அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள லாங் பீச் நகர மேயர் பதவிக்கு சில தினங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த, அதுவும் சென்னையில் பிறந்த, சுஜா லோவெந்தால் போட்டியிடுகிறார். மொத்தம் இவருடன் சேர்ந்தது ஐந்து வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த பகுதியில் சுஜா லோவெந்தால் இரண்டாவது முறையாக உறுப்பினர் பதவி வகிக்கிறார். மேலும் அவர் கல்வி அதிகாரியாக பதவி வகித்தபோது, அந்த மாவட்டம், அமெரிக்காவிலேயே நகர்புற பள்ளிகளில் சிறந்த மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
|