LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை தடுக்க அந்நாட்டு அரசு புதிய திட்டம் !

உலகில் உள்ள பல கோடிஸ்வரர்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில், கறுப்பு பணம் முதலீடு செய்யப்படுவதை தடுக்க அந்நாட்டு அரசு புது சட்டத்தை கொண்டு வர உள்ளது.சுவிஸ் என்றழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாடு கறுப்பு பணம் பதுக்குவோரின் புகலிடமாக உள்ளது என உலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த குற்றச்சாட்டை தடுக்க, அந்நாட்டு அரசு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில், பணம் முதலீடு செய்வதற்கு, புது கட்டுப்பாடுகளை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டத்தை இயற்றுவது தொடர்பாக வரைவு மசோதா ஒன்றை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அளிக்குமாறு சுவிட்சர்லாந்து பெடரல் கவுன்சில், அந்த நாட்டின் நிதித்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பெர்ன் நகரில் நடந்த பெடரல் கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான பிரச்சினைகளை ஒடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.எனவே அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கறுப்பு பண பதுக்கலுக்கு எதிரான சட்டத்தை சுவிட்சர்லாந்து அரசு கொண்டு வந்து விட்டால், அது கறுப்பு பண பதுக்கல்காரர்களுக்கு பெருத்த அடியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Switzerland mulls new bill to check black money flow to swis banks

Often accused of providing safe havens to black money from India and other countries, Switzerland has proposed a new bill to prevent its banks and other institutions from accepting untaxed assets from their clients and put in place a stricter due diligence regime. Switzerland Federal Council, the apex decision making body of Swiss government, has asked its finance ministry, the Federal Department of Finance to submit a consultation draft at the start of 2013 to meet its goal of preventing banks from accepting untaxed funds from their clients.While a revised tax treaty has come into force between the two countries for exchange of information on untaxed assets and money laundering related activities, the rules require sufficient information for any banking details to be shared and many requests face the risk of getting rejected in the name of fishing expeditions.The Swiss Federal Council said in a statement that it "is stepping up its efforts to combat abuses in the area of money laundering and taxation”.

by Swathi   on 17 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.