LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

சமூக ஊடகங்களில் வரலாக பரவிவரும் கவிஞர் .அறிவுமதி எழுதி உத்ரா உன்னிகிருஷ்ணன் பாடியுள்ள தமிழ் பிறந்தநாள் பாடல் ..

முகநூல், இணையம், வானொலி, தொலைக்காட்சிகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தில் வெளியிடப்பட்ட கவிஞர் அறிவுமதியின் தமிழ் பிறந்த நாள் பாடல். ஒரு முகநூல் பக்கத்தில் இரண்டு நாளில் 2 லட்சத்தைத் தொடும் பார்வையாளர்கள்..இதுபோல் பல முகநூல் பக்கங்களில் சென்றுகொண்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் வரலாக பரவிவருவதும் மக்களின் ஆதரவைக் கண்டு தொலைக்காட்சி ஊடங்கங்கள் தங்கள் பிறந்தநாள் பகுதியில் இந்தப் பாடலை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளார்கள் .. சில திரைப்பட இயக்குநர்கள் தங்கள் படங்களில் பிறந்தநாள் காட்சி ஒன்றை வைத்து இந்தப் பாடலை மக்களிடம் பழக்கத்திற்கு கொண்டு செல்வதாக அறிவித்துள்ளார்கள் ... மேலும், உலகம் முழுதும் பல்வேறு தமிழ்ச்சங்கங்கள், மற்றும் தமிழ்ப்பள்ளிகள் தங்கள் அமைப்புகளின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் இந்தப்பாடலைப் பயன்படுத்துவதற்கு முன்வந்துள்ளார்கள் ..

 

ஆஸ்திரேலியா, கனடா , அமெரிக்கா , சிங்கப்பூர், மலேசியா என பல நாடுகளின் தமிழ்ச்சங்கங்கள், தமிழ் அமைப்புகள் , தமிழ்ப்பள்ளிகள் தொடர்புகொண்டு பாடலை வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்கள் .. வரும் சூலை 9, வாசிங்க்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெறும் முத்தமிழ் விழாவில் இந்தப்பாடல் வெளியிடப்படுகிறது ... இதற்காக ஒரு கேக் வாங்கி, அந்த நாளில் அல்லது அந்த மாதத்தில் பிறந்தநாள் காணும் மக்கள் அனைவரின் பெயரையும் அறிவித்து, அவர்களை மேடைக்கு அழைத்து மக்கள் பயன்படுத்தும் வகையில் குழுவாக இந்தப்பாடலைப் பாடி வெளியிடுகிறார்கள் .. இதுபோல், அமெரிக்காவின் பல்வேறு தமிழ்ச்சங்கங்கள் அடுத்து வரும் அவர்களது நிகழ்ச்சியில் இந்தப்பாடலை வெளியிடத் திட்டமிடுகிறார்கள்...நீங்கள் வசிக்கும் நாடுகளில் வெளியிட்டு , அல்லது வீட்டில் பாடி உங்கள் முகநூலில் பகிருங்கள் ..  இந்தத் தமிழ்ப்பாடல் மக்களின் பாடலாகி அவர்களின் பிறந்தநாளை மகிழ்ச்சிப்படுத்தட்ட்டும் ..

 

வலைத்தமிழ் குழுவினர் இதுகுறித்து கூறும்போது, உங்கள் அமைப்புகளில் , வீடுகளில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்பொது இந்தப்பாடலைப் பாடி காணொளியை யூடிபில் பகிருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள் அல்லது valaitamil@yahoo.com மின்னஞ்சலுக்குச் சுட்டியை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .. தொடர்ந்து பல்வேறு நாடுகளில் பாடும் பாடல்களை இணைத்து காணொளிக்கலவை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்கள் ....

 

முழு பிறந்தநாள் பாடல்:https://www.youtube.com/watch?v=6n3tXhytP8I
 
நன்றி: குங்குமம் http://kungumam.co.in/newkungumam/VArticalinnerdetail.aspx…
 
நன்றி: தினகரன்
http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1179&Cat=27
 
தி இந்து தமிழ்
http://goo.gl/3mFQ2y
 
தட்ஸ்தமிழ்
http://tamil.oneindia.com/art-culture/essays/arivumathi-s-tamil-birthday-song-released-fetna-257328.html

முழு பிறந்தநாள் பாடல்

 https://www.youtube.com/watch?v=6n3tXhytP8I

 

நன்றி: தினகரன்

http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1179&Cat=27

 

தி இந்து தமிழ்

http://goo.gl/3mFQ2y

 

தட்ஸ்தமிழ்

http://tamil.oneindia.com/art-culture/essays/arivumathi-s-tamil-birthday-song-released-fetna-257328.html

by Swathi   on 07 Jul 2016  0 Comments
Tags: தமிழ் பிறந்தநாள் பாடல்   Tamil Birthday Song                 
 தொடர்புடையவை-Related Articles
சமூக ஊடகங்களில் வரலாக பரவிவரும் கவிஞர் .அறிவுமதி எழுதி உத்ரா உன்னிகிருஷ்ணன் பாடியுள்ள தமிழ் பிறந்தநாள் பாடல் .. சமூக ஊடகங்களில் வரலாக பரவிவரும் கவிஞர் .அறிவுமதி எழுதி உத்ரா உன்னிகிருஷ்ணன் பாடியுள்ள தமிழ் பிறந்தநாள் பாடல் ..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.