LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சீனப் பல்கலைக்கழகத்தில் தமிழை முதன்மையாக எடுத்து படிக்க ஆர்வம்காட்டும் சீன மாணவர்கள் ..

பெய்ஜிங் வெளிநாட்டு மொழி ஆய்வுப் பல்கலைக்கழகத்தில் (Beijing Foreign Studies University) தமிழ் இளங்கலை பட்டப்படிப்பு இவ்வாண்டு தொடங்கப்பட்டது.

 

இதில் முதல் ஆண்டிலேயே பத்து சீன மாணவர்கள் பீஜிங், யூனான், ஷேன்டாங் பகுதிகளிலிருந்து சேர்ந்துள்ளனர்.  இதன் முதல் நாள் தொடக்க நிகழ்வில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பன்னாட்டு பொறுப்பாளர் திரு.வெற்றிச்செல்வன் அவர்கள் இணையம் வழி அமெரிக்காவிலிருந்து வரவேற்று பேசினார்.

 

பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில்  முனைவர். கலதி வீராசாமி மற்றும் சூ சின் (ஈஸ்வரி)  ஆகியோர் பணியாற்றுகிறார்கள். 

 

தமிழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது குறித்து அதில் படிக்கும் சீன மாணவர்கள் கூறும்போது , பழம்பெரும் இரு தொண்மையான மொழிகளை கற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியை தருவதாக தெரிவித்தனர்.  

 

மேலும் உலகின் கிரேக்கம், சீனம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளை அறிந்தவர்கள் மட்டுமே செவ்விலக்கியங்களை அந்தந்த மொழியிலேயே படிக்கும்,  பகிரும் வாய்ப்பு பெற்றவர்கள் என்ற நிலையில் இந்த மாணவர்கள் உலகின் தொன்மையான இவ்விரு மொழிகளையும், அவைகளுக்குள் உள்ள தொடர்பை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கின்றனர்.

 

இந்நிகழ்ச்சியில் சீன மாணவர்களுடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இளைஞர் பாசறை (IATR- Youth )பன்னாட்டு ஒரூங்கினைப்பாளர் திரு.த.அ.வெற்றிச்செல்வன் அவர்கள் இணையம் வழி சீனம் மற்றும் தமிழின் தொன்மையையும் சிறப்பையும் எடுத்துக்கூறி மாணவர்களை ஊக்குவித்தது வரவேற்று பேசினார்.  

இதுகுறித்து வலைத்தமிழ் நிருபரின் கேள்விக்கு பதிலளிக்கையில் www.IATR.world  -Youth சீனா தேசியப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக சோவ் சினின் (ஈசுவரி) நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெறிவித்தார்.

தமிழக அரசு இதுபோன்ற சர்வதேச தமிழ் கல்வி வளர்ச்சி முன்னெடுப்புகளுக்கு ஆசிரியர்கள் மற்றம் மாணவர் பரிமாற்ற திட்டங்களை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.  

மேலும் கூறுகையில்,  ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைந்த பிறகு உலகெங்கும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் தமிழ் வகுப்புகளை தொடங்க ஆர்வமாக உள்ளன. இந்த நிலையில் நாங்கள் கீழ்காணும் நான்கு முக்கிய செயல்பாடுகளை திட்டமிடுகிறோம் என்று குறிப்பிட்டார்.

1) உலக அளவில் நடைபெறும் அனைத்து தமிழ் சார்ந்த ஆய்வுகளையும் தொகுப்பது.

2) உலக அளவில் தமிழ் ஆய்வுகள், படிப்புகள் நடைபெறும் பல்கலைக்கழகங்களை தொகுத்து பட்டியலிடுவது.

3) தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து பல்வேறு தமிழ் ஆராய்ச்சிகளுக்கு உதவுவது.

4) தமிழ் புரவலர்களை அடையாளம் கண்டு ஆய்வுகளுக்கு நிதியுதவி செய்ய உதவுவது.

 

இதில் இணைந்து கைகொடுக்க விருப்பமானவர்கள் www.tinyurl.com/IATRYNEXT  சுட்டியில் தங்கள் விருப்பத்தினை பதிவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

-இலக்கியன்

 

 

 

Tamil Department of Beijing Foreign Studies University Beijing China has established recently. 10 students from different parts of ChinaBeijingYunnan(Southwest China), Shandong(East China 

ZheJiang(southern China)…) are joining the 4 year Tamil course and will be awarded Bachelor Degree of “Tamil Language and Literature” after finishing their study here.

Today was the inaugural class, we started with a motivating Welcome speech by IATR-Y international coordinator Vetriselvan . The students are very excited about coming to know the different aspects of tamil and long standing relationship between Tamils & Chinese. Students learned their first thirukural and were  introduced to Tamil scripts on the first day of the course.

The course will include language skills training such as Listening and Speaking, writing, intensive reading, translation and interpretation, cultural history of Tamil language, literature extensive reading, academic writing, and area studies focusing on contemporary Tamil speaking areas.

The students will be funded by government to make a 6-12 month study trip in Tamil regions.

All of the 10 students are interested in Tamil language and culture and are very much willing to explore more on China-Tamil connections and to be future cultural ambassadors to connect two peoples.

Beijing Foreign Studies University, or BFSU, is a prestigious university in China under the direct leadership of the Chinese Ministry of Education. It is one of China’s top universities, and one of China’s oldest language universitiesteaching the biggest number of languages and offering education at different levels.

In more than 70 years, over 90 000 people have graduated from BFSU. Among BFSU alumni who work or have worked in the Ministry of Foreign Affairs, we have over 400 ambassadors and over 1 000 counselors. BFSU is thus known as the “Cradle of Diplomats”.

Now there are two teaching faculties in Tamil Department here. Ms Zhou Xin(Eesvari) and Dr. Kalathi Veerasamy.

Zhou Xin has been learning Tamil in China for 4 years and 6 months in Pondicherry Institute of Linguistics and culture, and then in SOAS, University of London.

Dr. Kalathi Veerasamy is Assistant Professor at the Beijing Foreign Studies University (BFSU), Beijing, China. He holds a Ph.D in Comparative Studies from the Centre of Indian Languages, School of Language, Literature and Culture Studies Jawaharlal Nehru University, New Delhi. He completed his M.Phil from the same Centre and in 2016 received the China’s Ambassador Scholarship granted by Embassy of The Peoples Republic of China in New Delhi, India. Before joining BFSU he was Assistant Professor at the Saveetha University, Chennai. His research interests centre on Shi Jing, Lu Xun, Shaolin Temple, Chinese Literature, Language, culture and social subject in respect to both India and China.

 

by Swathi   on 18 Sep 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
27-Sep-2018 09:23:51 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம். சீனாவின் வெளிநாட்டு மொழி ஆய்வு பல்கலைகழத்தில் இ ந்தாண்டு தமிழ் இளங்கலை பட்டப்படிப்பு தொடங்க பெற்றதும் அதில் 10 மாணவர்கள் சேர்ந்துள்ளதையும் அறியும் போது மகிழ்ச்சியாகவுள்ளது.உலகின் தொன்மையான மொழிகளான் சீனம், தமிழ், கிரேக்கம் முதலிய மொழிகளை கற்கும் போது பண்டைய பண்பாடு, கலாச்சாரம் அதிலுள்ள நன்மை, தீமைகளை அறிய ஏதுவாக இருப்பதோடு, வரும் காலங்களிலும் எல்லை தாண்டிய சகோதரத்துவம் மலரும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.