LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஆன்மீகத் தமிழர்கள் Print Friendly and PDF

அருட்பிரகாச வள்ளலார்

 

பிறப்பு: அவர்கள் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் நாள் மாலை 5:30 மணி அளவில் இராமையா பிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதியாருக்கு 
ஐந்தாவது மகவாக இறைவனால் வருவிக்க உற்றார். சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக் கணக்கான அருட்பாடல்களை 
அருளினார்கள். அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே திருவருட்பா என்று போற்றப் படுகிறது.
திருவருட்பா:திருவருட்பா அனைத்தும் அடங்கிய ஒர் அருள் ஞானக்களஞ்சியம். திருவருட்பா என்பது உண்மை உரைக்க வந்த இறை நூலாகும். இதில் பற்பல 
சாதன ரகசியங்களும், சிவ ரகசியங்களையும், சித்துகளையும் உள்ளடக்கி பாடப்பெற்றுள்ளது. எந்த ஒரு சித்த புருஷரும் வெளிப்டையாக பகிரங்கமாக 
எடுத்துரைக்காத விசயங்களை எல்லாம் தெள்ளம் தெளிவாக எடுத்துரைக்கப் பெற்ற ஒரே ஒரு நூல் என்று சொன்னால் அதுவே திருவருட்பாவாகும்.
சமரச சுத்த சன்மார்க்கம்:நாம் யார்? நம் நிலை எப்படிப் பட்டது? கடவுள் நிலை என்ன? நாம் கடவுளை விரைந்து எவ்வாறு அடைவது? எங்கனம் அழியாத 
தேகத்தை பெற்று நித்திய வாழ்வு பெறலாம் என்று ஆராய்ந்து அதனை அடையும் வழியினை கண்டறிந்தார்கள் வள்ளலார். தான் கண்டு அடைந்த அந்த 
வழியை நாம் எல்லாரும் பெறவே வள்ளல் பெருமானால் ஏற்ப்படுத்தப்பட்டதே "சமரச சுத்த சன்மார்க்கம்". பல கோடி யுகங்கள் கழிந்தாலும், வேதங்கள் பல 
கற்றலும் மற்றும் எவ்வகையாலும் கண்டுகொள்ள முடியாத ஆண்டவரை மிகவும் சுலபமாக அனைவரும் அடைதற்பொருட்டு வள்ளல் பெருமானால் 
எற்ப்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும்.அன்று தொட்டு இன்று வரை மனிதன் பல வழிகளிலே தெய்வங்களை தேடினான். பல தெய்வங்களை 
வணங்கிணான், வணங்கிக் கொண்டும்முள்ளான். இப்படி மனிதன் பல பல தெய்வங்களை கூறியும் பல வற்றில் புகுந்தும் முடிவில் தெய்வத்தின் 
நிலையறியாது மாண்டுபோனன். இப்படி இருட்டுலகில் மடிந்து கொண்டுருக்கும் மனிதனை ஒளி நெறி பெற்றிட வள்ளல் பெருமானால் எற்படுத்தியதே சுத்த 
சன்மார்க்கம் ஆகும்.மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவகாருண்ய வழி நடத்தி மனிதனுக்கு தெய்வநிலையை அடையச் செய்விப்பதே சுத்த 
சன்மார்க்கத்தின் முக்கிய நோக்குமாகும். சாதியிலே மதங்களிலே பேதமுற்று அலைந்து வீணே அழியும் இந்த உலகத்தவர்களுக்கு ஆன்ம நேய 
ஒருமைப்பாட்டுரிமை என்னும் சாதனத்தை கொண்டு வந்தார்.ஓளி நெறி மார்க்கம்:பேதமற்று, கலவரங்கள் இல்லாத அமைதியான இயற்கை ஒட்டிய வாழ்வு 
பெறவும், என்றென்றும் தடைபடாது அழியாத மெய்வாழ்வு பெறவும் நமக்கு வள்ளல் பெருமான் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆதாவது, நமது 
ஆன்மாவின் கண் பல திரைகளால் முடப்பட்டு இருப்பதாகவும் அவற்றை நீக்கி கொண்டு, ஏமசித்தி, சாகக்கல்வி, தத்துவநிக்கிரஹம் செய்தல், கடவுள் 
நிலையறிந்து அம்மயமாதல் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை நாம் பெறுமாறு நமக்கு எடுத்து அருளியுள்ளார். இவ்வாறு முடிந்த முடவாகிய சிவானந்த 
அனுபவமே தவிர மற்று வேரில்லை என்றும் அவ்வனுபத்தை எல்லோரும் தன்னைப் போல் பெற ஒரு மார்க்கத்தை கண்டார்கள், அது தான் சமரச சுத்த 
சன்மார்க்கம் என்னும் ஓளி நெறி மார்க்கமாகும்.திருவருட்பா பாடல்கள்:வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமான், நாம் 
உண்மையையும் புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே திருவருட்பாவாகும். திருவருட்பா பாடல்கள் முழுவதும் உள்ளத்தை உருக்குவன. ஆழ்ந்த 
கருத்துகளை கொண்டன. ஊன் உருக்கி உள்ளெளி பெருக்கும். இத்திருவருட்பாவில் அமைந்துள்ள 6000 மேற்பட்ட பாடல்களை இசைத்தட்டு mp3 வடிவமாக 
கடந்த 2004 ஆண்டு முதல் திருவருட்பா இசையமுதம் திட்டதின் மூலமாக Vallalar.Org செயல்படுத்தி கொண்டு வருகின்றது.
இறப்பு:வள்ளலார் அவர்கள் இறுதியாக நிறுவிய அமைப்பு 1872ம் ஆண்டு "சத்திய ஞானசபை" ஆகும். வள்ளலார் ஜனவரி 30, 1874ம் ஆண்டு இயற்கை 
எய்தினார். 

