LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

சுயம் இழந்து கொண்டிருக்கிறேன்

நான் என்னும் உருவம் . !

அங்கங்களின் செயல்களை இழந்து

கொண்டிருக்கிறேன்

எழுதுவதற்கு எழுது கோல்

எடுத்து எழுத மறந்துவிட்டது,

அத்தனையும் கணினியில்தான் தட்டி

விட்டால் எழுதி விடுகிறது.

அந்த காலத்தில் !

நண்பர்களுக்கு காதல் கடிதம்

எழுதுவது முதல் பொ¢யவர்களுக்கு

பக்கம் ,பக்கமாய், கடிதம்

எழுதி கொடுத்த கை !

பேசுவது கூட கைபேசியில்

மட்டுமே பேச முடிகிறது.

எதிரில் இருப்பவரிடம் கூட

தலை சாய்த்து பேசுகிறேன்

காதுக்கருகில் கைபேசி வைத்துள்ள

ஞாபகத்துடன்.

அந்த காலத்தில் !

நண்பர்களுடன் அரட்டை, அரட்டை,                 

அம்மா குத்தி காட்டியிருக்கிறாள்.!

கால்கள் கூட நடப்பதற்கு

மறந்து விட்டன.

எங்கேனும் செல்வதென்றால்

இரு  அல்லது நான்கு

சக்கர வாகனம்தான்.

அந்த காலத்தில் அம்மா

கொடுக்கும் பத்து பைசாவிற்கு

நூறு முறை கடைக்கு

ஓடிய கால்கள்தான் !

அங்கங்கள் பலகீனமாக எனக்கு

அப்படியொன்றும் வயதாகவில்லை.

இந்த பத்து வருட விஞ்ஞானம்

என்னை பலவீனப்படுத்திவிட்டது.

பேசுவதும்,எழுதுவதும்,படிப்பதும்,

நடப்பதும்,மனிதனுக்கு கிடைத்த

வரம்.!எனக்கு தொ¢ந்தும்

இயந்திரங்களையே சார்ந்திருக்கிறேன்

நான் என் சுயத்தை இழந்துகொண்டிருக்கிறேன்.!

Lose of my self
by Dhamotharan.S   on 24 May 2016  0 Comments
Tags: Suyam   Suyam Kavithia   சுயம்   சுயம் கவிதை           
 தொடர்புடையவை-Related Articles
சுயம் இழந்து கொண்டிருக்கிறேன் சுயம் இழந்து கொண்டிருக்கிறேன்
சுகம் தேடும் சுயம் - கவிப்புயல் இனியவன் சுகம் தேடும் சுயம் - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.