LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    பழங்கள்-தானியங்கள் Print Friendly and PDF

முளைதானிய உணவில் இருக்கும் உன்னத சத்துக்கள் !!

தினமும் ஒரு வேளையாவது இயற்கை உணவுகளை உட்கொண்டு வந்தால், நமக்கு வரும் பாதி நோய்கள் மறைந்து உடலின் ஆரோக்கியம் மேம்படும்.  

முளை தானிய உணவாக எதை சாப்பிடலாம்?

பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.

இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால் 8 – 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான உன்னதமான உயிர் உணவு.

இதன் பயனை உணர்ந்து கொண்டால் கட்டாயம் இது உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும்.

முளை தானியத்தில் இருந்து முளை தானியக் கஞ்சி, சப்பாத்தி, தோசை மற்றும் அடை போன்ற உணவுகளையும் தயாரித்து சாப்பிடலாம். இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.

ஒவ்வொரு முளைதானிய உணவுக்கு ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உண்டு :

முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் மட்டுப்படும்.

முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் போடும் கண்பார்வை மேம்படும்.

முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம் தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்.

முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும் மூட்டுவலி தீரும்

எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.

- உணவே மருந்து

by Swathi   on 14 May 2015  7 Comments
Tags: Sprouted Grains   Mulaikattiya Payaru   முளை கட்டிய பயிறு   முளைவிட்ட எள்ளு   முளைவிட்ட கொண்டக்கடலை   முளைவிட்ட கறுப்பு உளுந்து   முளைவிட்ட கொள்ளு  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முளைதானிய உணவில் இருக்கும் உன்னத சத்துக்கள் !! முளைதானிய உணவில் இருக்கும் உன்னத சத்துக்கள் !!
முளைகட்டிய பச்சைப் பயிறு முளைகட்டிய பச்சைப் பயிறு
கருத்துகள்
12-Mar-2018 04:26:23 சரண்யா said : Report Abuse
மிக சிறந்த கருத்துக்கள். நன்றி
 
13-Nov-2017 02:30:11 ayyanar said : Report Abuse
எனது வயது 22 ஆகிறது ஆனால் நான் ஒல்லியாக உள்ளேன் .மேலும் எடையும் குறைவு (46 kg) உடம்பு போட மற்றும் எடை அதிகரிக்க என்ன செய்வது.......? உயரமும் குறைவு 5 "2 இன்ச்.......?
 
10-Jan-2017 01:39:13 rathinakumar said : Report Abuse
Entha vikithathil navathaniyangalai serpathu
 
11-Nov-2016 09:03:43 gunavathy said : Report Abuse
கல்யாணம் ஆன பெண்கள் கர்ப்பம் அடைய சாப்பிட வேண்டிய நவதானியம் எது என்பது பற்றி சொல்லுங்கள், மற்றும் கர்ப்பப்பை பலம் அடைய என்ன செய்ய வேண்டும்
 
19-Oct-2016 01:17:39 Thamizhazhan said : Report Abuse
Makachirantha karuthukal , makizhchi
 
10-Sep-2016 10:30:59 ன்.singaravelan said : Report Abuse
Super
 
05-Oct-2015 05:31:45 மணி said : Report Abuse
good
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.