LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF

ஸ்டட் கத்திரிக்காய்(Stud Brinjal)

தேவையானவை:


பிஞ்சு கத்திரிக்காய் -15 (சிறியது)

பெரிய வெங்காயம் - இரண்டு

தக்காளி - இரண்டு

வர மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

வர மல்லித்தூள் -3 டீஸ்பூன்

மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

கடுகு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை -தாளிக்கத் தேவையான அளவு

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்


செய்முறை:


1.பிஞ்சு கத்திரிக்காய்களை காம்புடன் நான்றாக வகிர்ந்து கொள்ளவும். முழுவதுமாக நறுக்கக்கூடாது. பெரிய வெங்காயத்தையும் தக்காளியையும் தனித்தனியே நறுக்கி வைத்து எடுத்துக் கொள்ளவும்.

2. ஒரு தட்டில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், உப்பு, பெருங்காயத்தூள் ஒன்றாக கலந்து (தண்ணீர் சேர்க்காமல்) ஒவ்வொரு கத்திரிக்காய்க்குள்ளும் நிரப்பி, கால் மணி நேரம் நன்கு உப்பு, காரம் நன்றாக ஒட்டுமாறு செய்யவும்.

3.வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலையை தாளித்து முதலில் வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கி அத்துடன் தக்காளி சேர்த்து வதக்கி, அத்துடன் மசாலா நிரப்பிய கத்திரிக்காய்களைப் போட்டு ஒரு கையளவு தண்ணீர் தெளித்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

4.வெந்ததும் சற்று முறுக விடவும். கிளறும் போது கத்தரிக்காய் சிதையாமல் அடியோடு கிளறி விடவும். சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் கூட்டு தொட்டுக் கொள்ள ஏற்றது. கத்திரிக்காய் பிஞ்சாக இருந்தால் மட்டுமே இந்த உணவு வகை மிகவும் ருசியாக இருக்கும்.

Stud Brinjal

Ingredients for Stud Brinjal :


Brinjal - 12 (Small sized),

Onion - 2 (Big),

Tomato - 2,

Dry Chilli Powder - 1 tsp,

Dry Coriander Powder - 3 tsp,

Turmeric Powder - 1 /4 tsp,

Salt - as needed. 


For Seasoning :


Mustard, Fenugreeks, Asafoetida and Curry Leaves - for seasoning,

Oil - as required.


Method to make Stud Brinjal :


1. Take the small sized Brinjals, Chop it the end of the Brinjal and do not remove the stalk from brinjal. Then Chop the Brinjals in the bottom alone. Do not chop the stalk. It should be attached to the brinjal. 

2. Chop the Big onions and tomatoes finely. Keep it aside. 

3. Add Chilli Powder, Turmeric Powder, Coriander Powder, Asafoetida and Salt to taste in a plate. Mix up the all masala ingredients together. Make it a well dry powder. Do not add water. 

4. Put the dry masala inside the every Brinjals. Keep the Brinjals aside for 15 minutes. The dried masala should be pasted in the brinjal. 

5. Heat some Oil in a frying pan, then add Mustards, Curry Leaves, Fenugreeks and allow it to season. Then add chopped onions and tomatoes. Allow it to fry well. Then add the pasted brinjals in that pan. Allow it to fry with pouring water.  

6.  Allow it boil for some minutes in a low flame. Close the pan lid. Stir it well and brinjals should not break off. 

7. Tasty and Spicy Stud Brinjal is ready. Eat along with Rice and Curd. 

by Swathi   on 16 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.