பினான் 490
விசயதிவிட்டர்களை மரீசி வியந்து நோக்குதல்
பானிறக்க திர்நகைப ரந்தசோதி யானையும்நீனிறக்க ருங்கட னிகர்க்குமேனி யானையும்வானெறிக்கண் வந்தவன்ம கிழ்ந்துகண்ம லர்ந்துதன்நூனெறிக்கண் மிக்கநீர்மை யொக்கநின்று நோக்கினான் 491
மேலும் விசயதிவிட்டர்களை நன்கு பார்த்தல்
வேல்கொடானை வீரர்தம்மை விஞ்சையன் வியந்துநீள்நூல்கொள்சிந்தை கண்கடாவ நோக்கிநோக்கி யார்காலன்கால்கள்கொண்டு கண்ணிகாறு முண்மகிழ்ந்து கண்டுகண்மால்கொள்சிந்தை யார்கள்போல மற்றுமற்று நோக்கினான் 492
மரீசி விசயதிவிட்டர்களைப் பார்த்துப் பேசத் தொடங்குதல்
வேரிமாலை விம்மவும்வி ளங்குபூண்டு ளும்பவுந்தாரொடார மின்னவுந்த யங்குசோதி கண்கொளவாரநோக்க கில்லனன்ன னரசநம்பி மார்களைச்சாரவாங்கொர் கற்றலத்தி ருந்துகான்வி ளம்பினான் 493
விஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டரின் மேம்பாட்டைக் கூறுதல்
செம்பொன்வான கட்டிழிந்து தெய்வ யானை யுண்மறைஇவம்புநீர்வ ரைப்பகம்வ ணக்கவந்த மாண்புடைநம்பிமீர்க ணுங்கள்பாத நண்ணிநின் றி றைஞ்சுவார்அம்பொன்மாலை மார்பினீர ருந்தவஞ்செய் தார்களே 494
திங்கள்வெண் கதிர்ச்சுடர்த் திலதவட்ட மென்றிரண்டிங்கண்மா லுயிர்க்கெலாமெ ளிய்யவென்று தோன்றலும்தங்கள்சோதி சாரலாவ வல்லவன்ன நீரவால்எங்கண்முன்னை நுடங்கடன்மை யென்றுபின்னை யேத்தினான் 495
தந்தையைக் காணச்செல்வோம் என்று விசயதிவிட்டர்கள் மரீசியை அழைத்தல்
இமைகள்விட்ட நோக்கமேற வின்னபோல்வ சொல்லலுமமைகமாற்றம் நூம்மை யெங்க ளடிகள்காண வேகுவாம்சுமைகொண்மாலை தொடுகளிற்றெ ருத்தமேறு கென்றனர்சிமைகொடேவர் போலநின்று திகழுகின்ற சோதியார் 496
மரீசியும் விசயதிவிட்டர்களும் யானைகள்மீது தனித்தனியே அரண்மனைக்குப் புறப்படுதல்
அம்பொன்மாலை கண் கவர்ந்த லர்ந்தசெல்வ வெள்ளமேய்வெம்புமால்க ளிற்றெருத்தம் விஞ்சையாளன் மேல்கொளப்பைம்பொன்மாலை வார்மதப்ப ரூஉக்கை யீரு வாக்கண்மீச்செம்பொன்மாலை மார்பசேர்ந்து தேவரிற்று ளும்பினார் 497
மகளிர் எதிர்கொள்ள நகரஞ் சேர்தல்
கதிர்நகைக் கபாட வாயிற் கதலிகைக் கனக நெற்றிமதிநக வுரிஞ்சு கோட்டு மாளிகை நிரைத்த வீதிப்புதுநக ரிழைத்து முத்து பொலங்கலத் தொகையும் பூவும்எதிர்நகைத் துகைத்து மாத ரெதிர்கொள நகரஞ் சேர்ந்தார் 498
மருசியும் விசயதிவிட்டரும் சேர்ந்திருந்ததன் வருணனை
விரைக்கதி ரலங்கற் செங்கேழ் விண்ணியங் கொருவ னோடும்வரைக்கெதிர்ந் திலங்கு மார்பின் மன்னவ குமரச் செல்வர்எரிக்கதி ரேற்றைக் கால மெழுநிலாப் பருவ மேகநிரைத்தெழு மிருது மன்று நிரந்ததோர் சவிய ரானார் 499
தெருவிற் செல்லுதல்
வார்கலந் திலங்கு கொம்மை வனமுலை மகளி ரிட்டஏர்கலந் தெழுந்த தூம வியன்புகை கழுமி நானநீர்கலந் துகுத்த மாலை நிறமதுத் திவலை சிந்தக்கார்கலந் திருண்ட போலுங் கண்ணகன் தெருவுட் சென்றார் 500
அரண்மனையின் வாயிலை அடைதல்
தெளிர்முத்த மணலுஞ் செம்பொற் சுண்ணமுஞ் சிதர்ந்து தீந்தேன்தளிர்முத்த மலரும் போதும் சாந்தமு வண்டார்ஒளிர்முத்த முறுவ லார்த முழைக்கலங் கலந்து மாலைக்குளிர்முத்த நிழற்றுங் கோயிற் பெருங்கடை குறுகச் சென்றார் 501
பயாபதி மன்னன் பொற்கூடத்தில் அமருதல்
மற்றவை ரடைந்த போழ்கின் வாயிலோ ருணர்த்தக் கேட்டுகொற்றவ னருவி தூங்குங் குளிர்மணிக் குன்றம் போலமுற்றிநின் றிலங்குஞ் செம்பொன் முடிமிசை முத்த மாலைக்கற்றைகள் தவழச் சென்றோர் கனககூ டத்தி ருந்தான் 502
பயாபதி மன்னன் மூவரையும் அமரச் செய்தல்
மன்னவ குமர ரோடும் விஞ்சையன் மகிழ்ந்து வையத்தின்னருள் புரிந்த வேந்த னிடையறிந் தினிதி னெய்திக்கன்னவில் தோளி னான்றன் கழலடி தொழுது நின்றான்அன்னவர்க் கிருக்கைத் தான மரசனு மருளிச் செய்தான் 503
பயாபதி அம்மன்னன் வீற்றிருக்கும் காட்சி
வீரியக் குமர ரொடும் விஞ்சையஞ் செல்வ னோடும்காரியக் கிழவர் சூழக் கவின்றுகண் குளிரத் தோன்றிஆரியன் னலர்ந்த சோதி யருங்கலப் பீட நெற்றிக்தாரகை யணிந்து தோன்றுஞ் சந்திர சவிய னானன் 504
மன்னவன் விஞ்சையனுக்கு முகமன் கூறியிருத்தல்
அலகையில் தானை வேந்த னம்பர சரனை நோக்கிஉலகுப சார மாற்ற முரைத்தலுக் குரிய கூறிவிலகிய கதிர வாகி விளங்கொளிக் கடகக் கையான்மலரகங் கழுமப் போந்து மனமகிழ்ந் திருந்த போழ்தின் 505
மருசி கொண்டுவந்த திருமுகத்தை மதிவரன் வாங்குதல்
விஞ்சைய னெழுந்து தங்கோன் வெள்ளிவே தண்ட நோக்கிஅஞ்சலித் தடக்கை கூப்பி யரக்கிலச் சினையின் வைத்தஎஞ்சலி லோலை காட்ட விறைமகன் குறிப்பு நோக்கிவஞ்சமில் வயங்கு கேள்வி மதிரவன் கரத்தில் வாங்கி 506
மதிவரன் திருமுகவோலையைப் படித்தல்
நிகரிகந் தழகி தாகி நெரிவடுப் படாத வேழப்புகர்முகப் பொறிய தாய புகழ்ந்தசொல் லகத்துப் போகாமகரவாய் மணிகட் செப்பின் மசிகலந் தெழுதப் பட்டபகரரும் பதங்கள் நோக்கிப் பயின்று பின் வாசிக் கின்றான் 507
இதுவும் அடுத்த பாடலும் திருமுகச் செய்தி
போதனத் திறைவன் காண்க விரதநூ புரத்தை யாளும்காதுவேன் மன்ன னோலை கழலவன் றனக்கு நாளும்ஆதிய வடிசி லொண்கே ழஞ்சன முள்ளிட் டெல்லாம்தீதுதீர் காப்புப் பெற்றுச் செல்கென விடுத்த தன்றே 508
அல்லதூஉங் கரும தலங்குதா ரிவுளித் திண்டேர்வல்லக னிளைய நம்பிக் குரியளா வழங்கப் பட்டாள்மல்லக மார்பி னன்றான் மருமக ளிவளைக் கூவிவல்லிதிற் கொடுக்க மன்னன் வாழ்கதன் கண்ணி மாதோ 509
திருமுகச்செய்திகேட்ட பயாபதிமன்னன் யாதுங் கூறாதிருத்தல்
என்றவ னோலைவாசித் திருந்தன னிறைவன் கேட்டுவென்றியம் பெருமை விச்சா தரரென்பா ரெம்மின் மிக்கார்இன்றிவன் விடுத்த திவ்வா றென்கொலோ வென்று சிந்தித்தொன்றுமற் றுரைக்க மாட்டா திருந்தன னுரங்கொ டோ ளான் 510
மருசி சினத்துடன் கூறத்தொடங்குதல்
தீட்டருந் திலதக் கண்ணிச் செறிகழ லரசர் கோமான்மீட்டுரை கொடாது சால விம்மலோ டிருப்ப நோக்கிவாட்டரும் பெருமை யெங்கோ னோலையை மதியா வாறென்றோட்டருங் கதத்த னாகிக்கேசர னுரைக்க லுற்றான் 511
மருசி சினந்து கூறுவன
முன்னமோர் கருமம் வேண்டி மொழிபவேல் மனிதர் தம்மால்என்னவ ரேனு மாக விகழ்ந்திடப் படுப போலாம்அன்னதே யுலக வார்த்தை யாவதின் றறியும் வண்ணம்மின்னவின் றிலங்கும் வேலோய் நின்னுழை விளங்கிற் றன்றே 512
பூவிரி யுருவக் கண்ணிப் பொலங்குழை யிலங்கு சோதித்தேவரே யெனினுந் தோறச் சில்பகல் செல்ப வாயில்ஏவரே போல நோக்கி யிகழ்ந்துரைத் தெழுவ தன்றேமாவிரி தானை மன்னா மனிதர தியற்கை யென்றான் 513
வரைமலி வயங்கு தோளாய் வியாதியான் மயங்கி னார்க்குச்சுரைமலி யமிர்தத் தீம்பால் சுவைதெரிந் துண்ண லாமோவிரைமலி விளங்கு பைந்தார் விஞ்சையர் செல்வந் தானும்நுரைமலி பொள்ளல் யாக்கை மனித்தர்க்கு நுகர லாமோ 514
அறவிய மனத்த ரன்றி யழுங்குத லியல்பி னார்க்குப்பிறவியை யறுக்குங் காட்சிப் பெருநிலை யெய்த லாமோவெறிமயங் குருவக் கண்ணி விஞ்சையர் விளங்கு தானம்மறவியின் மயங்கி வாழும் மனித்தர்க்கு நிகழ்த்த லாமோ 515
அருங்கடி கமழுந் தாரை யழிமதக் களிற்றி னாற்றல்மரங்கெடத் தின்று வாழுங் களபக்கு மதிக்க லாமோஇரங்கிடு சிறுபுன் வாழ்க்கை யிந்நிலத் தவர்கட் கென்றும்வரங்கிடந் தெய்த லாமோ மற்றெமர் பெருமை மன்னா 516
உள்ளிய மரங்கொள் சோலை மண்மிசை யுறையு மாந்தர்ஒள்ளிய ரேனுந் தக்க துணர்பவ ரில்லை போலாம்வெள்ளியஞ் சிலம்பி னென்கோன் விடுத்தே யேது வாகஎள்ளியோ ருரையு மீயா திருந்தனை யிறைவ வென்றான் 517
பயாபதி மன்னன் பதில் உரைத்தல்
ஆங்கவ னுரைப்பக் கேட்டே யம்பர சரனை நோக்கித்தேங்கம ழலங்கன் மார்ப சிவந்துரை யாடல் வேண்டாஓங்கிய வோலை மாற்றக் குரியவா றுரைக்க மாட்டாதீங்கியா னிருந்த தென்றா னெரிசுடர் வயிரப் பூணான் 518
வெஞ்சுடர் தெறுதீ விச்சா தரரென்பார் மிக்க நீரார்செஞ்சுடர்த் திலதக் கண்ணித் தேவரே தெரியுங் காலைமஞ்சிடை மண்ணுள் வாழும் மக்களுக் கவர்க டம்மோடெஞ்சிய தொடர்ச்சி இன்ப மெய்துதற் கரிது மாதோ 519
ஈட்டிய வூன்செய் யாக்கை யெம்முழை யின்ன வாறுவாட்டமில் வயங்கு கண்ணி மணிமுடி மன்ன னோலைகாட்டிநீ யுரைத்த வெல்லாங் கனவெனக் கருதி னல்லான்மீட்டது மெய்ம்மை யாக வியந்துரை விரிக்க லாமோ 520
இன்னவ னின்ன நீரா னின்னவே யெய்து கென்றுமுன்னவன் செய்த மொய்ம்பின் வினைகளே முயல்வ தல்லால்பின்னவன் பிறந்து தன்னாற் பெறுதலுக் குரிய வாயதுன்னுவ தென்றுக் கான்று துணியுமோ சொல்ல வென்றான் 521
மெய்ப்புடை தெரிந்து மேலை விழுத்தவம் முயன்று நோற்றார்க்கொப்புடைத் துங்கள் சேரி யுயர்நிலைச் செல்வ மெல்லாம்எப்படி முயறு மேனு மெங்களுக் கெய்த லாகாதப்படி நீயு முன்னர் மொழிந்தனை யன்றே யென்றான் 522
விஞ்சைச் சாரணான் நாணிச் சினம் மறுதல்
இறைவனாங் குரைத்த சொற்கேட் டென்னைபா வம்பொ ருந்தாக்கறையவா மொழிகள் சொன்னேன் காவலன் கருதிற் றோரேன்பொறையினாற் பெரியன் பூபன் சிறியன்யா னென்று நாணிஅறிவினாற் பெரிய நீரா னவிந்தன கதத்த னானான் 523
பயாபதியின் ஐயத்தை மருசி அகற்றுதற்கு உரைக்கத் தொடங்கல்
