இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக இருந்து வரும் தோனி, விளம்பர உலகின் கலக்கல் நாயகனாகவும் விளங்குகிறார். சமீபத்தில் பாலிவுட் கவர்ச்சி நாயகி பிபாஷா பாசுவுடன் இணைந்து "ஷூ" விளம்பரத்தில் தோன்றி கலக்கினார். தற்போது நடிகை அசினுடன் ஜோடி சேர்ந்து இன்னொரு விளம்பரத்தில் கலக்கியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ந்து மிக குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்ட தோனி, "T-20" உலக கோப்பை மற்றும் ஒரு நாள் போட்டியில் உலக கோப்பையை வென்ற பின், இவரது புகழ் பன்மடங்காக உயர்ந்தது. விளம்பரநிறுவனங்கள் இவரை தேடி வந்தன. ஒரு நிறுவனத்தின் விளம்பரத்தில் தோன்ற பல கோடி ரூபாய் சம்பளமாக பெறுகின்றார்.
|