பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் ரெமோ.. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது. இதில் சிவகார்த்திகேயன் பெண் செவிலியர் வேடத்தில் தோன்றியிருந்தார்.
சிவகார்த்திகேயனின் பெண் வேட முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஏன் இந்த பெண் வேடம் என விசாரித்த போது, கீர்த்தி சுரேஷை காதலிக்க வைக்க தான் இந்த அலப்பரையாம்...
மேலும், இப்படத்தில் ஒரு ஹீரோயின் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார்.அவரு வேரு யாரும் இல்லை, சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிசட்டை படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யா தானாம்.
|