LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

தமிழின் அடைமொழிகள் !!

1) அந்தமிழ் : அம் + தமிழ் = அழகிய தமிழ்

2) அருந்தமிழ் : அருமை + தமிழ் =அருமைபாடுடைய தமிழ்

3) அழகுதமிழ் : எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ்

4) அமுதத்தமிழ் : அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ்

5) அணித்தமிழ் : அணிநலன்கள் அமைந்த தமிழ்,தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ்

6) அன்னைத்தமிழ் : நமக்கும், உலக மொழிகளுக்கும் அன்னையாக விளங்கும் தமிழ்

7) இசைத்தமிழ் : முத்தமிழில் ஒரு பிரிவு (ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு)

8) இயற்றமிழ் : முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது

9) இன்றமிழ் : இனிக்கும் தமிழ் (ஒலிக்க,உரைக்க, சிந்திக்க,செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது)

10) இன்பத் தமிழ் : இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டு,கற்பவர்க்கு எஞ்ஞான்றும் இன்பம் பயப்பது.

11) எந்தமிழ் : எம் + தமிழ் (கால்டுவெல்,போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்)

12) உகக்குந்தமிழ் : மகிழ்ச்சியளிக்கும் தமிழ் 13) ஒண்டமிழ் : ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்)

14) கனித்தமிழ் : கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்

15) கற்கண்டுத்தமிழ் : கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல,அடர்ந்து செறிந்த நிலையிலும் கற்க கற்க மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்

16) கன்னித் தமிழ் : எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ்

17) சங்கத்தமிழ் : மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்

18) சுடர்தமிழ் : அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ்

19) சுவைத்தமிழ் : சொற்சுவை,பொருட்சுவை, கலைச்சுவை,கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது

20) செந்தமிழ் : செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது(செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்)

21) செழுந்தமிழ் : செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ்

22) தனித்தமிழ் : தன்னிகரில்லாத தனித்தன்மை வாய்ந்த தமிழ்

23) தண்டமிழ் : தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது

24) தாய்த்தமிழ் : நமக்கும், உலக மொழிகளுக்கும் தாயாக மூலமாக விளங்கும் தமிழ்

25) தீந்தமிழ் : (தேன் > தேம் > தீம்)இனிமை நிறைந்த தமிழ்

26) தெய்வத்தமிழ் : தெய்வத்தன்மை வாய்ந்தது

27) தேன்தமிழ் : நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ்

28) பசுந்தமிழ் : பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ்

29) பைந்தமிழ் : பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை)

30) பழந்தமிழ் : பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ்

31) பாற்றமிழ் : பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது

32) பாகுதமிழ் : வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது

33) நற்றமிழ் : நன்மை + தமிழ் – இனிய,எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது

34) நாடகத்தமிழ் : முத்தமிழுள் ஒன்று –நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது

35) மாத்தமிழ் : மா – பெரிய –பெருமைமிக்க தமிழ் (மங்கலப்பொருளுணர்த்தும் உரிச்சொல் மா)

36) முத்தமிழ் : இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ்

37) வண்டமிழ் : வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்)

38) வளர்தமிழ் : காலந்தொறும் வளர்ந்துகொண்டே வரும் தமிழ்

by Swathi   on 24 Jan 2015  5 Comments
Tags: Adai Mozhigal   Tamilukkana adai mozhigal ethanai   Tamil Sirappu Peyargal   தமிழ் அடைமொழிகள்   அடைமொழிகள்   தமிழன் அடை மொழிகள்     
 தொடர்புடையவை-Related Articles
தமிழின் அடைமொழிகள் !! தமிழின் அடைமொழிகள் !!
கருத்துகள்
11-Jan-2019 17:27:30 தமிழ said : Report Abuse
செம்மை வண்மை போன்றன தமிழ மொழியைச் சிறப்பிக்க வந்த வை இனத்தைக் குறிக்க அல்ல எனவே அ து இனமில்லா அடைமொழி.
 
25-Sep-2018 11:44:39 சாமுவேல் said : Report Abuse
மிகவும் சிறப்பு
 
12-Jul-2017 06:18:34 VIJAY said : Report Abuse
இப்பக்கத்தை கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. பள்ளி புத்தகம்தனில் இனமுள்ள அடைமொழி வகைதனில் செந்தமிழ்தனை இனமில்லா அடைமொழி வகையுள் சேர்திருபதன் காரணம் புரியவில்லை எனக்கு. தயைகூர்ந்து சந்தேகம் நிவர்த்தி செய்யுங்கள்
 
06-Sep-2016 17:22:24 தமிழன் said : Report Abuse
அழகான பதிவு. உங்கள் தமிழ்ப் பணி தொடர வாழ்த்துக்கள்.
 
22-Jul-2015 18:38:33 நான் பிரியன் said : Report Abuse
தமிழ் மொழி பற்றிய தகவல்கள் மிக அருமை.தமிழ் மொழி மற்றும் கவிதை ஆர்வமுள்ள என் போன்றோருக்கு பயனுள்ளதாக உள்ளது ... நன்றி!!!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.