LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- வயிறு(Stomach)

வயிறு பிரச்சனைகளுக்கான எளிமையான தீர்வு !! (அக்குபிரஷர்)

மனித ஆரோக்கியத்தின் எதிரிகள் என்றால் அது மலச்சிக்கலும், அஜீரணமும் தான். 


உணவை எப்போதும் நன்றாக மென்று மெதுவாகச் சாப்பிட வேண்டும். நாம் உண்ட உணவு முறையாக இரைப்பையில் ஜீரணிக்க 4 மணி நேரமாகும். அங்கு செரிமானம் ஆக நேரமே கொடுக்காமல் காபி, டீ, நொறுக்கு தீனிகள் என்று மேலும் திணிப்போம். அளவிற்கதிகமாக இடைவேளையின்றி அடிக்கடி உள்ளே போகும் உணவால் இரைப்பை சுருங்கி விரிய வழியின்றி செயல்படாது ஸ்தம்பித்து விடும்.


குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் உணவு இரைப்பையில் ஜீரணிக்க முடியாத நிலையில் தங்கியிருந்தால் அது புளித்துக் கெட்டுப் போய்விடும். கோபம், பயம், கவலை அவசர மனோநிலையில் உணவை உண்ணக் கூடாது. இரவில் தூங்குவதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பாக, உணவை மிக கொஞ்சமாகவோ (அ) பழங்களையோ உண்டால், உணவு வயிற்றில் தங்கி கெட்டுப் போகாமல் நன்கு செரிமானம் ஆகும்.


பசியின்மை, செரிமானமின்மை, ஏப்பம், புளியேப்பம், வாய் நாற்றம், நெஞ்செரிச்சல், வயிறு உப்பசம், மலச்சிக்கல் அஜிரண வாயுக்கோளாறு, நீடித்த ஓரு பக்கத்தலைவலி, தலைச்சுற்றல், கண்பார்வையில் மங்கல், நரம்புத்தளர்ச்சி, தூக்கக்குறைவு, பிடரி கழுத்து, முதுகு, இடுப்பு, தோள்பட்டைகளில் வலி, மூட்டுக்களில் வலியோடு சேர்ந்த வீக்கம், வறட்டு இருமல் என இத்தனையும் செரிமான உறுப்புகள் பாதிக்கப்பட்டதால் உண்டான இடையூறுகளே.


இந்த தொல்லை உள்ளவர்கள் முதலில் தொடர்ந்து மூன்று தினங்கள் பழச்சாறு (சர்க்கரை, பால் சேர்க்க கூடாது) மற்றும் பழங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். பழ உணவுகளால் அஜிரணம், மலச்சிக்கல் உண்டாகாது. உணவில் கீரைகள், நார்ப்பொருள் அடங்கிய காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவேண்டும்.


"முறையாக ஒன்றை ஆரம்பித்தால் கிடைக்கும் வெற்றியில் பாதி, முதலிலேயே கிடைத்துவிடும்" என்பது ஒரு சீனப் பழமொழி. 

மேற்கூறிய அத்தனை வியாதிகளுக்கும் அக்குபிரஷர் மூலம் எளிய வழியில் தீர்வு காணலாம். படித்தில் காட்டியுள்ளது போல இரண்டு கைகளிலும் மிகவும் அழுத்தமான ஒரு பந்தை (Ball) வைத்து ஒரு நிமிடத்திற்கு உருட்ட வேண்டும்.. இதே போல ஒரு நாளைக்கு நான்கைந்து முறை செய்து பாருங்கள்...முதல் நாளே உடலில் உண்டாகும் மாற்றங்களை நீங்கள் நன்கு உணர முடியும்.

by Swathi   on 05 Jun 2014  1 Comments
Tags: Stomach Problem   Acupuncture   வயிறு              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வயிற்றுப் பிரச்சினைகளுக்கான காரணங்களும் தீர்வுகளும். Stomach problems and solutions in Tamil. வயிற்றுப் பிரச்சினைகளுக்கான காரணங்களும் தீர்வுகளும். Stomach problems and solutions in Tamil.
வெறும் வயிற்றில் உணவு சாப்பிடலாமா? ஹீலர் பாஸ்கர் !! வெறும் வயிற்றில் உணவு சாப்பிடலாமா? ஹீலர் பாஸ்கர் !!
வயிறு பிரச்சனைகளுக்கான எளிமையான தீர்வு !! (அக்குபிரஷர்) வயிறு பிரச்சனைகளுக்கான எளிமையான தீர்வு !! (அக்குபிரஷர்)
தீர்ந்தது வயிற்று வலி ! தீர்ந்தது வயிற்று வலி !
கருத்துகள்
13-Aug-2014 13:12:19 டப்பா said : Report Abuse
ஈஈஈ
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.