கிளர்ந்தொளி துளும்பும் மேனிக் கேசர ரோடு மண்மேல்வளர்ந்தொளி திவளும் பூணோர் மணவினை முயங்க லில்லென்றளந்தறி வரிய சீரோற் கையமீ தகற்று கென்றாங்குளர்ந்துன னுணர்வி னூக்கி யுரைக்கிய வெடுத்துக் கூறும் 524
விஞ்சையரும் மனிதரே என்பதை மருசி விளக்கிக் கூறுதல்
மஞ்சிவர் மணங்கொள் சோலை மணிவரைச் சென்னி வாழும்விஞ்சையர் விச்சை யாலே விழுமிய ரென்ப தல்லால்அஞ்சலில் தானை வேந்தே மனிதரே யவரும் யாதும்வெஞ்சுடர் விளங்கு வேலோய் வேற்றுமை யின்மை கேண்மோ 100 525
விஞ்சையன் தன்னை விளக்கிக் கூறுதல்
மண்ணவில் முழவின் மாநீர்ப் பவபுர முடைய மன்னன்பண்ணவில் களிதல் யானைப் பவனவே கற்குத் தேவிகண்ணவில் வடிவிற் காந்தி மதியவள் பாவைவண்ணவிற் புருவ வாட்கண் வாயுமா வேகை யென்பான் 526
மற்றவ ளோடும் வந்தேன் மன்னன்யான் மருசி யென்பேன்அற்றமில் கேள்வி யெந்தை யஞ்சுமா னென்னும் பேரான்பெற்றதா யருசி மாலை பெருமக னருளினால் யான்கற்றநூல் பல்ல வாகுங் கருமணிக் கடகக் கையான் 527
அலகைசா லாதி காலத் தரசர்கள் தொடர்ச்சி யெல்லாம்உலகநூல் பலவு மோதி யுணர்ந்தன னுரைப்பக் கேண்மோவிலகிய கதிர வாகி விடுசுடர் வயிரக் கோலத்திலகம்வீற் றிருந்த கண்ணித் திருமுடிச் செல்வ என்றான் 528
மருசி நமியின் வரலாறு கூறுகின்றான்
ஆதிநா ளரசர் தங்க ளருங்குல மைந்து மாக்கிஓதநீ ருலகின் மிக்க வொழுக்கமுந் தொழிலுந் தோற்றித்தீதுதீர்ந் திருந்த பெம்மான் திருவடி சாரச் சென்றுநீதி நூற் றுலகம் காத்து நிலத்திரு மலர நின்றான் 529
முசிநாச் சுரும்பு பாய முருகுடைத் துருக்குஞ் சோலைக்காசிநாட் டரசன் செங்கோற் கதிர்முடிக் கச்ச னென்பான்மாசினாற் கடலந் தானை மன்னவற் றவற்குத் தேவிதூசினாற் றுளும்பு மல்குல் சுதஞ்சனை சுடரும் பூணாய் 530
வேய்ந்தக நிழற்றுங் கோதை மிளிர்மணிக் கலாப வட்டம்போந்தகந் திகழ்ந்து மின்னுப் பூந்துகில் பொலிந்த வல்குல்வாய்ந்தகங் கமழுங் கோதை யவள்பெற்ற வரச சிங்கநாந்தகக் கிழவர் கோவே நமியென்பான் நலத்தின் மிக்கான் 531
அங்கவ னரசு வேண்டா னற்கடல் படைத்த நாதன்பங்கயங் கமழு மேனி பவித்திர பரம யோகிதங்கிய தியானப் போழ்தி றாழ்ந்துதன் றடக்கை கூப்பிப்பொங்கிய காதல் கூரப் பாடினன் புலமை மிக்கான் 532
அருகக் கடவுள் வணக்கம்
அலகிலா ஞானத் தகத்தடங்க நுங்கிஉலகெலாம் நின்று னொளித்தாயு நீயேஒளித்தாயு நீயே யுயிர்க்கெலாங் கண்ணாயளித்தாயுங் காத்தாயு நீயேவாழி யறவேந்தே 533
அழனாறும் வெங்கதிரோ னாண வலராதுநிழனாறு மூர்த்தியாய் நின்றாயு நீயேநின்றாயு நீயே நிறைபொரு ளெல்லைக்கட்சென்றாயும் வென்றாயு நீயேவாழி திருமாலே 534
நிறைதரு கேவலத்தோய் நின்னடியார்க் கெல்லாங்குறைதலி லின்பங் கொடுப்பயு நீயேகொடுப்பயு நீயேயெங் குற்றவேல் வேண்டாய்விடுத்தாயு நீத்தாயு நீயேவென்ற பெருமானே 535
நமிபாடிய இசையின் தன்மை
என்றவன் பாடக் கேட்டே யிறஞ்சின குறிஞ்சி யேகாநின்றன விலங்கு சாதி நிலங்கொண்ட பறவை எல்லாமன்றுமெய் மறந்து சேர்ந்தார் கின்னர ரமரர் தாழ்ந்தார்வென்றவன் றியானத் துள்ளான் வியந்திலன் சிறிதும் வேந்தே 536
நமியின் இசைகேட்டு ஆதிசேடன் வருதல்
மணநிரைத் திலங்குந் தாரோய் மற்றவ னுலோக நாதன்குணநிரைத் திசைத்த கீதங் கேட்டலு மணிகொள் கோவைக்கணநிரைத் திலங்குங் காய்பொன் முடிமிசை யீரைஞ்ஞாறுபணநிரைத் திலங்கப் புக்கான் பணதர ரரச னன்றே 537
நமியை வணங்குதல்
பன்னக ருலகங் காக்கும் பாய்கதிர்ப் பசும்பொன் மேனிமின்னவிர் வயிரச் சூட்டு விடுசுடர் மணிப்பொற் பூணான்தன்னிக ரிகந்த தோன்றல் சரணெனப் பரமன் பாதம்மன்னர்கட் கரசன் முன்னை வலங்கொடு வணக்கங் செய்தான் 538
நமியின் இசையில் தேவர்கள் ஈடுபட்டமை
தேந்துண ரிலங்கு கண்ணித் தேவனத் தேவர் கோனைத்தீந்தொடை நரம்பின் றெய்வச் செழுங்குரல் சிலம்ப வேத்தப்பூந்துணர்க் கற்ப லோகம் புடைபெயர்ந் திட்ட போற்றாவேந்துடை மான மெல்லாம் வேலினால் விடுத்த வேந்தே 539
ஆதிசேடன் நமியரசனை வினவுதல்
மாண்டதன் நிலைமை யுள்ளி வருபொருண் மெய்ம்மைநோக்கித்தூண்டிய சுடரி னின்ற தியானத்தைத் துளங்கு வாய்போலீண்டுவந் திசைக்குற் றேவ லெம்மிறை யடிக்கட் செய்தாய்வேண்டுவ தெவன்கொ லென்றான் மிடைமணிப் பூணினானே 540
நமியரசன் விடையிறுத்தல்
பண்மிசைப் படர்ந்த சிந்தைப் பணதரற் பணிந்து மாற்றத்துண்மிசைத் தொடர்பு நோக்கி யுறுவலி யதனைக் கேளாவிண்மிசை யவர்கள் போல வேண்டிய விளைக்குஞ் செல்வமண்மிசைப் பெறுவ னாக மற்றிதென் மனத்த தென்றான் 541
ஆதிசேடன் நமிக்கு வரமளித்துச் செல்லுதல்
இச்சையங் குரைப்ப கேட்டாங் கிமைய வரியற்கை யெய்தும்வீச்சையுந் துணையும் வெள்ளி விலங்கலுங் கொடுத்து வேந்தாய்நிச்சமு நிலாக வென்று நிறுவிப்போய் நிலத்தின் கீழ்த்தனச்சமி லுலகஞ் சேர்ந்தா னாயிரம் பணத்தி னானே 542
நமியின் வழித்தோன்றலே சடியரசன் என்று மரீசி பயாபதிக்குப் பகர்தல்
ஆங்கவன் குலத்து ளானெம் மதிபதி யவனோ டொப்பாயோங்கிய குலமுஞ் செல்வப் பெருமையு முடைய நீயுமீங்கிரு குலத்து ளீர்க்குங் கருமம்வந் திசைத்த போழ்தினீங்கரு நறுநெய் தீம்பால் சொரிந்தோர் நீர்மைத் தென்றான் 543
பயாபதியின் வரலாறு கூறத்தொடங்குதல்
தங்குலத் தொடர்ச்சி கூறித் தானவ னிருந்த போழ்தினுங்குல நிலைமை யெல்லா நூலினீ யுரைத்த வாறேஎங்குல நிலைமை யானு முரைப்பனென் றெடுத்துக் கொண்டுபொங்கலர்ப் பிணைய லான்றன் புரோகிதன் புகல லூற்றான் 544
அங்கனிமித்திகன் கூறுதல்
யாவனாற் படைக்கப் பட்ட துலகெலாம் யாவன் பாத்ததேவனால் வணக்கப்பட்ட தியாவன தகலஞ் சேர்ந்துபூவினாள் பொறியொன் றானாள் புண்ணிய வுலகங் கானஏவினான் யாவ னம்மை யாவன துலக மெல்லாம் 545

மற்றவ னருளின் வந்தான் மரகத மணிக்குன் றொப்பச்சுற்றி நின் றிலங்கு சோதித் தோள்வலி யெனும்பே ரானக்கொற்றவ னுலகங் காத்த கோன்முறை வேண்டி யன்றேகற்றவ ரின்று காறுங் காவனூல் கற்ப தெல்ல்லம் 546
வாகுவலி தவஞ்செய்யச் செல்லுதல்
கொடிவரைந் தெழுதப் பட்ட குங்குமக் குவவுத் தோளான்இடிமுர சதிருந் தானை யிறைத்தொழில் மகனுக் கீந்துகடிமண் மனுக்குந் தெய்வக் கழலடி யரசர் தங்கள்முடிபொர முனிவிற் றான்போய் முனிவன முன்னினானால் 547
கயிலாயத்து முடியில் தவஞ்செய்தல்
விண்ணுயர் விளங்கு கோட்டு விடுசுடர் விளங்க மாட்டாக்கண்ணுயர் கதலி வேலிக் கார்க்கயி லாய நெற்றிப்புண்ணியக் கிழவன் போகிப் பொலங்கலம் புலம்ப நீக்கித்திண்ணிய தியானச் செந்தீச் செங்சுடர் திகழ நின்றான் 548
வாகுவலியின் தவநிலைமை
கழலணிந் திலங்கு பாதங் கலந்தன கருங்கட் புற்றத்தழலணிந் தெழுந்த வைவா யருமணி யாடு நாகம்பொழிலணிந் தெழுந்த வல்லி புதைந்தன பூமி நாதன்குழலணிந் தெழுந்த குஞ்சி குடைந்தன குருவிக் கூட்டம் 549
அருமுடி யரசர் தாழ்ந்த வடிமிசை யரவ மூரக்கருவடி நெடுங்க ணல்லார் கலந்த தோள் வல்லி புல்லமருவுடை யுலகம் பாடல் வனத்திடைப் பறவை பாடத்திருவுடை யடிக ணிண்ற திறமிது தெரிய லாமோ 550
வெண்டவாங் குவளைக் கண்ணி மன்னர்தம் மகுட கோடிவிண்டவாம் பிணைய லுக்க விரி மதுத் துவலை மாரிஉண்டவான் கழல்கள் சூழ்ந்த திருவடி யரவ மூரக்கண்டவா றிங்க ணார்க்குங் கருதுவ தரிது கண்டாய் 551
அடுக்கிய வனிச்சப் பூவி னளிமே லரத்தச் செவ்வாய்வடிக்கயல் நெடுங்க ணார்தம் வளிக்கையால் வளித்த மார்பில்தொடுக்கிய தொடுத்த போலுந் துறுமலர்க் கத்தி மாதர்கொடிக்கையா லிடுக்க றன்மேல் கொற்றவன் குலவப் பட்டன் 552
புல்லிய பொலங்கொம் பொப்பார் புலவியுட் கலவி சென்றுமெல்லிய மாலை தம்மால் விசித்தலை விடுத்து மீட்டுமல்லுய ரலர்ந்த மார்பின் மாதவிப் பேதை யார்த்தவல்லிகள் விடுக்க மாட்டா மனத்தினன் மன்ன னானான் 553
வாகுவலி தேவரினும் உயர்நிலை யடைதல்
ஓவலில் குணங்க ளென்னு மொளிர்மணிக் கலங்க டாங்கித்தேவர்க ளுலக மெல்லாஞ் செழுமண மயர்ந்து கூட்டக்கேவலப் பெண்ணென் பாளோர் கிளரரொளி மடந்தை தன்னைஆவியு ளடக்கிப் பின்னை யமரர்க்கு மரிய னானான் 554
வாகுவலியின் வழித்தோன்றலே பயாபதி மன்னன் என்றல்
எங்கள்கோ னிவன்க ணின்று மிக்குயர் குலத்து வேந்தர்தங்களோர் புறஞ்சொல் வாராத் தன்மையா லுலகங் காத்தார்அங்கவர் வழிக்கண் தோன்றி யகலிடம் வணங்க நின்றஇங்கிவன் பெருமை நீயுமறிதியா லேந்த லென்றான் 555
மருசி மேலுங் கூறத்தொடங்குதல்
குடித்தொட ரிரண்டுங் கேட்டே குறுமயி ரெறிந்து கண்ணுள்பொடித்தநீர்த் திவலை சிந்தப் புகழ்ந்தன ரிருந்த வேந்தர்அடுத்தெரி யலர்ந்த செம்பொ னணிமணி முடியி னானங்கெடுத்துரை கெடாத முன்னக் கேசர னிதனைச் சொன்னான் 556
வாகுவலி கச்சனுக்கு மருமகன் என்று கூறுதல்
இப்படித் தாயிற் பண்டை யிசைந்தது சுற்ற மென்னைஅப்படி யரிய செய்த வடிகளெம் மரச னாயகைப்புடை யிலங்கு செவ்வேற் கச்சற்கு மருக னாரென்றொப்புடைப் புராண நன்னூ லுரைப்பதியா னறிவ னென்றான் 557
மன்னவன் மனத்தி னாற்ற மிறைவனை வணங்கி வாழ்த்திப்பின்னவன் ரன்னை நோக்கிப் பேசினன் பிறங்கு தாரோய்முன்னிய வுலக நூலுங் குலங்களு முறையு முள்ளிட்டின்னவா றறியு நீரோ ரில்லை நின் போல வென்றான் 558
அரசாட்சிப் பொறிக்கு வாய் தூதுவர் என்றல்