பிறப்பு:

 

     அவர்கள் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் நாள் மாலை 5:30 மணி அளவில் இராமையா பிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதியாருக்கு ஐந்தாவது மகவாக இறைவனால் வருவிக்க உற்றார். சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக் கணக்கான அருட்பாடல்களை அருளினார்கள். அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே திருவருட்பா என்று போற்றப் படுகிறது.

 

திருவருட்பா:

 

     திருவருட்பா அனைத்தும் அடங்கிய ஒர் அருள் ஞானக்களஞ்சியம். திருவருட்பா என்பது உண்மை உரைக்க வந்த இறை நூலாகும். இதில் பற்பல சாதன ரகசியங்களும், சிவ ரகசியங்களையும், சித்துகளையும் உள்ளடக்கி பாடப்பெற்றுள்ளது. எந்த ஒரு சித்த புருஷரும் வெளிப்டையாக பகிரங்கமாக எடுத்துரைக்காத விசயங்களை எல்லாம் தெள்ளம் தெளிவாக எடுத்துரைக்கப் பெற்ற ஒரே ஒரு நூல் என்று சொன்னால் அதுவே திருவருட்பாவாகும்.

 

சமரச சுத்த சன்மார்க்கம்:

 

     நாம் யார்? நம் நிலை எப்படிப் பட்டது? கடவுள் நிலை என்ன? நாம் கடவுளை விரைந்து எவ்வாறு அடைவது? எங்கனம் அழியாத தேகத்தை பெற்று நித்திய வாழ்வு பெறலாம் என்று ஆராய்ந்து அதனை அடையும் வழியினை கண்டறிந்தார்கள் வள்ளலார். தான் கண்டு அடைந்த அந்த வழியை நாம் எல்லாரும் பெறவே வள்ளல் பெருமானால் ஏற்ப்படுத்தப்பட்டதே "சமரச சுத்த சன்மார்க்கம்". பல கோடி யுகங்கள் கழிந்தாலும், வேதங்கள் பல கற்றலும் மற்றும் எவ்வகையாலும் கண்டுகொள்ள முடியாத ஆண்டவரை மிகவும் சுலபமாக அனைவரும் அடைதற்பொருட்டு வள்ளல் பெருமானால் எற்ப்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும்.அன்று தொட்டு இன்று வரை மனிதன் பல வழிகளிலே தெய்வங்களை தேடினான்.

