LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்தை பதம் பார்த்தது இந்திய அணி

 

ஐதராபாத் : டெஸ்டில் அபாரமாக விளையாடிய இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 115 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. அஷ்வின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி பரிதாபமாக வீழ்ந்தது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 438 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு சுருண்டு, "பாலோ-ஆன்' பெற்றது. மூன்றாம் மற்றும் நான்காம் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்ட நிலையில், நியூசிலாந்து பேட்ஸ்மேன்களால் இந்திய வீரர் அஸ்வினின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை. டேனியல் பிளைன் (11), பிராங்க்ளின் (5), பிராஸ்வெல் (1), வான் விக் (13), பவுல்ட் (0), மார்டின் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் இரண்டாவது இன்னிங்சில் 164 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து அணி, படுதோல்வி அடைந்தது. 
முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் இரண்டாவது இன்னிங்சிலும் அஷ்வின் 6 விக்கெட் கைப்பற்றினார். இந்தியா வீரர் அஷ்வினுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 

ஐதராபாத் : டெஸ்டில் அபாரமாக விளையாடிய இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 115 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. அஷ்வின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி பரிதாபமாக வீழ்ந்தது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 438 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு சுருண்டு, "பாலோ-ஆன்' பெற்றது. மூன்றாம் மற்றும் நான்காம் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்ட நிலையில், நியூசிலாந்து பேட்ஸ்மேன்களால் இந்திய வீரர் அஸ்வினின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை. டேனியல் பிளைன் (11), பிராங்க்ளின் (5), பிராஸ்வெல் (1), வான் விக் (13), பவுல்ட் (0), மார்டின் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் இரண்டாவது இன்னிங்சில் 164 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து அணி, படுதோல்வி அடைந்தது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் இரண்டாவது இன்னிங்சிலும் அஷ்வின் 6 விக்கெட் கைப்பற்றினார். இந்தியா வீரர் அஷ்வினுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 

by Swathi   on 27 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம்
ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்! ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.
உஷாவை  முந்திய  திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி
விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி
உலக கோப்பை கபடி போட்டியில்  இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன் உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.