LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

சிங்கப்பூரில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு

இலங்கைத் தமிழறிஞர் விபுலாநந்த அடிகளாரின் ஆவணப்படம் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் உள்ள ஆனந்தபவன் உணவக மாடியில் 31.12.2017 மாலை நான்கு மணிக்கு நடைபெற்றது. சிங்கப்பூரில் உள்ள கங்கைகொண்டான் கழகமும், கவிமாலை இலக்கிய அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் கவிமாலை மா. அன்பழகன் வரவேற்புரையாற்றினார். விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தினைச் சிங்கப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். தினகரன் வெளியிட,  சிங்கப்பூர் ஹனிபா வணிக நிறுவனங்களின் உரிமையாளர் முகமது ஹனிபா முதற்படியினைப் பெற்றுக்கொண்டார். சிறப்புப் படிகளைப் பொறியாளர் வெட்டிக்காடு இரவிச்சந்திரன், திரைப்படத் தயாரிப்பாளர் அருமைச் சந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சிங்கப்பூர்த் தமிழ்ப் பேராசிரியர் சுப.திண்ணப்பன் ஆவணப்படத்தின் சிறப்புகளை எடுத்துரைத்து அறிமுகம் செய்தார். ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவன் தம் படப்பிடிப்பு அனுபவங்களையும், ஆவணப்படத்தின் நோக்கங்களையும் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, கவிஞர் தியாக.இரமேஷ், கவிஞர் தங்க. வேல்முருகன், எழுத்தாளர் இலியாஸ், வழக்கறிஞர் கலாமோகன், பேராசிரியர் ஆ.இரா. சிவக்குமாரன், எழுத்தாளர் சங்கத் தலைவர் நா. ஆண்டியப்பன், கவிஞர் சீர்காழி செல்வராசு உள்ளிட்ட படைப்பாளர்களும், பல்வேறு தமிழமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அதிகமாகக் கலந்துகொண்டனர்.

by Swathi   on 03 Jan 2018  0 Comments
Tags: Singapore   Swami Vipulananda   Swami Vipulananda Documentary Film   விபுலாநந்த அடிகளார்           
 தொடர்புடையவை-Related Articles
சிங்கப்பூரில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு சிங்கப்பூரில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு
இலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுகள்! இலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுகள்!
விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம்! கயானா பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து வெளியிட்டார்!! விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம்! கயானா பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து வெளியிட்டார்!!
புதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு புதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு
சிங்கப்பூரில் கோலாகலமாக துவங்கிய 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு !! சிங்கப்பூரில் கோலாகலமாக துவங்கிய 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு !!
தண்ணீர் குடுவையில் திருக்குறள் - சிங்கப்பூர் ! தண்ணீர் குடுவையில் திருக்குறள் - சிங்கப்பூர் !
சிங்கப்பூர் தமிழ் மாதம் நிகழ்வுகளில் ஒன்றான உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தின் சிங்கப்பூர் தமிழ் மாதம் நிகழ்வுகளில் ஒன்றான உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தின்
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ காலமானார் !! சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ காலமானார் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.