மந்திரக் கிழவர் கண்ணா மக்கடன் றாள்க ளாகச்சுந்தர வயிரத் திண்டோ டோ ழராச் செவிக ளொற்றாஅந்தர வுணர்வ நூலா வரசெனு முருவு கொண்டஎந்திர மிதற்கு வாயாத் தூதுவ ரியற்றப் பட்டார்559
சிறந்த தூதுவன் சிறப்பு
ஆதிநூ லமைச்சர்க் கோது மாண்பொலா மமைந்து நின்றான்தூதனாச் சொல்லிற் சொல்லாச் சூழ்பொரு ளில்லை போலாமேதிலார்க் காவ துண்டோ வின்னன புகுந்த போழ்திற்கோதிலாக் குணங்க டேற்றிக் கொழித்துரை கொளுத்த லென்றான்560
பயாபதி மரிசியைப் பாராட்டல்
மற்றிம்மாண் புடைய நின்னை யுடையவம் மன்னர் மன்னன்எற்றைநூற் றெய்த மாட்டா னிதன்றிற நிற்க வெம்மைச்சுற்றமா நினைந்து நின்னைத் தூதனா விடுத்துச் செல்லப்பெற்றியாம் பிறவி தன்னாற் பெறும்பயன் பெற்ற தென்றான்561
பயாபதி மன்னன் மருசியை நோக்கிச் சில கூறுதல்
இன்றியா னின்னை முன்வைத் தினிச்சில வுரைக்கல் வேண்டாஒன்றியா னுரைக்கற் பால வுரையையு முணர்த்தி நீயேவென்றியால் விளங்கு தானை விஞ்சையங் கிழவன் கண்ணாநின்றியான் வாழ்வ தல்லா னினைப்பினி யில்லை மன்னோ 562
கொற்றவன் குறிப்பி தாயிற் கூவித்த னடியன் மாரைஉற்றதோர் சிறுகுற் றேவற் குரியராய்க் கருதித் தானேஅற்றமி லலங்கல் வேலோ னறிந்தருள் செய்வ தல்லான்மற்றியா னுரைக்கு மாற்ற முடையனோ மன்னற் கென்றான்563
மருசிக்குச் சிறப்புச் செய்தல்
தூதன்மற் றதனைக் கேட்டே தொழுதடி வணங்கிச் செங்கோல்ஏதமில் புகழி னாயானடிவலங் கொள்வ னென்னப்போதுசே ரலங்க லானும் பொலங்கலம் பொறுக்க லாகாச்சோதிய சுடரச் சேர்த்திப் பெருஞ்சிறப் பருளிச் செய்தான்564
மருசிக்கு நாடகங் காட்டி மறுநாள் அனுப்புதல்
அற்றைநா ளங்குத் தாழ்ப்பித் தகனகர்ச் செல்வந் தன்னோடுற்றவ னுவப்பக் கூறி யுரிமைநா டகங்கள் காட்டிப்பிற்றைநாட் குரவர் தம்மைப் பின்சென்று விடுமி னென்றுமற்றவர்க் கருளிச் செய்தான் மருசியுந் தொழுது சென்றான்565
மருசி தனது நகரத்தை அடைதல்
உலனல னடுதிண்டோ ளூழிவே லோடை யானைச்சலநல சடியென்பேர்த் தாமரைச் செங்க ணான்றன்குலநல மிகுசெல்கைக் கோவொடொப் பார்கள் வாழுநலனமர் நளிசும்மைத் தொன்னகர் நண்ணி னானே 566

7.சீயவதைச் சருக்கம்
மரீசி சடி மன்னனைக் காண்டல்
மற்ற மாநகர் மருசி புக்கபின்கொற்ற வேலவன் கோயின் மாநெதிமுற்று வான்கடை மூன்றுஞ் சென்றுகோன்சுற்று வார்கழ றெழுது துன்னினான் 567

விலங்கு வார்குழை மிளிர்ந்து வில்லிடக்கலந்து மாமணிக் கடக மின்செயஅலங்கல் வேலினா னங்கை யாலவற்கிலங்கு மாநிலத் திருக்கை யேவினான் 568
சடிமன்னன் மரீசியின் கருத்தைக் குறிப்பாலுணர்தல்
தொகுத்த மாண்புடைத் தூதன் மன்னவன்வகுத்த மாமணித் தலத்தின் மேன்மனத்தகத்தி னாலமர்ந் திருப்ப வாங்கவன்முகத்தி னாற்பொருண் முடிவு கண்ணினான் 569
இதுவுமது
தூத னின்முகப் பொலிவி னாற்சுடர்க்காது வேலினான் கரும முற்றுறஓதி ஞானிபோ லுணர்ந்த பின்னதுகோதில் கேள்வியான் றொழுது கூறினான் 570
இதுமுதல் உஅ செய்யுள்கள் மரீசியின் கூற்று
வெல்க வாழிநின் வென்றிவார்கழல்செல்க தீயன சிறக்க நின்புகழ்மல்க நின்பணி முடித்து வந்தனன்பில்கு மும்மதப் பிணர்க்கை யானையாய் 571
இங்கு நின்றுபோ யிழிந்த சூழலும்அங்கு வேந்தனை யணைந்த வாயிலும்பொங்கு தானையான் புகன்ற மாற்றமுந்தொங்கன் மார்பினாய் சொல்லு கேனெனா 572
அள்ளி லைச்செழும் பலவி னார்சுளைமுள்ளு டைக்கனி முறுகி விண்டெனக்கள்ளு றைத்தொறுங் கழுமி யூற்றறாவள்ளி லைப்பொழின் மகிழ்ந்து புக்கதும் 573
முள்ள ரைப்பசு முளரி யந்தடத்துள்ளி ரைத்தெழு மொலிசெய் வண்டினம்கள்ளி ரைத்துகக் கண்டு வண்சிறைப்புள்ளி ரைப்பதோர் பொய்கை சார்ந்ததும் 574
நித்தி லம்மணி நிரந்து வெள்ளிவேய்பத்தி சித்திரப் பலகை வேதிகைசித்தி ரங்களிற் செறிந்து காமனார்அத்தி ரம்மென அசோகங் கண்டதும் 575
தன்ணி ழற்சுடர்த் தமனி யத்தினான்மன்ணி ழற்கொள மருங்கு சுற்றியவெண்ணி ழற்சுடர் விளங்கு கற்றலங்கண்ணி ழற்கொளக் கண்ட காட்சியும் 576
சுரிந்த குஞ்சியன் சுடரு மேனியன்எரிந்த பூணின னிலங்கு தாரினன்வரிந்த கச்சைய னொருவன் வந்துவண்டிரிந்து பாயவிங் கேறு கென்றதும் 577
மற்ற வன்றனக் குரைத்த மாற்றமுங்கொற்ற வன்விடக் கொம்ப னார்சிலர்உற்ற மங்கலக் கலங்க ளோடுடன்முற்ற வூண்டொழின் முடிந்த பெற்றியும் 578
பங்கய யத்தலர்ச் செங்கண் மாமுடித்திங்கள் வண்ணனுஞ் செம்பொ னீள்குழைப்பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனும்அங்கு வந்தது மவர்கள் சொற்றதும் 579
நற்பு றத்தன நாற்ப தாம்வயதிப்பு ரத்தன விளங்க ருங்கைம்மாமொய்ப்பு றத்துமேன் முழங்கு தானையோடப்பு றத்தர சவைய டைந்ததும் 580
மன்ன வன்கழல் வணங்கி நின்றதும்பின்ன வன்றனா லிருக்கை பெற்றதும்பொன்னி றப்பொறி புகழ்ந்த சாதகந்துன்னி வாசகந் தொழுது கொண்டதும் 581
ஓட்டி றானையா னோலை வாசகங்கேட்ட மன்னவன் கிளர்ந்த சோதியான்மீட்டொர் சொற்கொடா விம்மி தத்தனாயீட்டு மோனியா யிருந்த பெற்றியும் 582
இருந்த மன்னன்மே லெடுத்த மாற்றமும்வருந்தி மற்றவன் மறுத்த வன்ணமும்புரிந்து தொல்குலம் புகன்ற பெற்றியுமருந் தகைத் தொடர் பமைந்த வாக்கமும் 583
பின்னை மன்னவன் பேணி நன்மொழிசொன்ன வண்ணமுஞ் சுற்ற மாயதும்பொன்ன கைக்குலம் பொலிந்து கண்கொளவின்ன கைச்சிறப் பருளி யீந்ததும் 584
அருங்கல லக்குழாத் தரசன் றேவிமார்பெருங்கு லத்தவர் பெயர்ந்து கண்டதுமொருங்கு மற்றுளோ ருரைத்த வார்த்தையுஞ்சுருங்கில் கேள்வியான் றொழுது சொல்லினான் 585
இதுமுதல் எட்டுச் செய்யுள்கள், பயாபதி மன்னனின் பெருமையை மரீசி கூறல்
சொன்ன வார்த்தையிஃ திருக்கச் சொல்லுவதின்ன மொன்றுள வடிகள் யான்பலமன்னர் தங்களை மகிழ்ந்து கண்டனனன்ன னீர்மையா ரரச ரில்லையே 586
கற்ற நூல்பிறர் கற்ற நூலெலாமுற்ற நோக்கினு முற்ற நோக்கலவுற்ற நூலெலா முற்ற நூல்களாய்ப்பெற்ற நூலவன் பெற்றி வண்ணமே 587
எரியு மாணையான் குளிரு மீகையான்பெரியன் பெற்றியாற் சிறிய னண்பினானரியன் வேந்தர்கட் கெளிய னாண்டையார்க்குரிய னோங்குதற் கோடை யானையான் 588
எல்லை நீருல கினிது கண்படவெல்லும் வேலவன் விளங்கு தண்ணளியில்லை யேலுல கில்லை யாமெனநல்ல னேயவ னாம வேலினாய் 589
கற்ற நூலினார் கலந்த காதலாலுற்ற போழ்துயிர் கொடுக்கு மாற்றலாற்கொற்ற வேலவன் குடையி னீழலார்சுற்ற மாண்பினர் சுடரும் வேலினாய் 590
கோதிலார் குல மக்கண் மாக்கண்மற்றேதி லாரென வியைந்த தின்மையார்ஆத லாற்றமர் பிறர்க ளாவதங்கோதி லாரவர்க் குள்ளஃ தில்லையே 591
வைய மின்புறின் மன்ன னின்புறும்வெய்ய தொன்றுறிற் றானும் வெய்துறுஞ்செய்ய கோலினாய் செப்ப லாவதன்றைய தாரினா னருளின் வண்ணமே 592
வீவில் வீங்குநீர் வேலி வாழ்பவர்க்காவி யாபவ ரரச ராதலாற்காவ லோவுங்கொ லென்று கண்படான்மாவ றானையம் மன்னர் மன்னனே 593
இதுமுதல் ஐந்து செய்யுட்கள் விசயதிவிட்டரின் பண்பு கூறுவன
மங்குல் மாமழை மாரி வண்கையான்பொங்கு காதலால் புதல்வர் தாமுமற்றிங்கண் வேந்தர்கட் கேனை மான்கண்முன்சிங்க வேறெனச் செப்பு நீரரே 594
கைய வாச்சிலைக் காம னிங்கிருமெய்யி னால் வெளிப் பட்ட நீரதால்வைய மாள்பவன் புதல்வர் வார்கழலையன் மார்கடம் மழகின் வண்ணமே 595
சங்க வண்ணனார் தம்பி தானுநீர்பொங்கு கார்முகில் புரையு மேனியனங்க ணிவ்வுல காள நாட்டியமங்க லப்பொறி மன்ன காண்டியால் 596
செங்கண் மாலவன் தெய்வ மார்பகம்பங்க யத்துமேற் பாவை தன்னுடனங்கு லக்கொடி நங்கை சேர்வதற்கிங்கன் மாதவ மெவன்கொல் செய்ததே 597
மரீசி திவிட்டனும் சுயம்பிரபைக்கும் அமைந்த ஒப்பினை வியத்தல்
நங்கை யங்கவ னலத்திற் கொப்பவளிங்கி வட்குவ றேந்த லில்லிவர்பொங்கு புண்ணியம் புணர்த்த வாறிதுவெங்கண் யனையாய் வியக்கு நீரதே 598
சடி மன்னன் மரீசிக்குச் சிறப்பு செய்தல்
என்று கூறலு மேந்து நீண்முடிவென்றி நீள்புகழ் வேக யானையானன்று மற்றவற் கருளி யீந்தனனின்று மின்சுடர் நிதியின் நீத்தமே 599
சடிமன்னன் அமைச்சரை வினாதல்
மற்ற வன்றனை மனைபு கப்பணித்துற்ற மந்திரத்தவர்க ளோடிருந்தெற்று நாமினிச் செய்வ தென்றனன்வெற்றி நீள்குடை வேந்தர் வேந்தனே 600
அமைச்சரின் விடை
செங்க ணீன்முடிச் செல்வ சென்றொருதிங்கள் நாளினுட் டிவிட்ட னாங்கொருசிங்கம் வாய் பகத் தெறுவ னென்பதுதங்கு கேள்வியான் றான்முன் சொன்னதே 601
இதுவுமது
ஆதலா லஃதறியும் வாயிலாவோது மாண்பினா னொருவ னெற்றனாய்த்தீதி றானையாய் செல்ல வைப்பதேநீதி யாமென நிகழ்த்தி னாரரோ 602
மன்னன் ஒற்றாய்தல்
உய்த்து ணர்ந்தவ ருரைத்த நீதிமேல்வைத்த வொற்றினன் மன்ன னானபினத்தி றத்தனே யமர்ந்த சிந்தையனொத்த சுற்றமோ டுவகை யெய்தினான் 603
இனி அச்சுவகண்டன் செய்தியைக் கூறுவாம் எனல்
இத்தி சைக்கணிவ் வாறிது செல்லுநாளத்தி சைக்கணஞ் சப்படு மாழியானெத்தி சைக்கும் வெய் யோனியன் முன்னுறவைத்தி சைத்தன மற்றதுங் கூறுவாம் 604
இதுமுடல் 6 செய்யுள்கள் அச்சுவக்சுண்டன் காமக் களியாட்டம் கூறுவன
பஞ்சி மேன்மிதிக் கிற்பனிக் குந்தகையஞ்சி லோதிய ரம்முலை நாஞ்சிலாமஞ்சு தோய்வரை மார்ப மடுத்துழத்துஞ்ச லோவுந் தொழிலின னாயினான் 605
முத்த வாணகை மோய்பவ ளத்துணியொத்த வாயமு தொண்கடி கைத்திரள்வைத்த வாயின னாய்மட வார்கடஞ்சித்த வாரிக ளுட்சென்று தங்கினான் 606
