LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

சூரியனுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட சூப்பர் பூமி!

சூரியனுக்கு அருகில் ‘சூப்பர் பூமி’ ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். 

விண்வெளியில் 6 ஒலி ஆண்டுகள் தொலைவில் உள்ள ‘பர்நார்ட்’ என்ற நட்சத்திரத்தை வானவியல் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வந்தனர். இது சூரியனுக்கு மிக அருகில் உள்ள சிறிய நட்சத்திரம் ஆகும்.

இந்த நட்சத்திரத்தை ஒரு கிரகம் சுற்றிக் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்து உள்ளனர். இதற்கு ‘பர்நார்ட் நட்சத்திரம் பி’ என பெயர் வைத்துள்ளனர். இது, ‘சூப்பர் பூமி’ என்றும் அழைக்கப்படுகிறது. 

இது பூமியை விட 3.2 மடங்கு பெரியது. சூரிய குடும்பத்துக்கு வெளியே பூமிக்கு அருகே இருக்கும் 2வது கிரகமாக இது அறியப்படுகிறது. இந்த கிரகம் பர்நார்ட் நட்சத்திரத்தை 233 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. சூரியனில் இருந்து பூமி பெறும் சக்தியில் 2 சதவீதத்தை மட்டுமே, இந்த புதிய கிரகம் தனது நட்சத்திரத்திடம் இருந்து பெறுகிறது. 

இதனால், இந்த கிரகத்தில் மைனஸ் 170 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. 

இது பற்றி ஸ்பெயின் விஞ்ஞானி இக்னாசி,  ‘‘உறைநிலையில் இந்த கிரகம் இருக்கும் என்பதால், தண்ணீர் இருப்பதற்கும், உயிரினங்கள் வாழ்வதற்கும் சாத்தியம் இல்லை. புதிய கிரகம் எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவல்கள் எல்லாமே, யூக அடிப்படையில் உள்ளன’’ என கூறி உள்ளார். 

இவரது தலைமையிலான குழு, 7 தொலைநோக்கிகள் மூலம் விண்வெளியை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ந்து வருகிறது. இவர்கள்தான் இந்த சூப்பர் பூமியை கண்டுபிடித்து உள்ளனர். 

by Mani Bharathi   on 17 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.