ஐதராபாத் : ஐதராபாத் டெஸ்டில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நியூசிலாந்து பவுலர்கள் இந்தியாவின் பேட்டிங்கை சமாளிக்க முடியாமல் தடுமாற்றம். இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் சர்வதேச மைதானத்தில் நேற்று துவங்கியது. புஜாராவின் சிறப்பான ஆட்டத்தால், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 5 விக்கெட் இழப்புக்கு இந்தியா 307 ரன் எடுத்துள்ளது. சச்சின் 19 ரன்னிலேயே போல்டாகி ரசிகர்களை ஏமாற்றுத்துக்கு உள்ளாக்கினார்.
|