ஆரந் தங்கிய மார்பனு மந்தளிர்க்காருங் கொம்பனை யாருங் கலந்துழித்தாருங் கொங்கை ளும்பொரத் தாஞ்சிலவாரம் பட்டணி வண்டின மார்த்தவே 607
வண்டு தோய்மது வாக்கிவள் ளத்தினுட்கொண்டு கொம்பனை யார்கள் கொடுப்பவஃதுண்டு மற்றவ ரொண்டுவர் வாயொளித்தொண்டை யங்கனி யின்சுவை யெய்தினான் 608
தாம மென்குழ லார்தடங் கண்ணெனுந்தேம யங்கிய செங்கழு நீரணிகாம மென்பதொர் கள்ளது வுண்டரோயாம மும்பக லும்மயர் வெய்தினான் 609
சுற்று வார்முலை யார்தந் துகிற்றடமுற்று மூழ்கும் பொழுது முனிவவருற்றபோழ் துணர்த் தும்பொழு தும்மலான்மற்றொர் போழ்திலன் மன்னவ னாயினான் 610
மண்க னிந்த முழவின் மடந்தையர்கண்க னிந்திடு நாடகக் காட்சியும்பண்க னிந்தவின் றீங்குரற் பாடலும்விண்க னிந்திட வேவிழை வேய்தினான் 611
வாவி யும்மது மண்டபச் சோலையுந்தூவி மஞ்ஞை துதைந்தசெய் குன்றமும்பாவும் வெண்மண லும்புனற் பட்டமுமேவு நீர்மைய னாய்விளை யாடினான் 612
மின்னுஞ் செங்கதிர் மண்டிலம் வெய்தொளிதுன்னுஞ் திங்கட் பனிச்சுடர் தண்ணிதுஎன்னு மித்துணை யும்மறி யான்களித்தன்ன னாயின னச்சுவ கண்டனே 613
அச்சுவக்கண்டனின் அரசியல்
சீறிற் றேந்துணர் வின்றிச் செகுத்திடுமாறுகண் டென்பதோர் மாற்றம் பொறான்மனந்தேறின் யாரையும் தேறுஞ் செருக்கொடிவ்வாறு சென்ற தவற்கர சென்பவே 614
பூமகள் அச்சுவக்கண்டன் ஆட்சியிலிருந்தகலச் செவ்வி தேர்தல்
தோடு மல்கு சுரும்பணி கோதையர்கோடி மென்றுகிற் குய்யத் தடம்படித்தாடித் தன்னணை யாமையிற் பூமகள்ஊட லுற்றிடம் பார்த்துள ளாயினாள் 615
சதவிந்து என்பான் அச்சுவகண்டற்கு அரசியலறம் கூறல்
ஆங்கொர் நாளிறை பெற்றறி வின்கடல்தாங்கி னான்சத விந்துவென் பானுளன்நீங்க லாப்புக ழான்ற னிமித்திகன்வீங்கு வெல்கழ லார்கு விளம்பினான் 616
அரசர்க்குரிய அறுவகைப் பகைகள்
மன்ன கேள்வளை மேய்திரை மண்டிலந்தன்னை யாள்பவர்க் கோதின் தங்கணேபன்னி னாறு பகைக்குல மாமவைமுன்னம் வெல்கவென் றான்முகம் நோக்கினான் 617
தன்னை வென்றதண் டார்வய வேந்தனைப்பின்னை வேறல பிறர்க்கரி தாதலான்மன்ன மற்றவ னாளும் வரைப்பகம்பொன்னின் மாரி பொழிந்திடு நன்றரோ 618
மாசி றண்டன்ன தோண்மன்ன மன்னியகோசி றண்டத்த னாய்விடிற் கொற்றவனேசி றண்டம் பரவவின் வையகமாசி றண்டத்த னாயினி தாளுமே 619
பெற்ற தன்முத லாப்பின் பெறாததுஞ்சுற்றி வந்தடை யும்படி சூழ்ந்துசென்றுற்ற வான்பொருள் காத்துய ரீகையுங்கற்ற வன்பிறர் காவல னாகுவான் 620
அருக்கன் றன்னறி வாக வலர்ந்தநீர்த்திருக்க வின்றசெல் வச்செழுந் தாமரைசெருக்கெ னப்படுந் திண்பனி வீழுமேல்முருக்கு மற்றத னைமுகத் தாரினாய் 621
இகழ்ச்சி யிற்கெடு வார்களை யெண்ணுகமகிழ்ச்சி யுண்மதி மைந்துறும் போதெனப்புகழ்ச்சி நூலுட் புகன்றனர் பூவினுட்டிகழ்ச்சி செல்பொன் மணிமுடி மன்னனே 622
அரசே! நீ சினந்தாலும் நினக்கு ஓர் உறுதி கூறுவேன் எனல்
நெறியி னீதிக்க னேரிவை யொப்பவுமறிதி நீயவை நிற்க வழன்று நீசெறுதி யேனுஞ்செம் பொன்முடி மன்னவோர்உறுதி யானுரைப் பானுறு கின்றதே 623
அச்சுவக்கண்டனும் அங்ஙனமாயின் அவ்வுறுதி யாது கூறுதி எனல்
என்ற லும்மிணர் வேய்முடி மாலையானன்று சொல்லுக வென்று நகைமணிக்குன்ற மன்னதிண் டோ ண்மிசைக் குண்டலஞ்சென்று மின்சொரி யச்செவி தாழ்த்தினான் 624
நிமித்திகன் கூறல்
பூமி மேற்புரி சைம்மதிற் போதனநாம நன்னக ராளு நகைமலர்த்தாம நீண்முடி யான்றன் புதல்வர்கள்காம வேளனை யாருளர் காண்டியால் 625
இதுவுமது
ஏந்து தோளவ ருள்ளிளை யானமக்காய்ந்த தொல்பகை யாகுமென் றேயுறப்போந்தொர் புன்சொ னிமித்தம் புறப்படவேந்த யான்மனத் தின்மெலி கேனரோ 626
அச்சுவக்கண்டன் நிமித்திகன் கூற்றைத் தடுத்தல்
முத்த நிண்முடி யான்மூன்ன மற்றதற்கொத்த வாறுணர்ந் தீயென வென்செயுமைத்த கைமனத் தன்மணித் தன்னெனக்கைத்த லங்கதிர் வீச மறித்தனன் 627
அச்சுவக்கண்டன் கூறுதல்
மிகையின் வந்தவிச் சாதர வேந்தர்தந்தொகையை வென்றவென் றோளுள வாப்பிறபகையி னிப்படர்ந் தென்செயு மென்றனனகைகொ ணீண்முடி நச்சர வம்மனான் 628
அச்சுவக்கண்டனின் சினமொழிகள்
மாசி லாலவட் டத்தெழு மாதரும்வீச விண்டொடு மேருத் துளங்குமோபேசின் மானிடப் பேதைக ளாற்றலாலாசி றோளிவை தாமசை வெய்துமோ 629
இதுவுமது
வேழத் தின்மருப் புத்தடம் வீறுவவாழைத் தண்டினு ளூன்ற மழுங்குமோவாழித் தானவர் தானையை யட்டவென்பாழித் தோள்மனித் தர்க்குப் பணியுமோ 630
வேக மாருதம் வீசவிண் பாற்சிறுமேக சாலம் விரிந்தெதிர் செல்லுமோவேக மாயவென் சீற்றமஞ் சாதெதிராக மானுடர் தாமசை கிற்பவோ 631
குலிச மிந்திரன் கொண்டு பணிக்கு மேன்மலையின் மாசிக ரங்களும் வீழ்த்திடுநிலைய வெஞ்சுட ராழி நினைப்பனேற்றொலைவில் வானவர் தோளுந் துணிக்குமே 632
விச்சை மற்றவர் தம்மை விடுப்பதோரிச்சை யென்கணுண் டாமெனின் யாவரேயச்ச மின்றி நிற் பாரந் நிமித்த நூல்பொச்ச லாங்கொல் புலந் தெழு நீர்மையாய் 633
புலவர் சொல்வழி போற்றில னென்பதோரலகிற் புன்சொலுக் கெஞ்சுவ னல்லதேலுலக மொப்ப வுடன்றெழு மாயினுமலைவன் மற்றதன் கண்மதிப் பில்லையே 634
ஆத லாலாதற் கேற்ற தமைச்சர்களோதி யாங்குணர்ந் தீகவென் றொட்டினான்யாதுந் தன்கணல் லார்செயற் கேன்றதோரேத முண்டெனு மெண்ணமில் லாதவன் 635
அச்சுவக் கண்டன் அமைச்சர் கூறுதல்
அலங்க லாழியி னானது கூறலுங்கலங்கு நூற்கரு மத்தொழின் மாக்கடம்புலங்கொள் சூழ்ச்சிய ராகிப் புகன்றனருலங்கொள் தோளவ னுக்குணர் வாயினார் 636
எரியுந் தீத்திர ளெட்டுணைத் தாயினுங்கரியச் சுட்டிடுங் காந்திக் கனலுமேற்றெரியிற் றொல்பகை தான்சிறி தாயினும்விரியப் பெற்றபின் வென்றிடு கிற்குமே 637
முட்கொணச்சு மரமுளை யாகவேயுட்கி நீக்கி னுகிரினுங் கொல்லலாம்வட்கி நீண்டதற் பின் மழு வுந்தறுகட்கு டாரமுந் தாங்களை கிற்பவோ 638
சிறிய வென்றிக ழார்பகை சென்றுசென்றறிய லாவவன் றாலணி மாமலர்வெறியும் வேரியும் விம்மி விரிந்துதேன்செறியுந் தொங்கற்செம் பொன்முடி மன்னனே 639
அரிமஞ்சு என்னும் அமைச்சன் கூறுதல்
அஞ்சி நின்றவர் கூறிய பின்னரிமஞ்சு வென்பவன் சொல்லுமற் றாங்கவன்செஞ்செ வேபகை யாமெனிற் றேர்ந்துகண்டெஞ்சி றொல்புக ழாய்பின்னை யெண்ணுவாம் 640
இதுவுமது
பகைய லாதவ ரைப்பகை யாக்கலும்நகையி றீமனத் தாமரை நண் பெண்ணலுமுகையின் வேய்ந்தமென் மொய்ம்மலர்க் கண்ணியாய்மிகையின் மற்றவை பின்னை வெதுப்புமே 641
அரிமஞ்சு கூறும் சூழ்ச்சி
அறியத் தேறுந் திறத்ததெவ் வாறெனிற்றிறையிற் கென்று விடுதும்விட் டாற்றிறைமுறையிற் றந்து முகமன் மொழிந்தெதிர்குறையிற் கொற்றவ குற்றமங் கில்லையே 642
அச்சுவக்கண்டன் மகிழ்ந்து தூதுவிடுதல்
என்ற லும்மிது நன்றென வேந்தொளிநின்ற நீண்முடி நீடிணர்க் கண்ணியான்சென்று தூதுவர் தாந்திறை கொள்கெனவென்றி வேலவன் மேல்விடை யேயினான் 643
அத்தூதர்களின் பண்பு
ஊட்ட ரக்குண்ட கோலரொண் கோலத்தரோட்ட ரும்பொறி யொற்றிய வோலையர்நாட்டி யம்முணர் வாரொரு நால்வர்சேண்மோட்டெ ழின்முகில் சூழ்நெறி முன்னினார் 644
வேறு - தூதர் போதன நகரத்தை எய்துதல்
தீதறு தென்மலை மாதிர முன்னுபுதூதுவர் சூழ்சுடர் சூடிய சூளிகையோதின ரோதி யுலப்பற வோங்கியபோதன மாநகர் புக்கன ரன்றே 645
அந்நகரச் சிறப்பு
செஞ்சுடர் மின்னொளி சென்று பரந்திடமஞ்சொடு வைகிய மாமணி மாளிகைவெஞ்சுடர் வீதி விலக்குவ கண்டுதம்விஞ்சையர் செல்வம் வெறுத்தன ரன்றே 646
இதுவுமது
முரி முழாவொலி விம்மி முரன்றெழுகாரி மிழார்கலி யான் மயி லாலுவசோரி முழாவிழ விற்றெரு துற்றபின்சீரி மிழாற்பொலி வெய்தினர் சென்றே 647
சூளிகை சூடிய சூல விலைத்தலைமாளிகை மேன்மழை மாமுகில் போழ்தலின்னீளிய நீரரு வித்திரள் வீழ்வனகாளைக டாதைந கர்ப்பல கண்டார் 648
கூடுநர் கோவை மணிக்கலை யுக்கவுமூடினர் சிந்திய வொண்சுடர் மாலையுமூடிய மூரி நெடுந்தெரு வொப்பவுமூடு செலற்கரி தாயிட ருற்றார் 649
மூரிநடைக்களி யானை மதத்தினொடேரி னடைக்கலி மாதம் விலாழியுமோரி நுரைப்ப வுகுத்த பெருங்கடைவேரி வெறிக்கள மொப்பது கண்டார் 650
தூதர்கள் அரண்மனையை அடைதல்
வண்டு படக்குவ ளைப்பிணை நக்கலர்விண்ட மதுப்பரு கிக்களி யின்மதர்கொண்டு நடைக்களி யன்ன மிரைப்பதொர்மண்டு புனற்புரி சைப்பதி சார்ந்தார் 651
கோயின் முகத்தது கோடுயர் சூளிகைவேயின் முகத்ததின் மாமழை வீழ்வதுஞாயின் முகத்த நகைத்திரண் முத்தணிவாயின் முகத்து மடுத்திது சொன்னார் 652
தூதர்கள் தம் வருகை அறிவிக்கும்படி வாயிலோனுக் குரைத்தல்
வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலினோய்தலி லொண்சுட ராழியி னான்றமர்வாய்தலி னின்றனர் வந்தென மன்னன்முன்நீதலை சென்றுரை நீள்கடை காப்போய் 653
பயாபதி தூதர்களை அழைத்துவரப் பணித்தல்
என்றவர் கூற விருங்கடை யானடினான்றென நாறொளி நீண்முடி யானடிமன்ற வணங்கி மொழிந்தனன் மன்னனும்ஒன்றிய போதக என்ப துரைத்தான் 654
தூதர் பயாபதிக்கு ஓலை கொடுத்தல்
பொன்னவிர் நீள்கடை காவலன் போதகவென்னலி னெய்தி யிலங்கொளி நீண்முடிமன்னவன் வார்கழல் வாழ்த்திமடக்கியசொன்னவி லோலைகை தொழுதன ரீந்தார் 655
