LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

மத்திய காவல் படைகளில் 62 ஆயிரத்து 390 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் !!

எஸ்.எஸ்.சி. என்று அழைக்கப்படும் மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு மத்திய காவல் படைகளில் காலியாக உள்ள 62 ஆயிரத்து 390 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

வயது வரம்பு : 1.8.2015 அன்று 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பு சலுகைகள் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி : ஆண்கள் குறைந்தது 170 செ. மீ. உயரம் இருக்க வேண்டும். பெண்கள் 157 செ. மீ., உயரம் இருக்க வேண்டும். ஆண்களுக்கு விரிவடையாத நிலையில் மார்பளவு குறைந்தது 80 செ.மீ., இருக்க வேண்டும். குறைந்தது 5 செ.மீ., விரிவடைய வேண்டும். இரு பாலருக்கும் உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும்.

தேர்வு முறை: உடற்தகுதித் தேர்வு, உடற் திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு ஆகியவை மூலமாக தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : ஆன் லைன் மற்றும் ஆப் லைன் மூலமாக ரூ.50 செலுத்தலாம். பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

ஆன் லைன் மூலமாக செலுத்துவோர் http://ssconline.nic.in, http://ssconline2.gov.in ஆகிய இணைய தளங்கள் மூலமாக செலுத்தலாம். ஆப் லைன் மூலமாக செலுத்துவோர் ஸ்டேட் பேங்க் சலான் மூலமாக செலுத்தலாம். சி.ஆர்.எப்.எஸ்., எனப்படும் மத்திய அரசுப் பணிகளுக்கான விண்ணப்ப ஸ்டாம்ப் மூலமாகவும் செலுத்தலாம்.

தேர்வு: எழுத்துத் தேர்வு அக்டோபர் 2015-இல் நடத்தப் படும். இதில் ரீசனிங், கணிதம், ஆங்கிலம் மற்றும் பொது அறிவு பகுதிகள் இடம் பெறும். அப்ஜெக்டிவ் முறையில் இதில் கேள்விகள் இடம் பெறும்.

விண்ணப்பிக்கும் முறை: http://ssconline.nic.in & http://ssconline2.gov.in இணைய தளங்கள் வாயிலாக 2 கட்டமாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள் : பிப்ரவரி 21 வரை

கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள http://ssc.nic.in என்ற இணைய முகவரியை பார்க்கவும்.

by Swathi   on 19 Feb 2015  1 Comments
Tags: Constable Recruitment   SSC Constable Recruitment   காவல் படை வேலைவாய்ப்பு   காவல் துறை வேலைவாய்ப்பு   62390 பணியிடங்கள்   மத்திய காவல் படை   Latest SSC Recruitment  
 தொடர்புடையவை-Related Articles
மத்திய காவல் படைகளில் 62 ஆயிரத்து 390 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் !! மத்திய காவல் படைகளில் 62 ஆயிரத்து 390 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் !!
மத்திய ரிசர்வ் படையில் 482 தலைமை காவலர் காலிப்பணியிடங்கள் !! மத்திய ரிசர்வ் படையில் 482 தலைமை காவலர் காலிப்பணியிடங்கள் !!
கருத்துகள்
26-Mar-2015 06:44:26 லோ. தீபிகா said : Report Abuse
i வில் லைக் டு அட்டெண்ட் திஸ் job
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.