LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

வயிற்றை சுத்தமாக வைத்திருக்க உதவும் உணவு வகைகள் !

அஜீரணப் பிரச்சினை என்பது இன்று அதிகமான பேரை அவதிக்குள்ளாக்குகிறது. உண்ணும் உணவு ஒழுங்காக செரிக்காவிட்டால் உடல்நலத்துக்குப் பாதிப்பு ஏற்படும். வயிற்று வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு சிரமத்தைத் தரும். எனவே வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்போது தான் செரிமான மண்டலத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும். பச்சைக் காய்கறிகள் வயிற்றைச் சுத்தமாக்கும். கீரைகள், செலரி, புராக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும். 

 

அதேபோல கேரட், வெங்காயம், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற உயர்தர கார்போஹைட்ரேட் உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை. புளிப்புச் சுவையுள்ள சிட்ரஸ் பழங்கள், செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் வைக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு ஏற்றது. 

 

எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை செரிமான மண்டலத்துக்கு ஏற்ற உணவுகள். அதே போல் தினசரி இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். தானிய உணவுகள், கோதுமை ரொட்டி போன்றவை எளிதில் ஜீரணமாகும். 

 

தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும். அதே போல, தினசரி உண்ணும் உணவுகள் எளிதில் செரிப்பதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும். பால், பழரசங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூலம் செரிமான மண்டல கோளாறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். 

 

சத்தான உணவு சாப்பிடுவதன் மூலம் உடம்பில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும். தொப்பை ஏற்படாது. வயிறு தட்டையாக இருக்கும். வாயில் வைக்கும் உணவில் நாம் கவனமாக இருந்தால், வயிற்றில் பிரச்சினை ஏற்படாது!

by Swathi   on 15 Aug 2013  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.