 

     பல தெய்வங்களை வணங்கிணான், வணங்கிக் கொண்டும்முள்ளான். இப்படி மனிதன் பல பல தெய்வங்களை கூறியும் பல வற்றில் புகுந்தும் முடிவில் தெய்வத்தின் நிலையறியாது மாண்டுபோனன். இப்படி இருட்டுலகில் மடிந்து கொண்டுருக்கும் மனிதனை ஒளி நெறி பெற்றிட வள்ளல் பெருமானால் எற்படுத்தியதே சுத்த சன்மார்க்கம் ஆகும்.மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவகாருண்ய வழி நடத்தி மனிதனுக்கு தெய்வநிலையை அடையச் செய்விப்பதே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்குமாகும். சாதியிலே மதங்களிலே பேதமுற்று அலைந்து வீணே அழியும் இந்த உலகத்தவர்களுக்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை என்னும் சாதனத்தை கொண்டு வந்தார்.

 

ஓளி நெறி மார்க்கம்:

 

     பேதமற்று, கலவரங்கள் இல்லாத அமைதியான இயற்கை ஒட்டிய வாழ்வு பெறவும், என்றென்றும் தடைபடாது அழியாத மெய்வாழ்வு பெறவும் நமக்கு வள்ளல் பெருமான் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆதாவது, நமது 
ஆன்மாவின் கண் பல திரைகளால் முடப்பட்டு இருப்பதாகவும் அவற்றை நீக்கி கொண்டு, ஏமசித்தி, சாகக்கல்வி, தத்துவநிக்கிரஹம் செய்தல், கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை நாம் பெறுமாறு நமக்கு எடுத்து அருளியுள்ளார். இவ்வாறு முடிந்த முடவாகிய சிவானந்த அனுபவமே தவிர மற்று வேரில்லை என்றும் அவ்வனுபத்தை எல்லோரும் தன்னைப் போல் பெற ஒரு மார்க்கத்தை கண்டார்கள், அது தான் சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் ஓளி நெறி மார்க்கமாகும்.

 

திருவருட்பா பாடல்கள்:

 

     வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமான், நாம் உண்மையையும் புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே திருவருட்பாவாகும். திருவருட்பா பாடல்கள் முழுவதும் உள்ளத்தை உருக்குவன. ஆழ்ந்த 
கருத்துகளை கொண்டன. ஊன் உருக்கி உள்ளெளி பெருக்கும். இத்திருவருட்பாவில் அமைந்துள்ள 6000 மேற்பட்ட பாடல்களை இசைத்தட்டு mp3 வடிவமாக கடந்த 2004 ஆண்டு முதல் திருவருட்பா இசையமுதம் திட்டதின் மூலமாக Vallalar.Org செயல்படுத்தி கொண்டு வருகின்றது.

 

இறப்பு:

 

     வள்ளலார் அவர்கள் இறுதியாக நிறுவிய அமைப்பு 1872ம் ஆண்டு "சத்திய ஞானசபை" ஆகும். வள்ளலார் ஜனவரி 30, 1874ம் ஆண்டு இயற்கை எய்தினார். 

by Swathi   on 22 Aug 2012  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருவையாற்றில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா - பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி கலைஞர்கள் இசையஞ்சலி. திருவையாற்றில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா - பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி கலைஞர்கள் இசையஞ்சலி.
திருமுருக கிருபானந்த வாரியார் திருமுருக கிருபானந்த வாரியார்
தமிழும் சமயமும் ஒரு சிறப்பு கட்டுரை தமிழும் சமயமும் ஒரு சிறப்பு கட்டுரை
தங்கம்மா அப்பாக்குட்டி தங்கம்மா அப்பாக்குட்டி
பத்திரகிரியார் பத்திரகிரியார்
முரளீதர சுவாமிகள் முரளீதர சுவாமிகள்
முகவை கண்ண முருகனார் முகவை கண்ண முருகனார்
மத்துவர் மத்துவர்
கருத்துகள்
13-Nov-2018 10:30:43 natarajamoorthyR said : Report Abuse
வள்ளலார்,மரணமில்லா பெருவாழ்வு என்னும் சித்தி அடைந்தார் என்பதே சரி.
 
06-Oct-2013 02:07:50 rajappa said : Report Abuse
அருமை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.