அந்த ஓலையைப் படித்தல்
வாசகன் மற்றது வாசினை செய்தபின்மாசக னீள்முடி மன்னவன் முன்னிவைதேசக மூசிய வாழியன் சீர்த்தமரோசைக ளோலை கொடொப்ப வுரைத்தர் 656
இதுமுதல் 6 செய்யுள்கள் தூதர்கள் கூறும் செய்தி
ஊடக மோடி யெரிந்தொளி முந்தூறுமாடக மாயிர கோடியு மல்லதுசூடக முன்கையர் தோடக மெல்லடிநாடக ராயிர நாரியர் தம்மையும் 657
தெண்டிரை சிந்திய சங்கொடு செங்கதிரெண்டர னம்பவ ழக்கொடி யீட்டமும்கண்டிரள் முத்தொடு காழகி லந்துகில்பண்டரு நீரன வும்பல் பண்டமும் 658
வெண்கதிர் முத்தகில் வேழ மருப்பொடுகண்கவர் சாமரை வெண்மயி ரின்கணம்தண்கதிர் வெண்குடை யாய்தரல் வேண்டுமிதொண்சுட ராழியி னானுரை யென்றார் 659
வேறு - பயாபதியின் மனநிலை
வேந்தன்மற் றதனைக் கேட்டே வெற்றுவ னெறிந்த கல்லைக்காந்திய கந்த தாகக் கவுட்கொண்ட களிரு போலச்சேந்தவ ருரைத்த மாற்றஞ் சிந்தையு ளடக்கி வைத்துநாந்தகக் கிழவர் கோமா னயந்தெரி மனத்த னானான் 660
இதுமுதல் 5 செய்யுள்கள் பயாபதியின் சிந்தனை
கருத்துமாண் குலனுந் தேசுங் கல்வியும் வடிவுந் தம்மில்பொருத்தினாற் பழிக்க லாகாப் புலைமைமிக் குடைய ரேனுமொருத்தனுக் கொருத்தன் கூறக்கேட்டுற்றுச் செய்து வாழத்திருத்தினா னிறைவ னேகாண் செய்வினைக் கிழவ னென்பான் 661
மதியினை மலரச் சூழ்ந்து வருந்தித்தாம் படைக்கப் பட்டநிதியினை நுகர்ந்து மென்று நினைத்தினி திருந்த போழ்திற்பதியினைக் கலக்கிச் சென்று பறித்துத்தாம் பிறர்க்கு நீட்டும்விதியினை விலக்க மாட்டா மெலிபவால் வெளிய நீரார் 662
ஓளியினாற் பெரிய னாய வொருவனுக் குவப்பச் செய்தோரளியினால் வாழ்து மென்னும் மவாவினு ளழுந்து கின்றாம்தெளியநா மிதனைக் கண்டும் செய்வினைத் திறங்க ளோராமளிய மோ வளியஞ் சால வறிவினாற் பெரிய மேகாண் 663
அன்றுநா முயலப் பட்ட வினைகள்மற் றனைய வானாலின்று நா மவலித் தென்னை யினிச்செய்வ தெண்ணி னல்லவென்றியான் விளங்கு மாழி யவர்கட்கு மேலை வேந்தரொன்றியாங் குவப்பித் தாண்ட துரைப்பக்கேட் டுணர்ந்தா மன்றே 664
பயாபதி தூதர்க்கு முகமன் மொழிதல்
என்றுதன் மனத்தி னெண்ணி யிலங்குகோற் கைய ராகிநின்றகே சரரை நோக்கி நிலமன்ன னனைய சொன்னர்க்கொன்றியா மிங்க ணுள்ள தொருப்படுத் துய்ப்பக் கொண்டுசென்றுறு மிறவர்க் கெம்வா யின்னுரை தெரிமி னென்றான் 665
பயாபதி தன் மக்களறியாதபடி திறைப்பொருள் செலுத்த நினைத்தல்
ஆளிகட் கரச னன்ன வரசர்கோ னதனைக் கூறிவாளிவிற் றடக்கை வெம்போர் மணிவரை யனைய மார்பிற்காளைக ளிதனைக் கேட்பிற் கனல்பவா லவரை யின்னேமீளுமா றமைப்ப னென்று வேண்டுவ விதியி னீந்தான் 666
இதுமுதல் ஐந்து செய்யுள்கள் ஒருதொடர், பயாபதி திறை நல்குதல்
செய்யவாய்ப் பசும்பொ னோலைச் சீறடிப் பரவை யல்குலையநுண் மருங்கு நோவ வடிக்கொண்ட குவவுக் கொங்கைவெய்யவாய்த் தண்ணெ னீலம் விரிந்தென விலங்கி நீண்டமையவா மழைக்கட் கூந்தன் மகளிரை வருக வென்றான் 667
அணிமுழா வனைய தோளா னருளிய தறிந்த போழ்தின்மணிமுழாச் சிலம்பக் கொண்ட மண்டல வரங்கி னங்கண்குணிமுழாப் பெயர்த்த பணி குயிற்றுத லிலயங் கொண்டகணிமுழ மருங்குற் பாடற் கலிப்பிவை தவிர்த்துச் சென்றார் 668
மஞ்சிடை மதர்த்த மஞ்ஞை வான்குழா மென்ன வாங்கண்வெஞ்சுடர் விளங்கு மாடத் திடைநிலை விரவித் தோன்றிவஞ்சிநன் மருங்கு னோவ மணிநகைக் கலாவ மின்னச்செஞ்சுடர் சிலம்பு பாடத் தேன்றிசை பரவச் சேர்ந்தார் 669
மாடெலா மெரிந்து மின்னும் வயிரக்குண் டலத்தோ டம்பொற்றோடுலாந் துளங்கித் தோன்றுஞ் சுடிகைவாண் முகத்து நல்லார்பாடலா னரம்பின் தெய்வம் படிவங்கொண் டனைய நீராராடலா லரம்பை யொப்ப ரவரிலா யிரரை யீந்தான் 670
காய்ந்தொளிர் பவழச் சாதிக் கடிகைகள் காண மின்னுப்பாய்ந்தெழு சுடர்ச்சங் கீன்ற பருமணித் தரளக்கோவையேந்தொழிற் காக துண்ட மருப்பிணை கவரிக் கற்றையாய்ந்தொழின் மகரப் பூணா னுவப்பன வனைத்து மீந்தான் 671
பயாபதி திறை நல்கியதை விசயதிவிட்டர்கள் காண்டல்
அஞ்சுடர் வயிரப் பூணா னருளினான் விடுப்ப வாங்கண்விஞ்சையர் விமானத் தோற்ற மேலருங் கலங்க ளேற்றிச்செஞ்சுடர் திலகச் செவ்வாய் மகளிரை விமானஞ் சேர்த்திக்கஞ்சிகை மறைக்கும் போழ்திற் காளைக ளதனைக் கண்டார் 672
திவிட்டன் அந்நிகழ்ச்சியை வினாதல்
என்னிது விளைந்த வாறித் தூதுவர் யாவ ரென்றுகன்னவில் வயிரத் திண்டோ ட் கடல்வண்ணன் வினவ யாரும்சொன்னவின் றுரைக்க மாட்டார் துட்கென்று துளங்க வாங்கோர்கொன்னவில் பூதம் போலுங் குறண்மக னிதனைச் சொன்னான் 673
குறளன் கூற்று
அறைகழ லரவத் தானை யச்சுவக் கிரீவ னென்பானிறைபுக ழாழி தாங்கி நிலமெலாம் பணிய நின்றான்திறைதர வேண்டும் என்று விடுதரச் செருவந் தானையிறைவனு மருளிச் செய்தா னிதுவிங்கு விளைந்த தென்றான் 674
இதுமுதல் மூன்று செய்யுள் ஒருதொடர் - திவிட்டன் சீற்றம்
வேறு
திறைக்கட னென்னுமத் தீச்சொற் கேட்டலுநிறைக்கட னிரம்பிய நெஞ்சத் தீக்கலுண்முறைகெட முளைப்பதோர் முனிவி஢ னொள்ளெரிகரைப்படு படையவன் கனல் மூட்டினான் 675
முடித்தலை முத்துதிர்ந் தாங்கு நெற்றிமேல்பொடித்தன சிறுவியர்ப் புள்ளி யொள்ளெரியடுத்தெழு சுடரகத் துக்க நெய்த்துளிகடுத்தசெங் கண்ணுநீர்த் திவலை கான்றவே 676
படத்திடைச் சுடர்மணி தீண்டப் பட்டெரிகடுத்திடு மரவெனக் கனன்ற நோக்கமோடடுத்தெரிந் தழல்நகை நக்கு நக்கிவையெடுத்துரை கொடுத்தன னிளிய காளையே 677
இதுமுதல் 7 செய்யுள் ஒரு தொடர் - திவிட்டன் சினமொழிகள்
உழுதுதங் கடன்கழித் துண்டு வேந்தரைவழிமொழிந் தின்னணம் வாழு மாந்தர்போலெழுதிய திறையிறுத் திருந்து வாழ்வதேலழகிது பெரிதுநம் மரச வாழ்க்கையே 678
நாளினுந் திறைநுமக் குவப்பத் தந்துநாடாளுது மன்றெனி லொழிது மேலெமதோளினுந் தொடுகழல் வலியி னானுமிவ்வாளினும் பயனெனை மயரி மாந்தர்காள் 679
விடமுடை யெரிக்கொடி விலங்கு நோக்குடையடைலுடைக் கடுந்தொழி லரவி னாரழற்படமுடை மணிகொளக் கருதிப் பார்ப்பதோர்மடமுடை மனத்தனும் மயரி மன்னனே 680
இருங்கலிப் படையினு மிகலி னாலுமெம்மருங்கல் மிவைபெற்ற கரிய தாவதோர்மருங்குள தெனினது மகளி ராற்சிலபெருங்கலத் தாங்கினாற் பெறலு மாகுமே 681
பாழியான் மெலிந்தவற் திறத்துப் பண்டெலாமாழியால் வெருட்டி நின் றடர்த்தி போலுமஃதேழைகா ளினியொழித் திட்டுச் செவ்வனேவாழுமா றறிந்துயிர் காத்து வாழ்மினே 682
அன்றெனிற் றிறைகொளக் கருதி னாங்கொடுகுன்றின்மேற் பெறுவதென் வந்து கொள்கையானின்றுத னெஞ்சக நிறைய வீழ்வனவென்றியாம் பகழியும் விசும்பு மீவனே 683
இறைவனை மகளிர்போற் கழறி யென்னையெங்குறையிது கூறுமின் சென்று தூதிர்காள்திறையினை மறுத்தவர் திறத்துச் செய்வதோர்முறையுள தெனினது முயன்று கொள்கவே 684

உட்கவாங் குரைத்தலு மொளிர்பொன் மாழையுங்கட்கமழ் கோதையர் கணமு மீண்டதுவட்கிநம் மிறைவற்கு வலிது தெவ்வெனத்துட்கெனு மனத்தினர் தூத ரேகினார் 685
தூதர்கள் அரிமஞ்சு என்பானிடம் சொல்லுதல்
போகிய தூதர் தங்கோன் பொலங்கழ றெழுத லஞ்சியாகிய தறிந்து சூழு மரிமஞ்சு லவனைக் கண்டேயேகிய புகழி னானைக் கண்டது மீயப் பட்டதோகையஞ் சாய லார்தங் குழாங்களு நெதியுஞ் சொல்லி 686
இதுவுமது
மீட்டிளங் குமரர் கண்டு விடுசுட ரிலங்கு நக்குமோட்டிளங் கண்ணி தீய முனித்தழன் முழங்க நோக்கியூட்டிலங் குருவக் கோலோர் தங்களுக் குரைத்த வெல்லாம்தோட்டிலங் குருவத் தொங்க லமைச்சற்குச் சொல்லி யிட்டார் 687
அரிமஞ்சு தனக்குள் சிந்தித்தல்
அரும்பெற லறிவின் செல்வ னரிமஞ்சு வதனைக்கேட்டேபெரும்பகை யதனைக் கேட்டாற் பெரியவன் சிறிது நோனானிரும்பகை யிதனை யென்கொல் விலக்குமாறென்று தானேசுரும்பிவர் தொடையன் மார்பன் சூழ்ச்சி கொண் மனத்தனானான் 688
இதுவுமது
மின்றொடர்ந் திலங்கு பூணான் விளைவுறா விளைமை தன்னானன்றுதீ தென்னுந் தேர்ச்சி நவின்றில னாத லால்யானொன்ற வோர் மாயங் காட்டி யுளைவித்துக் குறுக வோடிக்குன்றிடைச் சீயந் தன்மேற் கொளப்புணர்த் திடுவனென்றான் 689
அரிமஞ்சு அரிகேதுவினை மாயச்சிங்கமாக்கி ஏவுதல்
அன்னண மனத்தி னாலே யிழைத்தரி கேது வென்னுமின்னணங் குருவப் பைம்பூண் விஞ்சையன் றன்னைக் கூவிக்கன்னவி றோளி னாற்குக் கருமமீ தென்று காட்டிமன்னுமோர் மாயச் சீய மாகென வகுத்து விட்டான் 690
அம்மாயச்சிங்கத்தின் தன்மை
ஒள்ளெரி நெறிப்பட் டன்ன சுரியுளை மலைகண் போழும்வள்ளுகிர் மதர்வைத் திங்கட் குழவிவா ளெயிற்றுப் பைங்கணுள்ளெரி யுமிழ நோக்கி வுருமென வதிரும் பேழ்வாய்க்கொள்ளரி யுருவு கொண்டான் கொடியவன் கடிய சூழ்ந்தான் 691
அவ்வரிமாவின் செயல்
இலைத்தடஞ் சோலை வேலி யிமவந்த மடைந்து நீண்டசிலைத்தடந் தோளி னார்தஞ் சிந்துநா டதனைச் சேர்ந்துமலைத்தடம் பிளந்து சிந்த மாண்புடை பெயர முந்நீரலைத்துடன் கலங்கி விண்பா லதிரநின் றுரறி யிட்டான் 692
அப்பொழுது உலகில் ஏற்பட்ட குழப்பம்
பொடித்தலை புலம்பிக் கானம் போழ்ந்துமா நெரிந்து வீழவடித்தலை கலங்கி வேழம் பிடிகளோ டலறி யாழப்புடைத்துழிப் பதடி போலத் துறுகற்கள் புரண்டு பொங்கவிடித்தலின் மனித்த ரெல்லா மெயிறுற விறுகிச் சோர்ந்தார் 693
அரிமஞ்சு திவிட்டன்பால் தூதுவிடல்
