நியூயார்க், அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் விளையாட நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா தகுதி பெற்றார். இதே போல் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் ஆண்டி மர்ரே குரோசியாவின் டோடிக்குடன் மோதினார். இதில் சிறப்பாக விளையாடிய முர்ரே 6-2, 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதியடைந்தார். ஸ்பெயினை சேர்ந்த டேவிட் பெர்ரர், அர்ஜென்டினாவை சேர்ந்த டெல்போட்ரோ ஆகியோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
|