LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்காவின் வர்சீனியா தமிழர்களின் அரிய முயற்சியால் அடுத்தத் தலைமுறையினர் தமிழ் படிக்க அரசு நூலகத்தில் தமிழ் நூல்கள்..

டிசம்பர் 16,2018: அமெரிக்காவின் தமிழர்கள் அதிகம்  வசிக்கும் பல மாகாணங்களில் உள்ள அரசு பொது நூலகங்களில் தமிழ் நூல்களும் , தமிழ் படங்கள் உள்ளிட்ட காணொளித் தொகுப்புகளும் இருந்தாலும்  வெர்சீனியா மாகாணத்தில்  இதுவரை எந்த நூலகத்திலும் தமிழ் நூல்கள் இல்லை. இப்படி ஒரு அமெரிக்க பொது நூலகத்தில் ஒரு தமிழ்ப்பகுதி உருவாக்கவேண்டுமென்றால் அந்த மாகாணத்தில்  வசிக்கும் தமிழர்கள் முயற்சி செய்து, அதிக மக்கள் விரும்புகிறோம் என்று அதற்காக முறைப்படியான கோரிக்கையை வைத்து, போதிய புத்தகங்களைத் திரட்டி இதற்காக கடுமையாக உழைத்தால்தான் இது நடைமுறைக்கு வரும்.

இந்த வகையில் வெர்சீனியாவில் இந்த வாய்ப்பு இதுவரை இல்லாமல் இருந்தது.  இதையொட்டி வெர்சீனியாவில்  இயங்கும் வள்ளுவன் தமிழ்மையம் இந்த முயற்சியை முன்னெடுத்து தன்னார்வலர்களைத் ஒன்று திரட்டி, போதிய நிதியை சேர்த்து, ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை தமிழகத்திலிருந்து வரவழைத்து, புதிதாக திறக்கப்பட்டிருக்கும் பிராம்பில்டன் (Brambleton, Loudoun County) நூலகத்தில் திறப்பு விழாவினை மிகப்பெரிய அளவில் நடத்தி முடித்தனர். இத்திட்டத்தை பள்ளியின் முன்னாள் முதல்வர் திரு.பாஸ்கர் தலைமையில் தன்னார்வலர் குழு மிகச்சிறப்பாக செய்து முடித்த்துள்ளது. 

இந்த முக்கிய விழாவில்  வாசிங்டன் வட்டாரத் தமிழ்க்கச்சங்கம், சங்கமம் தமிழ்ப்பள்ளி உள்ளிட்ட பல அமைப்புகளும் தமிழ் வணிக அமைப்புகளும் , தன்னார்வலர்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் , இந்த மாகாணத்தில் வசிக்கும் தமிழர்களும் பெருமளவில் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  

வெர்சீனியா மாகாணத்தில் அரசு பொது நூலகத்தில் தமிழ்நூல்கள் மட்டும் இருக்கும் தனிப்பகுதி கொண்ட முதல் நூலகம் என்ற பெருமையை இந்த பிராம்பில்டன் நூலகம் பெறுகிறது. இது மேலும் பல நகரில் இருக்கும் நூலகங்களுக்கும் விரிவடையும் என்ற எதிர்ப்பார்ப்பு  வெர்சீனியா தமிழர்களிடம் ஏற்பட்டுள்ளது.   

இதற்கு ஒத்துழைப்பு நல்கிய Sris Law Group, Delegate David Bulova (VA 37th district) , Leesburg District Supervisor Kristen C. Umstattd , Ram Venkat, Brambleton Community Director , Loudoun County Public Library Officials  அனைவருக்கும்  வள்ளுவன் தமிழ் மையம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. 

மேலும் தமிழ்நாட்டிலிருந்து வரும் பெற்றோர்கள் , உறவினர்கள் அமெரிக்க நூலகங்களில் தங்களுக்குப் பிடித்த தமிழ் நூல்களை வாசிக்கவும், தமிழ் பள்ளிகள் நூலகத்தில் இருக்கும் தமிழ் நூல்களை பயன்படுத்த மாணவர்களை ஊக்குவித்தலும் இந்த நூல்களின் பயன்பாட்டை, தேவையை அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

 

Tamil books collection @ Brambleton library, Brambleton, VA. As you aware, Brambleton library is the first library to host Tamil books collection in Commonwealth of Virginia State. Thanks to Valluvan Tamil Academy for leading this effort along with the Support Of Mr. Ram Venkatachalam, HOA of Brambleton Community,. Tamil books were donated by many people from Tamil community which is inclusive of parents and volunteers from Valluvan Tamil Academy, Sangamam Tamilschool and members of Tamil Sangam Of Greater Washington. It’s a great effort! Loudoun and Fairfax County Tamil community can make use of these books to encourage our kids to learn and practice our Classical Tamil language, culture and tradition. Checkout option is available in Tamil which is an additional feature incorporated by the county library system.

by Swathi   on 17 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர். ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர்.
கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா. கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா.
துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு. துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு.
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை. வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.
யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார். யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார்.
பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்! பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்!
அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள். அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள்.
நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன? நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.