அப்படி யவனை யவ்வா றமைத்தபி னமைச்ச னாங்கண்மெய்ப்படை தெரிந்து சொன்ன தூதுவ ரவரை மீட்டேயிப்படி யிவைகள் சொல்லிப் பெயர்மினீ ரென்று வென்றிக்கைப்படை நவின்ற வெம்போர்க் காளையைக் கனற்ற விட்டான் 694
ஆங்குத் தூதுவ ரதிர்முகி லாறுசென் றிழிந்துபூங்கட் டேமொழிப் போதனத் திறைவன்றன் புதல்வர்வீங்கு பைங்கழல் விடுசுடர் மிடைமணிப் பூணோர்ஓங்கு தானையோ டுலாப்போந்த விடஞ்சென்றீ துரைத்தார் 695
தூதர்கள் திவிட்டனுக்கு இயம்புதல்
திரையின் மாற்றமுந் திறையினை விலக்கிய திறமும்குறையென் றெங்களைக் குமரநீ பணித்ததுங் கூறவரையும் பைங்கழ லாழியந் தடக்கையெ மரைசனறையும் குஞ்சியா னன்றுநன் றெனச்சொல்லி நக்கான் 696
இதுவுமது
தளையின் விண்டுதேன் றயங்கிய தடங்கொடார் மார்பவிளையை யென்பது மெங்கள்வாய்க் கேட்டபி னிறைவனொளியு மாற்றலும் தன்கணொன் றுள்ளது நினையானளியின் பிள்ளைதா னுரைத்தவென் றழன்றில னமர்ந்தான் 697
தூதுவர் திவிட்டனுக்கு அரிமா வுண்மை கூறல்
அறியு மாயிற்ற னரும்பெற னாட்டினை யரியவெறியு மின்னுரு மெனவிடித் திறுவரை முழையுளுறையுங் கோளரி யொழிக்கலா னமக்குவந் தீயுந்திறையு மீட்கிய வலித்தவச் செருக்குடைச் சிறியோன் 698
திவிட்டன் வியந்து அயல் நின்றாரை வினாதல்
என்று மற்றது மொழிமின் றுரைத்தெமை விடுத்தானென்ற மாற்றமஃ திசைத்தலு மிளையவ னென்னேசென்ற நாட்டகஞ் சிலம்பதின் றிடித்துயி ரலறக்கொன்றொர் கோளரி கொடுமுடி யுறைவதோ வென்றான் 699
அயனின்றோர் அவ்வரிமா உளதெனல்
உனது வாழிநி னொலிபுனற் சிந்துநன் னாட்டிற்களைதல் யாவர்க்கு மரியது கனமணிக் குன்றினுளது கோளரி யுருமென விடித்துயிர் பருகிஅளவி ணீன் முழை யுறைகின்ற தடிகளென் றுரைத்தார் 700
திவிட்டன் அவ்வரிமாவைக் கொல்வேன் என்று சூளுரைத்தல்
ஆயின் மற்றத னருவரைப் பிலமென வகன்றவாயைப் போழ்ந்துட லிருபிளப் பாவகுத் திடுவனேயிப் பெற்றியே விளை த்தில னாயினும் வேந்தன்பேயிற் பேசிய பிள்ளையே யாகென்று பெயர்ந்தான் 701
இதுவுமது
புழற்கைத் திண்ணுதி மருப்பின் பொருகளி றிவைதாநிழற்க ணோக்கித்தின் றழன்றன நிலையிடம் புகுகவழற்க ணாறுப வடுபடை தொடுதலை மடியாத்தொழிற்க ணாளருந் தவிர்கெனச் சூளுற்று மொழிந்தான் 702
இவரு மாமணிக் கொடுஞ்சிய விவுளித் தேர் காலாட்கவரி நெற்றிய புரவிதங் காவிடம் புகுகவெவரு மென்னொடு வரப்பெறார் தவிர்கென வெழில்சேருவரி நீர்வண்ண னுழையவ ரொழியுமா றுரைத்தான் 703
விசயன் திவிட்டனுடன் செல்ல நினைத்தல்
நகர மாசன மிரைப்பது தவிர்த்தபின் னளிநீர்ப்பகரு மாகடல் படிவங்கொண் டனையவன் படரச்சிகர மால்வரை தெளிந்தனன் திருவமார் பினன்பின்மகர மாகடல் வளைவண்ன னுடன்செல வலித்தான் 704
இருவரும் அவ்வரிமா வதியும் இடம் எய்துதல்
புழற்கை மால்களிற் றெருத்திடைப் புரோசையிற் பயின்றகழற்கொள் சேவடி கருவரை யிடைநெறி கலந்தவழற்கொள் வெம்பொடி யவைமிசை புதையவவ் வரிமான்தொழிற்கொண் டாருயிர் செகுக்கின்ற சூழல்சென் றடைந்தார் 705
அம்மாய அரிமாவின் முழக்கம்
அடைந்த வீரரைக் காண்டலு மழலுளை யரிமாவுடைந்த போகவோ ரிடியிடித் தெனவுடன் றிடிப்பவிடிந்து போயின விறுவரைத் துறுகலங் குடனேபொடிந்து போயின பொரியன நெரிவொடு புரளா 706
அவ்வரிமாவின் எதிரில் திவிட்டன் போர்க்கோலம் பூண்டு முழங்குதல்
காளி காளொளி முகில்வண்ணன் கழல்களை விசியாத்தோளின் மேற்செலச் சுடர்விடு கடகங்கள் செறியாச்சூளி மாமணித் தொடர்கொண்டு சுரிகுஞ்சி பிணியாஆளி மொய்ம்பனங் கார்த்தன னுடைத்ததவ் வரியே 707
அஞ்சி ஓடும் அரிமாவைத் திவிட்டன் தொடர்தல்
எங்குப் போவதென் றுடைநெறி யிறுவரை நெரியப்பைங்கட் கோளரி யுருவுகொண் டவன்மிசைப் படர்ந்துவெங்கட் கூற்றமுந் திசைகளும் விசும்பொடு நடுங்கச்செங்கட் காரொளி நெடியவன் விசையினாற் சிறந்தான் 708
திவிட்டன் ஓடும் தன்மை
சுழலங் கார்த்தில காள்களு நிலமுறா முடங்காஅழலுஞ் செஞ்சுடர்க் கடகக்கை யவைபுடை பெயராகுழலுங் குஞ்சியு மாலையுங் கொளுவிய தொடருமெழிலுந் தோளிலு மெருத்திலுங் கிடந்தில வெழுந்தே 709
இதுவும் அது
மரங்கள் வேரொடுங் கீழ்ந்தென வழிதொடர்ந் தெழுந்தநிரந்த மான்களும் பறவையும் நிலங்கொண்டு பதைத்தவரங்கொள் வெம்பர லணிவரைக் கொடுமுடி யவைதாமுரங்கொ டோ ளவன் விரனுதி யுறவுடைந் தொழிந்த 710
அம்மாய அரிமா குகையிற் புக்கொளிதல்
மூடி யிட்டன முகிற்கண முரன்றிடை நொறுங்காய்க்கூடி யிட்டன கொடுமுடித் துறுகற்கள் குளிர்ந்தாங்காடி யிட்டன வனதெய்வ மரியுரு வுடையானோடி யிட்டன னொளிவரை முழையகத் தொளிந்தான் 711
அக்குகையில் உறைந்த மெய் அரிமா இவ்வாரவாரத்தே துயில் நீத்து எழுதல்
உலகத்தின் வீங்கிய வொளிமணிச் சுடரணி திணிதோணலத்தின் வீங்கிய நளிர்புக ழிளையவன் விரையின்நிலத்தின் கம்பமு நெடுவரை யதிர்ச்சியு மெழுவப்பிலத்தின் வாழரி யரசுதன் றுயில்பெயர்ந் ததுவே 712
திவிட்டன் முழக்கம்
ஏங்கு வாழிய விருள்கெழு முழையகத் தொளித்தாயோங்கு மால்வரை பிளந்திடு கெனவுளைந் துரவோனாங்க மாமுழை முகத்துல கதிரநின் றார்த்தான்வீங்கு வாய்திறந் தொலித்தது விலங்கலிற் சிலம்பே 713
அக்குகைவாழ் அரிமாவின் முழக்கம்
அதிர வார்த்தலு மழன்றுத னெயிற்றிடை யலர்ந்தகதிருங் கண்களிற் கனலெனச் சுடர்களுங் கனலமுதிர்வில் கோளரி முனிந்தெதிர் முழங்கலி னெரிந்துபிதிர்வு சென்றது பெருவரை பிளந்ததப் பிலமே 714
எரிந்த கண்ணிணை யிறுவரை முழைநின்ற வனைத்தும்விரிந்த வாயொடு பணைத்தன வெளியுகிர் பரூஉத்தாள்சுரிந்த கேசரஞ் சுடரணி வளையெயிற் றொளியாவிரிந்த தாயிடை யிருணிண்றங் கெழுந்ததவ் வரியே 715
அவ்வரிமா வெளிப்படுதல்
தாரித் திட்டதன் றறுகண்மைக் குணங்களி னுலகைவாரித் தீட்டிவண் வந்ததோ ரரியென மதியாப்பூரித் திட்டதன் பெருவலி யொடுபுக ழரிமாப்பாரித் திட்டது பனிவிசும் புடையவர் பனித்தார் 716
திவிட்டன் அவ்வரிமாவைப் பிளந்து கொல்லுதல்
அளைந்து மார்பினு ளிழிதரு குருதியைக் குடிப்பானுளைந்து கோளரி யெழுதலு முளைமிசை மிதியாவளைந்த வாளெயிற் றிடைவலித் தடக்கையிற் பிடித்தான்பிளந்து போழ்களாய்க் கிடந்ததப் பெருவலி யரியே 717
அமரர்களின் வியப்பு
சீய மாயிரஞ் செகுத்திடுந் திறலது வயமாவாய வாயிர மாயிர மடுதிற லரிமாஏயெ னாமுனிங் கழித்தன னிவனெனத் தத்தம்வாயின் மேல்விரல் வைத்துநின் றமரர்கண் மருண்டார் 718
அழிந்த கோளரிக் குருதிய தடுங்கடங் களிற்றோடொழிந்த வெண்மருப் புடைந்தவு மொளிமுத்த மணியும்பொழிந்து கல்லறைப் பொலிவது குலிகச்சே றலம்பியிழிந்த கங்கையி னருவியொத் திழிந்தவவ் விடத்தே 719
திவிட்டனின் சால்புடைமை
யாது மற்றதற் குவந்திலன் வியந்தில னிகலோனோத நித்திலம் புரிவளை யொளியவற் குறுகியேத மற்றிது கடிந்தன னின்னினி யடிகள்போதும் போதன புரத்துக்கென் றுரைத்தனன் புகழோன் 720
தம்பி யாற்றல்கண் டுவந்துதன் மனந்தளிர்த் தொளியால்வம்பு கொண்டவன் போனின்று வளைவண்ணன் மொழிந்தானம்பி நாமினி நளிவரைத் தாழ்வார்கண் டல்லாலிம்பர் போம்படித் தன்றுசெங் குருதிய திழிவே 721
இதுமுதல் 10 செய்யுள்கள் ஒருதொடர் -திவிட்டநம்பிக்கு விசயன் குறிஞ்சிநில வனப்பினை எடுத்துக் கூறல்
ஆங்கண் மால்வரை யழகுகண் டரைசர்கள் பரவும்வீங்கு பைங்கழ லிளையவன் வியந்துகண் மலரச்வீங்கி மாண்பின வினையன விவையென வினிதின்வாங்கு நீரணி வளை வண்ண னுரைக்கிய வலித்தான் 722
புள்ளுங் கொல்லென வொலிசெயும் பொழில்புடை யுடையகள்ளி னுண்டுளி கலந்துகா லசைத்தொறுங் கமழுவுள்ளுந் தாதுகொண் டூதுவண் டறாதன வொளிசேர்வெள்ளென் றோன்றுவ கயமல்ல பளிக்கறை விறலோய் 723
காளை வண்ணத்த களிவண்டு கதிவிய துகளாற்றாளை மூசிய தாமரைத் தடம்பல வவற்றுளாளி மொய்ம்பவங் ககலிலை யலரொடுங் கிழியவாளை பாய்வன கயமல்ல வனத்திடர் மறவோய் 724
மன்னு வார்துளித் திவலைய மலைமருங் கிருண்டுதுன்னு மாந்தர்கள் பனிப்புறத் துணைமையோ டதிர்வஇன்ன வாம்பல வுருவுக ளிவற்றினு ளிடையேமின்னு வார்ந்தன முகிலல்ல களிறுகள் விறலோய் 725
உவரி மாக்கட் னுரையென வொளிர்தரு மயிரஅவரை வார்புனத் தருந்திமே யருவிநீர் பருகிஇவரு மால்வரை யிளமழை தவழ்ந்தென விவையேகவரி மாப்புடை பெயர்வன கடல்வண்ண காணாய் 726
வேறு
துள்ளிய ரும்புனற் றுளங்குபா றைக்கலத்துள்ளுரா விக்கிடந் தொளிருமொண் கேழ்மணிநள்ளிரா வின்றலை நகுபவா னத்திடைப்பிள்ளைநா ளம்பிறை பிழற்தல்போ லுங்களே 727
வழையும்வா ழைத்தடங் காடுமூ டிப்புடங்கழையும்வே யுங்கலந் திருண்டு காண் டற்கருமுழையுமூ ரிம்மணிக் கல்லுமெல் லாநினதிழையினம் பொன்னொளி யெரிப்பத்தோன் றுங்களே 728
பருவமோ வாமுகிற் படல மூடிக்கிடந்திரவுண்டே னைப்பக லில்லையொல் லென்றிழித்தருவி யோ வாபுரண் டசும்புபற் றித்தடவரையின்றாழ் வார்நிலம் வழங்கலா கார்களே 729
சூரலப் பித்தொடர்ந் தடர்துளங் கும்மரில்வேரலோ டும்மிடைந் திருண்டுவிண் டுவ்விடார்ஊரலோ வாதனன் றுயிரையுண் டிடுதலால்சாரலா காதன சாதிசா லப்பல 730
பரியபா றைத்திரள் படர்ந்தபோ லக்கிடந்திரியவே ழங்களை விழுங்கியெங் குந்தமக்குரியதா னம்பெறா வுறங்கியூ றுங்கொளாப்பெரியபாம் பும்முள பிலங்கொள்பேழ் வாயவே 731
