LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF
- செய்திகள்

கணினி பராமரிப்புக்கு கைகொடுக்கும் ஆலோசனைகள்

   உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகில் நம் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் கணணி தான் வாழ்க்கையாக அமைந்துள்ளது. கணணியில் தான் பெரும்பாலான நமது நேரம் செலவிடப்படுகிறது.

 

     நிதி நடவடிக்கைகள் முதல் நமக்கு பிடித்த இசைகளை கேட்பது வரை அனைத்துமே கணணி வழி தான் நம்மில் பலர் செய்கிறோம். நண்பர்களிடம் உரையாடுகிறோம், மின்னஞ்சல்களை அவ்வப்போது பார்த்து பதில் அனுப்புகிறோம்.

 

     இந்த நிலையில் கணணி வேலை செய்யாமல் போனால் என்ன ஆகும்? நாம் கணணியில் தற்போது செய்து கொண்டிருக்கும் பணி காணாமல் போய் விடுகிறது அல்லது நாம் சேமித்து வைத்திருந்த தகவல்கள் எல்லாம் போய் விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். 

 

     கணணியில் பணியாற்றும் அனைவருக்கும் தங்களது வாழ்நாளில் இந்த மாபெரும் சிக்கல் ஒரு நாளாவது ஏற்படும் என்பது வழக்கமாகி வருகிறது. இதுபோன்று திரும்பவும் நிகழாமல் இருக்க என்ன செய்வது? இதுபோன்ற நிலையைத் தவிர்த்து நம் கணணியைப் பேணிப் பராமரிக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கலாம். 

 

     கணணிகளை சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்யவும்: வாரம் ஒரு முறை ஸ்கேன் டிஸ்க் கொண்டு கணணியை ஸ்கேன் செய்வது மிக முக்கியம். ஸ்கேன் செய்வதால் வன்தட்டில் உள்ள பிழைகள் சரி செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். 

 

     வைரஸ் ஒழிப்பு மென்பொருளை நிறுவிக் கொள்ளவும்: எந்த ஒரு கணணியும் வேலை செய்யாமல் போகிறதா? அதற்கு முக்கியக் காரணம் வைரஸ் ஊடுருவலே. இதனால் சந்தைகளில் உள்ள வைரஸ் ஒழிப்பு மென்பொருட்களை நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்கி நிறுவிக் கொள்ள வேண்டும். அதேபோல் வைரஸ் ஸ்கேனிங் நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதும் அவசியம். 

 

     சில வைரஸ் ஒழிப்பு மென்பொருட்கள் ஓன்லைனிலேயே கிடைக்கும். ஆனால் இவற்றை தரவிறக்கம் செய்யும் போது அதிக எச்சரிக்கை தேவை. ஏனெனில் இந்த மென்பொருளே ஒரு வைரஸ் பரப்பும் உத்தியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

     பயர்வால் நிறுவிக் கொள்ளவும்: இணையதளங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவரானால் பயர்வால் இடுவது மிகவும் அவசியம். அதிகாரபூர்வமற்ற, தேவையற்ற விடயங்கள் உங்கள் கணணிகளை ஊடுருவதிலிருந்து பயர்வால் தடுக்கும். 

 

     உங்கள் கணணிகளில் உங்களுக்கு தெரியாமலேயே தரவிறக்கம் ஆகும் புரோகிராம்கள் குறித்து உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் திறமையான பணியும் பயர்வாலுக்கு உண்டு. விண்டோஸ் எக்ஸ்.பி மற்றும் விண்டோஸ் விஸ்தா ஆகிய ஓபரேட்டிங் சிஸ்டம்கள் பயர்வால் வசதியுடனேயே வருகிறது. நாம் அதனை ஆன் செய்து விட்டால் போதுமானது. 

