|
|||||
சூர்யா, கார்த்தி ரெண்டு பேருமே பண்பாடு மாறாத தமிழ் பசங்க : சொல்கிறார் காஜல் !! |
|||||
சூர்யாவும், கார்த்தியும் பண்பாடு மாறாத தமிழ் பசங்க என நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
சூர்யாவுக்கு ஜோடியாக, மாற்றான் திரை படத்திலும், கார்த்திக்கு ஜோடியாக நான் மகன் அல்ல என்ற திரைப்படத்திலும் நடித்தவர் கஜல் அகர்வால். தற்போது "ஆல் இன் ஆல் அழகு ராஜா" திரை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கிடையே, ஆல் இன் ஆல் அழகு ராஜா பட அனுபவம் பற்றியும், கார்த்தி, சூர்யாவுடன் நடிக்கும் அனுபவம் பற்றியும் கஜல் அகர்வால் கூறியதாவது,
ஆல் இன் ஆல் அழகு ராஜா திரைப்படத்தில் சித்ரா தேவி பிரியா என்ற கதாபாத்திரம் எனக்கு கிடைத்துள்ளது, இந்த படத்தை பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புகள் ஜாலியாக சென்று கொண்டிருக்கிறது.
ஏற்கனவே நான் கார்த்தியுடன் 'நான் மகான் அல்ல' என்ற படத்தில் நடித்துள்ளேன். கார்த்தி எல்லோரிடமும் அன்பாக பழகுவார். உதவிகள் செய்வார். இப்போது அவரது நடிப்பு திறமை முன்பை விட அதிகமாகி உள்ளது. இயக்குனர் சொன்னபடி சிறப்பாக நடித்தாலும் அவருக்கு திருப்தி வரும் வரை மீண்டும் மீண்டும் நடிப்பார். கார்த்தி ஜாலியாக இருப்பார். ஆனால் சூர்யா அப்படியல்ல. வெளிப்படையாக பேசாத கூச்ச சுபாவம் உள்ளவர். இருவரும் ஒழுக்கமாகவும் பண்பாடு மீறாமலும் வளர்ந்து இருக்கிறார்கள் என நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். |
|||||
by Swathi on 10 Oct 2013 1 Comments | |||||
Tags: காஜல் அகர்வால் சூர்யா கார்த்தி தமிழ் பசங்க பண்பாடு Surya Karthi | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|