அவைகள்கண் டாய்சில வரவமா லிப்பனஉவைகள்கண் டாய்சில வுளியமொல் லென்பனஇவைகள்கண் டய்சில வேழவீட் டம்பலநவைகள்கண் டாயின நம்மலா தார்க்கெலாம் 732
குழல்கொடும் பிக்கணங் கூடியா டநகும்எழில்கொடா ரோய்விரைந் தியங்கலிங் குள்ளநின்கடில்களார்க் குங்களே கலங்கிமே கக்குழாம்பொழில்கள்வெள்ள ளத்திடைப் புரளநூ றுங்களே 733
ஆக்கலா காவசும் பிருந்துகண் ணிற்கொருநீக்கநீங் காநிலம் போலத்தோன் றிப்புகிற்காக்கலா காகளி றாழவா ழும்புறந்தூக்கந்தூங் குந்தொளி தொடர்ந்துபொன் றுங்களே 734
இதுவித்தாழ் வார்நிலத் தியற்கைமே லாற்பலமதியம்பா ரித்தன மணிக்கற் பாறையின்மிசைநிதியம்பா ரித்தொளி நிழன்று துஞ் சன்னிலைக்கதியின் வாழ் வாரையுங் கண்கள்வாங் குங்களே 735
வேறு
இருது வேற்றுமை யின்மையாற்சுருதி மேற்றுறக் கத்தினோடரிது வேற்றுமை யாகவேகருது வேற்றடங் கையினாய் 736
தொல்லுறு சுடர்போலுஞ் சூழொளி மணிப்பாறைகல்லறை யவைகோங்கின் கடிமலர் கலந்துராய்மல்லுறு வரைமார்ப வளரொளி யின்முளைக்குமெல்லுறு சுடர்வானத் தெழிலவா யினியவ்வே 737
திரைத்த சாலிகைநிரைத்த போனிரந்திரைப்ப தேன்களேவிரைகொண் மாலையாய் 738
வரைவாய் நிவத்த வடுமா வடுமாவிரைவாய் நிவந்து விரியா விரியாபுரைவா யசும்பு புலரா புலராஇரவா யிருள்செ யிடமே யிடமே 739
இளையா ரிளையா ருடனாய் முலையின்வளையார் வளையார் மனம்வேண் டுருவம்விளையா விளையாட் டயருந் தொழிறான்றளையார் தளையார் பொழிலின் றடமே 740
அளியாடு மமரங்க ளமரங்கள் மகிழ்ந்தானாவிளையாடும் விதமலர்ந்த விதமலர்ந்த மணிதூவும்வளையார்கண் மகிழ்பவான் மகிழ்பவான் மலர்சோர்வஇளையாரை யினையவே யினையவே யிடமெல்லாம் 741
தமரைத் திடத்திடை மலர்ந்த சாரல்வாய்த்தாமரைத் துளையொடு மறலித் தாவில்சீர்த்தாமரைத் தகுகுணச் செல்வன் சண்பகம்தாமரைத் தடித்தலர் ததைந்து தோன்றுமே 742
நாகஞ் சந்தனத் தழைகொண்டு நளிர்வண்டு கடிவநாகஞ் சந்தனப் பொதும்பிடை நளிர்ந்துதா துமிழ்வநாகஞ் செஞ்சுடர் நகுமணி யுமிழ்ந்திருள் கடிவநாக மற்றிது நாகர்தம் முலகினை நகுமே 743
நகுமலரன நறவம் மவைசொரி வனநறவம்தொகுமலரன துருக்கம் மவைதரு வனதுருக்கம்மகமலரன வசோகம் மவைதருவ வசோகம்பகுமலரன பாங்கர் பலமலையன பாங்கர் 744
அணங்கமர் வனகோட லரிதவை பிறர்கோடல்வணங்கிளர் வனதோன்றி வகைசுடர் வனதோன்றிஇணங்கிணர் வனவிஞ்சி யெரிபொன் புடையிஞ்சிமணங்கமழ் வனமருதம் வரையயல் வனமருதம் 745
சாந்துந் தண்டழை யுஞ்சுர மங்கையர்க்கேந்தி நின்றன விம்மலை யாரமேவாய்ந்த பூம்புடை யும்மலர்க் கண்ணியுமீந்த சாகைய விம்மலை யாரமே 746
இயங்கு கின்னர ரின்புறு நீரவேதயங்கு கின்றன தானமந் தாரமேபயங்கொள் வார்பயங் கொள்பவ வனைத்தையும்தயங்கு கின்றன தானமந் தாரமே 747
வேறு
பொன்விரிந் தனைய பூங் கோங்கும் வேங்கையுமுன்விரிந் துக்கன மொய்த்த கற்றலமின்விரிந் திடையிடை விளங்கி யிந்திரன்வின்முரிந் திருண்முகில் வீழ்ந்த போலுமே 748
நிழற்பொதி நீலமா மணிக்க லந்திரள்பொழிற்பொதி யவிழ்ந்தபூப் புதைந்து தோன்றுவதழற்பொதிந் தெனத்துகி றரித்த காஞ்சியர்குழற்பொதி துறுமலர்க் கொண்டை போலுமே 749
மேவுவெஞ் சுடரொளி விளங்கு கற்றலம்தாவில்பூந் துகளொடு ததைந்து தோன்றுவபூவுக விளையவர் திளைத்த பொங்கணைப்பாவுசெந் துகிலுடைப் பள்ளி போலுமே 750
வேறு
அழலணி யசோகஞ் செந்தா தணிந்துதே னரற்ற நின்றுநிழலணி மணிக்கன் னீல நிறத்தொடு நிமிர்ந்த தோற்றம்குழலணி குஞ்சி மைந்தர் குங்குமக் குழம்பு பூசிஎழிலணி திகழ நின்றா லெனையநீ ரனைய தொன்றே 751
இணைந்துதேன் முழங்க விண்ட வேழிலம் பாலை வெண்பூமணந்துதா தணிந்து தோன்று மரகத மணிக்கற் பாறைகணங்கெழு களிவண் டாலப் பாசடை கலந்த பொய்கைதணந்தொளி விடாத வெண்டாமரை ததைந் தனையதொன்றே 752
காரிருட் குவளிக் கண்ணிக் கதிர்நகைக் கனபொற் றோட்டுக்கூரிருள் சுரிபட் டன்ன குழலணி கொடிறுண் கூந்தல்பேரிருள் கிழியத் தோன்றும் பிறையெயிற் றமர நோக்கிற்சூரர மகளிர் வாழு மிடமிவை சுடர்ப வெல்லாம் 753
வாரிரு புடையும் வீக்கி வடஞ்சுமந் தெழுந்து வேங்கையேரிருஞ் சுணங்கு சிந்தி யெழுகின்ற விளமென் கொங்கைக்காரிருங் குழலங் கொண்டைக் கதிர்நகைக் கனகப் பைம்பூண்நீரர மகளிர் கண்டாய் நிறைபுனற் றடத்து வாழ்வார் 754
மேகமேற் றவழ்ந்து வேய்கண் மிடைத்துகீ ழிருண்ட தாழ்வர்ஏகமா மலையி னெற்றி யிருஞ்சுனைத் தடங்க ளெல்லாம்நாகமா மகளி ரென்னு நங்கையர் குடையப் பொங்கிமாகமேற் றரங்கஞ் சிந்தி மணியறை கழுவு மன்றே 755
ஆவிவீற் றிருந்த காத லவரொடு கவரி வேய்ந்துநாவின்வீற் றிருந்த நாறு நளிர்வரைச் சிலம்பின் மேயார்காவிவீற் றிருந்த கண்ணார் கந்தர்வ மகளிர் கண்டாய்பாவிவீற் றிருந்த பண்ணி னமுதினாற் படைக்கப் பட்டார் 756
அலங்கிண ரணிந்த விஞ்சை யரிவைய ரிடங்கள் கண்டாய்விலங் கலின் விளங்கு கின்ற வெள்ளிவெண் கபாடமாடம்இலங்கொளி மகரப் பைம்பூ ணியக்கிய ரிடங்கள் கண்டாய்நலங்கிளர் பசும்பொற் கோயி னகுகின்ற நகர மெல்லாம் 757
போய்நிழற் றுளும்பு மேனிப் புணர்முலை யமிர்த னாரோடாய்நிழற் றுளும்பு வானோ ரசதியா டிடங்கள் கண்டாய்சேய்நிழற் றிகழுஞ் செம்பொற் றிலதவே திகைய வாயபாய்நிழற் பவழச் செங்காற் பளிக்கு மண் டபங்க ளெல்லாம் 758
எழின்மணிச் சுடர்கொண் மேனி யிமையவ ரிடங்கள் கண்டாய்முழுமணிப் புரிசை வேலி முத்தமண் டபத்த வாயகழுமணிக் கபாட வாயிற் கதிர்நகைக் கனக ஞாயிற்செழுமணிச் சிகர கோடிச் சித்திர கூட மெல்லாம் 759
தும்பிவாய் துளைக்கப் பட்ட கீசகம் வாயுத் தன்னால்வம்பவாங் குழலி னேங்க மணியரை யரங்க மாகஉம்பர்வான் மேக சால மொலிமுழாக் கருவி யாகநம்பதேன் பாட மஞ்ஞை நாடக நவில்வ காணாய் 760
பொன்னவிர் மகரப் பைம்பூட் பொலங்குழை யிலங்கு சோதிக்கன்னவில் வயிரத் திண்டோ ட் கடல்வண்ண னுவப்பக் காட்டிமன்னவின் றிறைஞ்சுஞ் செய்கை வளைவண்ணன் மலையின் மேலால்இன்னன பகர்ந்து சொல்லு மெல்லையு ணீங்க லுற்றார் 761

பாசிலைப் பாரி சாதம் பரந்துபூ நிரந்த பாங்கர்மூசின மணிவண் டார்க்கு முருகறா மூரிக் குன்றம்காய்சின வேலி னான்றன் கண்களி கொள்ளக் காட்டியோசனை யெல்லை சார்ந்து பின்னையிஃ துரைக்க லுற்றான் 762
வலிகற்ற மதர்வைப் பைங்கண் வாளொயிற் றரங்கச் சீயங்கலிகற்ற களிறுண் பேழ்வாய்க் கலிங்கினா னிழிந்து போந்துகுலிகச்சே றலம்பிக் குன்றங் கொப்புளித் திட்ட தொப்பஒலிகற்ற வுதிர நீத்த மொழுகுவ தின்ன நோக்காய் 763
இதுமுதல் 6 செய்யுட்கள் ஒரு தொடர் விசயன் திவிட்டனின் ஆற்றலை வியந்து பாராட்டுதல்
வெம்பவேங் குயிரை யெல்லாம் விழுங்கிய வெகுண்டு நோக்கிச்கம்பமா வுலகந் தன்னைக் கண்டிடுங் களிகொள் சீயம்நம்பநீ யழித்த தல்லா னகையெயிற் றதனை நண்ணல்வம்பறா மகரப் பைம்பூண் வானவர் தமக்கு மாமோ 764
ஆங்குநீ முனிந்த போழ்தி னரிது வகல நோக்கிவாங்குநீர் வண்ண கேளாய் மாயமா மதித்து நின்றேனோங்குநீண் மலையின் றாழ்வா ரொலிபுன லுதிர யாறுவீங்கிவந் திழிந்த போழ்து மெய்யென வியப்புச் சென்றேன் 765
குன்றிற்கு மருங்கு வாழுங் குழூஉக்களிற் றினங்க ளெல்லாமன்றைக்கன் றலறக் கொன்றுண் டகலிடம் பிளப்பச் சீறிவென்றிக்கண் விருப்பு நீங்கா வெங்கண்மா விதனைக் கொன்றாயின்றைக்கொண் டுலக மெல்லா மினிதுகண் படுக்கு மன்றே 766
அரசரின் முதற் கடமை
உரைசெய்நீ ளுலகின் வாழு முயிர்களுக் குறுகண் கண்டால்வரைசெய்தோண் மைந்தர் வாழ்க்கை மதிக்கிலார் வனப்பின் மிக்கார்திரைசெய்நீ ருலகங் காக்குஞ் செய்கை மேற் படைக்கப் பட்டஅரசர்தம் புதல்வர்க் கையா வறம்பிறி ததனி லுண்டோ 767
யாக்கையால் எய்தும் பயன்
கற்றவர் கடவுட் டானஞ் சேர்ந்தவர் களைக ணில்லாரற்றவ ரந்த ணாள ரன்றியு மனைய நீரார்க்குற்றதோ ரிடுக்கண் வந்தா லுதவுதற் குரித்தன் றாயில்பெற்றவிவ் வுடம்பு தன்னாற் பெறுபய னில்லை மன்னா 768
இறவாது நிற்போர் இவர் எனல்
மன்னுயிர் வருத்தங் கண்டும் வாழ்வதே வலிக்கு மாயிலன்னவ னாண்மை யாவ தலிபெற்ற வழகு போலாமென்னையான் கொடுத்தும் வையத் திடுக்கணோய் கெடுப்ப னென்னும்நின்னையே போலு நீரார் நிலமிசை நிலவி நின்றார் 769
ஒருவனுடைய இருவேறு யாக்கைகள்
ஒருவன திரண்டி யாக்கை யூன்பயி னரம்பின் யாத்தஉருவமும் புகழு மென்றாங் கவற்றினூழ் காத்து வந்துமருவிய வுருவ மிங்கே மறைந்துபோ மற்ற யாக்கைதிருவமர்ந் துலக மேத்தச் சிறந்துபின் னிற்கு மன்றே 770
வேறு - விசய திவிட்டர்கள் குறிஞ்சி நிலங்கடந்து பாலைநிலம் எய்துதல்
என்று தங்கதை யோடிரு நீண்முகிற்குன்று சூழ்ந்த குழுமலர்க் கானகம்சென்றொர் வெங்கடஞ் சேர்ந்தன ருச்சிமேனின்று வெய்யவ னுநிலங் காய்த்தினான் 771
இதுமுதல் 8 செய்யுட்கள் ஒருதொடர், விசயன் பாலைநிலத்தின் தன்மையை எடுத்தியம்பல்
ஆங்கவ் வெங்கடஞ் சேர்ந்த பினையகாணீங்கிவ் வெங்கடுங் கானகத் தீடெனஏங்கு நீர்ககடல் வண்ணனுக் கின்னணம்வீங்கு வெண்டிரை வண்ணன் விளம்பினான் 772
முழையு டைந்தழல் காலு முரம்பயற்கழையு டைந்துகு கண்கவர் நித்திலம்மழையு டைந்துகு நீரென வாய்மடுத்துழையு டைந்துகு கின்றன வூங்கெலாம் 773