 

     டீப்ராக் செய்யவும்: டீப்ராக்மென்டேஷன் என்பது நம் கணணியின் வன்தட்டை ஒழுங்கமைக்கிறது. அதாவது கோப்புகளை தாறுமாறாக ஆங்காங்கே வைக்காமல் அடுத்தடுத்து வைத்து நிறைய காலி இடங்களை ஏற்படுத்திக் கொடுப்பது. இதனால் கணணியின் வேகம் பாதுகாக்கப்படும். நாம் நிறைய புரோகிராம்களை நிறுவிக் கொள்கிறோம் அல்லது நிறுவியவற்றை ரத்து செய்கிறோம். கோப்புகளை அடிக்கடி அழிக்கவும் செய்கிறோம். இதனால் டீஃப்ராக் செய்வது மிக அவசியமான ஒரு நடவடிக்கையாகும். 

 

     வன்தட்டை சுத்தம் செய்யவும்: உங்கள் கணணியின் செயல் திறன் நன்றாக அமைய டிஸ்க் க்ளீன் அப் மிகவும் அவசியம். நாம் ஏற்கனவே நீக்கி விட்ட கோப்புகளின் சுவடுகளையும் இது முற்றிலும் நீக்கி விடும். பழைய கோப்புகள் அதிக இடத்தை அபகரித்துக் கொள்ளாமல் பாதுகாக்கும். டிஸ்க் கிளீன் அப் செய்து முடித்து விட்டுப் பார்த்தால் நமது டிஸ்கில் எவ்வளவு இடங்கள் உள்ளன என்பது நமக்கு ஆச்சரியமளிப்பதாக இருக்கும். 

 

     இணையதள தரவிறக்கங்களை குறைக்கவும்: நாம் இணைய தளங்களிலிருந்து இலவச மென்பொருள் பலவற்றை தரவிறக்கம் செய்வோம். அதிகாரபூர்வமற்று இசை இணையதளங்களுக்கு சென்று இசைகளை தரவிறக்கம் செய்வோம். இதிலெல்லாம் கணணியை இயங்க விடாமல் செய்யும் மென்பொருட்கள் இருக்கும். எனவே குறைந்த அளவில் தரவிறக்கம் செய்து கொள்வது நலம். 

 

     பயன்படுத்தாத புரோகிராம்களை ரத்து செய்யவும்: இனிமேல் இந்த புரோகிராம் தேவையில்லை என்ற நிலை ஏற்படும்போது கன்ட்ரோல் பேனலில் உள்ள ஆட்/ரிமூவ்-ஐ பயன்படுத்தி அதனை நீக்கவும். இதனால் வன்தட்டில் அதிக இடம் கிடைக்கும். கணணியின் செயல்திறன் அதிகரிக்கும். 

 

     கணணியை சுத்தம் செய்யவும்: கணணியின் உட்பகுதிகளில் தூசிகள் மண்டி விடாமல் இருக்க வாரம் ஒரு முறை துணியால் துடைத்து தூசிகளை அகற்றவும். மேலும் கணணியை வெப்பம் தாக்காமல் இருக்கும் வகையில் ஒரு அறையில் வைத்திருக்கவும்.

 

by Swathi   on 22 Sep 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்! - பேராசிரியர் கே. ராஜு நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்! - பேராசிரியர் கே. ராஜு
ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு
உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் !! உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் !!
உலகால் அறியபடாத ரகசியங்கள் உலகால் அறியபடாத ரகசியங்கள்
உங்கள் செல்போனில் எடுக்கும் வீடியோவை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பு செய்ய வேண்டுமா? உங்கள் செல்போனில் எடுக்கும் வீடியோவை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பு செய்ய வேண்டுமா?
இணைய வங்கி பயனாளர்களை மிரட்டும் புதிய வைரஸ்.... தப்பிப்பது எப்படி ? இணைய வங்கி பயனாளர்களை மிரட்டும் புதிய வைரஸ்.... தப்பிப்பது எப்படி ?
ஈமெயில் பிரச்சினைகளைக் கையாள்வது எப்படி? ஈமெயில் பிரச்சினைகளைக் கையாள்வது எப்படி?
எந்த கலரிலும் எழுதுவதற்கு வந்துவிட்டது புதிய பேனா !! விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு !! எந்த கலரிலும் எழுதுவதற்கு வந்துவிட்டது புதிய பேனா !! விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.