லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சாய்னா நேவால் சீன வீராங்கனை வாங் ஜின்னை எதிர்த்து விளையாடினார். முதல் செட்டை சாய்னா 18-21 என்ற கணக்கில் இழந்தார். இருப்பினும் 2-வது செட்டில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தபோது வாங் ஜின் தசைப்பிடிப்பால் போட்டியில் இருந்து விலகினார். அதனால் சாய்னாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.
சாய்னாவைப் பற்றிய சில செய்தித் துளிகள்,
சாய்னா நேவால், பிறப்பு 17 மார்ச் 1990. இவர் ஒரு இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. இறகுப்பந்தாட்ட உலக பேரவையின் நடப்பு உலக தரவரிசையில் ஐந்தாம் இடத்தில் உள்ளார், உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும் இவரே.
|