மிக்க நீள்கழை மேல்விளை வுற்றழலொக்க வோடி யுறைத்தலி னான்மிசைஉக்க நெற்பொரி யுற்றொரு சாரெலாம்தொக்க கற்றல மேற்றுடிக் கின்றவே 774
ஏங்கு செங்கதி ரோனெ றிப்பநிழல்வேங்கொ லென்றொளித் திட்டிபம் வீழ்ந்துசேர்பாங்க லார்மனை போலப் பறைந்தரோஓங்கி நின்றுல வுற்றன வோமையே 775
அற்ற நீரழு வத்திடை நெல்லியின்வற்ற லஞ்சினை யூடு வலித்தரோமற்ற வெவ்வெயி லுந்நிழல் வாயழலுற்று வீழ்ந்தது போன்றுள வாங்கெலாம் 776
பைத்த லைப்பட நாக மழன்றுதம்பொய்த்த ளைத்தலை போதரக் கார்செய்வான்கைத்த லம்முகிற் கின்றன காந்தளென்றத்த லைச்சிலை மானயர் வெய்துமே 777
விசையி னோடு வெண் டேர்செலக் கண்டுநீர்தசையி னோடிய நவ்வி யிருங்குழாமிசையில் கீழ்மகன் கண்ணிரந் தெய்தியவசையின் மேன்மகன் போல வருந்துமே 778
துடியர் தொண்டகப் பாணியர் வாளியர்கொடிய செய்துமு னைப்புலங் கூட்டுணுங்கடிய நீர்மையர் கானகங் காக்குநினடிய ரல்லதல் லாரவ ணில்லையே 779
வேறு- விசய திவிட்டர்கள் பாலை கடந்து நாட்டின்கண் ஏகுதல்
அங்கவெங்க டங்கடந்த லங்குதாரி லங்குபூண்சிங்கம் வென்ற செங்கண்மாலொ டம்பொன்மாலை வெண்கடாத்திங்கள் வண்ணன் வெங்கண்யானை வேந்துசேர்ந்த நாடுசார்ந்திங்கணின்ன இன்னகாணெ னப்புகழ்ந்தி யம்பினான் 780
முல்லை நிலத்தின் மாண்பு
மாலும்வாரி திங்கண்மூன்றும் வந்தறாத மாண்பினாலாலுமாவ றானைநம்ம டிகளாளு நாட்டகம்காலமாண்பி னன்றியுங் கார்கவின்ற நீரவேபோலுமாண்பி னேர்கலந்து பொங்குநீர புறணியே 781
கொண்டல்வாடை யென்னுங் கூத்தன் யாத்தகூத்தின் மாட்சியால்விண்டமா மலர்ப்பொதும்ப ரங்கமா விரும்புநீர்வண்டுபாட வல்லியென்னு மாதராடு நாடகங்கண்டுகொன்றை பொன்சொரிந்த காந்தள்கை மறித்தவே 782
கைமலர்த்த காந்தளுங் கரியநீர்க் கருவிளைமைம்மலர்த் தடங்கணேர் வகுத்தலர்ந்த வட்டமுமொய்மலர்ப் பொதும்பின்மேன் முறுவலித்த முல்லையும்கொய்மலர்க் குழற்றிரட்சி கொண்டு காய்த்த கொறையும் 783
தொண்டைவாய் நிறங்கொளக் கனிந்துதூங்கு கின்றவும்வண்டுபாய வார்கொடி மருங்குலாய் வளர்ந்தவுங்கண்டபாலெ லாங்கலந்து கண்கவற்று மாதலால்விண்டுமாலை மாதராரின் மேவுநீர கானமே 784
தண்ணிலாவி ரிந்தமுல்லை தாதுசேர் தளிர்மிடைந்தெண்ணிலாய சாயலம் மிடாமணற் பிறங்கன்மேற்பண்ணிலாய வண்டுபாடு பாங்கரோடு பாங்கணிந்துவெண்ணிலா விரிந்தவெல்லை போலுமிங்கொர் பாலெலாம் 785
தேனவாவி மூசுகின்ற தேம்பிறழ்பூ தாங்கலந்துகானநாவல் கொம்பினிற் கனிந்துகா லசைந்தவற்றேனைமாடு வண்டிருந் திருண்டகான மிங்கிதற்கூனமா யிருட்பிழம் புறங்குகின்ற தொக்குமே 786
வாயிதழ் திறங்கொளக் கனிந்த தொண்டை வந்தொசிந்துதூயிதழ்த் துணர்துதைந்து தோன்றுகின்ற தோன்றியின்பாயிதழ்ப் பரப்பின்மே லரத்தகோப மூர்ந்தயற்சேயிதழ்ப் பொலிந்தகாடு செக்கர்வான மொக்குமே 787
ஆடிணர்க் கொடிப்பட ரகிற்பொழுதும் பயற்பொலிந்தகூடிணர்க் குழாநிலைக் கொழுமலர்க் குமிழ்மிசைக்கோடிணர்க் குலைக்கொசிந்த கொன்றைவிண்ட தாதுசோர்ந்தோடிணர்ச் சுடர்ப்பொனுக்க கானமொக்கு மூங்கெலாம் 788
பார்மகிழ்ந்த பைஞ்சுருட் பயிர்மிசைப் பயின்றெழுந்தேர்கலந்து பாசிலைப் பரப்பினூ டிரைத்தரோகார்மகிழ்ந்த கார்மயிற் கலாபமொய்த்த கானகநீர்மகிழ்ந்த நீர்க்கட னிரந்ததொக்கு நீரதே 789
ஏறுகொண்ட கோவல ரேந்து தன்ன வக்குரன்மாறுகொண்ட கோடியர் மணிமுழா முழங்கலிற்றாறுகொண்ட தோகைமஞ்ஞை யாடல்கண்டு கண்மகிழ்ந்துசாறுகொண்டு மான்கணத் தயங்குநீர சாரெலாம் 790
கார்மணந்த கானயாறு கல்லலைத் திழிந்தொலிக்குநீர்மணந்த நீள்கரை நிரைத்தெழுந்த நாணல்சூழ்வார்மணற் பிறங்கன்மாலை வல்லிவிண்ட தாதணிந்துதார்மணந்த வாரமார்ப யாகசாலை போலுமே 791
கரவைகன்று வாய்மிகுந்த வமிழ்தினோடு கண்ணகன்புறவின்மாம ரைம்முலைப் பொழிந்தபா றெகிழ்ந்தெழப்பறவையுண்டு பாடவும் பால்பரந்த பூமியினறவுவிண்ட நாகுமுல்லை வாய்திறந்து நக்கவே 792
விசய திவிட்டர்கள் முல்லைநிலங்கடந்து மருதனிலம் எய்துதல்
வேரல்வேலி மால்வரைக் கவானின் வேய் விலங்கலிற்சாரன்மேக நீர்முதிர்ந்து தண்டளந்து ளித்தலால்மூரல்வா யசும்பறாத முல்லைவிள்ளு மெல்லைபோய்நீரவாளை பூவின்வைகு நீள்பரப்பு நண்ணினார் 793
விசயன் மருதநிலத்தின் மாண்புரைத்தல்
புதுநாண் மலர்விண் டுபொழிந்த திழியுமதுநா றுபுனன் மருதத் தினைமற்றிதுகா ணெனவின் னனசொல் லினனேவிதுமாண் மிகுசோ திவிளங் கொளியான் 794
அயலோ தமிரட் டவலம் பொலிநீர்வயலோ தமயங் கமயங் கவதிர்ந்தியலோ தையிளஞ் சிறையன் னமெழக்கயலோ டியொளிப் பனகாண் கழலோய் 795
வளவா சநிலப் பலவின் சுளையுமிளவா ழையினின் னெழிலங் கனியும்களமாங் கனியின் றிரளுங் கலவிக்குளமா யினயோ சனை கொண் டனவே 796
வனமா வினிருங் கனியுண் டுமதர்த்தினவா ளையிரைத் தெழுகின் றனகாண்கனவா ழைமடற் கடுவன் மறையப்புனவா னரமந் திபுலம் புவகாண் 797
வளமா நிலையே திமருப் பினிடவிளவா ழைநுதிக் கமழ்தே னொழுகிக்குளமார் குளிர்தா மரைக்கொண் டநகைத்தளவா யுகுகின் றனகாண் டகவோய் 798
இவைசெந் நெலிடை கருநீ லவனமவையந் நெலிடை கழுநீ ரழுவமுவையொண் டுறைவிண் டொளிவிம் முநகுநகைவென் றனதா மரைநாண் மலரே 799
கழையா டுகரும் பினறைக் கடிகைப்பொழிசா றடுவெம் புகைபொங் கியயற்றழையோ டுயர்சோ லைகடாம் விரவிமழையோ டுமலைத் தடமொத் துளவே 800
இதுமுதல் 5 செய்யுள் ஒரு தொடர், மருத நிலத்தை ஒரு மகளாக உருவகித்தல்
கருநீ லமணிந் தகதுப் பினயற்கருநீ லமணிந் தனகண் ணிணைகள்கருநீ லமணிக் கதிர்கட் டியெனக்கருநீ லமணிந் தகருங் குழலே 801
வளர்செங் கிடையி னெழில்வைத் தநுதல்வளர்செங் கிடையி னொளிவவ் வியவாய்வளர்செங் கிடையின் வளையா டும்வயல்வளர்செங் கிடைமா மலர்மல் குசிகை 802
வயலாம் பனெறித் தவகைத் தழையன்வயலாம் பன்மிலைத் தவடிச் சவியன்வயலாம் பன்மலிந் தபரப் புடையன்வயலாம் பன்மலர்த் தொகைமா லையினாள் 803
வளர்தா மரையல் லிமலர்த் தியகைவளர்தா மரையல் லிமயக் குமொளிவளர்தா மரையல் லிமகிழ்ந் தனள்போல்வளர்தா மரையல் லிவனத் திடையாள் 804
நளிர்வார் கழலாய் புகழ்நா டிநயந்தொளிர்வார் குழலா ளொருமா தவளுளுளர்வார் கனியும் மதுவுந் தெகிழத்கிளர்பார் வையுறக் கிளர்கின் றதுகேள் 805
மதிகா ணநிமர்ந் தமதிற் சிகரநுதிமா ளிகைமேல நுடங் குகொடிகதிரோ ணொளிமாழ் கவெழுந் துகலந்ததுகா ணமதா ரொளிமா நகரே 806
அறவே தியரா குதியம் புகையார்உறவே திகைவிம் மியவொண் புறவநிறவே திகைமீ துநிமிர்ந் தபொழிற்புரவே திகையே றுவகாண் புகழோய் 807
விசய திவிட்டர் போதனமாநகர் புகுதல்
இன்னன விளையவற் கியம்பு மெல்லையுட்பொன்னக ரடைந்தனர் பொழுதுஞ் சென்றதுநன்னக ரிரைத்தது நரன்ற வின்னியமன்னவ குமரரும் வறுமை நீங்கினார் 808
இளங்களிக் குஞ்சர மிரட்டித் தாயிரம்துளங்கொளிக் கலினமாத் தூளி யெல்லையவளங்கெழு குமரரை வலங்கொண் டெய்தினஅளந்தறிந் திலமகன் படையி னெல்லையே 809
துன்னிய துணரிளந் தோன்றி மென்கொடிமன்னிய வனத்திடை மலர்ந்து நீண்டபோற்கன்னியர் கைவிளக் கேந்தக் காவலன்பொன்னியல் வளநகர் பொலியத் தோன்றினார் 810

காவியங் கருங்கணார் கமழ வூட்டியவாவியங் கொழும்புகை தழுவி யாய்மலர்க்கோவையங் குழுநிலை மாடம் யாவையும்பாவிய பனிவரைப் படிவங் கொண்டவே 811
மல்லிகை மனங்கமழ் மதுபெய் மாலையுமுல்லையம் பிணையலு மொய்த்த பூண்கடைஎல்லியங் கிளம்பிறைக் கதிர்கள் வீழ்ந்தனதொல்லையங் கடிநகர் துயில்வ போன்றவே 812
பயாபதி மக்களைத் தன்பால் அழைத்தல்
செம்பொன்மா மணிநகர்ச் செல்வ வீதியுட்கொம்பனா ரடிதொழக் கோயி லெய்தலுநம்பிமார் வருகென நாறு நீரொளிஅம்பொன்மா மணிமுடி யரச னேயினான் 813
விசய திவிட்டர்கள் தந்தையை வணங்குதல்
அருளுவ தென்கொலென் றஞ்சி செஞ்சுடர்இருளுக வெழுந்ததொத் திருந்த கோனடிச்சுருளுறு குஞ்சிக டுதையத் தாழ்ந்தனர்மருளுறு மனத்தினன் மன்னன் னாயினான் 814
பயாபதி மக்களைத் தழுவுதல்
திருவரை யனையதோட் சிழ்ருவர் தம்மையக்கருவரை யனையவெங் களிதல் யானையானிருவரும் வருகென விரண்டு தோளினுமொருவரை யகலத்தி னெடுங்கப் புல்லினான் 815
மானவா மதகளிற் றுழவன் மக்கடந்தேனவாஞ் செழுமலர் செறிந்த குஞ்சியுட்கானமா மலர்த்துகள் கழுமி வீழ்ந்தனவானவாந் தடக்கையான் மகிழ்ந்து நோக்கினான் 816
என்னைநும் மீரலர்க் குஞ்சி தம்முளித்துன்னிய வனத்துக டுதைந்த வாறெனமன்னவ னருளலு மகர வார்குழைமின்னிவர் மணிக்கழல் விசயன் செப்பினான் 817
விசயன் தந்தைக்குத் திவிட்டன் அரிமாவினை அழித்தமை விளம்பல்
போற்றநம் புறணிசூழ் காடு பாழ்செய்வான்சீற்றமிக் குடையதோர் சீயஞ் சேர்ந்ததுவேற்றுவன் றமர்கள்வந் துரைப்ப வெம்பியிவ்வாற்றல்சா லடியன்சொன் றதனை நீக்கினான் 818
பயாபதியின் கழி பேருவகை
யானுமங் கிவனொடு மடிக ளேகினேன்வானுய ரிமகரி மருங்கி லென்றுபூந்தேனுய ரலங்கலான் சிறுவன் சொல்லலுந்தானுயிர் தளிர்ப்பதோர் சவிய னாயினான் 819
சுடரொளி மிகுசோதி சூழ்கழற் காளை மார்தம்அடரொளி முடிமன்ன னேவலா னாய்பொன் னாகத்தொடரொளி சுடர்ஞாயிற் சூளிகை சூழு நெற்றிப்படரொளி நெடுவாயிற் பள்ளிபம் பலங்கள் சேர்ந்தார் 820

சூளாமணி முதல் பாகம் முற்றிற்று.

by C.Malarvizhi   on 27 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.